புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_m10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10 
57 Posts - 55%
heezulia
மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_m10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_m10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_m10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_m10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10 
99 Posts - 58%
heezulia
மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_m10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_m10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_m10மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 09, 2011 1:56 pm

மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  08THWORK_652218f
Work on the Metro
Rail in progress on Jawaharlal Nehru Road on Tuesday. The proposed
monorail is expected to supplement this service. Photo: S.S.Kumar / The
Hindu

சென்னையில் மோனோ ரயில் - இப்ப
வலைகளில் சூடான விவாதங்களில் இதுவும் ஒன்றாகும். மோனோ ரயில் கேட்க
சூப்பராகத் தான் இருக்கு ! ஆனால் இதனைப் பற்றி எவருக்கு என்னத் தெரியும் ?
முதலில் சென்னைக்கு மோனோ ரயில் சரிப்பட்டு வருமா ? என்பதைப் பற்றி
நம்மவர்கள் பலரும் சாட்டையே செய்யவில்லை.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டு பாதி பணிகளும் முடிந்து விட்டன. இன்னும் நான்கு ஆண்டுகளில்
அது அதன் பணியைத் தொடங்கி விடும் என்பது தான் செய்தியாக இருந்தது. அத்தோடு
இல்லாமல் மெட்ரோ ரயில் என்பது சென்னையின் புறநகர் வரைக்கும் விரிவுப்
படுத்தப்படும் எனவும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆட்சி மாற்றம்
ஏற்பட்டதும் மெட்ரோ ரயிலினைக் கிடப்பில் போடுமளவுக்கு மோனோ ரயில் திட்டம்
என அறிவித்து விட்டார்கள். மெட்ரோ ரயில் பணியும் நடக்கும், ஆனால் விரிவுப்
படுத்தப்படாது என்பது தான் வேதனை தரும் தகவல் ஆகும்.

ஆனால் சென்னையின் மக்கள் தொகை, இட நெருக்கடி போன்ற பல விடயங்களை கருத்தில்
கொண்டுப் பார்க்கும் போது மோனோ ரயில் திட்டம் மற்றுமொரு பறக்கும் ரயில் போல
பயனற்று காட்சிப் பொருளாகி விடுமோ எனத் தான் தோன்றுகின்றது. பதிவுலகில்
ஒரு சில பேரே மோனோ ரயிலினைப் பற்றியும், அது ஏன் சென்னைக்கு ஒத்து வராது
எனவும் கூறியுள்ளார்கள். பலருக்கு இதுக் குறித்த போதிய தகவல்களும்,
விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பதே - இதுக் குறித்துப் பேசாமல்
இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. மோனோ ரயில் குறித்து பார்ப்போம்.

மோனோ ரயில் :

மோனோ ரயில் என்பது ஒற்றை இருப்புப் பாதையில் செல்லக் கூடிய சிறிய இரயில்
வண்டியே மோனோ ரயில் ஆகும். இவை அளவிலும் சிறியவை, பெட்டிகளும் அதிகம்
இருக்காது, நீண்ட தூரமும் ஓடுவதில்லை. பொதுவாக பயணங்களின் இணைப்புக்கே
இவைப் பயன்படுகின்றன. இருப்பினும் மெட்ரோ - சப்வே ரயில்களைக் காட்டிலும்
மோனோ ரயில் என்பது மிகவும் சிறியது எனலாம். மோனோ ரயில் பெரும்பாலும் உயரமாக
கட்டப்பட்டப் பாலத்திலேயே செல்லக் கூடியது, ஆனால் அப்படித் தான் செல்ல
வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பது தான் உண்மை.

பொதுவாக மோனோ ரயில்கள் சில கி.மீ தூரங்களுக்குப் பயணிக்கவே
பயன்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில் மோனோ ரயில்கள் விமான நிலையங்களுக்கும்
- ரயில் நிலையங்களுக்கும் இணைப்பாகவும், பேருந்தி நிலையங்களுக்கும் -
மெற்ரோ ரயில்களுக்கும் இணைப்பாகவும், சுற்றுலாப் பகுதிகளுக்கு இணைப்பாகவுமே
பயன்படுத்தப் படுகின்றன. அதாவது பெரும் போக்குவரத்து நிலையங்களை இணைக்கும்
ஒரு இணைப்புப் பாலமே மோனோ ரயில்கள்.

டொக்யோ மோனோ ரயில் :

உலகின் பல்வேறு இடங்களிம் மோனோ ரயில்கள் இயங்கிய வருகின்ற நிலையில்,
ஜப்பானிய நாட்டில் உள்ள டொக்யோ மோனோரயில் நீளமானதாகவும், லாபகரமானதாகவும்
கருதப்படுகின்றது. இதன் மொத்த நீளம் 17.8 கி.மீ ஆகும். தினமும் 300, 000
பேர் வரை பயணிக்கின்றார்கள். மொத்தம் 11 நிலையங்கள் இருக்கின்றன. ஆனால்
சென்னையில் நம் தமிழக அரசால் கொண்டு வரப் போகும் மோனோ ரயில் திட்டம் சுமார்
333.1 கி.மீ நீளமாகும். இது நிறைவேறும் பட்சத்தில் உலகிலயே மிகவும் நீளமான
மோனோ ரயில் இதுவாகத் தான் இருக்கும். ஆனால், இது எந்தளவுக்கு பயன்படும்
என்பதை பல நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்துக் கொள்வீர்கள் என
நினைக்கின்றேன்.

ஜப்பானின் ஒசாகாவில் இயங்கும் மோனோ ரயில் மிகவும் நீளமானதாகும். அது 23.8 கி.மீ நீளம் ஆகும்.

டொரொண்டோ மோனோ ரயில் :

டொரொண்டோ நகரில் மெட்ரோ ரயில் மற்றும் மோனோ ரயில் ஆகிய இரண்டும்
இருந்தது/இருக்கின்றது. சென்னையில் வாழ்ந்தவன் என்பதாலும், தில்லி மற்றும்
டொரொண்டோ மெற்ரோவை நன்கறிந்தவன் என்பதாலும். சென்னைக்கு உகந்தது மொட்ரோ
மாத்திரமே என்பதையும் என்னால் ஆணித் தரமாக சொல்ல முடியும்.

சரி டொரோண்டோவில் மோனோ ரயில் என்பது முன்பு செயல்பட்டது. ஆனால் அதில்
நிகழ்ந்த விபத்துக்களை அடுத்து அதனை நிறுத்தி விட்டார்கள். இன்று டொரொண்டோ
மோனோ ரயில் தடம் மாத்திரமே இருக்கின்றது.

மாறாக டொரொண்டோவின் பயணிகளுக்கு உதவுவது இங்குள்ள மெற்ரோ - சப்வே
மாத்திரமே. டொரொண்டோ நகரை எடுத்துக் கொண்டால் இது விரிவடைந்த சென்னை நகரை
விட சற்றேப் பெரியதும், ஆனால் விரிவடையாத சென்னை நகரினை விட மக்கள்
தொகையில் சற்ற குறைவானதும் ஆகும். அதாவது நம் சென்னை நகரம் டொரோண்டைவை விட
சிறியது, ஆனால் மக்கள் தொகை அதிகமானது. அப்படியானால் டொரோண்டவை விட
பயணத்தின் நெருக்கடி சென்னைக்கு மிக அதிகமாகும். அப்படிப் பார்க்கப் போனால்
டொரொண்டோவை விடவும் சென்னைக்கே மிகவும் திட்டமிடப்பட்ட மெற்ரோ தேவைப்
படுகின்றது அல்லவா ?

டொரோண்டோ - சென்னை மெட்ரோ ஒப்பீடு :

சென்னையில் திட்டமிடப் பட்ட மெட்ரோவையும், டொரோண்டோவின் மெட்ரோவையும்
ஒப்பிட்டுப் பார்க்கும் போது சென்னையின் மெட்ரோ திட்டம் எவ்வகையில்
குறைவானது அல்ல என்பதை உணரலாம். டொரோண்டோவின் மொத்த நீளம் 70 கி.மீ ஆகும்.
சென்னையின் மெட்ரோ நீளம் 117 கி.மீ ஆகும்.

டொரோண்டோவின் மெட்ரோ இப்போது விரிவுப் படுத்தப்படுகின்றது. அப்படி
பார்த்தால் சென்னையின் மெட்ரோவும் விரிவுப் படுத்தப் படவேண்டியது ஒன்றே
ஆகும். சென்னையின் மெட்ரோ இரண்டு காரிடர்களைக் கொண்டது. ஒன்று
திருவொற்றியூரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும்.
மற்றொன்று தாமஸ் மலையில் இருந்து வடபழநி, கோயம்படு வழியாக சென்னை சென்றல்
வரைக்கும் சென்று காரிடர் ஒன்றோடு இணைகின்றது.

டொரோண்டோ நகரின் மெட்ரோவைக் கணக்கில் பார்த்தால் கிட்டத்தட்ட அதே பாணியிலே
சென்னை மெட்ரோவும் இயங்குகின்றது எனலாம். ஆனால் டொரோண்டோ மெற்ரோ என்பது
ஒவ்வொரு முக்கியப் பேருந்து நிலையங்களோடு இணைக்கக் கூடியதாக இருக்கின்றது.
மாறாக சென்னை மெட்ரோ பேருந்துகள் செல்லும் முக்கியப் பாதையூடாகவே இதுவும்
செல்வது போல இருக்கின்றது.

சென்னை
மெட்ரோவின் மற்றொரு குறைப்பாடு, அது நகருக்குள் தான் செயல்படப் போகின்றது,
ஆனால் புறநகரில் இருந்து சென்னை நோக்கி வருவோர் பேருந்துகளில் நெரிசல்
பட்ட வரவேண்டி இருக்கும். குறிப்பாக பூந்தமல்லியில் இருந்து ஒருவர் சென்னை
நோக்கி வரவேண்டுமானால், அவர் கோயம்பேட்டுக்கோ, ஆலந்தூருக்குத் தான் வந்து
மெட்ரோவைப் பிடிக்க வேண்டி இருக்கும். அது வரை பேருந்து நெரிசலில் சிக்கி
முக்கி வரவேண்டி இருக்கும். மெட்ரோ என்பது சென்னை நகருக்குள் பேருந்து
நெரிசல்களை வெகுவாக குறைக்கும் என்பதில் ஐயமில்லை, ஆனால் புறநகரில் இருந்து
மாநகருக்கு வருவோர் தான் மிகவும் அதிகம் இவர்களுக்கு இது பயனில்லாமல்
போகின்றது.

மோனோ ரயிலின் சொதப்பல்கள் :

மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  2006020302161902
மோனோ ரயில் உத்தேச வழித்தடம்
சென்னையின் மோனோ ரயில் திட்டம் என்பது பிச்சுப் போட்ட
நூடுல்ஸ் மாதிரியாக இருக்கின்றது. இது மேலும் குழப்பத்தை விளைவிப்பதாக
இருக்கின்றது. மெட்ரோ நிறைவேறினால் விமோசனம் கிடைக்குமா எனில் ? எதோ பரவா
இல்லை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கலாம், ஆனால் மோனோ ரயில்
என்பது எங்கிருந்து எங்கு செல்கின்றது என்றே தெரியாத அளவுக்கு குழப்பியப்
படியாக இருக்கின்றது. நீங்களே நிலவரையில் காணலாம்.

மோனோ ரயில் திட்டமானது சென்னையில் அனைத்து முக்கிய ஊர்களுக்கும் தொடர்புப்
படுத்தப் படுகின்றது. ஆனால் உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இது மிகவும்
நீளமானதாக இருக்கும் என்பதால், இவற்றின் மீதான அச்சம் அதிகரிக்கின்றது.
செலவு மிச்சம், கட்டுவதற்கு எளிது என ஏகப்பட்டக் காரணங்கள் சொன்னாலும் -
அவை நம்பும்படி இல்லை. ஏனெனில் உலகில் பல மெட்ரோ ரயில்கள் செலவு
அதிகமானாலும் மக்களின் தேவைக்காக கட்டப்பட்டு இருக்கின்றன. அப்படியானால்
அவர்கள் யாவரும் மோனோ ரயில்களையே இயக்கி விட்டு இருப்பார்களே ! உண்மையான
காரணம் மோனோ ரயில்களால் அதிகப் பட்சமான பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாது
என்பதே உண்மை. அதிகப்பட்சம் பத்துப் பெட்டிகளை இணைத்தாலும் - சென்னையின்
மக்கள் தொகைக்கு பற்றவே பற்றாது. பேருந்தில் அனைவரையும் ஏற்றுவது போல
கூட்டத்தை அளவுக்கு அதிகமாக ஏற்றிவிட்டால் ஆபத்தில் முடியும் வாய்ப்பும்
இருக்கின்றன.

சென்னையின் மோனோ ரயில் திட்டத்தின் படி பல நிலையங்கள் மெட்ரோ ரயில்
திட்டத்துக்கு அருகேயே இருப்பதும் வியப்பைத் தருகின்றது. மெட்ரோ ரயில்
செயல்படும் போது மோனோ ரயில்கள் என்ன காற்றுவாங்கிக் கொண்டிருக்குமா ?

உதாரணமாக ...வண்டலூரில் இருந்து மோனோ ரயில் தாம்பரம் - கத்திபாரா -
சைதாப்பேட்டை - சென்றல் வரை போகின்றது. அதே வழித்தடமாகவே மெட்ரோ ரயிலும்
நிலத்துக்கு அடியே திட்டமிடபட்டு கட்டிவரப் படுகின்றது. இந்தத் தடத்தில்
மோனோ ரயில் தேவையற்றது தானே ??? இதே போல பல இடங்களில் மோனோ ரயிலும் -
மெட்ரோ ரயிலும் அருகருகே திட்டமிடப் படுகின்றது சிரிப்பைத் தருவதாக
இருக்கின்றது.

மெட்ரோ ரயில் சென்னை மீனம்பாக்கம் வரை செல்கின்றது - அதனை விரிவுப் படுத்தி
தாம்பரம் - வண்டலூர் என நீட்டிச் செல்லலாம் என்பது எனது எண்ணம். அதே போல
மெட்ரோ ரயிலால் தொடப்படாத ஊர்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் வரை
மோனோ ரயிலினால் இணைக்கலாம். பெரும்பாலான மோனோ ரயில் நிலையங்களை சென்னை
நகருக்குள் கட்டுவதை விடவும். அவற்றை புறநகரில் உருவாக்கி - மெட்ரோ ரயிலோடு
இணைத்துவிட்டால் எவ்வளவு நனறாக இருக்கும். குறிப்பாக ஆவடியில் இருந்து
வரும் மோனோ ரயிலினை - கோயம்பேடு மெற்ரோ நிலையத்தோடு இணைத்தால்,
பூந்தமல்லியில் வரும் மோனோ ரயிலை கோயம்பேடு மெற்ரோ நிலையத்தோடு இணைத்தால்,
செங்குன்றத்தில் இருந்து வரும் மோனோ ரயிலை சென்றலோடு இணைத்தால் - நிச்சயம்
புறநகர் மக்களுக்கு அது வசதியாக இருக்கும் அல்லவா.

தேவையற்ற ஸ்டேசன்களை ஆங்காங்கு சென்னை நகருக்குள் கட்டுவதை விடவும், மோனோ
ரயிலை மூன்னூறு கிமீக்கு போடுவதை விடவும், மெட்ரோ திட்டத்தோடு இணைத்து மோனோ
ரயிலை செயல்படுத்தலாம். பூந்தமல்லியில் இருந்து சென்றல் போக வேண்டுமானால் -
பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக தாமஸ் மவுண்ட் வரையும் மோனோ ரயிலில்
வந்து - அங்கிருந்து மெட்ரோவில் ஏறி சென்றல் சென்றுவிடலாம். பேருந்தில்
செல்ல ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால் மோனோ ரயில் மற்றும் மெட்ரோ இணைவதால்
பயணிக்கும் நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஏன் இப்படி சிந்திக்காமல்
ஒரு அரசின் திட்டத்தை மூழ்கடித்து புதிய திட்டங்களை செயல்படுத்தி - பண
மற்றும் பொருட் விரயங்களை ஏற்படுத்துகின்றார்கள்.

சென்னையின் மோனோ ரயில்களின் தூரத்தை 300-யில் இருந்து 100 வரையாக குறைத்து,
அதில் முதலீடு செய்வதை வளர்ந்து வரும் கோவை, திருச்சி, மதுரை நகரங்களில்
செயல்படுத்தலாமே !!!

மோனோ ரயிலின் பிரச்சனைகள் :

மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  SydneyMonorail1_gobeirne
சிட்னி மோனோ ரயில்
தமிழக அரசு மெட்ரோ திட்டத்தினை கிடப்பில் போட சொல்லும்
காரணங்கள் செலவு அதிகம், சென்னை நகருக்குள் செயல்படுத்துவது கடினம், பூகம்ப
ஆபத்துகள் இருக்கின்றன. ஆனால் உண்மையில் மெட்ரோத் திட்டம் என்பது
நிலத்தின் அடியிலேயே இயங்கும் - இட நெருக்கடி ஒரு காரணமே இல்லை. பூகம்ப
ஆபத்துகள் நிறைந்த ஜப்பான் போன்ற நாடுகளிலேயே வெற்றிக் கரமாக மெட்ரோத்
திட்டங்கள் செயல்படுவதால் அதுவும் பெரிய பிரச்சனையே இல்லை. செலவுகளை ஒரு
அரசு சிக்கனப் படுத்துகின்றேன் என்றப் பெயரில் புதிய செலவுகள் செய்து
வருவதே நமது அரசுகளின் வேலையாக இருக்கின்றது. செலவுகளை ஈடுக்கட்ட மக்களிடம்
கூடுதல் வரியினை இடலாம். சென்னை நகர சாலைகளினைப் பலவும் டோல் எனப்படும்
கட்டண சாலைகளாக மாற்றலாம். அதனால் வருவாயும் கூடும், வாகனப் பெருக்கமும்
குறையும் அல்லவா?

மோனோ ரயிலின் அதிகப்பட்சம் நான்கு கார்கள் அல்லது பெட்டிகளே செல்வது போலவே
வசதி இருக்கின்றது. ஆனால் மெட்ரோ ரயிலில் சுமார் 10 பெட்டிகளுக்கு அதிகமாக
இணைக்கலாம். அதனால் ஒருவர் இடம் இல்லாமல் காத்து இருக்க வேண்டிய சூழலும்
இல்லை. இல்லை எனில் அடுத்த ரயின் வரும் வரை காத்திருக்க வேண்டும். மோனோ
ரயில் எனில் ஆங்காங்கே பல பாலங்கள் கட்ட வேண்டி இருக்கும், இது ஏற்கனவே
இருக்கும் சாலைகளைக் கடித்தே கட்ட வேண்டி இருக்கும், இது மேலும்
சிக்கல்களைத் தான் உருவாக்கும். மெட்ரோ ரயில் எனில் பாதாளத்தில் சுரங்கம்
தோண்டி அதனூடாக ரயிலை செலுத்த முடியும் அல்லவா. இட நெருக்கடிக்கு
தீர்வாகவும் அமையும் என்பது எனதுக் கருத்து.

புறநகர்களில் இருந்து மெற்ரோவுக்கு இணைப்பு மோனோ ரயில்கள் செயல்படுத்தலாம்.
இதனால் பேருந்துகளில் ஏறி நெரிசலில் சிக்கி முக்கால் மணிநேரப் பயணத்தின்
பின் கோயம்பேட்டுக்கு வந்து மெற்ரோவைப் பிடிப்பதற்கும் போதும் போதும் என
ஆகிவிடும். ஆனால் மோனோ ரயிலினை மெட்ரோக்களோடு இணைக்கும் பட்சத்தில்
புறநகர்களில் இருந்து வருவோரும், செல்வோரும் எளிதாக விரைவாக மெட்ரோவில்
இணைந்துவிடலாம்.

மெட்ரோ ரயிலை செயல்படுத்த வேண்டும் - விரிவுப் படுத்த வேண்டும் :

மெட்ரோ ரயில் என்பது சென்னை வாசிகளின் கனவு, தேவை, உரிமை ஆகும். அதனை வேறு
நிலாக்களைக் காட்டி கிடப்பில் போடுவதை ஜீரணிக்க முடியாது. மெட்ரோத்
திட்டத்தினை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டியது இவ்வரசின் கடமையாகும்.
அத்தோடு நில்லாமல் அதனை மேற்கொண்டு வடக்கே திருவொற்றியூரில் இருந்து
கும்மிடிப் பூண்டி வரையிலும், தெற்கே மீன்மப்பாக்கத்தில் இருந்து செங்கல்
பட்டு வரையிலும், மற்றொரு தடத்தினை ஆலந்தூரில் இருந்து மாமல்லபுரம்
வரையிலும், புதிய தடம் ஒன்றினை கோயம்பேடு முதல் ஸ்ரீபெரம்பத்தூர் வரையிலும்
விரிவுப் படுத்தப்பட வேண்டும். இதுவே வளரும் மக்கள் தொகைக்கு ஏற்றதாக
இருக்கும்.

அத்தோடு நில்லாமல் சென்னையின் நகர சாலைகளின் முக்கியச் சாலைகள் அனைத்தையும்
நூறடி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். நகரத்தில் பீக் ஹவர்சில்
தனியார் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். இதனால் பலரும் மெட்ரோ
போன்ற பொது போக்குவரத்தினை பயன்படுத்துவார்கள். பெட்ரோல் செலவு போன்றவை
மிச்சமாகும், நெருக்கடிகளும் குறையும். குறிப்பாக இரு சக்கர வாகனங்களின்
போக்குவரத்தினை மாநகரத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

பொதுப் போக்குவரத்தி செயல்படத் தொடங்கியதும் சேர் ஆட்டோக்கள்
போன்றவைகளையும் அரசுக் கட்டுப்படுத்த வேண்டும். ஆட்டோக்கள் - டாக்சிகளின்
போக்குவரத்தை வரைவுப் படுத்த பட வேண்டும். இது சாலை நெருக்கடியை பெருமளவுக்
குறைக்கும்.

மோனோ ரயிலும் மோனாலிசாவும் சென்னை வாசியும்  Chennai-metro-rail-project
சுருக்கமாகச்
சொன்னால் மெட்ரோ அன்பது இன்றியமையாத ஒன்றாகும். மோனோ ரயிலினை அவசரக்
கதியில் நிறைவேற்றாமல் சுருக்கமாகவும், இணைப்புகளுக்கும் பயன்படுத்தலாம்
என்பது எனது கருத்தாகும்.
வெறும்
மெட்ரோவும், மோனோவும் சாலை நெருக்கடிகளுக்கு தீர்வாகி விடாது. சாலைகளை
விரிவுப் படுத்தவும், பாதசாரிகளுக்கு நடைப்பாதையும், மிதிவண்டிகள் செல்லக்
கூடிய தனிவழிகளும் அமைத்தால் மேலும் சாலை நெருக்கடிகள் குறையும். சாலையில்
போடப்படும் கடைகளை, சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைவாசல்களை எல்லாம்
அப்புறப்படுத்துவாரா நமது வீரமிகு முதல்வர் என்பதே எனதுக் கேள்வியாகும் ?
மோட்டர் சைக்கிள்களையும், சேர் ஆட்டோக்களையும் நகரத்தினை ஆக்கிரமித்து
பொதுப் போக்குவரத்துக்களுக்கு இடையூறாக உள்ளது அவற்றை தடுக்க வழி செய்வாரா ?


கேள்விகள் கேள்வியாகி விடாமல் இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

நன்றி:கொடுக்கி.நெட்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 09, 2011 2:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக