புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
77 Posts - 36%
i6appar
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
2 Posts - 1%
prajai
மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_m10மனைவியை காதலியுங்கள்!!!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை காதலியுங்கள்!!!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 2:19 pm

பொன்,
பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது மதிப்பும்,
மரியாதையையும் தான். மனைவி என்பவள் அடிமையல்ல என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள
வேண்டும். பெண்கள் தங்களுக்கு சேவை செய்ய மட்டுமே படைக்கப்பட்டவர்கள் என்ற
எண்ணத்தை ஆண்களின் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். அத்தகைய ஆண்களையே
பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.

சாமர்த்தியசாலியா நீங்கள்

அதிகம் சம்பாதிப்பது என்பது ஒருபக்கம் இருந்தாலும் சாமர்தியசாலியாய் நடந்து
கொள்பவர்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர். பெண்ணின்
உடலைமைப்பினை பற்றி குறை கூறுவதை விடுத்து, உள்ளதை உள்ளபடியே நேசிக்கும்
ஆண்களைத் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெருந்தன்மை தேவை:

ஆண்களைப் போல பெண்களுக்கும் உடலாலும், மனதாலும் சமபலம் உண்டு. இதைப்
புரிந்து கொண்டு பெண்களை, பெண்களாய் நடத்தும் பெருந்தன்மை கொண்ட ஆண்களையே
பெண்கள் நேசிக்கின்றனர். உரிமையை பறிக்காமல், சுதந்திர உணர்வோடு நடத்த
வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு.

கை நீட்டும் ஆண்கள்:

கணவராக வருபவர் தங்களின் உணர்வுகளை மதித்து அக்கறையோடு நடத்தவேண்டும் என பல
பெண்கள் விரும்புகின்றனர். பெண் மீது நம்பகத்தன்மை கொண்டவராக ஆண் இருக்க
வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல்
நினைத்துக் கொண்டு, உடல் ரீதியான இன்பத்திற்காக நினைத்த நேரத்திற்கு
வற்புறுத்தி அழைக்கக்கூடாது.

தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண் வர்க்கத்தினரை பெண்கள் அறவே
வெறுக்கிறார்கள். அத்துடன் தேவைக்காக நெருங்கி வந்து, வேண்டிய பணத்தை
பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று
இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

மனதை ஆளும் ராஜா:

குடும்ப வாழ்க்கையைப் பற்றி தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப
முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து
நடந்து கொள்பவராகவும் உள்ள புத்திசாலி ஆண்களை பெண்கள் மனதில் வைத்து
கொண்டாடுவார்கள். அவர்கள் மீது அளவில்லா நேசம் காட்டுவார்கள்.

காதலிக்கும் போது கலகலப்பாக இருக்கும் ஆண்களில் பலர் திருமணம் முடிந்த உடன்
சிரிப்பை மறந்து விடுகின்றனர். இதில்தான் பெண்களுக்கு ஏமாற்றம்
ஏற்படுகிறது. எந்த குணத்தை விரும்பி காதலித்து திருமணம் செய்தார்களோ, அது
மறைந்து போன உடன் வாழ்க்கையில் பிடிமானம் விட்டுப்போகிறது. எனவே சிடு சிடு
என்று இல்லாமல் கலகலப்பாக இருங்கள்.அத்தகையவர்களையும், பெண்களின்
கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களைத்யும் தான் பெண்களுக்கு
மிகவும் பிடிக்கும்.

மனைவியை எப்போதும் காதலியாகவே நினைக்கும் ஆண்களே அதிகம்
விரும்பப்படுகின்றனர். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்துகொள்வானோ
அதே போன்று திருமணத்திற்குப் பின்னரும் நடந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றனர்.

நீங்கள் ஒரு காதலனாய் மாறி அவளிடம் ஒரு பூவை கொடுத்தால் அவளும் கூடை
கூடையாய் பாசம் என்னும் பூக்களை உங்கள் மீது கொட்டத் தயாராக இருப்பாள்.
ஆகவே உங்கள் மனைவியை மதித்து காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மனைவியை காதலியுங்கள்!!!  Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 31, 2011 3:34 pm

அய்யோ, நான் இல்லை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 31, 2011 3:37 pm

பதிவு நன்றாக இருக்கிறது ஆனால் எழுத்தை சற்று பெரியதாகவும் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 31, 2011 3:40 pm

ரோஜாகார்த்தி wrote:பொன்,
பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது மதிப்பும்,
மரியாதையையும் தான். மனைவி என்பவள் அடிமையல்ல என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள
வேண்டும். பெண்கள் தங்களுக்கு சேவை செய்ய மட்டுமே படைக்கப்பட்டவர்கள் என்ற
எண்ணத்தை ஆண்களின் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். அத்தகைய ஆண்களையே
பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.

சாமர்த்தியசாலியா நீங்கள்

அதிகம் சம்பாதிப்பது என்பது ஒருபக்கம் இருந்தாலும் சாமர்தியசாலியாய் நடந்து
கொள்பவர்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர். பெண்ணின்
உடலைமைப்பினை பற்றி குறை கூறுவதை விடுத்து, உள்ளதை உள்ளபடியே நேசிக்கும்
ஆண்களைத் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெருந்தன்மை தேவை:

ஆண்களைப் போல பெண்களுக்கும் உடலாலும், மனதாலும் சமபலம் உண்டு. இதைப்
புரிந்து கொண்டு பெண்களை, பெண்களாய் நடத்தும் பெருந்தன்மை கொண்ட ஆண்களையே
பெண்கள் நேசிக்கின்றனர். உரிமையை பறிக்காமல், சுதந்திர உணர்வோடு நடத்த
வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு.

கை நீட்டும் ஆண்கள்:

கணவராக வருபவர் தங்களின் உணர்வுகளை மதித்து அக்கறையோடு நடத்தவேண்டும் என பல
பெண்கள் விரும்புகின்றனர். பெண் மீது நம்பகத்தன்மை கொண்டவராக ஆண் இருக்க
வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல்
நினைத்துக் கொண்டு, உடல் ரீதியான இன்பத்திற்காக நினைத்த நேரத்திற்கு
வற்புறுத்தி அழைக்கக்கூடாது.

தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண் வர்க்கத்தினரை பெண்கள் அறவே
வெறுக்கிறார்கள். அத்துடன் தேவைக்காக நெருங்கி வந்து, வேண்டிய பணத்தை
பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று
இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

மனதை ஆளும் ராஜா:

குடும்ப வாழ்க்கையைப் பற்றி தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப
முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து
நடந்து கொள்பவராகவும் உள்ள புத்திசாலி ஆண்களை பெண்கள் மனதில் வைத்து
கொண்டாடுவார்கள். அவர்கள் மீது அளவில்லா நேசம் காட்டுவார்கள்.

காதலிக்கும் போது கலகலப்பாக இருக்கும் ஆண்களில் பலர் திருமணம் முடிந்த உடன்
சிரிப்பை மறந்து விடுகின்றனர். இதில்தான் பெண்களுக்கு ஏமாற்றம்
ஏற்படுகிறது. எந்த குணத்தை விரும்பி காதலித்து திருமணம் செய்தார்களோ, அது
மறைந்து போன உடன் வாழ்க்கையில் பிடிமானம் விட்டுப்போகிறது. எனவே சிடு சிடு
என்று இல்லாமல் கலகலப்பாக இருங்கள்.அத்தகையவர்களையும், பெண்களின்
கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களைத்யும் தான் பெண்களுக்கு
மிகவும் பிடிக்கும்.

மனைவியை எப்போதும் காதலியாகவே நினைக்கும் ஆண்களே அதிகம்
விரும்பப்படுகின்றனர். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்துகொள்வானோ
அதே போன்று திருமணத்திற்குப் பின்னரும் நடந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றனர்.

நீங்கள் ஒரு காதலனாய் மாறி அவளிடம் ஒரு பூவை கொடுத்தால் அவளும் கூடை
கூடையாய் பாசம் என்னும் பூக்களை உங்கள் மீது கொட்டத் தயாராக இருப்பாள்.
ஆகவே உங்கள் மனைவியை மதித்து காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
TMT

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 3:49 pm

அருமையிருக்கு சூப்பருங்க

இதில் சொல்லி இருக்கும் அதனையும் உண்மை.... இது என் அனுபவத்தில் சொல்லுவது.....

நாம் அவர்களுக்கு காசு பணம் தரவேண்டாம்.... ஆனால் உண்மையான அன்பு காண்பித்தாள் அதை விட பலமடங்கு அன்பு அவர்கள் நமீது காட்டுவார்கள் .... அன்பு மலர்

/////அவளிடம் ஒரு பூவை கொடுத்தால் அவளும் கூடை
கூடையாய் பாசம் என்னும் பூக்களை உங்கள் மீது கொட்டத் தயாராக இருப்பாள்.
//////

ஐ லவ் யூ

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 3:54 pm

திருமணம் செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் அடைவதில்லை. அன்றைய தினத்திலிருந்து உங்கள் வாழ்வின் இறுதி நாள் வரை அவள்தான் உங்கள் இல்லறத்தின் பங்காளி, வாழ்வின் நீண்ட பாதையில் வழித்துணை மற்றும் உற்ற தோழி எல்லாம்.

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், தினத்தையும், வருடங்களையும், சுகங்களையும், துக்கங்களையும், கனவுகளையும், கவலைகளையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள், உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும்போது ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.

பல சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.

அந்த தின முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகும் முன்பு நீங்கள் கடைசியாக பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கி விட்டப் பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள்தான் உங்கள் முழு உலகம், நீங்கள்தான் அவளது முழு உலகம்.

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார்தான் சொல்ல முடியும்? இந்த உறவின் தன்மையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப் பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்..

'அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்

(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 2;187).

எவ்வளவு சாத்தியமான உவமை, ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள்.

காரணம் ஆடைகள் மனிதர்களுக்கு மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை, மரியாதையை, அழகை, கண்ணியத்தை வழங்குகின்றன.

கடும் பனி பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப்பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தை, பாதுகாப்பை, கண்ணியத்தை வழங்குபவள் மனைவிதான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம்.

திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக்கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை. இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பறிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான்.

இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது

அல்லாஹ் உங்களுக்கு துணைகளை ஏற்படுத்தினான் (உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான்..)

(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 16;72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:

மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருக செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது'

(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 30;21)

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும், உணர்வுகள் வேறு வடிவம் பெறும், ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.

நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக்கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டு பங்களிப்பு மிக மிக அவசியம்.

திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால் செடியை ஊண்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு, பரிமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.

பெருமானார் நபி (ஸல்..) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள். தங்களது மனைவி ஆயிஷாவை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள். மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.

நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்..) அவர்கள் சொன்னார்கள்:
அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடும் ஒரு கவளம் உணவு உட்பட.
ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறு சிறு விஷயங்களானாலும் சரியே.

அல்லாஹ்வின் தூதர் தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?

அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்..) அவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள்.

மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.

எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள்,
குடும்ப விஷயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள்,
பிற விஷயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்களுடன் இருக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.

உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.

இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்துக்கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும். விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும். நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே.

அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.

(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 43;70)

இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்..) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்: 25 வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா (ரலி) மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள். தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்ப தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்..) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் வேதத்திலும், அன்னல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுடி வாழ அகிலத்தோருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு.

சத்திய அழைப்பு
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Tue May 31, 2011 8:57 pm

athu thana mudiyala சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 11:04 pm

தாமுவின் தகவல் முற்றிலும் அருமை!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 5:39 am

அசுரன் wrote:தாமுவின் தகவல் முற்றிலும் அருமை!

நன்றி அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக