ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by BookzTamil Today at 2:59 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by krishnaamma Yesterday at 8:10 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 7:39 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Thu Jul 09, 2020 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Thu Jul 09, 2020 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Thu Jul 09, 2020 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Jul 09, 2020 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Thu Jul 09, 2020 6:17 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Thu Jul 09, 2020 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Thu Jul 09, 2020 5:16 pm

Admins Online

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by சதாசிவம் on Sun Jun 19, 2011 7:39 pm

இந்திய நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில் சாணக்கியர் மிக முக்கியமானவர். இவர் சந்திராகுப்தா மௌரியரின் அமைச்சராக இருந்து அவர்க்கு மீண்டும் அரச பதவி கிடைக்க துணையாக நின்றவர். விதுர நீதி, பிரிகஸ்பதி, ஷூக்ரச்சார்யா, பார்த்தியகரி, விஷ்ணுஷர்மா போன்றவர்கள் நீதி சாஸ்த்திரம் குறித்து பல விஷயங்கள் கூறினாலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்திர்க்கு ஒரு தனி மரியாதை உண்டு, இவர் நீதி சாஸ்த்திரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் குறித்தும் பல விஷயங்கள் கூறியுள்ளார். அவரின் அர்த்த சாஸ்த்திரத்தின் சில முக்கிய அறிவுரைகளை இத்தொடரில் பார்ப்போம்.

முதல் அத்தியாயம்:

1. எல்லாம் வல்ல, மூன்று உலகங்களையும் காக்கும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களை தொழுது, பல சாஸ்த்திரங்களில் இருந்து எடுத்த இந்த அர்த்த சாஸ்த்திரத்தை உங்களுக்கு எடுத்து கூறுகிறேன், கேளுங்கள்.

2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.

3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும் . பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது .

5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.

6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன் , வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.

7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்க்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், தவறு செய்வதற்க்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்க்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்க்கும் செல்ல மாட்டான்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.


Last edited by சதாசிவம் on Mon Jul 18, 2011 4:41 pm; edited 2 times in total
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by மகா பிரபு on Sun Jun 19, 2011 7:50 pm

தகவலுக்கு நன்றி சதாசிவம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by சதாசிவம் on Sun Jun 19, 2011 7:53 pm

@மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி சதாசிவம்.

நன்றி பிரபு
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது 678642
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by bala23 on Sun Jun 19, 2011 8:31 pm

அருமயான தகவலுக்கு நன்றி
இது போன்ற புராண சாஸ்திர சம்பிரதாய பதிவுகளை தொடருங்கள்
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by சதாசிவம் on Mon Jun 20, 2011 3:05 pm

@bala23 wrote:அருமயான தகவலுக்கு நன்றி
இது போன்ற புராண சாஸ்திர சம்பிரதாய பதிவுகளை தொடருங்கள்

நன்றி பாலா , இதில் தொடர்ந்து அடுத்து வரும் அத்தியாயங்களில் உள்ள நல்ல அறிவுரைகளை எழுதலாம் என்று உள்ளேன்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by சதாசிவம் on Tue Jun 21, 2011 6:59 pm

இரண்டாம் அத்தியாயம்:

1. எவன் ஒருவனுக்கு அவனது சொல்படி நடக்கும் மகன் இருக்கிறானோ, விருப்பத்தை உணர்ந்து நடக்கும் மனைவு இருக்கிறாளோ, ஏவல் செய்யும் முன் வேலை செய்யும் வேலைகாரன்
இருக்கிறானோ அவனுக்கு அவனது வீடே சொர்க்கமாகும்.

2.
உங்கள் முன் இனிமையாக பேசி பின், புறம் கூறுபவர்களை நம்ப வேண்டாம், அது மேலே பாலும் உள்ள விஷமும் உள்ளது போன்றது.

3. கீழான நட்புடன் சேர வேண்டாம்,
மேலோட்டமாக பழகும் நண்பனையும் நம்பவேண்டாம்.ஏனென்றால் வர்களுடன் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் நம்மை பற்றிய ரகசியங்களை வெளியிட தயங்க மாட்டார்கள்

4. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.


5. அறி
வுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

6. ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில்
ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

7. மனைவியிடம் இருந்து பிரிந்து இருத்தல், தன் இனத்தாரை சாராத்திருத்தல், போரில் தப்பிய எதிரி, கொடுங்கோலனிடம் வேலை செய்தல், வறுமை, ஒழுங்கற்ற நிர்வாகம் ஆகிய ஆறில் ஒன்று இருந்தாலும்
அதில் உள்ளவனை அது தீ இல்லாமல் சுடும்.

8. ஆறின் கரையோரம் உள்ள மரம், அடுத்த வீட்டி
ல் உள்ள மனையாள், ஆலோசகர் இல்லாத அரசர் இவை உறுதியாக அழிந்து போகும் விஷயங்கள் .

9. சம
ளவில் உள்ளவர்களிடம் ஏற்படும் நட்பு நிலையாக இருக்கும், மன்னனின் கீழ் செய்யும் வேலை மரியாதைக்குரியது. பொது இடங்களில் சற்று வியாபார நோக்குடன் இருப்பது நலம், அழகான பெண் அவளது வீட்டில் பாதுகாப்பாக இருப்பாள்.

10. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்காத பெற்றோர் அவர்களுக்கு எதிரி ஆவார்.

11. பல கெட்ட
ழக்கங்கள் அளவுக்கு அதிகமான செல்லம் கொடுப்பதால் விளைகிறது. நல்ல ழக்கங்கள் முறையான கண்டிப்பால் வளர்கிறது. ஆதலால் உங்கள் குழந்தைகளையோ, மாணவர்களையோ தேவையான நேரத்தில் கண்டியுங்கள்.
Last edited by சதாசிவம் on Fri Jul 01, 2011 4:31 pm; edited 1 time in total
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by சதாசிவம் on Wed Jun 22, 2011 10:45 am

மூன்றாம் அத்தியாயம்

1. இந்த உலகத்தில் எவர் ஒருவருமே நிரந்தரமாக இன்பத்தில் இருப்பதில்லை, நிரந்தரமாக துக்கத்தில் இருப்பதில்லை.

2. முட்டாளுடன் சேர வேண்டாம், அவன் இரண்டு கால் மிருகத்தை போன்றவன். அவனுடைய ஒவ்வொரு செயலும் நமக்கு துன்பத்தை விளைவிக்கும்.

3. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

4. ஒரு குடும்பத்தை காக்க ஒருவனை இழக்கலாம், ஒரு கிராமத்தை காக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டை காக்க ஒரு கிராமத்தை இழக்கலாம்.

5. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by உதயசுதா on Wed Jun 22, 2011 11:44 am

இப்பதான் இந்த பதிவ படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது சதாசிவம் சார்.
இத்தனை விஷயங்கள் உள்ளதா என்று வியந்து போனேன்.தொடருங்கள்,காத்து இருக்கிறேன் படிக்க.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by SK on Wed Jun 22, 2011 1:32 pm

நானும் இன்று தான் படித்தேன் அனைத்தும் அருமை


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by திவ்யா on Wed Jun 22, 2011 1:35 pm

பாராட்டுகள்....... அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது 677196 ..ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன்....உங்கள் தொடர்ச்சிக்காக ..............
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by bala23 on Wed Jun 22, 2011 1:58 pm

@சதாசிவம் wrote:
3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

இன்று வாழும் நமக்காக முன்னரே எழுதி வைத்த மாதிரி உள்ளது...
மூன்றையும் அனுபவித்தவன் நான்....
இத்தொடரில் வாழ்க்கை பாடம் படிப்பதை போல் உணர்கிறேன்....
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by சதாசிவம் on Wed Jun 22, 2011 3:03 pm

ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி,
தொடர்கிறேன்...........

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது 678642
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by சதாசிவம் on Thu Jun 23, 2011 11:05 am

நான்காம் அத்தியாயம்

1. ஒருவனுடைய ஆயுள், செய்யும் வேலை, வசதி, கல்வி, மரணத்தின் தேதி ஆகியவைகள் கருவிலேயே நிச்சயக்கப்படுகிறது.

2. உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள், உங்கள் ஆத்மா மேண்ணை அடைய வேண்டிய செயல்களை செய்யுங்கள். ஏனென்றால் மரணத்தின் நெருக்கத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?

3. கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

4. ஒரு நல்ல மகனே குடும்பத்திருக்கு வேண்டும், பயன் அற்ற பல பிள்ளைகளை பெறுவதை விட ஒரு நல்ல மகன் இருக்க வேண்டும். வானத்தில் ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் ஒளி வீசுவது சந்திரன் மட்டுமே.

5. துக்கத்தை தீர்க்க மூன்று விஷயங்கள் உதவும், தமது சந்ததியினர், மனைவி, கடவுள் சேவை.

6. இறைவழிபாடு ஒருவராக செய்ய வேண்டும், கற்பது இரண்டு பேராக, பாடுவது மூவராக, பயணம் செய்யும் பொது நால்வராக, விவசாயம் செய்யும் பொது ஐவராக, போரில் பலர் சேர்த்து, செய்வது வெற்றியை தேடித் தரும்.

7. அடிக்கடி பிரயாணம் செய்வது ஆணுக்கு வயது முதிர்ச்சியை தரும், ஒரே இடத்தில் கட்டி வைத்தால் குதிரைக்கு சீக்கிரம் வயது ஆகி விடும், கணவனுடன் தாம்பத்தியம் இல்லையென்றால் பெண்ணுக்கு சீக்கிரம் வயது ஆகி விடும், தங்க நகைகள் வெயிலில் வைத்தால் பழையன ஆகி விடும்.

8. சரியான நேரம், சரியான வருமானம் , சரியான செலவு, சரியான நண்பர்கள், சரியான இடம் ஒருவனுக்கு சக்தியை தரும்.

9. கடவுள் பக்தி இல்லாத நபரும், அறிவு இல்லாத குருவும், அன்பு இல்லாத மனைவியும், அக்கறை இல்லாத உறவினர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவை ஆகும்.

10. அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் வசிப்பது, தனக்கு கீழானவனுக்கு சேவை செய்வது, பசியை போக்கா உணவு, முட்டாள் மகன், விதவையான மகள் ஒரு மனிதனை உடலை தீ இல்லாமல் எரிக்கும் விஷயங்கள் ஆகும்.

11.குழந்தை இல்லாத வீடு வெறுமையாக இருக்கும், உறவினர் இல்லாதவனுக்கு எல்லாத் திசையும் வெறுமையாக இருக்கும், முட்டாளின் இதயம் வெறுமையாக இருக்கும், ஆனால் வறுமையில் வாடுபவனுக்கு எல்லாமே வெறுமையாக இருக்கும்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by சதாசிவம் on Sat Jun 25, 2011 2:52 pm

ஐந்தாம் அத்தியாயம்

1. தங்கம் வெட்டுதல், உரசுதல், சூடாக்கல், தகடாக தட்டுதல் ஆகிய முறைகளால் சோதிக்கப்படுகிறது, அது போல் ஒரு மனிதனை அவனது செயல், பேச்சு, குணம், எவற்றை தவிர்க்கிறான் என்பதன் மூலம் அறியலாம்.

2. அறிவாளியை கண்டு முட்டாளும், நல்ல குணம் உடைய பெண்ணைக் கண்டு குணம் இல்லாதவளும், பணக்காரனைக் கண்டு ஏழையும், அழகான பெண்ணை கண்டு அழகற்றவளும் பொறாமை கொள்கின்றனர்.

3. ஒரு மனிதன் தனியே பிறக்கிறான், தனியே இறக்கிறான், தனியே சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்கிறான். அவன் அவன் கர்ம வினைப்படி நல்லதையும் கெட்டதையும் அனுபவிக்கிறான்.

4. பயணத்தில் உதவும் நண்பன் நாம் கற்கும் கல்வி, வீட்டில் உள்ள போது உதவும் நண்பன் நம் மனைவி, இறந்த பின்பு உதவும் நண்பன் நாம் செய்யும் இறை தொண்டு.

5. கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

6. இந்த உலகம் நிலை பெற காரணம் சத்தியம் , சத்தியமே சூரியனை உதிக்கவும், மறையவும் செய்கிறது.

7. காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை, ஆன்மீக ஞானத்தை விட சிறந்த ஆனந்தம் இல்லை.

8. செல்வம் நிலையற்றது, இந்த வாழ்க்கை நிலையற்றது, ஆயுட் காலமும், வாழும் இடமும், வசதியும் நம் கையில் இல்லை. இந்த உலகத்தில் நிலையாக இருப்பது இறை அருள் மட்டுமே.

9. ஒருவனின் கல்வியை அவனது செயல்திறமையின் மூலமும், நல்ல குடும்ப கௌரவம் அவர்களின் செயல்கள் மூலமும், மரியாதைக்குரிய ஒருவனின் அடையாளம் அவரது நற்காரியங்கள் மூலமும், கோவத்தை கண்கள் மூலமும் அறியலாம்.

10. இவர்கள் ஐவரும் நமக்கு தந்தையாவர்கள் 1. நாம் பிறக்க காரணமானவர் 2. நமக்கு உபநயனம் செய்வித்தவர் 3. நமக்கு கல்வி அளித்த குரு 4. நமக்கு உணவு அளித்தவர் 5. ஆபத்து காலத்தில் நம்மை காப்பாற்றியவர்.

11. இவர்கள் ஐவரும் நமக்கு தாயாவர்கள் 1. நம்மை ஈன்றுடெடுத்தடுத்தவள் 2. அரசனின் மனைவி 3. நண்பனின் மனைவி 4. மனைவியின் தாயார். 5. நமக்கு கல்வி அளித்த குரு


Last edited by சதாசிவம் on Mon Jun 27, 2011 5:38 pm; edited 1 time in total
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by bala23 on Mon Jun 27, 2011 4:32 pm

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது 677196
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது Empty Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum