புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும்


   
   
avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Fri Jun 17, 2011 11:42 am

இலங்கையில் ஈழத்
தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க இனவெறி அரசு தனது முப்படைகளையும் ஏவிவிட்டு
நடத்திய இனப் படுகொலைப் போரில் கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது
அந்தச் செய்திகளைக் கேட்டு உலகமே அலறித் துடித்தது, எதிர்க்குரல்
கொடுத்து. ஆனால் இந்திய அரசைப் போல் இந்தியாவின் ஊடங்கங்களும் மெளனம்
காத்தன.


இந்தியாவின் தொலைக்காட்சிகள், குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் ஆகியவற்றின் கொழும்புச் செய்தியாளர்கள் அனைவரும
சிறிலங்க இராணுவத்தின் பேச்சாளர் உதய நாணயக்கரா என்ன சொல்கிறாரோ அதுதான்
உண்மை, அதைத்தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல், அதையே செய்தியாக்கி
இந்தியர்களுக்குத் தந்தன. இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிற தமிழர்களின்
உறவுகள் இலங்கைத் தீவில் கொல்லப்பட்டது இந்தியத் தமிழர்களுக்கு
மட்டும்தான் வலித்ததே தவிர, இதர இந்தியர்களுக்கு வலிக்கவில்லை. விரல்
விட்டு எண்ணத்தக்க அளவிற்குக் கூட இந்தியாவின் எந்த ஒரு ஊடகமும் -
இணையத்திலிருந்து தொலைக்காட்சி, நாளிதழ்கள் வரை - அங்கே நடந்த இனப் படுகொலை
குறித்துப் பேசவில்லை. சில மனிதாபிமானிகளோடு அத்துயரம் நின்றுவிட்டது.


பொதுவாக
உலகெங்கிலும் வாழும் இதழாளர்கள் அனைவரும் - அவர்கள் எந்த இனத்தைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும் - உண்மையை வெளிக்கொணர்வதில் ஓரினமாக செயலாற்றி
வந்துள்ளார்கள். ஆனால் இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசு ஈழத்
தமிழர்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டபோது இந்தியாவின் இதழினம்
அந்த உண்மையை சற்றும் கண்டுகொள்ளவில்லை. அது இந்திய அரசும், இலங்கை அரசும்,
அதோடு சேர்ந்த சில நாடுகளும் திட்டமிட்டு கட்டவிட்ட ‘பயங்கவரவாதத்திற்கு
எதிரான போர
்’ என்கிற சொற்றொடரில் மயங்கி வேடிக்கைப் பார்த்தது.

ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளின் ஊடகங்களும், அமெரிக்க, ஆஸ்ட்ரேலிய ஊடகங்களும் அலறின.
இலங்கையில் கூட தமிழினத்திற்கு எதிராக ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்தை
எதிர்த்து பல சிங்கள இதழாளர்கள் கொந்தளித்து எழுந்தனர். ஈழத் தமிழின
இதழாளர்களான தாரகி என்கிற தர்மரத்தினம் சிவராமன், அய்யாதுரை நடேசன், சுடர்
ஒளியின் சுப்ரமணியன் சுகிர்த்தராசன், யாழ் தினக்குரலின் மரியதாஸ்
மனோஜன்ராஜ் ஆகியோருடன் லசந்த விக்கிரமசிங்கா, என்னெலிகோடா வரை பல சிங்கள
இதழாளர்கள் சிங்கள இராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்ட ஒட்டுக்குழுக்களாலும்,
கூலிப்படையினராலும் நேரடியாகவும் கடத்தியும் கொல்லப்பட்டுள்ளனர்.
என்னெலிகோடா தமிழினத்தை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட இரசாயண ஆயுதங்களைப்
பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்தார் என்பதற்காகவே அவர் கடத்தப்பட்டார்
என்று அவருடைய மனைவி கதறுகிறார். 500 நாட்கள் ஆகியும் அவர் என்ன ஆனர் என்று
தெரியவில்லை.


எனவே
ஈழத் தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறையையும், இனப் படுகொலைப் போரையும்
இலங்கையின் இதழாளர்கள் பலரும் கண்டித்து எழுதி வந்தனர். இன்றுவரை அவர்களில்
பெரும்பாலோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில்
தஞ்சமடைந்துள்ளனர்.


avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Fri Jun 17, 2011 11:43 am

ஆனால், தமிழ்நாட்டைத் தாண்டி
ஒரிரு இதழாளர்கள் தவிர, வேறு எவரும் தமிழினத்திற்கு எதிரான சிங்கள இனவெறி
அரச பயங்கரவாதத்தைப் பற்றி பேசவில்லை, எழுதவில்லை, தொலைக்காட்சிகளில்
காட்டவில்லை! இதனை இன்றைக்கு சொல்லக் காரணம் உள்ளது.


இதுநாள்வரை
ஈழத்தில் நடந்த மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தமிழினத்தவரும்,
ஐரோப்பியர்களும் மட்டுமே உரகக் கூறிவந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம்
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் நடந்த
இறுதி கட்ட போரில் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாகவும், அது குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் விரிவான அறிக்கை கொடுத்த
பிறகும் இந்தியாவின் ஊடங்கள், ஊடகவியலாளர்களின் போக்கு மாறவில்லை!


ஊடகங்களை
மத்திய காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்துகிறது, இந்தியாவின் முதன்மை ஊடகங்கள்
அனைத்தும் பெரு நிறுவனங்களின் ஒரு கிளையாக இருக்கின்றன என்றெல்லாம்
கூறப்படுவது பெருமளவிற்கு உண்மையே என்றாலும், ஊடகவியலாளர்கள் வெளியே வந்து
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அந்த அநீதியை கண்டிக்காதது ஏன் என்ற வினா
எழுகிறது. அந்த அளவிற்கு இந்திய ஊடகவியலாளர்கள் மனிதாபிமானமற்றவர்களாகி
விட்டனரா என்று ஏன் நாம் வினவ வேண்டியதுள்ளது, காரணம், நேற்று அதிகாலை
இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி ஈழப் போரில் நடந்த அத்துமீறல்கள்கள்,
அந்த மக்கள் பட்ட அவலங்கள் ஆகியன தொடர்பான காணொளியை வெளியிட்டது.


50 நிமிடங்களுக்கும்
அதிகமாக ஓடிய அந்தக் காணொளி - நன்கு சோதிக்கப்பட்டு, நேராக
படம்பிடிக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்த பின்பு ஒளிபரப்பப்பட்டதாகும்.
அதனைக் கண்ட உலக நாடுகளின் அரச பிரதிநிதிகளும், மக்களும் பெரும் துயருக்கு
ஆளானார்கள். அவர்களில் பலர் இந்த அநீதியை இழைத்தவர்களை பன்னாட்டு
குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.


இங்கிலாந்து,
அமெரிக்க அரசு பிரதிநிதிகள் குரல் கொடுத்தனர். ஆனால் இந்தியாவி்ன் எந்த
ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டின்
நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரவலாக அதற்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது.


இந்தியா
என்பது ஒரு நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்று தொலைக்காட்சிகளில்
பாட்டுப் பாடி எவ்வளவுதான் பரப்புரை செய்தாலும், இந்தியாவின் ஒரு இன
இந்தியனின் துயரம் இதர இனத்தின் இந்தியர்களுக்கு ஒரு செய்தி கூட இல்லை
என்பதுதான் வருத்தமானதாகும். இந்திய நாட்டு அரசுக்கு மனிதாபிமானம் என்பது
ஒரு அரசு நெறி இல்லை என்பதை அது காஷ்மீரில், வடகிழக்கு மாநிலங்கள்,
தண்டகாரண்யம் ஆகிய இடங்கள் மட்டுமின்றி, தமிழினப் படுகொலைக்கு உதவியதில்
நிரூபமானது. ஆனால் இந்தியர்களுக்கும் மனிதாபிமான பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதா? இந்தியர்கள் என்று கருதுபவர் ஒவ்வொருவரும் சிந்திக்கட்டும்.

நன்றி: வெப்துனியா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக