புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_m10ஆட்சிகள் மாறுவது ஏன் ?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சிகள் மாறுவது ஏன் ?


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Jun 05, 2011 9:51 am


– எஸ்.ஜே. இதயா (துக்ளக்)

ஒரு தேர்தல் முடிந்ததும், அந்த வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2006 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு, அதன் தேர்தல் அறிக்கைதான் பிரதான காரணமாகக் கூறப்பட்டது. அந்தத் தேர்தல் அறிக்கையை ‘கதாநாயகன்’ என்று அப்போது பலரும் வர்ணித்தனர். இந்த முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு கடந்த ஆட்சியின் மீதான அதிருப்தி, கருணாநிதியின் குடும்ப அரசியல், பிரமாண்டமாக நடந்த ஊழல், ஜெயலலிதா அரசு வேண்டும் என்கிற பாஸிடிவ் ஓட்டு... என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பொதுவாக, ஒரு பொதுத் தேர்தலில், ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெற்றியை எது நிர்ணயிக்கிறது என்பதில் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. 2006 தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக இருந்த சூழ்நிலையை, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் மாற்றி அமைத்தது என்பது மெஜாரிட்டி கருத்தாக அமைந்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இலவச கலர் டி.வி., இலவச கேஸ் அடுப்பு, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இரண்டு ஏக்கர் இலவச நிலம் உள்ளிட்ட இலவச அறிவிப்புகள்தான், தி.மு.க.வை கடைசி நேரத்தில் வெற்றிக்கு இட்டுச் சென்றது என்று பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால், இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு இலவச அறிவிப்புகளை வெளியிட்டன. தற்போது அ.தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதால், அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் மக்களைக் கவர்ந்தது என்று எடுத்துக் கொள்ள முடியுமா?

இந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கு, கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்திதான் பெரும் காரணம் என்று கூறப்படுகிறது. அப்படியானால், முந்தைய ஆட்சியை மக்கள் சீர்தூக்கிப் பார்த்துதான் வாக்களிக்கிறார்களா? 2001-2006-ல் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்குப் பெரிய வெறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. மக்கள், ‘அந்த ஆட்சியே தொடரலாம்’ என்ற மனநிலையில் இருந்ததாகவே தெரிந்தது. அப்புறம் ஏன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனது?

இந்த முறை, தேர்தலுக்கு முந்தைய நிலையில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக்... என்று பல கட்சிகள் கூடி அமைத்த தி.மு.க. கூட்டணிதான், அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணியை விட பலம் பொருந்தியதாகக் காணப்பட்டது. அந்தந்தக் கட்சிகளுக்கென்று இருக்கும் வாக்கு வங்கி என்ற அடிப்படையில் பார்த்தால், தி.மு.க. கூட்டணிதான் பெரும் வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அந்தக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அப்படியானால், கட்சி மீது பற்று இருந்தாலும், தனது கட்சி தனக்கு பிடிக்காத மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது அதைத் தொண்டர்கள் புறக்கணித்து விடுவார்களா? அப்படியானால், கூட்டணி வைப்பதில் முழு பலன் இல்லையா?

இந்த முறை அ.தி.மு.க. தரப்பில் ஜெயலலிதா, விஜயகாந்தைத் தவிர பெரிய பிரச்சார பீரங்கிகள் என்று யாரும் இல்லை. ஆனால், தி.மு.க. தரப்பில் கருணாநிதி, ஸ்டாலின், மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ராகுல் காந்தி, ஜி.கே. வாசன், ராமதாஸ், அன்புமணி, திருமாவளவன், வடிவேலு, குஷ்பு... என்று ஏராளமானோர் பெரியளவில் பிரச்சாரம் செய்தனர். தி.மு.க.வும் காங்கிரஸும் ஆட்சியில் இருந்ததால், அவர்கள் மக்கள் வரிப் பணத்தில் நிறைவேற்றிய திட்டங்களை எல்லாம், தங்கள் கையில் இருந்து செலவளித்தது போல் பிரச்சாரம் செய்யவும் நல்ல வாய்ப்பு அமைந்தது. ஆனால், அந்தப் பிரச்சாரங்கள் எதுவும் எடுபடவில்லை. அப்படியானால், தேர்தல் பிரச்சாரம் என்பது வீண் வேலைதானா? இனி, தேர்தல் பிரச்சாரங்கள் எதுவும் மக்களிடம் எடுபடாதா?

தங்கள் ஜாதிக்காரர்களைக் காப்பாற்ற பிறந்த ரட்சகர்களைப் போல் காட்டிக் கொண்ட ஜாதிக் கட்சிகளெல்லாம், இந்த முறை தோல்வியைத் தழுவி விட்டன. அப்படியானால், ஜாதி, மதம் எல்லாம் தேர்தலில் ஒரு காரணியே இல்லையா? ‘இலங்கைப் பிரச்சனையின் காரணமாகத்தான் கருணாநிதி தோற்றார்’ என்று சீமான் போன்ற சிலர் குறிப்பிடுகின்றனர். அது எந்தளவு உண்மை? அப்படியானால், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது இலங்கைப் பிரச்சனை இதை விடத் தீவிரமாக இருந்தபோது, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி கணிசமான அளவில் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்ன கூற முடியும்? ஜாதி, மதம், தமிழுணர்வு... இவையெல்லாம் தேர்தலின்போது காரணிகளா இல்லையா?

பொதுவாக, ஒரு தேர்தல் வெற்றி என்பது தனி நபரைச் சார்ந்து அமைகிறதா அல்லது ஒரு கட்சியின் கொள்கைகளைச் சார்ந்து அமைகிறதா? காங்கிரஸை வீழ்த்தி தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்தபோது, அண்ணாவின் புகழை விட, தி.மு.க.வின் அப்போதைய கொள்கைகள்தான் தமிழக மக்களை ஈர்த்ததாகப் பேசப்பட்டது. ஆனால், அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது முதல் அவர் மறையும் வரை அ.தி.மு.க. பெற்ற தொடர் வெற்றிகளுக்கு, எம்.ஜி.ஆர். என்ற தனிநபர்தான் காரணமாகக் கூறப்பட்டார். அப்படியானால், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் வெற்றிகளுக்கு கருணாநிதி, ஜெயலலிதா என்ற தனிநபர்கள் மீதான ஈர்ப்புதான் முக்கியக் காரணமா? ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு தேர்தலில் உதவுகிறதா இல்லையா?

‘தமிழகத்தில் பணம் கொடுத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடலாம்’ என்ற எண்ணம், சமீப சில வருடங்களாகவே பரவி வந்தது. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் பணம் கொடுத்தும் கூட, தி.மு.க. வேட்பாளர்கள் பலர் தோற்றுப் போனார்கள். அப்படியானால், பணம் கொடுத்து வாக்காளர்களைச் சரிக்கட்ட முடியாதா? ‘100, 200 என்று குறைவாகப் பணம் கொடுத்ததால்தான் தி.மு.க.வால் ஜெயிக்க முடியவில்லை. ஒரு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்திருந்தால் நிச்சயம் ஜெயித்திருப்பார்கள்’ என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ‘தற்போது தி.மு.க. தரப்பில் ஜெயித்தவர்களில் பெரும்பான்மையோர், அப்படி கூடுதல் பணத்தை விதைத்ததால்தான் வெற்றியை அறுவடை செய்தனர்’ என்று சிலர் அடித்துச் சொல்கிறார்கள். அப்படியானால் தேர்தலுக்குத் தேர்தல் வாக்காளர்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று கொடுக்க ஒரு கட்சி முடிவு செய்து விட்டால், அதே கட்சிதான் தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்க முடியுமா?

தேர்தல் கமிஷன், தேர்தல் நெருங்கும் நேரங்களில் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கூறும் கருத்துகள் ஒரு வாக்காளனின் மனநிலையை அந்தளவு பாதித்து விடுமா? மீடியா கிளப்பும் செய்திகளையும் கருத்துக் கணிப்புகளையும் அந்தளவு மக்கள் முழுமையாக நம்புகிறார்களா? மீடியா நினைத்தால் ஒரு ஆட்சியைக் கவிழ்க்கவோ, ஒரு ஆட்சியை மலர வைக்கவோ முடியுமா?

அந்தந்த மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கொள்ளை அடித்து வசதியாக இருந்த கோபத்தினால், தி.மு.க. தொண்டர்கள் பலர் கீழ்மட்டத்தில் தேர்தல் வேலை பார்க்கவே இல்லை என்ற ஒரு காரணமும், தி.மு.க. தோல்விக்கு ஒரு காரணியாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பா.ம.க., காங்கிரஸுக்கு தி.மு.க.வினர் போதுமான அளவு வேலை பார்க்கவில்லை என்று பேசப்படுகிறது. தலைவர்களால் செய்ய முடியாத எந்த வேலையை கீழ்மட்டத் தொண்டன் செய்து, கட்சியை வெற்றி பெற வைக்க முடியும்? அது சாத்தியமான ஒன்றுதானா?

ஒரு தேர்தலை ஒட்டி இப்படி எழும் ஏராளமான கேள்விகளுக்கு விடை தேடும் படலத்தை, வரும் வாரங்களில் தொடருவோம்.

(அடுத்த இதழில்...)

நன்றி: துக்ளக்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக