புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_m10பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 10:56 am

First topic message reminder :

1. தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.

கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.

*****

அப்போது மணியும் ஆறரை ஆனதால்
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது-உரலின் அண்டையில்
வைத்துப் போனான். மங்கையின் கணவனோ,
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந்தி ருந்தான்.




VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:00 am

சங்கிலி தலைவரைச் சாப்பிட அழைத்தாள்;
அங்கே பசியால் அழியும் தலைவரோ
மெதுவாய் எழுந்தார்; அதே நேரத்தில்
எப்போ தும்போல் இரண்டு பல்லிகள்
பளபள வென்று பாடவே, தலைவர்
மீண்டும்நாற் காலியில் விசையாய்ச் சாய்ந்தார்.
அந்த நேரம் அங்குநின் றிருந்த
கணக்கன் தலைவரைக் கனிவுடன் அழைத்தே
"இன்று நீங்கள் இலந்தை யூர்க்குச்
சென்று வஞ்சகன் சிற்றம் பலத்தைக்
கண்டு பணத்தைக் கையொடு வாங்கிக்
கொண்டு வருவதாய்க் கூறி னீர்களே!
ஐதராப் பாக்கம் அவன் ஓடிவிட்டால்
பைதரா வழக்கும் பயன்படாதே
பத்துப் பைகள் பறிபோக லாமோ?"
என்று பலவும் எடுத்துச் சொன்னான்!
"நன்று நன்று சென்று நீஒரு
காரைப் பேசிக் கடிதில் கொண்டுவா.
அச்சாரப் பணம் ஐந்துரூ பாய்கொடு,
கடன் பட்டவனைக் கையொடு பிடிக்க
அரச காவலர் அங்கே இருப்பரேல்
ஐந்து ரூபாய் அவரிடம் கொடுத்து
வேண்டிய ஒழுங்குடன் விரைவில் அழைத்துவா"
என்றான் தலைவன்! ஏகினான் கணக்கன்.



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:00 am

ளொள் ளொள் என்று வெள்ளை நாய், வீட்டின்
வாயிலில், யாரையோ வரவேற் கின்றதை
வீட்டுக் காரர் கேட்டார் காதில்,
நீட்டினார் தலையை வீட்டின் வெளியில்
மைத்துனர் ஊரினின்று வருவதாய் அறிந்தார்.
வாரும் வாரும் வாரும் என்றார்.
மைத்துனர், வந்தேன் வந்தேன் என்று
வாயிற் படிமேல் வைத்தார் காலை.
இடறிற்றுக் கால்! இரும் இரும் மச்சான்
வராதீர் மச்சான் வராதீர் என்றார்.
இல்லை இல்லை என்றார் மைத்துனர்.

*****

தூய குறிதான் தோன்றும் வரைக்கும்
வாயிலில் காலை வைக்கலா காதென
மைத்துனர், எதிரில் மாட்டுக் கொட்டிலில்
மொய்க்கும் கொசுக்களால் மூடுண் டிருந்தார்.
காரும் சாவடிக் காவல ரோடு
நேரில் வீட்டெதிர் நின்றது வந்து.
விரைவாய் உண்டார்; விரைவாய் ஏறினார்;
விரைவாய்க் காரும் தெருவை அகன்றது.
கணக்கனும் அந்தக் காரில் சென்றான்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:01 am

மைத்துனர் வீடு வந்து நுழைந்தார்.
ஒத்த அன்பின் உடன்பிறந் தாளைத்
"தங்கையே என்ன அங்கே செய்கின்றாய்?
உடம்புக் கென்ன? ஒன்று மில்லையே?
குழந்தைக் கென்ன? குறைபா டில்லையே?
பெரியவன் நலத்தில் பிழைபா டில்லையே?
குடித்தனம் எவ்வாறு? தடித்தனம் இல்லையே?"
என்று கேட்டார். எதிரில் நின்றவள்
"இருக்கின் றேன்நான்" என்று கூறினாள்.
சாகா திருப்பது தனக்கே வியப்போ?

*****

அங்குப் பாயினில் அயர்ந்து கிடந்த
வாயிலாக் குழந்தையை மைத்துனர் கண்டார்.
இயம்ப முடியா இரக்கம் அடைந்தார்.
அவ்விரக் கத்தின் அறிகுறி யாகத்
தூங்கும் பிள்ளையைத் துயருற எழுப்பி
வாங்கி வந்த மாம்பழம் அனைத்தையும்
ஆங்கே குழந்தை அண்டையில் பரப்பினார்.
பூந்தி கட்டிய பொட்டணம் அவிழ்த்துக்
கொஞ்சம் அள்ளிக் குழந்தை முகத்தெதிர்
வஞ்சம் இன்றி வைத்துக் 'குழந்தையே
பாங்கொடு தின்னப் பழமும் பூந்தியும்
வாங்கி வந்தேன் மருந்துபோல்' என்றார்;
ஓட்டை நீக்கி உள்ளீடு தன்னைக்
காட்டி விளாம்பழம் கருத்தாய்த் தின்என்று
அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்!
குழந்தை கிடந்த கூட மெல்லாம்
உழந்து கிடந்த ஒருகளம் போலவும்
வேம்பின் பழம்பூ விரிதரை போலவும்
ஈயின் காடும் எறும்பின் காடும்
ஆயிற்று! மைத்துனர் அப்புறம் சென்றார்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:01 am

அங்கே, பெரியவன் அடுக்கிய இரண்டு
முட்டைபோல் உதடுகள் முன்னே தோன்ற
மல்லாந்து மார்பை மறுபுறம் திருப்பாது
சொல்லும் இன்றித் துடிக்கும் நெஞ்சோடு
மாம்பழம் விளாம்பழம் வந்த வழியில்
காதைச் செலுத்திக் கண்ணைச் சாய்த்து
மாமனை எதிர்பார்த் தூமைபோல்அழுதான்.
மாமனோ சென்னையில் வாங்கி வந்த
கைத்துப் பாக்கியைக் கையில் கொடுத்தான்.
பெரியவன் உதடுகள் சிரித்தாக வேண்டும்!
வெள்ளைப் பற்கள் வெளித் தோன்றாமல்
பிணம் சிரிப்பதுபோல் பெரிதும் சிரித்தான்.
தங்க மாமனார் தாமும் சிரித்தார்.
உரியவள் இதனை உணர்ந்து சிரித்தாள்.
கைத்துப் பாக்கி மெய்த்துப் பாக்கிபோல்
வித்தென்று தக்கை விலகி வெடிப்பதை
மாமனார் காட்டினார். மங்கையும் பையனும்
வியப்படைந் தார்கள். வீட்டுக் காரியோ
"அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல்
வைத்து விடுங்கள் வைத்து விடுங்கள்
அவனிடம் கொடுக்க லாகா" தென்றாள்.
அவ்வா றதனை அங்கே வைத்தார்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:01 am

"என்னருந் தங்கையே இந்தப் பெரியவன்
நன்றாகப் படிக் கின்றானா? சொல்"
என்றான். தங்கை இயம்பு கின்றாள்:
"சாதகம் பார்த்தோம்; சரியாய் அவனுக்குப்
பத்தொன்ப தாண்டு படிப்பு வராதாம்.
இருபதில் உலகையே என்னதென் பானாம்"
என்றுதன் அண்ண னிடத்திற் கூறினாள்.
"கையோ டிந்தக் கைக் குழந்தையின்
குறிப்பையும் பார்த்தால் குற்ற மென்ன?"
என்று கேட்டான் பின்னும் அண்ணன்.
"காட்டினேன் குழந்தையைக் கல்லில் தூக்கிப்
போட்ட போதிலும் போகாதாம் உயிர்;
தொண்ணூறு வயதென்று சோசியன் சொன்னான்.
மந்தத் தாலே வந்த நலிஇது!
இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
நலிஇவ் வாறு வலிவு பட்டது.
வளரும் பிள்ளைக்கு வயிற்றுக் கோளாறு
வருவதும் போவதும் வழக்கந் தானே!
நாளைக்கே இது நன்றாய்ப் போய்விடும்
ஏழு மலையான் இரக்கம் வைப்பான்.
காப்பாய் என்று காப்பும் கட்டினேன்"
என்று தங்கை இயம்பினாள். அவனோ
"சமையல் ஆனதா தங்கையே" என்றான்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:02 am

"ஆமாம் இந்த அலைச்சலில் உங்களைச்
சாப்பிடும் படியும் சாற்ற வில்லை"
என்றாள். "வெந்நீர் இருக்குமா" என்றான்.
"ஆமாம் ஆமாம் அடுப்பில் வெந்நீர்
கொதிக்க வைப்பேன் குளிப்பீர்" என்றாள்.
"வெற்றிலை கொஞ்சம் வேண்டும்" என்றான்.
"ஆமாம் ஆமாம் அதையும் மறந்தேன்"
என்று கூறி ஈந்தாள் வெற்றிலை.
வெற்றிலை போட்டான். வெறித்துப் பார்த்தான்.
சாப்பிடச் சொல்லிக் கூப்பிட வில்லை.
பசியால் அண்ணன் பதைபதைக் கின்றான்;
துடிப்போடு தங்கைபால் சொல்ல லானான்;
"விடிய நாலுக்கு வீட்டை விட்டுக்
கிளம்பி னேனா? கிளிய னூரில்
சிற்றுண வுக்குச் சுற்றிப் பார்த்தேன்.
அகப்பட வில்லை; அதற்குள் வண்டியும்
புறப்பட் டதனால் பொசுக்கும் பசியுடன்
ஏறினேன்; இங்கே இழிந்தேன்" என்றான்.
இந்தக் கதையை இயம்பித் தனது
பொறுக்கொணாப் பசியைப் புகன்றான், அவளோ
எங்கள் அண்ணன் ஏறி வந்த
வண்டியே வண்டி வண்டியே வண்டி
என்று வண்டியின் இயல்பைப் பற்றி
எண்ணி மகிழ்ந்தாள்! மண்ணாங் கட்டி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:02 am

அண்ணன் உடனே அருகி லிருந்த
உணவு விடுதியில் உண்டு வந்தான்.
குறட்டைத் தூக்கம், குழந்தையின் அழுகை,
பெரியவன் உதடுகள் புரிந்த இன்னல்,
இவற்றுடன் மாலை ஏழுமணி ஆயிற்று.

*****

வேலைக் காரிகள் பாலைக் காய்ச்சி
நாலைந்து செம்பு நன்றாய்க் குடித்தபின்,
தலைவியை எழுப்பித் தந்தார், குடித்தாள்!
பெரியவன் குடிப்பது சரியல்ல என்றே
இருபணிப் பெண்டிரும் இருசெம்பு குடித்தார்.
அருமை யான அண்ணனை எழுப்பி
ஒருசெம்பு காப்பி தரும்படி தலைவி
இயம்பினாள். சங்கிலி எழுப்பினாள். எழுப்பிக்
காப்பி கீப்பி சாப்பிடு கின்றீரா
ஏற்பாடு செய்யவா என்று கேட்டாள்.
வேலைக் காரியின் விருப்பப் படி அவன்
வேண்டாம் என்று விளம்பி விட்டான்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:02 am

அண்ணனும் தங்கையும் நெருங்கியே
பிறந்த ஊர்க் கதைகள் பேசலா னார்கள்:
"நமது வீட்டின் நாலாவது வீட்டுக்
கமலத் துக்குக் கண்ணாலம் என்று
காயிதம் வந்தது கண்டீரா?" என்றுதன்
அண்ணனைக் கேட்டாள். அண்ணன் சிரித்துக்
"கமலம் இறந்து கணக்கிலா நாட்கள்
ஆயின" என்றான். அதுகேட்டு மங்கை
இல்லை அண்ணா இதோ பாருமென்று
மஞ்சள் உறைக்குள் வந்த அஞ்சலைக்
கொண்டு வந்து கொடுத்தாள்; அதை அவன்
மேலுறை கிழித்து நாலுசொல் படித்தான்.
அதற்குள் காரும் பொதுக்கென்று வந்தது.
வீட்டுத் தலைவர் வீட்டில் நுழைந்தார்.
சாய்வு நாற்காலியில் சலிப்புடன் சாய்ந்தார்.
"ஐதராப் பாக்கம் அவன் போய் விட்டான்.
பணமும் போனது; பற்றாக் குறைக்கோ
இன்று ரூபாய் இருபத் தைந்தும்,
பட்டினி யோடு பறந்து திரிந்த
தொல்லையும் வீணாய்த் தொலைந்தன" என்றார்.
அந்த நேரம் அண்ணன் அங்கே
திருமண அழைப்பை விரைவாய்ப் படித்தான்.
ஏட்டினில் இருந்த தென்ன வென்றால்:
"அன்புடை யவரே அவ் வாசாமி
ஐந்து நாளில் ஐதராப் பாக்கம்
போவதாய்த் திட்டம் போட்டிருக் கின்றான்.
கடிதம் இதனைக் கண்டவுடனே
வந்தால் தொகையை வட்டியும் முதலுமாய்
வாங்கி விடலாம், வந்து சேரவும்.
அங்கவன் போனபின் இங்குநீர் வருவது
வீணே இங்ஙனம் வீராசாமி."

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:02 am

எப்போது வந்த திந்தக் கடிதம்
என்று தலைவர் எரிச்சலாய்க் கேட்டார்.
ஏழெட்டு நாள்முன் இங்கு வந்தது.
திருமணத்துக்குச் செல்லமாட்டீர் என்று
அடுப்பங் கரையில் அதனை வைத்தேன்.
இதனா லென்ன என்றாள் தலைவி.
இதுவா திருமணம் என்றார் தலைவர்.
மஞ்சள் கடிதம் திருமணம் அல்லவா?
என்று கூறினாள் எல்லாம் தெரிந்தவள்.
பதரே என்று பல்லவி தொடங்கினார்.
அடக்கென் றெடுத்தாள் அவள்அநு பல்லவி!
"எங்கிருந் தாயடி என்குடிக் கிப்படி
மங்கிப் போக வைத்தாய் காலடி
பொங்க லாண்டி யாகப் போம்படி
புரிவ தெல்லாம் மிகவும் அழும்படி"
எனவே இப்படி முடித்தார் முதலடி!
தானும் தொடங்கினாள் தாளத் தின்படி;
"ஊருக் கழித்தாய் உருப்பட வா நீ
நாட்டுக் கழித்தாய் நலம்பட வாநீ
இனியும் ஊரில் எடுபட வா நீ"
என்று கூறி எழுந்தாள் அம்மை.
இரண்டாம் அடியை இப்படி முடிக்குமுன்
வந்த அண்ணன் வந்த வழியே
சந்தடி யின்றிச் சடுதியிற் சென்றான்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 11:03 am

வீட்டுக் காரர் மேலும் தொடங்கினார்;
இந்தாடி என்றே எடுத்தடி வைத்துப்
பந்தா டிடுவேன் பார்எனக் குதித்துப்
பல்லைக் கடித்தே பரக்க விழித்தே
கொல்லைக் கோடிக் கோலைத் தேடி
விட்டே னாஎன மீசை முறுக்கிச்
சட்டென இதுதான் தக்க தென்று
துண்டை எடுத்துத் தோளில் போட்டுச்
சுண்டெலி வால்போல் தொங்கும் தலைமயிர்
கோதி நுணுக்காய்க் குடுமி முடித்துக்
காதில் தொங்கும் கடுக்கனைத் துடைத்துச்
"சாப்பிட மாட்டேன் சற்றும் இங்கிரேன்
கூப்பிட நினைத்தால் கொன்று போடுவேன்
இங்கு நான்இரேன் சங்கிலி, தெரிந்ததா!
எங்கே பையன்? இரடா இங்கே.
என்று கூறி - எங்கே? செருப்பும்
ஒன்றுதானா? என்றதை அணிந்து,
சென்று பின்பு திரும்பி வந்து
கன்றையும் மாட்டையும் நன்கு கருதுநீ
உன்னிடம் குழந்தையை ஒப்பு வித்தேன்
சங்கிலி இன்னும் நான் சாற்றுவ தைக்கேள்:
இப்போ தேநான் இவ்விடம் விட்டுச்
செட்டித் தெருவில் தென்னை மரத்தோ
டொட்டி இருக்கும் ஒருவீட்டருகில்
குட்டிச் சுவரின் கோடியி லிருக்கும்
இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில்
இருப்பேன். நீயோ என்னை அங்கு
வந்து கிந்து வருவாய் கிருவாய்
என்று கூப்பிட எண்ண வேண்டாம்.
அந்த வீட்டெண் அறுபத் திரண்டுதான்
தெருப் பக்கத்தில் இருக்கும் அறையில்
இருப்பேன்; அழைத்தால் வரவே மாட்டேன்".
என்று தலைவர் இரைச்சல் போட்டு
நடைவரைக் கும்போய் இடையில் திரும்பி
அழைப்பார் இல்லை ஆதலால் மீண்டும்
திரும்பிப் பார்த்துத் தெருவோடு சென்றார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக