புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
59 Posts - 46%
ayyasamy ram
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
418 Posts - 48%
heezulia
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
295 Posts - 34%
Dr.S.Soundarapandian
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10செக்ஸ் பிரச்சினைகள் Poll_m10செக்ஸ் பிரச்சினைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் பிரச்சினைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:44 pm

தனது செக்ஸ் தேவைகள், ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள் என்ற கருத்தை நினைத்துக் கொண்டு பீதியடையத் தேவையில்லை.

செக்ஸைப் பொறுத்தவரை செயல்படுபவன் ஆண் அவனுடைய செயல்பாட்டிற்கு உடன்பட்டு, அவன் விருப்பப்படி அவன் ஆசையைப் பூர்த்தி செய்வதுதான் மனைவியின் கடமை என்ற கண்ணோட்டம் முற்றிலும் தவறு. கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து ஆக்டிவாக உடலுறவில் ஈடுபட்டால்தான் உச்ச கட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.

செக்ஸ் தொடர்பான மாயைகள் தகர்ந்து வருவதின் ஆரம்ப அறிகுறிகள் இவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தத்தம் செக்ஸ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தயாராக வேண்டும்.

கணவனும், மனைவியும் தங்களுடைய செக்ஸ் விருப்பங்கள் பற்றி மனம் திறந்து பேச வேண்டும். உடலுறவை ஆரம்பிப்பதிலும், அதற்கான தூண்டுதலிலும் இருவருக்குமே பங்குள்ளது. இது ஒரு கூட்டுப் பொறுப்பு.

செக்ஸ் சுகத்தை அனுபவிப்பதில் பெண் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தாவிட்டால் ஆணுக்கு தனது செயல் திறன் பற்றி சந்தேகம் வந்து விடுகிறது. இந்த சந்தேகம் வலுப்பட்டு ஒரு வித குற்ற உணர்வின் தவிப்போடு மனைவியை நெருங்கும்போது, முன்பு இருந்ததை விட செயல் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. கடைசியில் ஆண்மையை பறி கொடுக்கவும் நேரிடுகிறது.

கணவனும், மனைவியும் வெளிப்படையாக செக்ஸ் பற்றி பேசும் பழக்கத்தைப் பின்பற்றினால் இப்படிப்பட்ட ஆபத்தைத் தடுக்க முடியும். பெண்களைப் பற்றிய ஆண் கண்ணோட்டமும் இன்று மாறி வருகிறது. பெண் ஆணுக்குச் சமமானவள் அல்ல குறைபாடுள்ள ஆண்தான் பெண் என்று சொன்ன சிக்மண்ட் ஃபிராய்டின் கூற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள ஆண்களே இன்று தயாராக இல்லை.

ஆரோக்கியமான மாற்றம் ஆரம்பமாகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களும், பெண்களும் குறிப்பாக பெற்றோர்களும் செக்ஸ் பற்றி தவறான கண்ணோட்டங்களை கை கழுவி விட்டு செக்ஸ் அறிவை முறையாக, முழுமையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:45 pm

பெரும்பாலான ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடலைப் பற்றி திருப்திகரமான மனநிலையில் இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக எண்ணி பெரிதும் கவலைப் படுகின்றனர். பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பு மிக சிறியதாகவோ, அல்லது பெரியதாக இருப்பதாக எண்ணி கவலைபடுகின்றனர். தங்களுடைய உடலைப் பற்றி தாங்களே திருப்தி அடையாமல் இருக்கும்போது அல்லது கவலையுடன் இருக்கும்போது செக்ஸில் முழு இன்பத்தை அனுபவிக்க முடியாது. நீங்கள் எப்போதும் உங்களைப் பற்றி ஒரு நல்ல மனநிலையை வைத்திருக்க வேண்டும். தன்னுடைய குணநலன்கள் எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட கூடியது. தன்னுடைய உடல் தன் கணவருக்கு தன் மீது ஈர்க்கும் தன்மையுடையது என்கிற நம்பிக்கை வேண்டும். அடுத்ததாக நீங்களும் உங்கள் கணவரும் ஒன்றாக இருப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். திருமணமான தம்பதிகள் நாளடைவில் தங்கள் உடலை கட்டுடல் ஆக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவதில்லை. நல்ல உடை அணிந்து கணவனை ஈர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. இருவரும் நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசி, தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடம் இருக்கும் செக்ஸ் ஆர்வம் மடிந்து கொண்டிருக்கும். அவ்வாறாக மடியாமல் காப்பதற்கு இருவருமே முனைந்து முயற்சி செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகள்.

உங்களுக்கு சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படுவது இயற்கை. அவற்றை எல்லாம் படுக்கை அறைக்கு கொண்டு செல்லாதீர்கள்.

காதலிக்கும்போது காதலர்கள் நடந்து கொள்வது போல ரொமாண்டிக்காக நடந்து கொள்ளுங்கள். சிறுசிறு பரிசு கொடுங்கள். காதல் கவிதை எழுதுங்கள். முடிந்த அந்த நாட்களைப் போல காதல் கடிதங்கள் எழுதுங்கள்.

உங்களில் ஒருவர் செக்ஸை விரும்பும் போது மற்றொருவர் எனக்கு இன்று மூடு சரியில்லை என்று செக்ஸை ஒதுக்க வேண்டாம். செக்ஸில் ஈடுபட்டாலேயே உங்கள் மனநிலை (மூடு) நல்ல நிலைக்கு திரும்பிவிடும்.

இனிய கற்பனைகள் உங்கள் உடலுறவு வாழ்க்கைக்கு இன்பம் சேர்க்கும். கணவனும்- மனைவியும் சினிமாவில் பார்த்த கதாநாயகன் மாதிரி, கதாநாயகி போல கற்பனை செய்து கொள்ளலாம் அல்லது நடந்து கொள்ளலாம். நல்ல செக்ஸிக்கு அழகான உடற்கட்டு எப்போதுமே தேவையென்று அவசியம் இல்லை. நீங்கள் நல்ல உடல் கட்டுபாட்டுடன் இருக்க முடியுமானால் அப்படி இருப்பது நல்லதே. ஆனால் வயதாகும்போது வயதின் மாற்றங்கள் உடம்பிலும் தென்படும். சிறிது அழகு குறைந்த தம்பதிகள் எல்லாம் செக்ஸ் இன்பத்தை அடைய முடியாது என்பதல்ல. முதலில் உடல் உறவில் நீங்கள் எவ்வாறு தூண்டப்படுவதை விரும்பு வீர்கள், எப்படியெல்லாம் இன்பம் அடைய விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் துணைவி, துணைவர் எப்படிப்பட்ட இன்பத்தை அதிகம் விரும்புகிறார். எவ்வாறு தூண்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் கணவர் வாய் வழியாக செக்ஸ் இன்பத்தை அடைய விரும்பலாம். உங்களுக்கு அது முற்றிலும் அருவறுப்பான விசயமாக தோன்றலாம். இதில் எது சரியானது என்பதை புத்தகங்கள் மூலம் அல்லது செக்ஸ் ஆலோசகர் மூலமாகவோ அறிந்து கொண்டு செக்ஸ் இன்பத்தை அனுபவிக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:46 pm

உங்களுடைய வயது, உங்களால் ஒதுக்க முடியும் நேரம், உங்களின் வேலைப்பளு இவற்றை பொறுத்ததே உங்கள் செக்ஸ் வாழ்க்கை. ஏனெனில் பலர் இன்றும்கூட எத்தனை முறை செக்ஸ் வைத்துக்கொள்வது சரியானது? எந்தந்த நிலைகளில் செக்ஸ் வைத்து கொள்ளலாம்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களை கொண்டிருப்பார்கள். இவற்றுக்கெல்லாம் விடை கணவன்- மனைவி இருவருக்கான வயது, ஆர்வம், நேரம் இவற்றைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். படுக்கை அறையில் மட்டுமல்ல, கணவனும் மனைவியும் அன்றாட வேலைகள், செயல்களிலும்; அன்னியோன்யமான தோழமையுடனும், நட்புடனும் இருப்பது உங்களிடையே உள்ள செக்ஸ் இன்பத்தை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும்.

செக்ஸ் தேவைகள், ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாக பேசுவது ஒள்றும் தப்பில்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். ஆண்களும் பெண் தன்னுடைய விருப்பத்தை ஆசையை சொல்ல வாய்ப்பு தரவேண்டும். அப்படி அவர்கள் கூறும்போது அதனை அறுவெறுப்பாக கருதாமல் எதார்த்தமாக அதனை எதிர் கொள்ள வேண்டும்.

செக்ஸில் செயல்படுபவன் ஆண்தான் எனவே அவனுடைய செயல்பாட்டிற்கு உடன்பட்டு அவனுடைய விருப்பப்படி நடந்துகொள்வதுதான் நல்ல மனைவியின் கடமை என்கின்ற சமுதாயத்தின் கண்ணோட்டம் தவறானதாகும். இரண்டு பேருடைய விருப்பங்களும் செயலாக்கம் பெறுவதுதான் நல்ல செக்ஸ்க்கு அடையாளமாகும்.

முற்றிலுமாக செக்ஸ் கண்ணோட்டத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கின்றோம். செக்ஸ் பற்றி வெளிப்படையாக பத்திரி கைகளிலும், டி.வி.யிலும் நிறையவே இப்போது பேசுகிறார்கள். இத்தைகைய நல்ல சூழ்நிலையில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தத்தம் செக்ஸ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தயாராக வேண்டும்.

கணவனும், மனைவியும் தங்களுடைய செக்ஸ் விருப்பங்கள், ஆசைகள், செயல்பாடுகள், தங்களுடைய விரும்ப தகாதவைகள் என்னன்ன போன்றவற்றை எல்லாம் மனம் திறந்து வெளிப்படையாக பேச வேண்டும்.

செக்ஸ் சுகத்தை அனுபவிப்பதில் பெண் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆணுக்கு தனது செயல் திறன் பற்றி சந்தேகம் வராமல் இருக்க அது பயன்படும். இந்த சந்தேகம் வலுப்பட்டால் குற்ற உணர்வோடு மனைவியை நெருங்க வேண்டி வரும் இதனால் முன்பு இருந்ததைவிட செயல் வேகம் குறைய நேரிடலாம் கணவனும், மனைவியும் வெளிப்ப டையாக செக்ஸ் பற்றி பேசும் பழக்கத்தைப்பின்பற்றினால் இப்படிப்பட்ட ஆபத்தைத் தடுக்க முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:47 pm

செக்ஸ் விசயத்தில் நிறைய விரும்ப தகுந்த ஆரோக்கியமான மாற்றம் ஆரம்பமாகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களும், பெண்களும் குறிப்பாக பெற்றோர்களும் செக்ஸ் பற்றி தவறான கண்ணோட்டங்களை கை கழுவிவிட்டு செக்ஸ் அறிவை முறையாக, முழுமையாக வளர்த்துக் கொள்ள மீடியாக்களின் துணையை நாடுவது ஒன்றும் தப்பில்லை. இன்று வாசகர்கள் கேட்கும் செக்ஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு தயங்காமல் பதில்; சொல்ல தகுந்த மருத்துவர்களும் செக்ஸ் நிபுணர்களும் இருக்கின்றார்கள் என்பேதே ஒருசிறந்த வாய்ப்புதான்.

ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடம்பைப்பற்றி திருப்தி கரமான மனநிலையில் இருக்க வேண்டும் அப்போதுதான் திருப்திகரமான உடல் உறவினில் ஈடுபடமுடியும். பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய ஆண்குறி சிறியதாக இருப்பதாக எண்ணி பெரிதும் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் முழுமையான செக்ஸ் இன்பத்தை பெற இரண்டு அங்குலம் உள்ள ஆண்குறி மட்டுமே போதுமானதாகும். பெரு ம்பாலான பெண்கள் தங்கள் மார்பு மிக சிறிய தாகவோ, அல்லது பெரியதாக இருப்பதாக எண்ணி கவலை படுகின்றனர் ஒரு பெண் செக்ஸ் இன்பம் பெறுவதற்கு இந்த பெரிய மார்பகம் அல்லது சிறிய மார்பகம் போன்ற பிரச்சினைகள் இடையூறாக இருக்காது என்பதை நீங்கள் உணர வேண்டும். உடம்பை பற்றி எப்போதும் கவலையுடன் இருக்கும் ஒரு ஆணாலோ அல்லது ஒரு பெண்ணாலோ செக்ஸில் முழு இன்பத்தை அனுபவிக்க முடியாது. நீங்கள் எப்போதும் உங்களைப்பற்றி ஒரு நல்ல மனநிலையை மனதில் வளர்த்து வைத்திருக்க வேண்டும். தன்னுடைய குணநலன்கள் எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட கூடியது. தன்னுடைய உடல் தன் கணவரை தன்னை நோக்கி கட்டி இழுக்கும் தன்மையுடையது என்கிற நம்பிக்கை பெண்ணிற்கு வேண்டும்.

திருமணமான புதிதில் இருந்த மாதிரி இல்லாமல், மனம் விட்டு பேசி தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில் நாளடைவில் மிகப்பெரிய இடைவெளி விழுவதனால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடம் இருக்கும் செக்ஸ் ஆர்வமும் முயற்சியும் குறைந்து போய்விடும்.

சரி... மீண்டும் நீங்கள் எப்போதும் செக்ஸில் அடங்காத ஆர்வமுடன் இருக்க உங்கள் மனதில் பதிய வேண்டி மீண்டும் ஒரு முறை அதே ஆலோசனைகள்....

உங்களுக்கு சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படுவது இயற்கை. அவற்றை எல் லாம் படுக்கை அறைக்குக் கொண்டு செல்லாதீர்கள்.

இனிய கற்பனைகள் உங்கள் உடலுறவு வாழ்க்கைக்கு இன்பம் சேர்க்கும். கணவனும்- மனைவியும் சினிமாவில் பார்த்த கதாநாயகன் மாதிரி, கதா நாயகிபோல கற்பனை செய்து கொள்ளலாம் அல்லது நடந்து கொள்ளலாம். நல்ல செக்ஸிக்கு அழகான உடற்கட்டு எப்போதுமே தேவையென்று அவசியம் இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:49 pm

நீங்கள் நல்ல உடல் கட்டுபாட்டுடன் இருக்க முடியுமானால் அப்படி இருப்பது நல்லதே. ஆனால் வயதாகும்போது வயதின் மாற்றங்கள் உடம்பிலும் தென்படும். சிறிது அழகு குறைந்த தம்பதிகள் எல்லாம் செக்ஸ் இன்பத்தை அடைய முடியாது என்பதல்ல. முதலில் உடல் உறவில் நீங்கள் எவ்வாறு தூண்டப்படுவதை விரும்புவீர்கள், எப்படி யெல்லாம் இன்பம் அடைய விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் துணைவி, துணைவர் எப்படிப்பட்ட இன்பத்தை அதிகம் விரும்புகிறார், எவ்வாறு தூண்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் கணவர் வாய் வழியாக செக்ஸ் இன்பத்தை அடைய விரும்பலாம்.

உங்களுக்கு அது முற்றிலும் அருவருப்பான விசயமாகத் தோன்றலாம். இதில் எது சரியானது என்பதை புத்தகங்கள் மூலம் அல்லது செக்ஸ் ஆலோசகர் மூலமாகவோ அறிந்துகொண்டு செக்ஸ் இன்பத்தை அனுபவிக்கலாம்.

உங்களுடைய வயது, உங்களால் ஒதுக்க முடியும்நேரம், உங்களின் வேலைப் பளு இவற்றை பொறுத்ததே உங்கள் செக்ஸ் வாழ்க்கை. ஏனெனில் பலர் இன்றும்கூட எத்தனை முறை செக்ஸ் வைத்துக்கொள்வது சரியானது? எந்தந்த நிலைகளில் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களை கொண்டிருப்பார்கள். இவற்றுக்கெல்லாம் விடை கணவன்- மனைவி இருவருக்கான வயது, ஆர்வம், நேரம் இவற்றைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். படுக்கை அறையில் மட்டுமல்ல, கணவனும், மனைவியும் அன்றாட வேலைகள், செயல்களிலும் அன்னியோன்யமான தோழமையுடனும், நட்புடனும் இருப்பது உங்களிடையே செக்ஸ் இன்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

நாளுக்கு நாள் வலுவடைய வேண்டிய இல்லற வாழ்க்கை பொதுவாக கல கலத்துப் போய்க்கொண்டிருக்கும் சிலருக்கு, கணவன்-மனைவி பாசப் பிணைப்பிலும், செக்ஸ் உறவிலும் விரிசல் விரிவடைந்து கொண்டே போகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவன் தன்னிடம் இப்படியெல்லாம்... நடந்து கொள்ள வேண்டும் என்று மனைவியும், மனைவி தன்னிடம் இந்த மாதிரி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் கணவனும், நடைமுறை வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராத சில கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கற்பனை ஓவியம் கலையும்போது உறவில் உரசலும், விரிசலும் ஏற்படுகிறது. அன்பு ஆட்டம் காணும்போது செக்ஸ் உறவில் சிக்கல் வருகிறது. ஆண்களுக்கோ தாங்கள் எதிர்பார்த்தபடி செக்ஸ் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம். பெண்களுக்கோ தாங்கள் ஆசைப்பட்டபடி கணவன் அன்பு காட்டவில்லையே என்ற கவலை... வருத்தம்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:52 pm

அதிகமான அன்பும், அதிகமான செக்ஸ் உறவும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்ற உண்மையை நாம் மறந்து விடுகிறோம். ஒன்று இல்லாமல் மற்றொன்று கிடைக்காது. போதிய அளவு அன்பும், போதிய அளவு செக்ஸ் சுகமும் அனுபவிக்கும் தம்பதிகள் 20 சதவீதம் மட்டுமே, எஞ்சிய 80 சதவீதம் பேர் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாமல் ஏனோதானோ என்று எப்படியோ இழுத்துப்பிடித்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான திருமணங்கள் ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட்டிருக்கின்றன. பல திருமணங்கள் மரணப் படுக்கையில் கிடக்கின்றன.

ஆண்களைப் பற்றி பெண்களும், பெண்களைப் பற்றி ஆண்களும் கொண்டுள்ள தவறான நம்பிக்கைகளைப் போக்கிக் கொண்டாலே பிரச்சனையின் ஆணி வேரை அகற்றிவிடமுடியும்.

பெண்களைப் பற்றிய ஆண்களின் தவறான நம்பிக்கைகள்:

1.வேலைப் பளுவினால் பெண்களிடம் செக்ஸ் ஆர்வம் குறைவதில்லை.

2.சின்னச் சின்ன பிரச்சினைகளை, சச்சரவுகளைக்கூட உடலுறவு மறக்க வைத்து இருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.

3.இருவரும் அருகருகே இருந்தாலே போதும்... தான் சந்தோஷப்படுவது போலவே மனைவியும் சந்தோஷப்படுவாள்.

4.தாங்கள் சொல்ல விரும்புவதை பெண்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை.

5. கடலின் ஆழத்தைக்கூட அளந்து விடலாம் பெண்ணின் மனதை அறிய முடியாது. பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது, திருப்திப்படுத்த இயலாது.

6.எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், பெண்கள்

7. உடல் உறவுக்காக பெண்களுக்கு தூண்டுதல் தேவையில்லை.

8.ரொமான்ஸ் என்பது வாழ்த்து அட்டைகளையும், மலர்க்கொத்தையும் அனுப்புவது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:53 pm

ஆண்களைப் பற்றி பெண்களிடம் உள்ள தவறான நம்பிக்கைகள்:

1. தன்னை நேசிக்கும் கணவன் வீட்டு வேலைகளில் தனக்கு உதவியாக இருப்பார்.

2. தன்னை நேசிக்கும் கணவன் தன்னுடன் இருந்து நேரத்தை செலவு செய்ய விரும்புவார். தன்னுடன் பேசிக் கொண்டிருப்பார்.

3. உற்சாகத்தை கணவர் எப்போதும் என்னோடு பகிர்ந்து கொள்வார்.

4. என்னை உண்மையில் நேசித்தால் என்னிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவார்.

5. சினிமாவில் கதாநாயகன் காதலிப்பதுபோல கணவர் எப்போதுமே ரொமாண்டிக்காக இருப்பார்.

6. கணவர் செக்ஸ் பற்றிய எல்லா விவரங்களும் அறிந்திருப்பார்.

7. எப்படியெல்லாம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.

பெண்ணை முழுமையாகப் புரிந்து கொண்டு, ஆண் இன்பம் அடையச் செய்யாவிட்டால் அவள் மனசுக்குள் காயப்படுகிறாள். கோபமும், வெறுப்பும் ஏற்படுகிறது. இருதரப்பிலும் உள்ள இப்படிப்பட்ட தவறான கருத்துக்கள் மாறவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:54 pm

ஐடியல் கணவன் -ஐடியல் மனைவி என்று பொருத்தமான ஜோடியாக (மேட் ஃபார் ஈச் அதர்) வாழ்க்கை முழுவதுமே ரொமான்டிக்காக காதல் மொழிபேசி கொஞ்சிக் கொண்டிருக்கலாம் என்று பெண்கள் கனவு காண்கிறார்கள். மீடியாவில் சித்தரிக்கப்படும் ஹார்லிக்ஸ் குடும்பம்போல வாழ்க்கையில் இனிமையும், உற்சாகமும் போட்டி போடும் என்று கற்பனையில் சிறகடித்துக் கொண்டிருக்கிறார்கள். காதலித்தபோது எப்படியெல்லாம் மயக்கும்மொழி பேசி, பரிசு கொடுத்து பரவசப்படுத்தி தன் மனசைக் கொள்ளை கொள்வதற்காக ஆருயிர்க் காதலன் நடந்து கொண்டானோ அதைப்போலவே கணவன் ஆன பிறகும் நடந்து கொள்வான் என்பது பெண்ணின் ஆசைக் கனவு.

கல்யாணம் முடிந்த ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த வண்ணக் கனவுகள் கலைந்து போகின்றன. கருத்து வேறுபாடு தலை தூக்குகிறது. இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தையும் குறைந்து விடுகிறது.

இருவரும் தனித் தனித் தீவுகளாகி விடுகிறார்கள். உலக அளவில் காணப்படும் நிலவரம் இதுதான். இந்தியக் குடும்பங்களில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது என்பதுதான் உண்மை காதல், அன்பு, பாசம், பரிவு, அனுசரனைப் போக்கு... என எல்லா விதமான இணைப்பு, ஈர்ப்பு அம்சங்களைத் தொலைத்து விட்டு எதிரும் புதிருமாக தம்பதிகள் மாறி விடுகிறார்கள்.

நீங்காத கசப்புணர்வோடு 20 வருடங்களுக்கு மேலாகவும் இழுத்தடித்துக் கொண்டு தள்ளாட்டத்துடன் தாம்பத்திய வாழ்க்கையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.

பிரச்சினையின் ஆணி வேரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டால் குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள முடியும். கணவன், மனைவி இருவருமே இதில் கவனம் செலுத்த வேண்டும். சகல சவுகரியங்களுடன் ஒரு அமர்க்களமான ஆனந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக இன்றைய விரைவு யுகத்தில் போராடிக் கொண்டிருக்கும்போது, இல்லறத்தின் அடிப்படை சந்தோஷத்திற்கு உலை வைக்கக் கூடிய பிளவுப் போக்கை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:55 pm

செக்ஸ் பிரச்சினைகளையும் அதனை மக்கள் எப்படி எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்னால், முதலில் செக்ஸ் என்கிற விசயத்தைபற்றி மக்கள் எப்படி எல்லாம் கருத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி எல்லாம் கொண்டிருக்கும் எண்ணங்களும், செயல்பாடுகளும், நம்பிக்கைகளும் உண்மைதானா? என்பது பற்றியும் தெரிந்துகொள்வது இந்தத் தொடரை தொடர்ந்து படிப்பதற்கு மேலும் நமக்கு உதவிகரமாக இருக்கும்.

காலம் காலமாக செக்ஸ் என்பது ஒரு ரகசியமானதொரு விசயமாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. உலகத்தில் எந்த நாடுகளும் இந்த கருத்திற்கு விதி விலக்கல்ல. மேலும் நடைமுறையில் விவாதத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒரு விசயமாகவும் செக்ஸ் கருதப்பட்டு வருகின்றது. மனம்விட்டு அரசியல் போலவோ, சினிமா விசயங்கள் போலவோ, மக்களின் அன்றாட செயல்பாடுகள் பற்றியோ செக்ஸை பேசுவது ஒரு குற்றமாகவே கருதப்பட்டு வருகின்றது. இப்படியாக செக்ஸ் என்பது மூடுதிரை உள்ள விசயமாக கருதப்பட்டு வருவதனால்தான் இதில் ஏகப்பட்ட பிரச்சினைகளும், குளறுபடிகளும் மக்களுக்கு ஏற்படுகினறன.

மேலே சொன்னது மாதிரியான கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் படிக்காத பாமரர்கள்தான் என்று சட்டென்று கருதிவிடாதீர்கள். மெத்த படித்த அறிவாளிகளில் பலருக்கும்கூட இத்தகைய மூடநம்பிக்கை செக்ஸ் விசயத்தில் இருப்பதை நாங்கள் நாள் தோறும் பார்த்துதான் வருகின்றோம். இதனை செக்ஸ் மூடநம்பிக்கை, செக்ஸ் அறியாமை என்று எப்படி பெயரிட்டு அழைத்தாலும் இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 7:57 pm

சரி இத்தகைய செக்ஸ் மூட நம்பிக்கைக்கு என்ன காரணம்?

செக்ஸை ஒரு தவறான விசயமாக கருதுவதுதான் முதல் காரணம் ஆகும். அடுத்து தன்னுடைய சகசெக்ஸ் பங்காளியிடம் மனம்விட்டு செக்ஸ் பற்றி பேசவேண்டும். செக்ஸை பற்றித்தெரிந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி கொள்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் செக்ஸ் மருத்துவ நிபுணரிடம் கலந்தாலோசித்து தெளீவு பெறவேண்டும். கல்வித்துறையின் மூலம் பாலியல் கல்வியை புகுத்துவதன் மூலமும் இத்தகைய செக்ஸ் மூடநம்பிக்கையை தகர்க்கலாம்.

செக்ஸ் அறியாமையை மேலும் ஊக்கப்படுத்தும்விதமாக சில கருத்துக்கள் செயல்படுகின்றன. செக்ஸ்பற்றி பேசுவதில் கூச்சமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருப்பதனாலும் (அல்லது) செக்ஸ்பற்றி தெரிந்து கொள்வதை சமுதாயம் தவறாக கருதுவதனாலும் பலர் தவறான தகவல்களை முறையற்ற வழியில் தெரிந்து கொண்டுவிடுகின்றனர். இந்நிலையும் செக்ஸ் பற்றிய அறியாமையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன. அடுத்து தவறான பாலியல் புத்தகங்களை ரகசியமாக படித்து அதில் கூறப்பட்டிருக்கும் தவறான செக்ஸ் தகவல்கள்தான் உண்மையானவை என்று நம்பிக் கொண்டிருப்பதும்கூட செக்ஸ் அறியாமையை மேலும் குழப்பத்திற்;குள்ளாக்கி விடுகின்றன.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். செக்ஸ் பற்றியாவது யாருக்காவது தெரியாமல் இருப்பதாவது என்று நீங்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம். மனிதராக பிறந்த எல்லோருக்குமே செக்ஸ் பற்றி தெரியும் என்பது உண்மைதான். ஆனால் முழுமையாக, தெளீவாக, குழப்பமில்லாமல் தெரிந்து வைத்திருப்பவர்களைவிட தெரிந்து வைத்திருக்காதவர்கள்தான் நிறைய பேர்கள் என்பதுதான் உண்மையான விசயமாகும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக