புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
9 Posts - 43%
heezulia
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
1 Post - 5%
Guna.D
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
1 Post - 5%
mruthun
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
1 Post - 5%
Sindhuja Mathankumar
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
83 Posts - 51%
ayyasamy ram
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_m10முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 6:53 pm

`உரோமம்' எனப்படும் முடியை வெகு அலட்சியமானதாகப் பேச்சு வழக்கில் கூறுகிறோம். ஆனால் உண்மையில் முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை. சிறந்த சுட்டிக்காட்டியான முடி, மனஅழுத்தம், சத்துப் பற்றாக்குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடியது.

உயிரினங்களில் பாலூட்டிகளில் மட்டும் காணப்படும் முடி, கதகதப்பை அளிக்கிறது, தூசி தும்புகளில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கிறது, ஈரப்பதத்தைக் காக்கிறது. நமது உடலமைப்பில் உள்ள திசுக்கள், எலும்புகள், உறுப்புகளுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றது, முடி.

பொடுகு - `செபோரிக் டெர்மட்டைட்டிஸ்' எனப்படுகிறது. தலை தோலின் மேல் அடுக்கில் காணப்படும். செதில் போல் லேசாக உதிரும்.

முடி உதிர்தல்

முடி இழப்பு அதிகரித்துக்கொண்டே போவது `அலோபேசி யா' எனப்படுகிறது. (கிரேக்க மொழியில் `அலோபெக்ஸ்' என்றால், நரி.) இதன் இறுதிநிலை, வழுக்கையாகும். ஹார்மோன் சிக்கல்கள், மருந்துகள், மன அழுத்தம், பாரம்பரியம் போன்றவை `வழுக்கை'க்குக் காரணமாகின் றன.

புரதம், இரும்புச் சத்து, அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் முடியை அடர்த்தியாக்கி, வளப்படுத்தும் தன்மை கொண்டவை. முடி உதிர்வு, சத்துப் பற்றாக்குறையையும் குறிக்கும். மனிதர்களுக்கு முடி குட்டையாகவும், மென்மையாகவும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும் இருக்கிறது. இதேபோல ஆப்பிரிக்கவாழ் பாலூட்டிகளான யானைகளுக்கும், நீர்யானைகளுக்கும் 2 ரோம அமைப்பு உள்ளது.

காக்கும் முடிகள்

புருவ முடிகளும், இமை முடிகளும் கண்களைக் காக்கின்றன. மூக்குத் துவாரங்களிலும், காதுகளுக்குள்ளும் காணப்படும் நுண் முடிகள், அவற்றுக்குள் நுண்ணுயிரிகள், தூசி தும்புகள் நுழையாமல் தடுக்கின்றன. தோலுக்கு மேலாக உள்ள முடியை நீக்குவது `டெபிலேஷன்' எனப்படுகிறது.

மயிர்க்கூச்செரிதல்

குளிரில் நமக்குப் பற்கள் கிடுகிடுக்கும்போது வேர்க்கால்களை ஒட்டிய `அரெக்டார் பைலி' தசைகள் நிமிர்கின்றன. அதனால், முடியும் குத்திட்டு நிற்கிறது. இதன் விளைவாக, முடி அடுக்கு, வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. நாம் இதை `மயிர்க்கூச்செரிதல்' என்கிறோம். மருத்துவரீதியாக இது `பைலோஎரெக்ஷன்' எனப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது, முடி அப்படியே தோலோடு ஒட்டிக்கொள்கிறது. எனவே வெப்பம் தக்க வைக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.

முடியை அகற்றும் முறைகள்

முடியை நீக்கும் `கிரீம்கள்'- இவற்றை முடி மீது பூச வேண்டும். அகற்றப்படும் முடிகள் 2- 5 நாட்களில் மீண்டும் வளர்ந்துவிடும்.

சவரம் -
ரேசர் பிளேடை பயன்படுத்திச் செய்வது. சில மணி நேரத்தில் முடி வளரத் தொடங்கிவிடும்.

வாக்சிங் - ஒட்டக்கூடிய சூடான மெழுகையும், ஒரு துண்டுக் காகிதம் அல்லது துணியையும் பயன்படுத்தி மேற்கொள்வது. நான்கு முதல் ஒன்பது வாரங்களில் முடி மறுபடி வளரும்.

த்ரெட்டிங் - முடிச்சிட்ட நூலால் முடியை அகற்றுவது.

எலக்ட்ரோலிசிஸ் - சிறுபரப்புகளுக்குப் பயனுள்ளது. நிரந்தரமாக முடியகற்ற உதவுகிறது.

எபிலேட்டர் - முடியை வேர்ப்பையுடன் முழுமையாக அகற்றுகிறது.

லேசர் - கரிய, கரடுமுரடான முடி, `என்டி- ஓய்ஏஜி' லேசரை ஈர்த்து உதிர்கிறது. இதன்மூலம் 80- 90 சதவீத முடியை அகற்றலாம்.

நமக்கு `வேகம்' அதிகம்!

ஆசியக் கண்டத்தினரான நமது முடி வேகமாக வளர்கிறது. அதாவது, மாதம் 1.3 செ.மீ. என்ற அளவுக்கு. ஆனால் நமது முடியின் அடர்த்தி குறைவு, மெல்லியதாக இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தினரின் முடிதான் மெதுவாக வளர்வது. மாதத்துக்கு 0.9 செ.மீ. ஆனால் அது, ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் முடியை விட அடர்த்தியானது. தலை தோலை ஒட்டியே வளரும் இது, சுருண்டுகொள்கிறது. காகேசிய இனத்தவரின் முடிதான் உலகிலேயே அடர்த்தியானது. அது, மாதத்துக்கு 1.2 செ.மீ. நீளம் வளர்கிறது.

***

1. வேர்ப்பை - முடியில் உயிருள்ள ஒரே பகுதி. முடி வேரின் அடிப்பகுதி, குமிழ் எனப்படுகிறது.

2. செபேசியஸ் சுரப்பிகள்- முடிக்கு எண்ணெய்ப் பளபளப்பை அளிக்கின்றன.

3. டெர்மிஸ்-
எபிடெர்மிஸுக்கு கீழ் உள்ள தோல் அடுக்கு. இங்குதான் முடியின் வேர்ப்பை புதைந்துள்ளது.

4. மெடுல்லா- உள்ளார்ந்த பகுதி. அனைத்து முடிகளிலும் காணப்படுவதில்லை.

5. கார்ட்டெக்ஸ்-
முடியின் நடு அடுக்கு. முடியின் பலத்துக்கான அடிப்படை ஆதாரம். முடிக்கு நிறத்தைக் கொடுக்கும் `மெலனினை' கொண்டிருக்கிறது. முடியின் வடிவத்தைத் தீர்மானிப்பது இதுதான்.

6. கியூட்டிக்கிள் -
முடியின் வெளிப்புற அடுக்கு.

****

* தினசரி 100- 150 முடிகள் உதிர்வது இயல்பானது.

* 100 முடி இழைகளால் 10 கிலோ எடையைத் தூக்க முடியும்.

* இங்கிலாந்தில் 55 சதவீதக் குழந்தைகள் பேன் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் முழுவதும் நுண்ணிய `வெல்லஸ்' முடிகளால் மூடப்பட்டுள்ளது.

* மாவீரன் நெப்போலியனின் முடியில் `ஆர்சனிக்' விஷம் காணப்பட்டது. எனவே அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

* தலைமுடியானது அகச்சிவப்புக் கதிர்வீச்சில் இருந்து உடலைக் காக்கிறது. பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.

* ஒரு முடிக் கற்றையால் அதன் எடையைப் போல் 30 சதவீத தண்ணீரைக் கிரகித்துக் கொள்ள முடியும்.

***

பாலிக்யூலிட்டீஸ் -
வேர்ப்பையில் ஏற்படும் வீக்கம். முடியை அகற்றும்போது மோசமான சுகாதாரத்தால் இது ஏற்படக்கூடும்.

ஹிருசுட்டிசம் - அதிகமாக முடியடர்ந்து காணப்படுவது. குறிப்பாக, முகத்திலும், உடம்பிலும். ஹார்மோன்களின் சமச்சீரற்ற நிலை, மருந்துகளின் பக்கவிளைவுகளால் இந்நிலை ஏற்படலாம்.

பேன் -
ரத்தம் குடிக்கும் சிறு பூச்சியினம். முடியின் அடிப்பகுதியை இறுகப் பற்றிக்கொள்ளும் இவை, முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. மருந்து சேர்த்த ஷாம்புகள், லோஷன்கள், நெருக்கமான பற்கள் கொண்ட சீப்புகள் மூலம் பேன்களை அகற்றலாம். ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பேன் பரவுவது, `பெடிகுலோசிஸ்' எனப்படுகிறது. சீப்புகள், தொப்பிகள், துண்டுகள், தலையணைகள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வது, அருகாமை போன்றவற்றால் பேன்கள் பரவலாம்.

தினதந்தி



முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 15, 2011 7:00 pm

அப்பாடா!!!!!!!! முடிவா முடியைப் பற்றி நிறைய அறிய முடிந்தது...

தகவல்களுக்கு நன்றி பாஸ்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Wed Jun 15, 2011 7:14 pm

முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! 1772578765
dsudhanandan wrote:அப்பாடா!!!!!!!! முடிவா முடியைப் பற்றி நிறைய அறிய முடிந்தது...

தகவல்களுக்கு நன்றி பாஸ்...


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 7:23 pm

* மாவீரன் நெப்போலியனின் முடியில் `ஆர்சனிக்' விஷம் காணப்பட்டது. எனவே அவர்
விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு சின்ன பிட்டு ஏதோ நம்பளாள முடிஞ்சது..

நெப்போலியன் பொன பார்ட் இறந்தது எப்படி?
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Napoleon_bonaparte_1175088533032877


17-ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு
சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த
நெப்போலியன் தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை
தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த
களங்களிலேயே கழித்தவன். நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும்
முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய
நாடுகளை ஒவ்வொன்றாக தன் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்த திறனும் உலகின் வரலாறு
அறிஞர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டவை ஆகும்.





1812
இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு
நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு,
நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து
மீள்வதற்கு அதற்கு முடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணி,
லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள்
நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி
எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில்
நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன்
இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன்
பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின்
கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலேநாத் தீவில் கழிந்தது.


நெப்போலியன் போனபார்ட் மரணம் தொடர்பில் பல்வேறுவிதமான ஊகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! Sc1223053a

நெப்போலியன்
ஆர்சனிக் விஷம் காரணமாக மரணமடைந்தான் என்று ஒரு கருத்தும், நெப்போலியன்
சிறை வைக்கப்பட்ட அறை பற்றிய ஆய்வுகளிலிருந்து, அந்த அறையின் சுவரை
அலங்கரித்த ஓவியத்தில் விஷம் பூசப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில்
பாம்பின் விஷத்தை ஒரு வர்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின்
அருகிலேயே நெப்போலியன் இருந்ததால், விஷத்தைச் சுவாசித்து சுவாசித்து
இறந்துவிட்டார் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்களும், சுவரில் ஓவியத்தினை ஒட்ட
பயன்படுத்தப்பட்ட பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்கமுடியாமல்
நெப்போலியன் ஓவியத்தினைக் கிழித்துத் தின்றதால் இறந்தார் என்று இன்னொரு
தரப்பினர் அறிவித்தனர்.


ஆனால், நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிதாகவெளியாகியுள்ளஆய்வுத்தகவலின் பிரகாரம் மாவீரன்நெப்போலியன் இயற்கை மரணம்அடைந்ததாகதெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வினை இத்தாலியின் அணு பெளதிகவியல் தொடர்பான தேசிய நிறுவகம்(NINP) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொன்மை
கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுத்தகவல் வெளியிடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வில், குழந்தைப் பருவ மற்றும் இறப்புக்கு
முந்திய காலப்பகுதிற்கும் இடைப்பட்ட பேரசனுடைய முடிகளின் பல்வேறு மாதிரிகளை
ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.


ஆய்வுக்காக
எடுக்கப்பட்ட முடிகளினை சிறியதொரு அணுக்கருவியின் மையத்திலிட்டு
அவற்றின்மீது நியூத்திரன்களுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது
ஆர்சனிக் ஸ்திரமற்றதாகவும், ஒன்று சேராமலும், காமா மற்றும் வீற்றா
கதிர்களும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.


கதிர்வீசலினை அளவீடுசெய்தபோது, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளில் ஆர்சனிக் மட்டமானது 100 தடவைகள் சாதாரணமாகவே இருந்தது.
நெப்போலியனின் மகன், மனைவி மற்றும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் முடிகளினை ஆய்வுசெய்தபோதும் ஒரே முடிவே கிடைத்ததாம்.

ஆட்சியிலிருந்து
வெளியேற்றப்பட்டு சென் ஹெலெனா தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன்
பாரியளவில் ஆர்சனிக் விஷத்தினை உள்ளெடுத்ததன் காரணத்தினாலேயே மரணமாகியதாக
பலரும் நம்புகின்றனர்.


பிரான்சின் பேரரசன்இத்தாலியின் மன்னன்சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன்ரைன் கூட்டாட்சியின் காப்பாளன்ஆட்சிக்காலம்முடிசூட்டு விழாமுழுப்பெயர்பிறப்புபிறப்பிடம்இறப்புஇறந்த இடம்புதைக்கப்பட்டதுமுன்னிருந்தவர்பின்வந்தவர்துணைவிவாரிசுகள்அரச குடும்பம்தந்தைதாய்
முதலாம் நெப்போலியன்
Napoléon I
முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்! 250px-Jacques-Louis_David_017
நெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது
மார்ச் 20, 1804ஏப்ரல் 6,1814
மார்ச் 1, 1815ஜூன் 22,1815
டிசம்பர் 2, 1804
நெப்போலியன் பொனபார்ட்
ஆகத்து 15 1769
கோர்சிக்கா
மே 5 1821 (அகவை 51)
சென் ஹெலெனா
பாரிஸ்
பிரெஞ்சு கொன்சுலேட்
முன்னைய அரசன்:பதினாறாம் லூயி(இ. 1793)
நடப்பின் படிபதினெட்டாம் லூயி
De Jure நெப்போலியன் II
ஜோசெஃபின் டெ பியூஹார்னை
மரீ லூயி
நெப்போலியன் II
பொனபார்ட்
கார்லோ பொனபார்ட்
லெற்றீசியா ரமோலினோ


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 16, 2011 6:08 am

சூப்பருங்க நண்பா

அருமையிருக்கு சூப்பருங்க அண்ணா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக