உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராதிகா சிற்சபேசன் - கனடாவின் முதல் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்
2 posters
ராதிகா சிற்சபேசன் - கனடாவின் முதல் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்

ராதிகா சிற்சபேசன்
நேற்று நடந்து முடிந்த கனடிய பாராளமன்றத் தேர்தல் கனடா வரலாற்றில் பல முக்கிய மாற்றங்களைத் தந்த தேர்தலாகும். கனடாவில் கண்கூடாக நான் நேரில் பார்க்கும் முதல் தேர்தலும் இதுவே ஆகும். கனடா முழுதும் இருக்கும் சுமார் 308 தொகுதிகளுக்கு நடந்த இத்தேர்தல் கனடா வாழ் தமிழர்களுக்கும் முக்கியமான ஒரு தேர்தலாக அமையும். ஆம் ! கனடா வரலாற்றிலயே முதன்முறையாக ஒரு தமிழர் பாராளமன்றம் செல்லவிருக்கின்றார். மேற்கு உலகிலயே பாராளமன்றம் செல்லும் முதல் தமிழரும் இவர் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடா ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் என்னும் 29 வயது இலங்கை வம்சாவளித் தமிழர் கனடாவின் வரலாற்றிலயே முதன்முறையாக பாராளமன்றம் செல்லும் முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.
தெற்காசிய வம்சாவளியினர் மற்றும் சீன வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக லிபரல் ( தாரளமயக் ) கட்சியின் டெரக் லீ உறுப்பினராக இருந்து வந்தார். ஆனால் இம்முறை அவர் ஓய்வுப் பெற்ற பின்னர் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தெற்காசிய வம்சாவளியினராக இருந்தனர். இவற்றில் கன்சவேர்டிவ் கட்சியின் சார்பாக மார்லின் காலியட், லிபரல் கட்சியின் சார்பாக ராணா சர்கார், புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பாக ராதிகா சிற்சபேசன், பசுமைக் கட்சியின் சார்பாக ஜார்ஜ் சிங் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஆனால் ராதிகா சிற்சபேசன் வெற்றிப் பெற்று முதல் தமிழர், முதல் தமிழ் பெண் பாராளமன்ற உறுப்பினர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். 29 வயதே நிரம்பிய ராதிகா பாரளமன்றத்தில் தமிழர்களின் குரலைப் பிரதிபலிப்பார் என அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர்.
மற்றுமொரு தமிழ் வேட்பாளரான ராகவன் பரஞ்சோதி என்பவர் ஸ்காபுறோ தென் மேற்குத் தொகுதியில் ஆளும் கன்சவேர்டிவ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு இருந்தார். ஆனால் அவரால் அங்கு வெற்றியீட்ட முடியாமல் போனது. அங்கும் புதிய ஜனநாயக் கட்சியின் டான் ஹாரிஸ் முன்னிலையில் இருந்தார். இருப்பினும் அவருக்கு அடுத்த நிலையில் ராகவன் பரஞ்சோதி பெற்றிருந்தார். இருவருக்குமான வாக்கு இடைவெளி மிகவும் குறைவானதாக இருந்தது.
ராகவன் பரஞ்சோதி ஆளும் கன்சவேர்டிவ் சார்பாகப் போட்டியிட்டு இருந்தார். ஆனால் ராகவன் மீதான விடுதலைப் புலிகள் சார்பு நிலை அவருக்கான கணிசமான ஆதரவை இழக்கச் செய்திருக்கலாம். ராகவன் பரஞ்சோதி விடுதலைப் புலிகள் சார்பான கொள்கை உடையவர் என்றக் குற்றச் சாட்டு எழுந்திருந்தது. ஆனால் அதனை அவர் மறுத்திருந்தார். குறிப்பாக அவர் போட்டியிட்ட கன்சவேர்டிவ் கட்சியானது தமிழ் புலிகள் மீதான தடையைக் கொண்டு வந்த கட்சி என்பதாலும், கப்பலில் தமிழ் அகதிகள் அதிக அளவில் ஆட்கடத்தல் காரர்களால் கொண்டு வந்ததையும் கடுமையாக விமர்சித்து இருந்தக் கட்சி என்பதாலும் கனடிய தமிழர் மத்தியில் அக்கட்சிக்கான ஆதரவு குறைந்த நிலையில் இருந்தது. இருப்பினும் தமிழரான ராகவன் பரஞ்சோதிக்கு சீட்டு வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ராகவன் பரஞ்சோதி முன்னர் தமிழ் புலிகள் ஆதரவு நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் தொகுத்து வழங்கியவர், அது மட்டுமின்றி நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தின் போது பங்கேற்றார் எனறக் குற்றச்சாட்டு அவர் மீது எழுப்பப்பட்டது. தமிழ் புலிகளோடு நெருங்கியத் தொடர்பு வைத்திருந்தார் எனவும் அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அதனை மறுத்திருந்த அவர் தமிழ் புலிகள் தடையை தாம் ஆதரிப்பதாகவும், தாம் தமிழ்ப் புலி ஆதரவாளன் இல்லை எனவும், ஒரு தமிழ் தொலைக் காட்சியின் நிருபராக மட்டுமே பணியாற்றியதாகவும் கூறியிருந்தார். கன்சவேர்டிக் கட்சியும் தமிழ்ப் புலிகள் ஆதரவான எவருக்கும் தாம் சீட்டு வழங்க மாட்டோம் எனவும், ராகவனின் பின்புலம் சுத்தமாக இருந்ததாகவும் உறுதியளித்தனர்.
ஆனால் இச்சர்ச்சைகள் தமிழரல்லாதவர் மத்தியில் ராகவன் புலி ஆதரவாளர் என்பது போலவும், தமிழர்கள் மத்தியில் அவர் புலி எதிர்ப்பாளர் போலவும் தோற்றத்தை உருவாக்கிவிட்டு இருந்தது. இதனால் கணிசமான தமிழ் அல்லாதவர் இவருக்கு வாக்களிக்கவில்லை, அதே போல புலி எதிர்ப்பாளர் என்றப் பரப்புரையால் தமிழர்கள் மத்தியில் இவருக்கான ஆதரவுக் குறைந்தும் காணப்பட்டது. இத்தகைய காரணங்கள் ராகவனின் வெற்றிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒருவேளை அவர் வெற்றிப் பெற்றிருந்தால் ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கன்சவேர்டிவ் கட்சியில் பல பணிகளை செய்திருப்பார்.
ராதிகா சிற்சபேசன் நீண்டகாலமாக கனடாவில் வசித்து வந்தவர் என்பதாலும், தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோரிடம் எவ்வித அரசியல் பிரச்சனை இல்லாமல் நகர முடிந்தது எனலாம். அவர் வெளிப்படையாக புலி ஆதரவாளராகவோ, புலி எதிர்ப்பாளராகவோ செயல்பட்டவர் இல்லை. அதே சமயம் தமிழர்கள், தமிழர்கள் நலன்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர். இது அவருக்கு நற்பயனாய் அமைந்தது. என்றும் இல்லாத அளவுக்கு புதிய ஜனநாயகக் கட்சிக்கு நாடு முழுதும் ஏற்பட்ட ஆதரவு அலையும் இவருக்கு கூடுதல் பயனாக அமைந்தது எனலாம்.
கனடா முழுதும் சிறுபான்மை கட்சியாக ஆட்சியில் இருந்த கன்சவேர்டிவ் கட்சி இம்முறை பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அது பெற்ற மொத்த இடங்கள் 167 தொகுதிகளாகும், ஆட்சி அமைக்க 155 இடங்களைப் பெற்றிருந்தால் போதுமானது ஆகும். வழக்கமாகத் தமிழர்கள் ஆதரவு வழங்கி வந்த லிபரல் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்துள்ளது. அது வெறும் 34 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. தமிழர்கள் உட்பட பல்வேறு மக்கள் இம்முறை புதிய ஜனநாயக் கட்சிக்கு வாக்களித்து இருந்தனர். அதனால் அது 102 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கின்றது.
பிரஞ்சு மக்கள் அதிகம் வசிக்கும் க்யுபக் மாநிலத்தின் ப்ளாக் க்யுபெக்கா என்னும் பிரிவினை வாதக் கட்சி என்றுமில்லாத அளவுக்கு இம்முறை படுதோல்வியை சந்தித்துள்ளது. அது வெறும் நான்கு இடங்களை மட்டுமே அங்குப் பெற்றது. கடந்தமுறை இக்கட்சிப் பெற்ற இடங்கள் 49 ஆகும். க்யுபெக் மாநிலத்தைப் பிரித்து தனிநாடாக மாற்ற இக்கட்சிப் பலா ஆண்டுகளாக போராடி வருகின்றது. ஆனால் இம்முறை க்யுபெக் மாநிலத்தில் 61 இடங்களைப் பெற்று புதிய ஜனநாயகக் கட்சி அனைவரின் மூக்கிலும் விரல் வைக்க வைத்துவிட்டது.
கனடா வரலாற்றில் முதன்முறையாக பசுமைக் கட்சி ஓரிடத்தைப் பெற்று பாராளமன்றம் செல்கின்றது. சுற்றுப்புறச் சீர்கேட்டுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் இக்கட்சியின் தலைவி எலிசபெத் மே வெற்றிப் பெற்று முதல் பசுமைக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினராகியுள்ளார்.
தமிழ்ப் புலிகளின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கும், மக்களிடம் பணம் பட்டுவாடா செய்தல், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வாங்க உதவினார்கள், போன்றக் குற்றச்சாட்டுக்களால் - கன்சவேர்டிவ் கட்சியானது அவர்களைத் தடை செய்து இருந்தது. அது மட்டுமின்றி கப்பல்களில் ஆள் கடத்தல் செய்து நாட்டுக்கு அதிகமான அகதிகளைக் கொண்டு வருகின்றார்கள் என அதனைத் தடுப்பதற்கு கன்சவேர்ட்வ் கட்சி கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதனால் அனேக தமிழர்கள் அவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பதை விரும்பாமல் இருந்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் அதிகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருப்பதால் தமிழர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. பொதுவாக வெள்ளை இனத்தவர் ஆதரவுக் கட்சி எனக் குற்றம் சாட்டப்பட்டாலும், இம்முறை அனைத்து இனங்களும் வாழும் டொறோண்டொ நகரத்திலும், ஒன்டாரியோ, பிரிடிஷ் கொலம்பியா மாநிலத்தில் இக்கட்சியே அதிக இடங்களையும் ஆதரவையும் பெற்று உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடியத் தமிழர்கள் தமது வாழ்வை கனடாவில் வளப்படுத்தவும் தாயக நாட்டில் உள்ள மக்களின் உரிமைக்காக பாடுபடவும் கறையில்லாத, பக்குவமான, ஆழமான சிந்தனையுடன் செயல்படுவதே வெற்றியளிக்கும். அந்த வகையில் ராதிகா சரியான நபரே எனத் தோன்றுகின்றது. எது எப்படியானாலும் முதன்முறையாக வட அமெரிக்க நாட்டில் தமிழர் ஒருவர் பாராளமன்றம் செல்கின்றார் என்பது உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமையான செய்தியாகும். எந்தவிதக் கறையும் இல்லாமல், இளமையும் பொறுமையும் திறமையும் கொண்ட ராதிகாவின் அரசியல் பயணத்துக்கு எமது நல்வாழ்த்துக்கள். தமிழர் மற்றும் தமிழர் அல்லாத கனடா வாழ் மக்களிடையே நற்பணி செய்யவும், பல சாதனைகள் புரியவும் வாழ்த்துவோமாக.
தமிழர்கள் பாராளமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் பிற நாடுகள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிரான்சு, மொரிசியஸ் ஆகும். இந்த வரிசையில் கனடாவும் இணைந்துள்ளது. கனடாவில் தமிழர் ஒருவர் பாராளமன்ற உறுப்பினராக ஆகி இருப்பது, நிச்சயம் இலங்கை அரசுக்கு மேலும் கடுப்பைக் கிளப்பி இருக்கும் என்றால் அது மிகையாகாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ராதிகா சிற்சபேசன் - கனடாவின் முதல் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்
சிறப்பான முறையில் செயல்பட வாழ்த்துக்கள் !!
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562
Re: ராதிகா சிற்சபேசன் - கனடாவின் முதல் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|