புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_m10Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 10, 2011 11:17 am

Windows 7 -க்கான மொழி இடைமுகத் தொகுப்பை நிறுவுவதற்கு முன்பு நீங்கள் அறிந்திருக்க வேண்டிய நிறுவலுக்கு முன்பான மற்றும் பொதுவான தகவல்களை இந்த ஆவணம் வழங்குகிறது.

Windows 7 -க்கான மொழி இடைமுகத் தொகுப்பைப் பற்றி

Windows 7 -க்கான இந்த மொழி இடைமுகத் தொகுப்பானது (LIP), Windows -இல் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் பகுதிகளின் மொழிப்பெயர்க்கப்பட்ட பதிப்பை வழங்குகிறது. LIP -ஐ நீங்கள் நிறுவிய பின்னர், வழிகாட்டிகள், உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், உதவி மற்றும் ஆதரவு தலைப்புகள் மற்றும் பயனர் இடைமுகத்தில் உள்ள பிற உருப்படிகள் LIP மொழியில் காண்பிக்கப்படும். மொழிபெயர்க்கப்படாத உரையானது, Windows 7 -இன் அடிப்படை மொழியில் இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் Windows 7 -இன் ஸ்பானிஷ் பதிப்பை வாங்கியிருந்தால், சில உரைகள் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட LIP களை நிறுவலாம். கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும், அவர்களுக்கு விருப்பமான மொழியில் பயனர் இடைமுகத்தைப் பார்க்க முடியும்.

LIP –ஐ நிறுவுவதற்கு முன்

● நீங்கள் LIP -ஐ நிறுவ விரும்பும் கணினியில் Windows 7 -இன் செயல்படுத்தப்பட்ட பதிப்பு இயங்க வேண்டும். செயல்படுத்தலானது, உங்களுடைய Windows நகலானது நேர்மையானதா என்றும், Microsoft மென்பொருள் உரிம விதிமுறைகள் அனுமதிக்கும் கணினிகளை விட அதிகமான கணினிகளில் அது பயன்படுத்தப்படவில்லை என்பதையும் சரிபார்க்கிறது.

● Windows 7 -இன் அடிப்படை மொழியால் LIP கண்டிப்பாக ஆதரிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் Windows 7 -இன் ஸ்பானிஷ் பதிப்பை வாங்கியிருந்தால், அந்த பதிப்பில் குறிப்பிட்ட சில LIP களை மட்டுமே நிறுவ முடியும். LIP களுக்கான முன் தேவைகள், LIP கோப்புகளுடன் Microsoft வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

LIP –ஐ நிறுவுதல்

● LIP -ஐ நிறுவுவதற்கு நீங்கள் ஒரு நிர்வாகியை உள்நுழைந்திருக்க வேண்டும், மேலும் நிறுவுதல் செயல்முறையின்போது மற்ற அனைத்து பயனர்களும் வெளியேறி உள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

● அமைவு நிரலானது, நிறுவுதல் செயல்முறையில் உங்களை வழிநடத்தும், பின்னர் உங்களை வெளியேறுமாறு கேட்கும். மீண்டும் நீங்கள் உள்நுழைந்து, காட்சி மொழியை LIP மொழிக்கு மாற்றினால், நீங்கள் நிறுவிய மொழியில் Windows காண்பிக்கப்படும்.

ஆதரிக்கப்படும் தளங்கள்

Windows 7 LIPகளை Windows 7 -இல் மட்டுமே நிறுவ முடியும். பெரும்பாலான மொழிகளில் LIPகள் Windows 7 -இன் 32-பிட் பதிப்புகளில் மட்டுமே இயங்கும். ஒரு சில LIPகள் Windows 7 -இன் 64-பிட் பதிப்புகளில் இயங்கும்.

நிறுவலுக்கு பின்பான குறிப்புகள்

Windows -ஐ LIP மொழியில் மாற்றுவதற்கு, நீங்கள் காட்சி மொழியைப் பின்வரும் படிகளைப் பயன்படுத்தி மாற்ற வேண்டும்:

1. தொடக்க பொத்தானைக் கிளிக் செய்யவும், கட்டுப்பாட்டு பலகத்தைக் கிளிக் செய்து, கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

2. விசைப்பலகைகள் மற்றும் மொழிகள் என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.

3. காட்சி மொழி என்பதன் கீழ், பட்டியலிலிருந்து ஒரு மொழியைத் தேர்வு செய்யவும், அதன் பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு LIP நிறுவப்பட்டால், அந்தக் கணினியில் உள்ள எல்லா பயனர் கணக்குகளுக்கும் அது கிடைக்கும். மற்ற பயனர்கள் அவர்களின் கணக்கிற்குள் நுழைந்து மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால், அவர்களின் காட்சி மொழியை மாற்ற முடியும்.

காட்சி மொழியை நீங்கள் மாற்றும்போது அது உங்கள் பயனர் கணக்கிற்கு மட்டுமே மாறுகிறது, வரவேற்பு திரையில் மாறுவதில்லை (Windows -இல் உள்நுழைய நீங்கள் பயன்படுத்தும் திரை) வரவேற்பு திரையில் காட்சி மொழியை மாற்ற, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

1. தொடக்க பொத்தானைக் கிளிக் செய்யவும், கட்டுப்பாட்டு பலகத்தைக் கிளிக் செய்து, கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

2. நிர்வாகம் என்ற தாவலைக் கிளிக் செய்யவும், அதன் பின்னர் பாதுகாக்கப்பட்ட கணக்குகளுக்கு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும். நிர்வாகி கடவுச்சொல் அல்லது உறுதிப்படுத்தல் கேட்கப்பட்டால், கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும் அல்லது உறுதிப்படுத்தலை வழங்கவும்.

3. முறைமை கணக்குகள் (அக முறைமை, அக சேவை மற்றும் பிணைய சேவை) தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.

பயனர் இடைமுகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் பகுதிகள் LIP மொழியில் காண்பிக்கப்படும். பயனர் இடைமுகத்தின் சில பகுதிகள் தொடர்ந்து அடிப்படை மொழியிலேயே இருக்கும். இதற்கான எடுத்துக்காட்டு, Event Viewer மற்றும் MMC snap-in கள் போன்ற நிர்வாகக் கருவிகள்.

Windows -இன் சில பகுதிகளின் தலைப்பு இணைப்பு மொழிப்பெயர்க்கப்பட்டும், ஆனால் அந்த வழிகாட்டியின் முதன்மை அங்கத்தின் உரை அடிப்படை மொழியிலேயும் இருக்கக்கூடும். இது LIP -இன் இயல்பான நடத்தையே. இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளாவன, வரவேற்பு திரையில் உள்ள ஆன்லைனுக்கு செல் என்ற இணைப்புகள்.

LIP மொழிக்காக உருவாக்கப்பட்ட யுனிக்கோட் அல்லாத நிரல்கள் படிக்க முடியாத எழுத்துக்குறிகளுடன் காட்சியளிக்கக்கூடும். இந்த நிரல்களுக்கான பயனர் இடைமுகக் காட்சியை LIP மொழிக்கு மாற்ற, நீங்கள் முறைமையின் மொழியை மாற்ற வேண்டும். நிறுவல் வழிகாட்டியின் கடைசி பக்கத்தில், முறைமை கணக்குகளுக்கு மாற்றங்களைப் பயன்படுத்து என்ற தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாக, முறைமை மொழியை மாற்றலாம் அல்லது பின்வரும் படிகளைப் பின்பற்றியும் மாற்றலாம்:

1. தொடக்க பொத்தானைக் கிளிக் செய்யவும்,, கட்டுப்பாட்டு பலகத்தைக் கிளிக் செய்து, கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

2. நிர்வாகம் என்ற தாவலை கிளிக் செய்து, பிறகு யூனிகோட் அல்லாத நிரல்களுக்கான மொழி (முறைமை இடம்) என்பதன் கீழ் முறைமை இடத்தை மாற்று என்பதை கிளிக் செய்யவும். நிர்வாகி கடவுச்சொல் அல்லது உறுதிப்படுத்தல் கேட்கப்பட்டால், கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும் அல்லது உறுதிப்படுத்தலை வழங்கவும்.

3. மொழியைத் தேர்ந்தெடுத்து சரி என்பதை கிளிக் செய்யவும்.

4. மாற்றங்கள் பயன்படுத்தப்பட, உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டியிருக்கும்.

5. கணினியை மறுதொடக்கம் செய்ய, இப்போது மறுதொடக்கம் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

Internet Explorer சில வலைப்பக்கங்களைப் படிக்க முடியாத எழுத்துருக்களைக் கொண்டு காண்பிக்கக்கூடும். இது ஏனென்றால், LIP -ஐ நிறுவுவது, Internet Explorer -இன் மொழியை மாற்றுவதில்லை. LIP மொழியில் உள்ள வலைப்பக்கங்களைச் சரியாக காண்பிக்க, நீங்கள் அந்த மொழியைப் பின்வரும் படிகளைப் பின்பற்றி Internet Explorer -இல் சேர்க்க வேண்டும்:

1. தொடக்கம் பொத்தானை கிளிக் செய்து Internet Explorer என்பதைக் கிளிக் செய்யவும்.

2. கருவிகள் பொத்தானை கிளிக் செய்து இணைய விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

3. பொது என்ற தாவலைக் கிளிக் செய்து, அதன் பின்னர் மொழிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

4. மொழி விருப்பத்தேர்வுகள் என்ற உரையாடல் பெட்டியில், சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

5. மொழியைச் சேர் என்ற உரையாடல் பெட்டியில், பட்டியலிலிருந்து ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

அறியப்பட்ட சிக்கல்கள்

தற்போது இந்த LIP -இல் எந்தவொரு அறியப்பட்ட சிக்கல்களும் இல்லை.

LIP -ஐ நிறுவல் நீக்கம் செய்தல்

நீங்கள் LIP -ஐ நிறுவல் நீக்கம் செய்யலாம், அல்லது LIPகளை உங்கள் கணினியிலேயே விட்டு விட்டு, காட்சி மொழியை மட்டும் அடிப்படை மொழிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

LIP -ஐ நிறுவல் நீக்க, இந்த படிகளைப் பின்பற்றுங்கள்:

1. தொடக்க பொத்தானைக் கிளிக் செய்யவும், கட்டுப்பாட்டு பலகத்தைக் கிளிக் செய்து, கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

2. விசைப்பலகைகள் மற்றும் மொழிகள் என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.

3. காட்சி மொழி என்பதற்கு கீழே, மொழிகளை நிறுவு/நிறுவல்நீக்கு என்பதைக் கிளிக் செய்து பின்பு படிகளைப் பின்பற்றவும்: நிர்வாகி கடவுச்சொல் அல்லது உறுதிப்படுத்தல் கேட்கப்பட்டால், கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும் அல்லது உறுதிப்படுத்தலை வழங்கவும்.

காட்சி மொழியை மீண்டும் அடிப்படை மொழிக்கு மாற்றி, இந்த படிகளைப் பின்பற்றவும்:

1. தொடக்க பொத்தானைக் கிளிக் செய்யவும், கட்டுப்பாட்டு பலகத்தைக் கிளிக் செய்து, கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

2. விசைப்பலகைகள் மற்றும் மொழிகள் என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.

3. காட்சி மொழி என்பதற்குக் கீழ், பட்டியலிலிருந்து மொழியைத் தேர்ந்தெடுத்து சரி என்பதை கிளிக் செய்யவும்.

பதிப்புரிமை

இந்த ஆவணத்தில் உள்ள தகவல்கள், URL மற்றும் பிற இணைய வலைத்தள குறிப்புகள் போன்றவையும் சேர்த்து, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மாறக்கூடியவை, மேலும் அவை தகவல் வழங்கும் நோக்கத்தோடு மட்டுமே தரப்படுகின்றன. இந்த ஆவணத்தைப் பயன்படுத்துவது மற்றும் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்துக்கும் பயனரே பொறுப்பாவார், இதற்கு Microsoft Corporation வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவித காப்புறுதிகளையும் வழங்கவில்லை. குறிப்பிடப்பட்டால் தவிர, இங்கே தரப்பட்டுள்ள மாதிரி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், தயாரிப்புகள், களப்பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், சின்னங்கள், இடங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவையே. எந்தவொரு உண்மையான நிறுவனம், பெருநிறுவனம், தயாரிப்பு, களப்பெயர், மின்னஞ்சல் முகவரி, சின்னம், நபர், இடம் மற்றும் நிகழ்வு போன்றவற்றைத் தொடர்புபடுத்தவில்லை அல்லது அவ்வாறு புரிந்து கொள்ளக்கூடாது. பொருந்தக்கூடிய எல்லாவிதமான பதிப்புரிமை சட்டங்களுடனும் இணங்குவது பயனரின் பொறுப்பாகும். பதிப்புரிமையின் கீழ்வரும் உரிமைகளைக் கட்டுப்படுத்தாமல், இந்த ஆவணத்தின் எந்தவொரு பகுதியும், மறுதயாரிப்பு செய்யப்படுவது, சேகரிக்கப்படுவது அல்லது ஒரு மீட்டெடுப்பு முறைமையின் கீழ் அறிமுகப்படுத்தப்படுவது, அல்லது எந்தவொரு முறையிலும் (எலக்ட்ரானிக் முறையில், இயந்திர முறையில், நகலெடுத்தல், பதிவுசெய்தல் அல்லது வேறு முறைகளில்) கடத்தப்படுவது, அல்லது வேறு எந்தவொரு காரணத்துக்காகவும் பயன்படுத்தப்படுவது, Microsoft Corporation -இன் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி செய்யப்படக்கூடாது.

இந்த ஆவணத்தின் உள்ளடக்கம் தொடர்பான காப்புரிமைகள், காப்புரிமை விண்ணப்பங்கள், வணிகச்சின்னங்கள், பதிப்புரிமைகள் அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகள் போன்றவை Microsoft -இடம் இருக்கக்கூடும். Microsoft உரிமை விதிமுறைகளில், வெளிப்படையாக வழங்கப்பட்டிருந்தால் தவிர, இந்த ஆவணத்தின் உள்ளவை, மேற்குறிப்பிடப்பட்ட காப்புரிமைகள், வணிகச்சின்னங்கள், பதிப்புரிமைகள் அல்லது பிற அறிவுசார் சொத்துக்கள் போன்றவற்றுக்கு உங்களுக்கு உரிமம் வழங்கவில்லை.

© 2006 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Microsoft, Internet Explorer, மற்றும் Windows 7 ஆகியவை, பதிவுசெய்யப்பட்ட வணிகச்சின்னங்கள் அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும்/அல்லது பிற நாடுகள் அல்லது வட்டாரங்களில், Microsoft Corporation -இன் வணிகச்சின்னங்கள் ஆகும்.

இங்கே தரப்பட்டுள்ள உண்மையான நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் போன்றவை, அந்தந்த உரிமையாளர்களின் வணிகச் சின்னங்களாக இருக்கக்கூடும்.





Windows 7 - தமிழ் மொழி இடைமுகத் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக