புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
37 Posts - 77%
heezulia
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
373 Posts - 79%
heezulia
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_m10நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நச்சரிப்பு குறித்த அலசல்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 8:57 am

* `உன் நச்சரிப்பு தாங்க முடியல...' அடிக்கடி கேட்கும் வசனம் இது. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும், உறவுகளில் விரிசல் விழவும் காரணமாக இருப்பது இந்த நச்சரிப்பு. தொண தொண என அரிப்பதில் ஆண், பெண் பேதமெல் லாம் இல்லை. இப்படி நச்சரிக்கும் ஒவ்வொரு வரும் நாம் அவரின் / அவளின் நன்மைக்குத் தானே சொல்கிறோம் என எண்ணுகிறார்கள். `நாம் சரியாகத்தானே செயல்படுகிறோம், பிறகு ஏன் நம்மை புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்?, இனி நானும் அவர் சொல்வதை கேட்க மாட்டேன்' என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். இதுதான் விரிசலின் அடித்தளம்.

* உங்கள் காதலி அல்லது மனைவி தொணதொணப்பு உங்களை பாடாய்ப்படுத்துவதாக கருதுகிறீர்களா? `உடற்பயிற்சி செய்யுங்கள். குடிக்க வேண்டாம். வெளி உணவுகளை உண்ண வேண்டாம். இந்தாங்க மருந்து சாப்பிடுங்க...' இப்படியெல்லாம் அவர்கள் சொல்லாவிட்டால் உங்களால் இப்போதிருப்பதுபோல் நலமாக இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். பெண்கள், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யாதீர்கள்? என்று நச்சரிப்பதெல்லாம் நன்மையாக முடிகிறது என்று உணர முடிகிறதல்லவா? ஆண்கள் நலமாக இருப்பதற்கும், ஏன் உயிரோடு இருப்பதற்கும் கூட பெண்களின் நச்சரிப்பு காரணம் என்று சொல்லலாம்.

* ஆண்களும் நிச்சயமாக தொணதொணக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக மனைவியை குறைகூறுகிறார்கள், தப்பு கண்டுபிடிக்கிறார்கள், குற்றம்சாட்டி முனகுகிறார்கள். பெண் ணின் நன்மைக்காகத்தான் அவர்களும் இதைச் செய்கிறார்கள். ஆண்களின் பார்வையில் தொணதொணப்பு எனப்படுவது மறந்த விஷயங்களை மறைமுகமாக அல்லது எதிர்மறை யாக நினைவூட்டுதல் ஆகும். `மனைவியின் தொணதொணப்பு தான் என் வாழ்வின் ஒரே பிரச்சினை' என்று புலம்பும் குடும்பஸ்தர்கள் ஏராளம். நச்சரிப்பு தாங்காமல் மனைவியை கொலை செய்ததாக குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

* பெரும்பாலும் தொணதொணத்தல் மற்றவரை நேர்வழிப்படுத்தவே சொல்லப்படுகிறது. நாம் நச்சரிக்கிறோம் என்பது அவர்களுக்கே தெரிந்தா லும் அதனால் நன்மை விளையும் என்று எண்ணி தொடர்ந்து தொணதொணக்கிறார்கள். ஆனால் நச்சரிக்கப்படுபவருக்கு இது சுத்தமாக பிடிப்ப தில்லை. ஏனெனில் அவர் ஓய்வாக இருக்க விரும்பும் நேரத்தில் இது நடப்பதால் எரிச்சலை கிளப்பி விடுகிறது. அதில் இருந்து தப்பிப்பதற் காக அவர் உம்மென்று இருப்பார். அல்லது டி.வி., கணினியில் மூழ்குவார். ஆனால் இது நச்சரிப்பவருக்கு மேலும் ஆத்திரத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் முரண்பாடும், விரிசலும் ஏற்படுகிறது.

* பெண்களே அதிகம் தொணதொணப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அவர்களின் மூளை அமைப்பில் பேச்சுத்திறன் பகுதி பரந்து விரிந்துள்ளது. இதனால் அவர்கள் அதிகம் பேசுகிறார்கள். அவர்களின் பேச்சும் பல விஷயங்கள் கலந்ததாக இருக்கிறது. இதை ஆண்களால் புரிந்து கொள்ள முடியாததால் அவர்கள் பலவற்றை மறந்து விடுகி றார்கள். இதனால் பெண்களின் ஞாபகப்படுத்தலும், நச்சரித்தலும் தொடர்கிறது. அவர்க ளுக்கு அந்த சிறுசெயலின் தொடர்ச்சியில் வாழ்க்கை இருப்பதால் பெண்கள் அதை ஞாபகப்படுத்தியே தீர வேண்டியுள்ளது. இதை ஆண்கள் புரிந்து கொள்ளாத போது குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது.

* தனது பணியில் மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் உள்ள பெண்கள் அதிகம் தொண தொணப்பது இல்லையாம். தீவிர காதலில் இருக்கும் பெண்களும் அதிகம் நச்சரிக்க மாட் டார்களாம். அவர்கள் காதல் கற்பனைக் காட்சி களில் லயித்து இருப்பதாலும், காதலருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாலும் தொண தொணப்பு குறைகிறது. கவர்ச்சியான பெண்கள் தங்கள்அழகை மேம்படுத்திக் கொள்வதிலேயே அதிக அக்கறையுடன் இருப்பதால் அவர்கள் யாரிடமும் தொணதொணப்பது இல்லையாம். ஆனால் உறவில் ஈடுபடும்போது மட்டும் இவர்களின் தொணதொணப்பு அதிக மிருக்கிறதாம்.

* மிக நெருக்கமான உறவுகளுக்குள்தான் தொணதொணப்பு ஏற்படுகிறது. பொறுப்புள்ள அம்மாவோ, மனைவியோ அதிகம் தொணதொணக்கிறார்கள். பொது இடத்தில் வைத்து ஏதாவது ஒன்றை காரணம் காட்டி ஏற்கனவே நடந்த அற்ப விஷயங்களையெல்லாம் அள்ளிவிடுவது பெண்களின் குணம். இது ஆண்களுக்கு அறவே பிடிப்பதில்லை. பெண் கள் பல விஷயங்களை மறைமுகமாக சொல்கிறார்கள். இதுவும் பிரச்சினைக்கு காரணம். வெளிப்படையாக சொல்வதே ஆண்களை பொறுத்தவரை பிரச்சினைக்குத் தீர்வு காண வசதியாக இருக்கும்.

* தொணதொணப்பின் அடித்தளம் உண்மை சார்ந்தது. வெறுப்பு, வேறுபாடு, எதிர்பார்ப்பு எல்லாம் அடங்கிய உண்மை தான் நச்சரிப்பு. எனவே தொணதொணப்புக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட இருவருமே ஏற்றுக்கொள்ளும்போதுதான் தீர்வு கிடைக்கும். பிரச்சினையை விளக்கும் பேச்சானது, 1. அவரது தவறான நடத்தையை விளக்குவதாகவும், 2. உங்கள் நிலைமையை புரிந்து கொள்ள வைப்பதாகவும், 3. உங்களின் பாசத்தை வெளிப்படுத்துவ தாகவும், 4. அவரது நடத்தையால் ஏற்படும் பின் விளைவை சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்தால் சுமூக தீர்வு கிடைக்கும். உறவு விரிசல் ஏற்படாது.

* பொறுப்பான பெற்றோர் பிள்ளைகள் மீதுள்ள அக்கறையால் இயல்பாகவே தொணதொணக் கிறார்கள். பிள்ளைகள் சரியாக நடக்காததற்கு பெற்றோரே காரணம் என்று சொல்லலாம். ஏனெ னில் அவர்களின் வளர்ப்பு முறையே குழந்தை களின் வாழ்க்கை முறையாக மாறுகிறது. எனவே பிள்ளைகளை குறை சொல்வதால் தீர்வு கிடைக் காது. அவர்கள் முரண்டு பிடிப்பார்கள், உங்களை வெறுக்கவும், விலகிச் செல்லவும் துணிவார்கள். எனவே பெற்றோர் நச்சரிப்பதற்குப் பதிலாக உறுதி யான நடவடிக்கை, சிறிய தண்டனையின் மூல மாக குழந்தைகளை வழிநடத்தினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக மலரும்.

* பல நேரங்களில் தொணதொணப்பு பிரி வினையை ஏற்படுத்தி விடுகிறது. நீ, நான், எனது என்ற சொற்களை அதிகமாகப் பயன்படுத்தாமல் பிரச்சினைகளை அணுகினால் சுமூகமான தீர்வு கிடைக்கும். ஏனெனில் நீ என்ற சொல் தன்னை மேல்நிலைப்படுத்தி மற்றவரை குறைகூறுவதாக அமைகிறது. `நீ என் மீது அக்கறையில்லாதவன்' என்பதற்குப் பதிலாக, `நான் உங்களிடம் இதை எதிர்பார்க்கிறேன், என்னை புரிந்து கொள்ளுங்கள்' என்று சொல்வது உங்கள் பேச்சை கேட்கவும், தேவையை நிறைவேற்றவும் வைக்கும். மனைவி தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்ததுபோல பேசுகிறாள் என்று நினைப்பது ஆசையை அறுத்து பிரிவை அதிகரிக்கும்.

தினதந்தி



நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2011 9:38 am

உங்கள் காதலி அல்லது மனைவி தொணதொணப்பு உங்களை பாடாய்ப்படுத்துவதாக
கருதுகிறீர்களா? `உடற்பயிற்சி செய்யுங்கள். குடிக்க வேண்டாம். வெளி உணவுகளை
உண்ண வேண்டாம். இந்தாங்க மருந்து சாப்பிடுங்க...' இப்படியெல்லாம் அவர்கள்
சொல்லாவிட்டால் உங்களால் இப்போதிருப்பதுபோல் நலமாக இருக்க முடியுமா? என்று
சிந்தித்துப் பாருங்கள். பெண்கள், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யாதீர்கள்?
என்று நச்சரிப்பதெல்லாம் நன்மையாக முடிகிறது என்று உணர முடிகிறதல்லவா?
ஆண்கள் நலமாக இருப்பதற்கும், ஏன் உயிரோடு இருப்பதற்கும் கூட பெண்களின்
நச்சரிப்பு காரணம் என்று சொல்லலாம்.
நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 938222 நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 938222 நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 938222

பெண்களே அதிகம் தொணதொணப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அவர்களின் மூளை
அமைப்பில் பேச்சுத்திறன் பகுதி பரந்து விரிந்துள்ளது. இதனால் அவர்கள்
அதிகம் பேசுகிறார்கள். அவர்களின் பேச்சும் பல விஷயங்கள் கலந்ததாக
இருக்கிறது. இதை ஆண்களால் புரிந்து கொள்ள முடியாததால் அவர்கள் பலவற்றை
மறந்து விடுகி றார்கள். இதனால் பெண்களின் ஞாபகப்படுத்தலும், நச்சரித்தலும்
தொடர்கிறது. அவர்க ளுக்கு அந்த சிறுசெயலின் தொடர்ச்சியில் வாழ்க்கை
இருப்பதால் பெண்கள் அதை ஞாபகப்படுத்தியே தீர வேண்டியுள்ளது


இது ரொம்ப சரி புன்னகை

பொறுப்பான பெற்றோர் பிள்ளைகள் மீதுள்ள அக்கறையால் இயல்பாகவே தொணதொணக்
கிறார்கள். பிள்ளைகள் சரியாக நடக்காததற்கு பெற்றோரே காரணம் என்று
சொல்லலாம். ஏனெ னில் அவர்களின் வளர்ப்பு முறையே குழந்தை களின் வாழ்க்கை
முறையாக மாறுகிறது.


இது 100% சரியானது. ரொம்ப நல்ல பதிவு இது சிவா, இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை
எல்லோரும் படித்தால் , பின்பற்றினால் நல்லது . நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 154550



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 11, 2011 9:48 am

சூப்பருங்க அருமையிருக்கு அண்ணா நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 11, 2011 9:52 am

தாமு wrote: சூப்பருங்க அருமையிருக்கு அண்ணா நன்றி
என்னை பொறுத்தவரை நீயே ஒரு நச்சரிப்புதான் தாமு ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2011 9:55 am

முரளிராஜா wrote:
தாமு wrote: நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 224747944 நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 2825183110 அண்ணா நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 678642
என்னை பொறுத்தவரை நீயே ஒரு நச்சரிப்புதான் தாமு நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 755837

சோகம் பாவம் தாமு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 11, 2011 11:10 am

நல்ல கருத்து சிவா. பெண்கள் தொண தொணப்பது ஆண்களின் நன்மைக்குதான்.அத அவங்க புரிஞ்சுக்கிட்டா ஏற்படும் நன்மையும் அவர்களுக்குதான்.



நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Uநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Dநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Aநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Yநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Aநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Sநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Uநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Dநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Hநச்சரிப்பு குறித்த அலசல்கள்! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 11, 2011 11:11 am

எப்பவாச்சுன்னா ஓகே ,எப்பவுமேன்னா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 11, 2011 11:12 am

உதயசுதா wrote:நல்ல கருத்து சிவா. பெண்கள் தொண தொணப்பது ஆண்களின் நன்மைக்குதான்.அத அவங்க புரிஞ்சுக்கிட்டா ஏற்படும் நன்மையும் அவர்களுக்குதான்.
நீங்களும் அத மாதிரியான நபர்தானே சுதா ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 11, 2011 11:15 am

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:நல்ல கருத்து சிவா. பெண்கள் தொண தொணப்பது ஆண்களின் நன்மைக்குதான்.அத அவங்க புரிஞ்சுக்கிட்டா ஏற்படும் நன்மையும் அவர்களுக்குதான்.
நீங்களும் அத மாதிரியான நபர்தானே சுதா நச்சரிப்பு குறித்த அலசல்கள்! 755837
ஆமா நான் தொணதொணப்பதும் என் மாமாவின் நன்மைக்கு,குடும்பத்தின் நனமைக்கு



நச்சரிப்பு குறித்த அலசல்கள்! Uநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Dநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Aநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Yநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Aநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Sநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Uநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Dநச்சரிப்பு குறித்த அலசல்கள்! Hநச்சரிப்பு குறித்த அலசல்கள்! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக