புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.க.ஸ்டாலினுக்கு உடன்பிறப்பின் கடிதம்
Page 1 of 1 •
எங்கள் எதிர்கால நம்பிக்கையான தளபதிக்கு,
ஒரு நெருக்கடி மிகுந்த நேரத்தில், தி.மு.கழகத்தின் சட்டமன்றக் கட்சித்தலைவராக எங்கள் தளபதி தேர்வு செய்யப்பட்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.இன்னும் பல எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சத்திலும் தேங்கிக் கிடக்கிறது. அதனை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.
தலைவரிடமிருந்துதான் அரசியல் கற்றோம். தலைவரிடமிருந்துதான் ஓய்வின்றி உழைப்பதைக் கற்றோம். தலைவரிடமிருந்துதான் சோதனைகளிலும் கழகத்தைக் காபாற்றவேண்டும் என்ற மனஉறுதியைப் பெற்றோம். தலைவரிடமிருந்துதான் கடிதம் எழுதும் கலையையும் கற்றுக்கொண்டோம். எந்த நெருக்கடியிலும் கழகத்தை நிமிர்த்திவிடும் ஆற்றல் தலைவரின் கடிதங்களுக்கு உண்டு. அந்தளவுக்கு என்னைப்போன்ற உடன்பிறப்புகளின் கடிதம் நிச்சயம் இருக்காது. அதேநேரத்தில், எங்கள் மனதில் உள்ளதை கடிதம் மூலமாக உங்களிடம் தெரிவிக்கும்போது, நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் கழகம் மீண்டும் வலிமை பெறும் என்ற நம்பிக்கை என்னைப் போன்ற உடன்பிறப்புகளுக்கு இருக்கிறது.
இடுப்பு வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை, தோளில் போட்டிருக்கிற பளபள துண்டு பத்திரமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் என்ன ஆகும்? அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு ஏற்பட்ட தோல்வியை , இயக்கத்தின் மீது பற்றுகொண்ட என்னைப் போன்ற உண்மையானத் தொண்டர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். தேர்தல் களத்தில் தி.மு.க தோல்வியே காணாத கட்சி அல்ல. நாம் ஆட்சியைப் பிடித்த தேர்தல்களைவிட, ஆட்சியைப் பிடிக்காத தேர்தல்கள்தான் அதிகம். தற்போது சந்தித்திருக்கும் தோல்வியைவிடவும் கடுமையான-மோசமானத் தோல்விகளைத் கழகம் சந்தித்திருக்கிறது. அவற்றிலிருந்து கழகம் மீண்டு வந்திருக்கிறது. தலைமையின் மனதிடமும், தொண்டர்களின் நம்பிக்கையுமே அதற்கு காரணம். இப்போதையத் தோல்வி, கழகத்தினர் மனதில் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. மீண்டெழ முடியுமா என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.
சட்டமன்றத்தில் நாம் மூன்றாவது கட்சியாகத் தள்ளப்பட்டிருக்கிறோம். கூட்டணி பலத்தால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தே.மு.தி.க பெற்றிருக்கிறது. சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சரிவுகள் நமக்குப் புதிதல்ல. ஒற்றை எம்.எல்.ஏவை மட்டும் வைத்துக்கொண்டு சபையை எதிர்கொண்டிருக்கிறோம். அதன்பிறகு, நடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையையே வீழ்த்தி பெரும் பலத்துடன் ஆட்சியையும் பிடித்திருக்கிறோம். ஏனென்றால், மக்கள் மன்றத்தில் நம்முடைய வலிமையை யாராலும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கை நமக்கு இருந்தது. அதற்கேற்றார்போல கழகமும் செயல்பட்டது. ஆனால், இன்றைக்கு பயமும் சந்தேகமும் வருவதற்கு காரணம் என்ன?
இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் நேற்று தோன்றிய கட்சிகள் கவர்கின்றன. பெண்கள் வாக்குகளும் அந்தக் கட்சிகளுக்கு சாதகமாக அமைகின்றன. கொள்கையோ கோட்பாடோ இல்லாமல் தோன்றிய கட்சிகள் வளர்ச்சி பெறுகின்ற நிலையில், கொள்கை வழி வந்த நம் கழகம் ஏன் செல்வாக்கைப் பெருக்கமுடியவில்லை. 5 ஆண்டுகால ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்தரும் திட்டங்களை தலைவர் அறிவித்தார். தளபதி அவர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று நிறைவேற்றினீர்கள். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக 130 மணி நேரத்திற்கும் அதிகமாக மேடையில் நின்று நிதியுதவி செய்தீர்கள். உங்களுக்கு இருந்த அக்கறையில் கால் பங்காவது நமது ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்களுக்கும் மாவட்டப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கும் ஒன்றிய-நகர-கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் இருந்ததா?
உழைக்கின்ற தொண்டன் உழைத்துக்கொண்டே இருக்கிறான். பதவி கிடைத்தவர்கள் குவாலிஸ், ஸ்கார்பியோ, இனோவா எனப் பலவித பல்லக்குகளில் ஊர்வலம் போகிறார்கள். நகரங்களும் ஒன்றியங்களும் நான்கைந்து கார்களுடன் பவனி வந்தால், பொதுமக்களின் நிலை அவர்களுக்கு எங்கே தெரியும்? தலைவரும் தளபதியும் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேர்கிறதா என்பதைக்கூட மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கண்டுகொள்ளவில்லை. கட்சியையும் ஆட்சியையும் பயன்படுத்தி சம்பாதித்த கழக நிர்வாகிகளும் கண்டுகொள்ளவில்லை.நேற்று இவர் எப்படி இருந்தார், இன்றைக்கு எத்தனை வசதியாக இருக்கிறார் என்று மக்கள் தங்கள் மனதுக்குள் கேள்வி கேட்டார்கள். அதற்கான விடையை தேர்தலில் வெளிப்படையாகச் சொன்னார்கள்.மக்களிடமிருந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டார்கள் நம் கட்சி பிரபலங்கள்.
கட்சியை வளர்க்கவில்லை. ஆட்சியில் அறிவித்த திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. தங்களையும் தங்கள் குடும்பத்தையுமே வளர்த்துக்கொண்டார்கள். குடும்ப ஆட்சி என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் சொன்னபோது நமக்கு கசப்பாக இருந்தது. கோபம் வந்தது. ஆனால், பொதுமக்களிடமும் அந்த எண்ணம் ஆழ்மனம் வரை ஊடுருவியிருக்கிறது என்பதுதான் உண்மை. மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம்வரை கழகத்தில் குடும்ப ஆதிக்கம் நிலவுகிறது என்பதே உண்மை.
தலைவரும் தளபதியும் எதற்காக சிறை சென்றார்கள் என்பதை நாடறியும். கல்லக்குடி போராட்டத்திற்காக திருச்சியிலும், தாய்மொழியைக் காப்பதற்காக பாளையங்கோட்டையிலும் சிறைப்பட்டவர் தலைவர். ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தில் மிசா சிறையில் சித்ரவதைகளை சந்தித்து தியாகத் தழும்பு பெற்றவர் நீங்கள். ஆனால், தலைவரின் குடும்பத்தில் மற்றவர்களும் சிறை சென்றிருக்கிறார்கள். எந்தப் போராட்டத்திற்காக சிறைக்குப் போனார்கள்? எந்தத் தியாகத் தழும்பைப் பெற்றார்கள்? கொலை வழக்கு, ஊழல் வழக்கு என கழகத்தின் கௌரவத்தை தேசிய அளவில் குலைக்கின்ற அளவில்தானே அவர்களின் செயல்பாடுகள் இருந்தன.
தளபதியின் செயல்பாடுகள் அப்படிப்பட்டவையா? 13ஆண்டு காலம் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, இளைஞரணியை கட்டியமைத்து கழகத்தைக் காக்கும் பணியில் தலைவருக்குத் துணை நின்றவர் நீங்கள். கழகத்தில் பிளவு ஏற்பட்டு சிலர் தனிக்கட்சி கண்டபோது, கழகத்தின் கட்டுக்கோப்பு சிதறாமல் கட்டிக்காத்ததில் உங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இத்தனை செயல்களையும் செய்தும்கூட, அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு தளபதி அவர்கள் நான்கு முறை எம்.எல்.ஏவாக வேண்டியிருந்தது. தலைவரின் உடல்நலக் காரணத்தினாலேயே துணை முதல்வர் பதவி கிடைத்தது. கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளைப் பெறுவதற்கு 40 வருடகாலம் கழகப்பணியாற்ற வேண்டியிருந்தது. இத்தனை காலதாமதங்களுக்கும் காரணம், நீங்கள் நம் தலைவரின் பிள்ளை என்பதுதான்.
தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் நிலை என்ன? அமைச்சர் பதவிளையும் எம்.பி. பதவிகளையும், கட்சிப்பதவிகளையும் உடனடியாகக் கேட்டு வாங்குகிறார்கள். வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், மிரட்டி வாங்குகிறார்கள். வாரிசு அரசியலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ் கட்சியும், நேரு குடும்பமும்தான். ஆனால், அங்குகூட அந்தக் குடும்பத்திலிருந்து ஒரு வாரிசு மட்டும்தான் பொறுப்புக்கு வருகிறார். சோனியா கட்சித்தலைவராக ஆட்சிக்கு வழிகாட்டுகிறார் என்றால், ராகுல்காந்தி இதுவரை மத்திய அமைச்சராகாமல் இருக்கிறார். பிரியங்கா எந்தப் பொறுப்புக்கும் வரவில்லை. ஆனால், கழகத்தின் நிலைமை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
கூட்டணிக் கட்சிகளில் இருப்பவர்கள், மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள், ஏன் நமக்கு நேரெதிரான கட்சிகளில் இருப்பவர்களும்கூட, “தலைவரைத் தொடர்ந்து தளபதி அரசியலுக்கு வந்ததில் எந்தத் தவறும் இல்லை. அவர் இதுவரை முக்கியப் பொறுப்பைப் பெறமுடியாமல் மூத்த தொண்டன்போல செயல்படுகிறார். ஆனால், தலைவர் குடும்பத்திலிருந்து மற்றவர்கள் வரிசையாக அரசியலுக்கு வந்ததையும் உடனடியாக உயர்பதவிகளைப் பெற்றதையும் மக்கள் விரும்பவில்லை ”என்று மனம்விட்டுச் சொல்கிறார்கள். தலைவர் குடும்பத்திலிருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்து பொறுப்புகளைப் பெறுகிறார்கள் என்றதும் அமைச்சர்களாக இருந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகர-ஒன்றிய பொறுப்பாளர்கள் என்று எல்லோருமே தங்கள் குடும்ப வாரிசுகளை கட்சிப் பொறுப்புகளில் நியமித்து, ஆட்சி அதிகாரத்தை பங்கு போட்டுக்கொண்டார்கள்.
அ.தி.மு.கவில் உண்மையாக உழைக்கிற எந்தத் தொண்டனுக்கும் என்றைக்காவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் கழகத்தில் எவ்வளவு உழைத்தாலும், பதவியில் நீண்டகாலமாக இருக்கிறவர்களின்வாரிசுகளுக்கு மட்டும்தான் எல்லாம் கிடைக்கும் என்ற நிலைமை இருக்கிறது. தப்பு செய்தால் தலைமை தூக்கியெறிந்துவிடும் என்ற பயம் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் இருக்கிறது. நம் கழகத்திலோ, தப்பு செய்துவிட்டு, தலைவர் குடும்பத்தினரில் யாரையாவது பிடித்து சரிபண்ணிவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. இப்படி இருந்தால், உண்மைத் தொண்டர்கள் எப்படி ஈடுபாட்டோடு கட்சிப் பணியாற்றுவார்கள்? புதியவர்கள் எப்படி கட்சிக்கு வருவார்கள்?
தளபதி அவர்களுக்கு இந்த நிலவரங்கள் எல்லாம் தெரியும். ஆனாலும் தலைவர் பார்த்துக்கொள்வார்-அவர் சொல்கிறபடி நாம் நடப்போம் என்று எப்போதும்போல் இருப்பது இன்றைய சூழ்நிலையில் பொருத்தமாக இருக்குமா? தலைவர் தன் 75 ஆண்டுகால பொதுவாழ்வில் சந்தித்திராத சோதனைகளையும் சோகங்களையும் மட்டுமின்றி, அவமானங்களையும் சந்திப்பது இப்போதுதான். எதற்கும் கலங்காத உள்ளம் படைத்த அவர், கலங்கி நிற்பதை உண்மையான உடன்பிறப்புகள் அறிவார்கள். தலைவரை சுற்றி நிற்கும் காக்கா கூட்டங்களும் ஜால்ரா ஆசாமிகளும் உண்மைகளை மறைப்பதையே இன்றுவரை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். தலைவரை இப்போது சூழ்ந்துள்ள நெருப்பு வளையத்திலிருந்து காப்பாற்றுவதற்கு தளபதி அவர்களால் மட்டும்தான் முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.
நீங்கள் அமைதியாக காட்சியளிக்கும் எரிமலை. நெருப்பைக் கக்கத் தொடங்கினால் எவரும் எதிரில் நிற்கமுடியாது. சாத்வீகம் போதும். சாட்டையைச் சுழற்றுங்கள். தலைவரையும் கழகத்தையும் காப்பாற்ற இதைத்தவிர இப்போது வேறு வழியில்லை.
தமிழகத்திலம் தேசிய அளவிலும்அத்தனை ஊடகங்களும் நமக்கு எதிராக வரிந்துகட்டி நிற்கின்றன. அவற்றுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்குக் கூட நம்மிடம் ஆள் இல்லையே! டெல்லியில் என்ன நடக்கிறது என்பதை டி.வி. சேனல்களைப் பார்த்து கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தெரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு நிலைமை இருக்கிறது. மத்திய அரசில் பங்கேற்றிருக்கும் நம்முடைய அதிகாரமும் தகவல் பெறும் திறனும் இவ்வளவுதானா?
ஜெயலலிதாவின் பதவியேற்புக்கு இடதுசாரித் தலைவரான பரதனும் வருகிறார், இந்துத்வா கொள்கை கொண்ட நரேந்திரமோடியும் வருகிறார். இவர்கள் இருவர் பக்கமும் சாயக்கூடிய சந்திரபாபு நாயுடுவும் வருகிறார்.எல்லாத் தரப்பிலும் அவருக்கு ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு இன்று தேசிய அளவில் எந்தக் கட்சித் துணையாக இருக்கிறது? கூட இருந்தே கழுத்தறுத்துவிட்டது காங்கிரஸ். மற்ற கட்சிகளோ, நம்மிடமிருந்து வெகுதூரம் விலகி இருக்கின்றன. நமது தரப்பு நியாயங்களை பிற கட்சிகளிடம் எடுத்துச் சொல்வதற்குக்கூட நம்மிடம் சரியான ஆட்கள் இல்லாமற் போனது ஏன்?
2ஜி வழக்கில் கனிமொழி சிறைப்பட்டிருக்கிறார். 100 நாட்களுக்கு மேலாக பெயில் கிடைக்காமல் திகாரில் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. ஆனால், ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி 64 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த ஜெயலலிதா, தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 15 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். எங்கிருந்தோ பிறந்தநாள் பரிசு என்ற பெயரில் அனாமத்தாக வந்த காசோலை சம்பந்தமான வழக்கும் அதே நிலைதைன். நம் மீதான வழக்குகளில் சட்டம் தன் கடமையைச் செய்கிறதே.. ஜெயலலிதா வழக்கில் மட்டும் சட்டம், சர்க்கஸ் கூடாரத்து புலியாக ஒடுங்கிவிடுகிறதே, ஏன்? நமது கழகத்தின் வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் என்ன செய்கிறார்கள்?
உண்மையான விசுவாசத்துடன் கழகப் பணியாற்றுபவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அதிகார மையங்கள் கழகத்தில் அதிகளவில் இருப்பதால் ஏதேனும் ஒரு மையத்தின் துணையுடன் சமாளித்துக்கொள்ளலாம் என்று கணக்குப்போட்டு,பொறுப்பில் இருப்பவர்கள் நன்றிக்கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்கள். அதிகார மையங்கள் நீடிக்கும்வரை கழகத்திற்கான சோதனைகளும் தோல்விகளும் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும். மேல்மட்டத்திலிருந்து மாவட்ட-நகர-ஒன்றியங்கள் வரையிலான அதிகார மையங்கள் கலைக்கப்படவேண்டும். கழகத்திற்கு புதுரத்தம் பாய்ச்சப்படவேண்டும்.
நமக்கு வேண்டியவர்கள் என்பதற்காகவே சில பேர் மாவட்டப் பொறுப்புகளில் நீடித்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் கழகத்திற்கு கூடுதல் சுமையாக (எக்ஸ்ட்ரா லக்கேஜ்) இருந்துகொண்டு, மக்களின் அதிருப்தியை அளவுக்கதிமாகப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டமாக தளபதி அவர்கள் பயணித்து, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்கு, தேர்தலில் வெற்றி விரைந்தோடி வந்திருக்கவேண்டும். ஆனால், இந்த கூடுதல் சுமைகளை உங்கள் தோளில் சுமந்தபடி ஓடியதால், கிடைக்கவேண்டிய வெற்றி பறிபோனது. இந்தப் பயனற்ற சுமைகளை உடனடியாக கழற்றிவிடவேண்டும். தொகுதிப் பணிகளைக் கவனிப்பதாகச் சொல்லிக்கொண்டு தளபதிக்கே துரோகம் செய்தவர்களும் இன்றுவரை பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்களெல்லோரும் கழகத்திற்கு பெரும்சுமைகள்.
புதிய ரத்தம் பாய்ச்சப்படவேண்டுமென்றால் மாணவரணியிலும் இளைஞரணியிலும் புதிய உறுப்பினர்கள் பெருகவேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணி மாநாட்டில் பங்கேற்ற இலட்சக்கணக்கானவர்கள், தேர்தல் நேரத்தின்போது எங்கே சென்றார்கள்? ஆளுங்கட்சியாக இருந்ததால் அவரவரும் மாநாட்டுக்குஆட்களைத் திரட்டி வந்தார்கள். அதன்பிறகு போன இடம் தெரியவில்லை. மாணவரணிக்குப் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் 30 வயதுக்குட்பட்டஇளம் வயதினராக இருக்கவேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் மாணவப் பருவத்தினராய் இருக்கவேண்டும். அதுபோல, இளைஞரணியில் 40 வயதுக்குட்டபட்டவர்களே இடம்பெறவேண்டும். இரண்டு அணியிலும் நிறைய பொறுப்புகள் வழங்கப்படவேண்டும். இவையெல்லாம் கழகத்தினரின் எதிர்பார்ப்பு.
தேர்தல் தோல்வி சாதாரணமானது. கழக அமைப்பு என்பது வலிமையானது. கழகம் வலிமையாக இருந்தால் அடுத்த தேர்தலில் ஆட்சிபீடம் ஏறலாம். அமைப்பு சீர்குலைந்தால் எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும் வெற்றிபெறமுடியாது. என்னைப் போன்ற உடன்பிறப்புகளைவிட தளபதி அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். தலைவரின் ஆணைப்படி செயல்பட்டு வந்த தளபதி, இப்போது தலைவரைக் காப்பதற்காக செயல்படவேண்டிய தருணம் வந்துள்ளது. தளபதியால் மட்டுமே இப்போது கழகத்தைக் கட்டிக் காக்க முடியும்.
தலைவரின் ஆலோசனைகள்படி நீங்கள்தான் கழகத்தை வழிநடத்த வேண்டும். தலைவரிடம் பேசுகிற கட்சி நிர்வாகிகள் இதனை எடுத்துச் சொல்லவேண்டும். சட்டமன்றத்தில் கட்சியை வழிநடத்த இருப்பதுபோல, மக்கள் மன்றத்திலும் நீங்கள் வழிநடத்தவேண்டும். இது என் ஒருவனின் கருத்தல்ல. ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட கழகத்தின் உண்மைத் தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்து.
எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்.....
ஒரு கோடி தொண்டர்களின் சார்பில் ஓர் உடன்பிறப்பு
http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=190#

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1