புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
6 Posts - 18%
i6appar
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
3 Posts - 9%
Jenila
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
105 Posts - 42%

88 Posts - 35%
i6appar
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
2 Posts - 1%
prajai
20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_m1020 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 4:37 pm

20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் First02

ரேஷன் கார்டுகளுக்கு மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு நடந்த இந்த முதல் பொது நிகழ்ச்சி, எவ்விதமான ஆடம்பரமும் இல்லாமல், மிகவும் எளிமையாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச அரிசி

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கார்டுகளுக்கு மாதம்தோறும் 20 கிலோ அரிசியும், பரம ஏழைகளுக்கு 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கடந்த மே மாதம் 16-ந் தேதி பொறுப்பேற்றது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே, ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் உள்பட 7 திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு அதற்கான கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

மிகவும் எளிமையாக நடந்த விழா

இதைத்தொடர்ந்து, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அரசாணைகளும் மறுநாளே வெளியிடப்பட்டன. முதல்-அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, இலவச அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணியில் கூட்டுறவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மும்முரமாக இறங்கினர். இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜுன் 1-ந்தேதி சென்னையில் தொடங்கி வைப்பார் என்றும், மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைப்பார்கள் என்றும் அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் தொடக்கவிழா சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம்நகரில் உள்ள டி.யு.சி.எஸ். ரேஷன் கடையில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. தொடக்கவிழாவையொட்டி அந்த ரேஷன் கடை சுவர் முழுவதும் பச்சை கலரில் வர்ணம் பூசப்பட்டு இருந்தது. அரசு விழாக்கள் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளதால் விழா நடப்பதற்கு கூட மேடை போடப்படவில்லை.

ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வருகையையொட்டி ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் பனை ஓலை அலங்காரத்துடன் கட்சிக்கொடிகள் மட்டும் சாலையின் இருபுறமும் கட்டப்பட்டிருந்தன. வேறு எவ்விதமான கட்-அவுட்டுகளும், டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்படவில்லை. காலை சரியாக 10.05 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார்.

அவரை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜா, உணவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி, இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், 20 கிலோ அரிசி கொண்ட பையை 13 பெண்களுக்கு ஒவ்வொன்றாக வழங்கினார். ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த கற்பகம், ரகீமா, தேவி, சித்ரா, பொன்னம்மாள், பசுபதி, மகேஷ்வரி, நாகராணி, கன்னியம்மாள், செல்வி, சாந்தி, பாத்திமா, கோவிந்தம்மாள் ஆகியோர் அவரிடம் இலவச அரிசியை பெற்றுக்கொண்டனர்.

முதல் பொதுநிகழ்ச்சி

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு பெண்ணுக்கும் அரிசி பையை வழங்கும்போது புன்முறுவலுடன் அவர்களின் பெயரையும், என்ன செய்கிறார்கள் என்ற விவரத்தையும் ஆர்வத்தோடு கேட்டறிந்தார். இலவச அரிசி வழங்கிய பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரேஷன் கடையின் உள்ளே சென்று பார்வையிட்டார். கோதுமை இருக்கிறதா? என்று அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

தொடக்கவிழா நிகழ்ச்சி அரை மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச அரிசி வழங்கும் விழா, எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தது அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. தொடக்கவிழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஜி.செந்தமிழன், உணவு பொருள் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் (பொறுப்பு) வி.கே.ஜெயக்கொடி, ஆணையாளர் கே.பாலச்சந்திரன், டி.யு.சி.எஸ். தனி அதிகாரி சக்தி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எத்தனை கிலோ கிடைக்கும்?

இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 31 ஆயிரத்து 571 ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் அரிசியை பெற்றுக்கொள்ளலாம். அவர்களின் விருப்பத்தை பொறுத்து, பச்சரிசியாகவும், புழுங்கல் அரிசியாகவும் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 12 கிலோ அரிசியும், அதிகபட்சம் 20 கிலோ அரிசியும் பெற்றுக்கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் மட்டும் குறைந்தபட்சம் 16 கிலோவும், அதிகபட்சம் 24 கிலோ அரிசியும் வழங்கப்படும். இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 482 கார்டுதாரர்கள் பயன்பெறுவார்கள். மேலும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் வழங்கப்படும் 35 கிலோ இலவச அரிசியையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம், 18 லட்சத்து 62 ஆயிரத்து 268 கார்டுதாரர்கள் பயன் அடைவார்கள்.

போக்குவரத்து பாதிப்பு இல்லை

விழா நடந்த இடத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலை 10.05 மணிக்கு வந்தார். அவர் வரும்வரை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் போக்குவரத்து எதுவும் நிறுத்தப்படவில்லை. வழக்கம்போல் கார்கள், இரு சக்கர வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. விழா தொடங்கிய பிறகு மட்டும் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. விழா முடிந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா காரில் புறப்பட்டதும் வழக்கம்போல் வாகனங்கள் அந்த வழியே அனுமதிக்கப்பட்டன. பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினதந்தி

20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 4:42 pm

திருக்கோவிலூர் அருகே 20 கிலோ இலவச அரிசியை விஜயகாந்த் வழங்கினார்

திருக்கோவிலூர் அருகே அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை விஜயகாந்த் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அதேபோல் மாவட்டந்தோறும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

விஜயகாந்த் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எம்.எல்.ஏ. நேற்று திருக்கோவிலூர் அருகே உள்ள வீரட்டகரம் கிராமத்தில் தனது நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி தொடர்ந்து கிராமம், கிராமமாக நன்றி தெரிவித்தபடி வந்து கொண்டிருந்தார்.

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்திற்கு வந்தபோது அங்கு தொடக்க கூட்டுறவு வங்கி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஏழை பெண்களிடம் இலவச அரிசி அடங்கிய பையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் வரலட்சுமி, தாசில்தார் பார்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக