புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
91 Posts - 63%
heezulia
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
1 Post - 1%
viyasan
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
19 Posts - 3%
prajai
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_m10கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 07, 2011 2:03 am

24 மணி நேர செய்தி சேனல்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால் 24 மணி நேரமும் பரபரப்பான செய்திகளை உற்பத்தி செய்யும் ஒரு நாடு இருக்குமென்றால் அது இந்தியாதான். கடந்த சில மாதங்களாக இது உச்சத்திற்குப் போய்விட்டது. யார் எப்போது நியூஸ் மேக்கர்களாக மாறுவார்கள் என்று உத்தேசிக்கவே முடியாது. திடீர் திடீர் என புதுப் புது கதாநாயகர்கள் உருவாகி தேசத்தையே கிடுகிடுக்க வைக்கிறார்கள். இந்திய மத்தியதர வர்க்கத்திற்கு எந்த சமயம் தார்மீக ஆவேசத்தின் வயிற்று வலி வரும் என்று சொல்ல முடியாது. கொஞ்ச நேரத்தில் எந்த மருந்தும் இல்லாமல் அது தானாகவே சரியாகிவிடும். அரியணைக்கும் திஹார் ஜெயிலுக்கும் இடையே உள்ள தூரம் இவ்வளவு சிறியதாக இதற்கு முன்பு இருந்ததே இல்லை. ஒரு அறையிலிருந்து பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு இன்னொரு அறைக்குப் போவது போல இருக்கிறது அதிகாரத்திலிருந்து சிறைவாசத்துக்குப் போவது.

இத்தனை கதாநாயகர்களுக்கும் ஒரே மைய நாயகன் ஊழல்தான்.

அன்னா ஹஸாரேயின் லோக் பால் மசோதாவிற்கு ஆதரவான போராட்டத்திற்குக் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து யோகி ராம்தேவ் பாபா கறுப்புப் பணத்தை மீட்க அறிவித்த உண்ணாவிரதம் காங்கிரஸ் அரசால் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருகிக்கிறது. ராம் தேவை வரவேற்க நான்கு மத்திய அமைச்சர்கள் விமான நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மூன்றாம் நாள் அவரைக் குண்டு கட்டாகக் கட்டி ஹெலிகாப்டரில் ஏற்றி ஹரித்துவாரில் கொண்டுபோய் இறக்கி விட்டுவிட்டு வருகிறார்கள். அன்னா ஹசாரேயை அனுமதித்த்வர்கள் ஏன் ராம்தேவினைக் கண்டு அஞ்சுகிறார்கள்? வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் என்பது தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி. கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பணம் பல்வேறு அரசியல் மற்றும் வணிக சக்திகளால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது. ராம்தேவ் பாம்புப் புற்றுக்குள் கையை விட்டுவிட்டார். கிட்டதட்ட ஒரு அரசாங்கமே ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியடைந்த பிறகுதான் இந்த வன்முறை நாடகம்.

திக்விஜய்சிங் இப்போது ராம்தேவ் பாபாவை ஃப்ராட் என்கிறார். பேச்சுவார்த்தை நடத்தும்போது இது தெரியவில்லையா? ஒரு அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்கள் ஒரு ஃப்ராடுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த துணிந்தார்கள்? கறுப்புப் பணம் என்ற விமானத்தை ராம்தேவ் ஹைஜாக் செய்ய முயன்றார். பேரம் படியாததால் காங்கிரஸ் இப்போது கடத்தல்காரரைத் தீர்த்துக் கட்டும் முயற்சியில் இருக்கிறது.

ராம்தேவ் பாபா இத்தனை ஆயிரம் கோடிகளை எப்படிச் சேர்த்தார்? ஆயுர்வேத மருந்துகளைத் தயாரித்து விற்கும் அவருக்கு யோகா குருவிற்கு உரிய வரிவிலக்கு எப்படி அளிக்கப்பட்டது? அவருடைய நிறுவங்களுக்கு நிதி அளிப்பவர்கள் யார்? இதெல்லாம் அமலாக்கப் பிரிவின் மூலமாக காங்கிரஸ் எழுப்பத் தொடங்கியிருக்கும் கேள்விகள். நீ கணக்கு கேட்டால் நான் கண்க்கு கேட்பேன் என்று சொல்வது என்ன மாதிரியான தர்க்கம் என்றே புரியவில்லை. இதைச் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம். காறித்துப்புகிறது உலகம். பேரம், பிளாக் மெயில், சதி இவற்றைத் தவிர நாம் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லையா?

ராம்தேவ் பாபா விசித்திரமான நடத்தைகள் உடையவராக இருக்கிறார். தனக்கு எதிராக சதி நடந்ததாக கூறுகிறார். தன்னை என்கவுண்டரில் கொல்ல முயற்சி என்கிறார். போலீஸ் வந்ததும் உண்ணாவிரத மேடையில் இருந்து குதித்து தப்பி ஓடுகிறார். பெண்கள் ஆடையில் மாறுவேசத்தில் இருந்த அவரை போலீஸ் பிடிக்கிறது. அவர் நோக்கம்தான் என்ன? தேசமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு போராட்டத்தை நடத்துபவர் ஏன் போலீஸைக் கண்டதும் மாறு வேஷத்தில் தப்பி ஓடுகிறார்? அவர் பயப்படக் கூடியவர் அல்ல. வேறு ஏதோ ஒரு உணர்ச்சிகரமான நாடகத்திற்கு அவர் திட்டமிட்டிருக்கக் கூடும். தலைமறைவாக இருந்து ‘ பாபாவைக் காணவில்லை’என சில நாட்களுக்குப் பெரும் பரபரப்பை உண்டாக்க நினைத்தாரா?

ராம்தேவின் போராட்டத்தினால் பி.ஜே.பி. மிகவும் புத்துணர்ச்சி பெற்றுவிட்டது. தனக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று ராம்தேவ் எத்தனை முறை சொன்னாலும் அவர் உருவாக்கியிருக்கும் பர பரப்பை ஆர்.எஸ்.எஸ்.சும் பி.ஜே.பி.யுமே முன்னெடுத்துச் செல்கின்றன. ராம்தேவின் மத, சமூக, பண்பாட்டு அடையாளங்கள் இந்துத்துவா சக்திகளுக்கு மிகவும் நெருக்கமானவை. அத்வானி நீண்ட காலத்திற்குப் பிறகு உற்சாகமாகப் பேட்டி அளிக்கிறார். ராம்தேவ்வை ஆதரித்து அளிக்கும் பேட்டியில் ஜெயலலிதாவைப் புகழ்கிறார். பாரதீய ஜனதாவைத் தேசிய மைய நீரோட்டத்திற்கு மறுபடியும் கொண்டு வரும் ஒரு முயற்சியில் ஒவ்வொரு நாடகமாக படிப்படியாக அரங்கேற்றப்படுகின்றன. அரசியல் துருப்புச் சீட்டாக அன்று ராமஜென்ம பூமி. இன்று ராம்தேவ் பாபா- அன்னா ஹஸாரே.

ஊழல் என்பது இன்று இந்தியாவை சூழ்ந்திருக்கும் ஆழிப் பேரலை. பிரெஞ்சுப் புரட்சியில் கில்லட்டினுக்கு அனுப்பப்பட்ட ராஜ வம்சத்தினரின் அட்டூழியங்களை விட கடுமையானது இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் அட்டூழியங்கள். மக்களிடம் தகிக்கும் கோபத்திற்கு எந்த திசையும் இல்லை. இவற்றை ஒரு ஆரோக்கியமான அரசியல் மாற்றத்திற்கு எடுத்துச் செல்லும் சக்திகளும் இல்லை.

அன்னா ஹஸாரேயையும் ராம்தேவ் பாபாவையும் தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளின் தூதர்களாக கருதும் ஒரு சமூகத்தைக் கடவுளால்கூட காப்பாற்ற முடியாது என்று சமீபத்தில் முகநூலில் எழுதினேன். அதையே இப்போதும் எழுதுகிறேன்.

நன்றி: உயிரோசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக