புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_lcapசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_voting_barசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்


   
   

Page 2 of 2 Previous  1, 2

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 01, 2011 1:48 pm

First topic message reminder :

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 72156387

தலைப்பைப் பார்த்தவுடனேயே என்னவோ போட்டி என நினைத்துவிட்டீர்களா? இது ஒன்றும் கோடிஸ்வரன் நிகழ்ச்சியோ அல்லது வேறு எதோ கோமாளி ஷோவோ இல்லை. காமெடிப் பண்ணுவதாய் நினைக்கவும் வேண்டாம். முன்னொரு முறை எங்களது பள்ளியில் இருவர் பேசிக் கொண்டார்கள், '' ஏண்டா இங்கிலாந்துக் காரன் வெள்ளையா இருக்கான், ஆப்பிரிக்காக் காரன் கறுப்பா இருக்கான், ஆனால் நம்ம இந்தியாக் காரன் மட்டும் எல்லாக் கலரிலும் இருக்கான் '' என்றான் ஒருவன், மற்றவன் சொன்னான் '' வெள்ளைக்காரன் குளிர்ப் பிரதேசத்தில் இருக்கான், அதான் வெளுத்துப் போய்ட்டான், ஆப்பிரிக்கா காரன் நாட்டில வெயில் ரொம்ப ஜாஸ்தி அதான் கருப்பா ஆகியிருப்பான், நம்ம நாட்டில வெயிலும் இருக்கு, குளிரும் இருக்கு அதான் மாநிறமா இருக்கோம்'' என்றான். அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு நான் ஒன்றும் கூறாமலேயே வந்துவிட்டேன். அதில் சில உண்மைகள் இருக்கலாம். ஆனால் நம் இந்திய நாட்டில் தான் வர்ண வேறுபாடுகள் அதிகம். வர்ணாசிரமத்தைச் சொல்லவில்லை. தோல் வர்ணத்தைச் சொன்னேன்.


இந்தியாவில் எந்தெவொரு நெடுஞ்சாலைக்கு செல்லுங்கள், அங்கு சற்று நேரம் அமர்ந்து சாலையில் போகிறவர்களை நன்கு கவனித்துப் பாருங்கள். அனைவரின் வர்ணமும் மிகுந்த வேறுபாடு உடையதாய் இருக்கும். ஒரு முறை கிண்டி சாலையில் வாகன சர்வே வேலை ஒன்றில் ஈடுப்பட்டப் போது அங்கு செல்லும் வாகனங்களை மட்டுமில்லாமல். மனிதர்களையும் கவனிக்க முடிந்தது. அனைவரின் நிறமும் ஒன்றே போல் இல்லை. சில நேரங்களில் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் கூட ஒரே நிறத்தில் இருப்பதில்லை. ஒரேக் குடும்பத்தில் ஒருவர் கறுப்பாகவும், ஒருவர் வெள்ளையாகவும், ஒருவர் மாநிறமாகவும் இருப்பதைக் காண முடியும். இந்த நிற வேறுபாடுகள் நாம் நினைப்பது போல காலநிலை மாறுதலால் வந்தவை அல்ல. மாறாக நமது பரம்பரையாக வந்தவை ஆகும். நம்மில் சிலர் வடநாட்டவர் வெண்மையாக இருப்பதாகவும், அவர்களில் சிலர் தென்னாட்டவர் கருமையாக இருப்பதாகவும் கருதுகின்றார்கள். ஆனால் உண்மையில் தென்னாட்டில் பலர் வெண்மையாகவும், வடநாட்டில் பலர் கருமையாகவும் இருப்பதையும் காணலாம். வடநாட்டு நடிகர் சாருக் கான், அஜய் தேவ்கான், கஜோல் உள்ளிட்ட பல நடிகர்களே கருமையான நிறம் உடையவர்கள். ஒரு முறை தில்லி சென்ற போது அங்கும் பலர் கருமையான தோல் நிறம் உடையவர்களைக் கண்டிருக்கின்றேன். ஆனால் அங்கு வெண்மையான நிறம் கொண்டவர்களும் அதிகம் இருக்கின்றனர் என்பதும் உண்மை.

அதாவது இந்திய நாடு முழுவதும் எங்கு சென்றாலும் கருமையானவர்களும், வெண்மையானவர்களும், மாநிறத்தவர்களும் இருக்கின்றனர் என்பது உண்மை. பொதுப்படையாகப் பார்த்தால் மாநிலம் தோறும் மக்களில் சில புறத்தோற்ற வேறுப்பாடுகள் இருக்கின்றன. அதே போல சாதி ரீதியாகவும் நிற வேறுபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் அனேகம் பேர் கருமையான நிறம் உடையவர்கள், அவர்களை அடுத்துப் பார்த்தால் மாநிறமானோரும் அதிகம், அதற்க்கடுத்தார் போல் வெண்மையானவர்களும் இருக்கிறார்கள். ஆந்திரம், கருநாடகம், கேரளம், விதர்பம், ஒடிசா, ஜார்கண்ட், வங்கம், விகார், உத்தரப் பிரதேசம், சத்திஸ்கர், குஜராத் ஆகிய இந்த மாநிலங்களில் வெண்மையானவர்களை விடவும், கருமையானவர்களும், மாநிறத்தவருமே அதிகமானோர். ஆனால் கஷ்மீரம், அரியானா, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் மாநிறத்தவரும், வெண்மையானவர்களும் அதிகமாக இருப்பதைப் போன்று தோன்றுகிறது.

ஆக இந்தியா முழுதுமே ஒரே மாதிரியான நிறம் கொண்டவர்களாய் இல்லை, அதே சமயம் கருமையும், வெண்மையும் கலப்பிடம் இல்லாத எந்தவொரு சாதி மக்களையும் காண முடியாது. என்னைப் பொறுத்தவரை அந்தாமானிய ஜரவாக்கள், ஓங்கோல்கள் தவிர்த்து ஏனைய இந்திய சாதிகள் அனைத்திலும் கலப்பிடம் இருக்கின்றது. குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஸ்ரீரங்கத்தில், கும்பகோணத்தில் இருக்கும் பிரமாணர்களைப் பார்த்தால் அவர்களிலும் கருமையானவர்கள் இருக்கின்றார்கள். ஆற்காடு பகுதிகளில் இருக்கும் தலித்கள் பலரும் வெண்மையானவர்களாய் இருப்பதையும் பார்த்து இருக்கின்றேன். எனது பள்ளியில் கிரிஷ் என்னும் மாணவன் படித்தான். பல ஆண்டுகள் ஒரே வகுப்பில் படித்தாலும் பத்தாம் வகுப்பு வரை அவனை நான் பிராமணர் எனத் தான் நினைத்தேன். காரணம் அவ்வளவு வெள்ளை நிறமாக காட்சியளிப்பான். ஆனால் பத்தாம் வகுப்பில் தான் அவன் ஒரு அட்டவணைப் பிரிவு மாணவன் என்பதை அறிந்தேன். ஆக இந்த தேசத்தில் சாதிகள் அனைத்தும் தூய்மையான நிறத்தைக் கொண்டிருக்கவில்லை. அனைத்து சாதிகளிலும் நிற வேறுப்பாடுகள் உண்டு.

அப்படி இருக்க ஏன் ஒருவர் தமது சாதியைத் தூய்மையானதாகக் கருதுகின்றார். பிற சாதிகளோடு கலந்து வாழ மறுக்கின்றார்கள். தமிழ்நாட்டில் சாதியம் பிரமாணர்களில் மட்டுமில்லை. பிற சாதிகளிடமும் இருக்கின்றது. குறிப்பாக கிருத்தவ சமயத்தில் பலரும் ஒரே பிரிவாக இருந்தாலும், சாதியால் மணம் முடிப்பதில்லை. ஏன் இந்த வேறுபாடுகள் ? ஒருவரின் சாதி எந்தவகையில் மற்றொரு சாதியை விடவும் உயர்வானது. பணம் அதிகம் இருப்பதாலா?, நிற வேறுப்பாடுகள் இருப்பதாலா?, மதம், மொழி, உணவுப் பழக்க வழக்கங்களாலா? சரி - ஒரு தலித் நன்கு படித்து பெரும் உத்தியோகத்தில் இருந்து பெரும் செல்வந்தராய், நாகரிகமாக இருந்தால் அவருக்கு ஆதிக்கச் சாதியில் இருந்து பெண் கொடுக்க எத்தனை பேர் முன்வருவார்கள். கோயம்புத்தூர்ப் பக்கம் பல கவுண்டர்கள் மலையாளத்தில் பெண் எடுக்கின்றார்கள். ஏன் தமிழ்நாட்டிலேயே வேறு சாதிப் பெண்ணை விரும்புவதில்லை. நெல்லையில் இருக்கும் ஒரு யாதவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் ஒரு தெலுங்கு யாதவரை மணக்க முன்வருகின்றார், ஆனால் நெல்லையில் இருக்கும் நாடாரை மணக்க முன்வருவதில்லை ஏன்? ஏன் உருது பேசும் முஸ்லிம்கள் பலர் தமிழ் பேசும் முஸ்லிம்களோடு மணம் கொள்வதில்லை. இங்கு மக்களின் மனங்களின் காரணமே இல்லாமல் சாதியம் விதைக்கப்பட்டுள்ளது. பணம், மொழி, அந்தஸ்து, ஏன் மதங்கள் இவற்றையும் தாண்டி வெறுப்புணர்ச்சி விதைக்கப்பட்டுள்ளது. தான் பிறந்த சாதி சமூகத்தில் உயர்வாக இருக்கின்றது, அதனால் நானும் உயர்ந்தவன், தான் பிறக்காத பிற சாதி தாழ்வானது அதனால் அவர்களும் தாழ்ந்தவர்கள். காரணமே கேட்பதில்லை !

சில நேரங்களில் சாதியம் என்பது அதிகாரத்துக்காக என நினைப்பேன். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்ட மக்கள் நிறைய நிலங்கள் செல்வங்களை வைத்திருப்பார்கள், அப்பகுதிகளில் அதிகாரம் செலுத்துவார்கள். அதனால் பிற சாதிகளை அடிமைகளாக வைத்திருக்க எண்ணுவார்கள். ஆனால் ! அதே ஆதிக்கச்சாதி வாலிபன் ஒருவனும், அடக்கப்படும் சாதி பெண் ஒருத்தியும், தொலைத்தூர நகரம் ஒன்றிலோ, நாட்டில் ஒன்றிலோ மணம் முடிக்க மாட்டார்கள். ஏன் இந்த முரண்பாடு?

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 Mr-and-mrs-iyer-wallpaper
சரி ! சாதி தொழில்ரீதியானது என்கின்றீர்கள்? விவசாயம் செய்தவன் வேளாளன் அதனால் மீன்ப் பிடிக்கும் மீனவரோடு மண உறவு வைத்திருக்கவில்லை. ஏன் ? மீன்ப் பிடிக்கும் பெண் ஒருத்தி வேளாளனை மணந்தால் அவள் வேளாண்மைக்கு உதவியாக இருக்க முடியாது என்பதால் என்றே வைத்துக் கொள்வோம். இன்று வேளாளர் அனைவரும் விவசாயமா செய்கின்றீர்கள். பல நாடுகளில் வேறு வேறு தொழில் தானே செய்கின்றார்கள். ஏன் கக்கூஸ் கூட கழுவுகிறார்கள். அப்படி இருக்க அவர்கள் குடும்பத்தில் வேறு சாதிப் பெண் மணமுடித்து வந்தால் என்ன? ஏன் நீங்கள் கக்கூஸ் கழுவக் கற்றுக் கொண்டதைப் போல அவளும் உங்களது குடும்பத்துப் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்வாள் தானே. ஆக ! சாதியம் என்பது தொழில்ரீதியாகவோ, பழக்க வழக்கங்கள் ரீதியானதோக் கூட இல்லை.

பிரமாணன் ஒருவன் இஞ்சினியராக மாறும் போது, தலித் ஏன் பிரமாணனாக மாறக் கூடாது. இதனைத் தான் அன்று பாரதி செய்தார், சொன்னார், பாடினார். இன்று பிரமாணரே பிரமாணத்தின் படி வாழத போது அடையாளத்துக்காக மட்டும் சாதியத்தைத் தூக்கிப் பிடிப்பது எதனால்? அனைவரும் படிக்கின்றோம், விரும்பிய தொழிலைச் செய்கின்றோம், விரும்பிய இடத்தில் நிலம் வாங்கி வீடுக் கட்டுகின்றோம். பிடித்த உடை அணிகின்றோம், பிடித்த ரெஸ்டாரண்டில் போய் சாப்பிடுகின்றோம். ஆனால் திருமணம் என்று வந்தால் மட்டும் ஒரே சாதியாக, ஒரே மொழியாக, ஒரே மதமாக, ஒரே நாடாக, ஏன் ஒரே நிறமாக இருக்க விரும்புவது ஏன்?

சாதிகள் ஒருக்காலத்தில் வசதிக்காகவும், தொழில் ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அதுவே நிலைக் கொண்டு விட்டது. ஆனால் இன்று நாம் என்ன பரம்பரைத் தொழிலா செய்கின்றோம். கோவிலில் மணி அடித்தவர், கம்யூட்டரில் கீப்போர்ட் அடிக்கிறார். மீன் பிடித்தவர் அக்கவுண்ட் பைல் பிடிக்கின்றார். ஆகவே இன்றும் சாதியத்தைத் தூக்கிப் பிடிப்பது தேவையற்ற ஒன்றாகும். அப்படி தனது சாதி உயர்ந்தது என்று எவனாவதுக் கேட்டால் எந்த வகையில் உயர்ந்தது எனக் கேளுங்கள் ? நிறமா? கலப்பிடம் இல்லாத நிறத்தை நிரூபிக்கச் சொல்லுங்கள். எந்தவொரு இனமும் இந்த இந்திய துணைக்கண்டத்தில் கலப்பிடம் இல்லாமல் இல்லை. அப்படிப் பார்த்தால் அந்தமானிய பழங்குடிகள் மாத்திரமே தாம் உயர்வானவர்கள் என கருத வேண்டும். எம்மைப் பார்த்துக் கலப்பிடமானவர்கள் என கருத வேண்டும். மற்றவன் எல்லாம் மூடிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

இனியும் நமக்குச் சாதியம் அவசியமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே !!!

நன்றி:கொடுக்கி.நெட்


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jun 02, 2011 10:33 am

ரா.ரமேஷ்குமார் wrote:சாதி ஒழிக்க பட வேண்டிய ஒன்று தான் இல்லை என்று கூறவில்லை அதற்காக இதுவரை என்ன செய்து உள்ளோம்...
தன் பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் செய்ய எந்த பெற்றோர் ஆவது தயாரக உள்ளார்களா?
சாதி சான்றிதழ்கள் கொடுக்காமல் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கொள்வார்களா?
இதில் உள்ள சிக்கல்கள்:
1.உறவுகளை உதற தயாரக இருக்க வேண்டும்
2.கிராமமாக இருந்தால் அந்த குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு கூட அவமான பட நேரிடும்
3.இரண்டு பிள்ளைகள் இருந்தால் முதல் பிள்ளை கலப்பு திருமணம் செய்து கொண்டுவிட்டு வீட்டை விட்டு சென்று விட்டாலும் அதன் தாக்கம் அடுத்த பிள்ளையையும் பாதிக்கும்
சாதியால் ஒன்றும் சாதிக்க போவதில்லை
மேல் சாதி மேல்வர்க்கம் என்று சொல்கிறார்களே அதில் வெறும் பெயர் மட்டும் தான் மிஞ்சும்
அரசாங்க பணியாகட்டும் அல்லது கல்லூரியில் இடம் ஆகட்டும் இதில் யாருக்கு பயன்.அதிக மதிப்பெண் பெற்ற மேல் சாதி மாணவனுக்கு கிடைக்க வேண்டிய இடத்தை மற்றொரு மாணவனுக்கு சென்று விடும் இதில் அந்த மாணவன் என்ன செய்ய இயலும் எனவே சாதி என்பது கீழ்வர்கத்தை மட்டும் பாதிக்கிறது என்பது சரி அல்ல அனைவரையும் தான் பாதிக்கிறது...

நல்ல பதிவு... கடைசி இரண்டு வரிகளை முழுமையாய் ஆதரிக்கிறேன்... காதலின் ஆதிக்கமும், இளைஞர்களின் சொந்தக்காலில் நிற்கும் தன்மையும் மிதமாக அதிகரித்து கொண்டுதான் வருகிறது... இது சாதி என்னும் பிரச்சனைக்கு ஒரு நல்ல வடிகாலாய் அமையும் என நினைக்கிறேன். வளரும் நாகரீகத்தில் நான்கு பேர் முன்னிலையில் சாதியை பற்றி பேசுவது என்பதே சங்கடமான ஒன்றாக மாறும், சாதி என்ற வார்த்தைகூட அசிங்கமான ஒன்றாக கருதப்படும், இன்றைய காலத்தில் நகரங்களில் நலிவடைந்து வரும் சாதி என்னும் உணர்வு நாளை கிராமங்களிலும் நலிவடையும், ஆனால் அதற்கான காலம்தான் எத்தனை நூற்றாண்டுகள் எனத் தெரியவில்லை. ஆனால் நம்பிக்கையோடு நம்முடைய முயற்சியை தொடர்வோம். "சிறுதுளி பெரு வெள்ளம் என்பது தவறு சிறு துளிகள் பெரு வெள்ளம் என்பதே சரி"
பகுத்தறிவின் வெள்ளத்தில் நாமும் சிறுதுளிகளாய் இருப்போம்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 Hசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 Aசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 Sசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 Aசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் - Page 2 N

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக