புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
18 Posts - 3%
prajai
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அவர்கள்... குழந்தைகள்... I_vote_lcapஅவர்கள்... குழந்தைகள்... I_voting_barஅவர்கள்... குழந்தைகள்... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்கள்... குழந்தைகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 10:46 pm


தங்கையின் திருமண அழைப்பிதழை வைப்பதற்காக திருவையாறு சென்றுவிட்டு திரும்புவதற்காக திருவையாறு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். வருகிற பேருந்துகள் எல்லாம் பிதுங்கிக் கொண்டு வந்தன. இரண்டு படிக்கட்டுகளிலும் ஒரு பேருந்துக்கான கூட்டம் தொங்கிக் கொண்டு போனது.சரியான முகூர்த்த நாள் என்பது தெரியாமல் புறப்பட்டது தவறாகப் போனது.

பேருந்து நிலயத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போனதே அல்லாமல் குறைந்தபாடில்லை. கும்பகோணம் போகிற பேருந்து காலியாகப் போனது. திருக்காட்டுப் பள்ளி, மற்றும் தஞ்சை போகிற பேருந்துகளும் காலியாகவே போயின. அதில் அமர்ந்து போகிறவர்களைப் பார்த்தால் ஒரு வித பொறாமையே வந்தது. ஆக இருக்கிற கூட்டமெல்லாம் அரியலூர் வருகிற கூட்டம் தான் போல. அந்த எண்ணமே ஒரு வித அயர்வை ஏற்படுத்தியது. பத்துப் பேருந்துகள் சுத்தமாய் காலியாய் வந்தாலும் இருக்கிற ஜனங்களுக்கு காணாது என்றே பட்டது. சரி, உட்கார இடத்தோடு பேருந்து வருகிறவரை காத்திருப்பது என்று முடிவெடுத்தோம்.

ஓரமாய் மூடிக் கிடக்கும் ஒரு கடையின் படியில் அமரலாம் என்று போனோம். படிக்கட்டின் ஒரு மூலையில் ஏற்கனவே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. ஒரு இளைய ஜோடி அமர்ந்திருந்தார்கள். அவர்களது பையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது அவன் மீதும் அவர்களுக்கு கவனம் இருக்கவே செய்தது. “: ஏய், மண்ணுலவிளையாடாத , சிரங்கு வந்துடும். அப்புறம் டாக்டர்ட்ட தூக்கிட்டுப் போய் ஊசி போட்டுடுவேன்” என்று அவனது அப்பா சொன்னதுதான் தாமதம் “நான் பெரிய பையனா வந்து நம்ம ஸ்ப்லெண்டர எடுச்த்துட்டு போயி அந்தக் கொரங்கு மாமா மேல ஏத்தி அரைக்கப் போறேன்” என்று விளையாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமலே சொன்னான்.

இதைக் கேட்டதும் நானும் விக்டோரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். இருவர் மனதிலுமே ஒரு பழைய சம்பவம் மலரும் நிணைவாய் வந்து எங்கள் புன்னகையை ஆழமாய் அர்த்தப் படுத்தியது.

அப்போது நாங்கள் பெருமாள் பாளையத்தில் குடியிருந்தோம்.கிஷோருக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். அவனுக்கான சளிப் பிரச்சினைக்கு மருத்துவர் நரசிம்மனிடம் ஹோமியோ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அவரது மருத்துவமனை நொச்சியத்தில் இருந்தது. ஒரு முறை அவனை வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவரிடம் கிளம்பினோம். போகும் வழியெல்லாம் எதையாவது கேட்டுக் கொண்டே வருவான். நானோ விக்டோரியாவோ ஒருபோதும் அவனது கேள்விகளை அலட்சியப் படுத்தியதே இல்லை.

நொச்சியம் நெருங்கிய பொழுது சாலை ஓரத்தில் மரங்களி தென்பட்ட குரங்குகளைப் பார்த்து விட்டான். குரங்குகளை பறிய கேள்விகளாய்க் கேட்டு ஒரு வழி செய்துவிட்டான். அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் இடையே நடந்த உரையாடல்களுள் ஒரு மெல்லியப் பகுதியைப் பார்ப்போம்,

“ பாப்பாக் குரங்கெல்லாம் ஸ்கூலுக்குப் போகுமா?

“போகும்”

“அவங்களுக்கு யார் ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பா?”

“ கொரங்கு மிஸ்”

”கொரங்கு மிஸ் அவங்கள ஸ்கேல்ல அடிப்பாங்களா?”

“மாட்டாங்க”

“ அப்புறம் ஏன் எங்க மிஸ் மட்டும் அடிக்கிறாங்க”

“ ஏன்னா அவங்க மனுஷ மிஸ்” (அய்யோ, விக்டோரியா எவ்வளவு ஆழமான பதிலை இவ்வளவு லாவகமாகவும் அலட்சியமாகவும் சொல்வதைக் கேட்டு சத்தியத்திற்கும் சிலிர்த்தே போனேன்)

“ஓ!, பாப்பாக் கொரங்குக்கு சளிப் புடிச்சா யாரு மருந்து கொடுப்பா?”

“ கொரங்கு டாக்டர்”

இப்படியாக குரங்குகளைச் சுற்றியே அவர்களது பேச்சு சுழன்று கொண்டிருக்க மருத்துவ மனை வந்து விட்டது. காத்திருக்கும் தேவை அன்று ஏற்படவில்லை.

அவருக்கு கிஷோரை மிகவும் பிடிக்கும். “ஹாய் கிச்சு, எப்ப வந்தீங்க?”

” தம்பி சாருக்கு வணக்கம் சொல்லு”

“ சாரெல்லாம் இல்ல மாமாதான்.கிச்சு , எங்க மாமா பேர சொல்லுங்க பார்ப்போம்?”

சட்டென சொன்னான் “கொரங்கு மாமா”

சிரி சிரியென்று சிரித்தார். எங்களுக்கு மிகவும் சிரமமாய் போய்விட்டது. ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டோம். வரும் வழியில் குரங்குகளைப் பார்த்ததையும் , தொடர்ந்து அவன் குரங்குகளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்ததையும் அதன் விளைவாகத்தான் இப்படிப் பேசிவிட்டான் என்றும் நாங்கள் சொல்லச் சொல்ல அதையெல்லாம் சற்றும் சட்டை செய்யாதவராய் அவனுக்கு சாக்லெட் கொடுத்து தூக்கி வைத்துக் கொண்டு “ எங்க இன்னொரு தரம் சொல்லு” என்று அவனோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தை “கொரங்கு டாக்டர்” என்று சொன்னதும் எங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது. விக்டோரியா அவனை நோக்கி கையை நீட்டி சிரிக்கவே விக்டோரியாவை நோக்கி தாவிக் குதித்து ஓடி வந்தான்.

“ தம்பிப் பேரு என்ன?”

“தனுஷ்”

“ஓ! என்னப் படிக்கிறீங்க”

“யு.கே.ஜி” என்றவன் என்னை நோக்கி கை நீட்டி “இவங்கதான் மாமாவா?”

“ஆமாம்”

“அய்ய, நல்லாவே இல்ல, வேணாம்”

“சரி என்ன செய்யலாம்?”

“கா விட்டு தொறத்தி விடுங்க ஆண்டி”

“ சரி செஞ்சுடலாம். நீ ஆண்டியக் கட்டிக்கிறியா?”

இதைக் கேட்டதும் “சரி” என்றவன் விக்டோரியாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “ஓ.கே வா?” என்றான்.

"ஓகே, ஓகே” விக்டோரியாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

“ டேய் பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல” என்று சொல்லிக் கொண்டேஅவனை வாங்க
எழுந்து வந்தார். விக்டோரியா அவனைத் தராமல் இழுத்து வைத்துக் கொண்டு “ விடுங்க சின்னப் பிள்ளைதானே, போகவும் அவன் சரியாய்த் தானே சொன்னான்” என்று சொல்லவும் அவனது அம்மாவும் அப்பாவும் எங்களோடு சேர்ந்து சிரித்தனர்.

குழந்தைகளைக் கவனித்தால் எதையும் மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். சிரித்துக் கொண்டே கற்கலாம். எவனோ ஒருவன் அரை போதையில் உளறி இருக்கிறான் “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று. எந்தக் குழந்தைக்காவது இது புரியும் என்றால் அது சொல்பவனைக் கொன்றே போடும். இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு நிகர் எதுவுமே இல்லை.

அவர்கள் போக வேண்டிய பேருந்து வரவே அவனை வாங்கிக் கொண்டு கிளம்பினர். முத்தம் கொடுத்து டாடா சொல்லி விக்டோரியா அனுப்பிவைக்கவே பையன் காற்றிலே ஒரு முத்தம் அனுப்பினான். அதில் ஒரு துளி என் மீதும் விழுந்தது. அயர்வு முழுக்க பறந்தே போனது.

“ பேசாம அவங்க முகவரிய வாங்கி வச்சிருந்தா போயி அப்பப்ப கொஞ்சலாம்ல”

“அதுக்கு அங்க போகனும்னு அவசியமேயில்ல”

”அப்புறம்”

“ஊர்ல இருக்கிற எல்லாக் குழந்தைகளுமே அவந்தான். எல்லாக் குழந்தைகளுமே ஒரே மோல்டுதாங்க” அப்பா, எவ்வளவு ஞானம். இவ்வளவு நாள் இதை எப்படி கண்டு கொள்ளாமல் போனோம்.

ஒரு வழியாய் எங்களுக்கும் ஒரு பேருந்து வந்தது. நின்று கொண்டுதான் போக வேண்டும். உள்ளே நுழைவதற்கு இடம் கிடைக்கவே ஏறி விட்டோம்.

ஏறிய பின்புதான் ஏன் ஏறினோம் என்று தோன்றியது. முன்னே இருப்பவர்களை பின்னே போகுமாறும் பின்னே இருப்பவர்களை முன்னே போகுமாறும் ஒவ்வொறு முறை நடத்துனர் தள்ளும் பொழுதும் ஒவ்வொருவரும் எரிச்சலடைந்து சிலர் அவரை கண்டபடி சபிக்கவே செய்தோம்.

ஒவ்வொரு நிறுத்ததிலும் ஏறிக் கொண்டேதான் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் நடத்துனரை சபித்துக் கொண்டேதான் வந்தோம். “இப்படிச் சம்பாரிக்கறதுக்கு பதிலா...” என்றுகூட சிலர் அசிங்கமாய் திட்டவே செய்தனர்.

சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து , கசங்கி , இதில் அடிக்கடி நடத்துனர் டிக்கட் போடுவதற்காய் இப்படியும் அப்படியுமாய் நுழைந்து போவது என்பதெல்லாம் சேர்த்து உயிரே போனது.

இந்த நேரம் பார்த்து மழை வேறு வந்துவிடவே இன்னௌம் துயரம் அதிகமானது. எல்லா இடங்களிலும் ஒழுகியது. இரண்டு பக்கங்களிலும் ஜன்னல் கண்ணாடிகள் சரியாக வேலை செய்யாததால் சாரல் வேறு. ஏறத்தாழ குளித்தோம்.

ஒரு வழியாய் பேருந்து அரியலூர் வந்தது. எல்லோருக்கும் அப்பாடா என்றிருந்தது. சிலர் அதை கொஞ்சம் சத்தமாகவே வெளிப் படுத்தினர்.

இறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கேட்டான், “ இந்த பஸ் திரும்ப எப்பக் கிளம்பும்?”

“அதை ஏன் கேக்குற. எவ்வளவு ஒழுகுனாலும் உடனே கிளப்பிடுவாங்க”

“ பாவம் இல்ல அந்த கண்டக்டர்”

அதை யாரும் சட்டை செய்தார்களா என்று தெருயவில்லை. ஆனால் எனக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது.

ஆம் நாம் ஏன் இப்படி யோசிப்பது இல்லை. அல்லது குழந்தைகள் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறார்கள்?

அவர்கள் குழந்தைகள்.

எனக்கொரு ஆசை, என்னைத் தவிர எல்லோரும் குழந்தைகளாய் மாறிவிட வேண்டும். அல்லது என்னோடு தொடர்புடைய அனைவருமாவது குழந்தைகளாய் மாறிவிட வேண்டும்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவர்கள்... குழந்தைகள்... 38691590

இரா.எட்வின்

அவர்கள்... குழந்தைகள்... 9892-41
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 26, 2011 10:57 pm

கடைசியில் மனம் இளகிவிட்டது அண்ணா! என்ன இருந்தாலும் குழந்தை மணம் என்பது ஒரு தனி சிறப்பு தான்.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 11:17 pm

அசுரன் wrote:கடைசியில் மனம் இளகிவிட்டது அண்ணா! என்ன இருந்தாலும் குழந்தை மணம் என்பது ஒரு தனி சிறப்பு தான்.
நன்றி அசுரன்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவர்கள்... குழந்தைகள்... 38691590

இரா.எட்வின்

அவர்கள்... குழந்தைகள்... 9892-41
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 11:24 pm

குழந்தைகள்.. உலகம்.. தனி.. நாம் விருப்பங்கள் .. ஆசைகள் ... அனைத்தையும் திணித்து அந்த வெள்ளை உள்ளங்களை கெடுத்துவிடுகிறோம் .! The little prince என்ற புத்தகம் ! தமிழாக்கம் படித்திருக்கிறேன் . குழந்தைகள் உலகத்தை நாம் கண்முன் கொண்டுவந்து விடும்.

அதில் ஒரு குழந்தை சொல்லும், நான் என் நண்பனின் வீட்டு அழகை பற்றி எப்படி சொன்னாலும் என் அப்பாவிற்கு புரிய மாட்டேன்கிறது ,
வாசலில் உள்ள பூச் செடியை பற்றி சொன்னேன். வண்ணத்தை பற்றி சொன்னேன் ! எதுவும் புரியவில்லை அவருக்கு !
ஆனா அந்த வீடு 6 இலட்சம் ரூபாய் இருக்கும் என்ற போது புரிந்து கொண்டார்.
ஏன் தான் இந்த பெரியவர்கள் எல்லாவற்றிற்கும் எண்களை தேடுகிறார்களோ ? என்று கேட்பான்.

உண்மைதான் . பள்ளி சென்ற பிறகு , குழந்தைகளை மதிப்பெண் களை வைத்து மட்டுமே அடையாளம் காண்கிறோம்.

அப்துல் ரஹ்மான் ஒரு கவிதையில் சொல்வார்:

புத்தகங்களே !
குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள் !
எவ்வளவு உண்மை !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 11:26 pm

கே. பாலா wrote:குழந்தைகள்.. உலகம்.. தனி.. நாம் விருப்பங்கள் .. ஆசைகள் ... அனைத்தையும் திணித்து அந்த வெள்ளை உள்ளங்களை கெடுத்துவிடுகிறோம் .! The little prince என்ற புத்தகம் ! தமிழாக்கம் படித்திருக்கிறேன் . குழந்தைகள் உலகத்தை நாம் கண்முன் கொண்டுவந்து விடும்.

அதில் ஒரு குழந்தை சொல்லும், நான் என் நண்பனின் வீட்டு அழகை பற்றி எப்படி சொன்னாலும் என் அப்பாவிற்கு புரிய மாட்டேன்கிறது ,
வாசலில் உள்ள பூச் செடியை பற்றி சொன்னேன். வண்ணத்தை பற்றி சொன்னேன் ! எதுவும் புரியவில்லை அவருக்கு !
ஆனா அந்த வீடு 6 இலட்சம் ரூபாய் இருக்கும் என்ற போது புரிந்து கொண்டார்.
ஏன் தான் இந்த பெரியவர்கள் எல்லாவற்றிற்கும் எண்களை தேடுகிறார்களோ ? என்று கேட்பான்.

உண்மைதான் . பள்ளி சென்ற பிறகு , குழந்தைகளை மதிப்பெண் களை வைத்து மட்டுமே அடையாளம் காண்கிறோம்.

அப்துல் ரஹ்மான் ஒரு கவிதையில் சொல்வார்:

புத்தகங்களே !
குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள் !
எவ்வளவு உண்மை !

மிக்க நன்றி பாலா.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவர்கள்... குழந்தைகள்... 38691590

இரா.எட்வின்

அவர்கள்... குழந்தைகள்... 9892-41
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 26, 2011 11:45 pm

..அருமையா இருந்தது...... அவர்கள்... குழந்தைகள்... 678642
குழந்தையாக மாறி.....



அவர்கள்... குழந்தைகள்... Aஅவர்கள்... குழந்தைகள்... Aஅவர்கள்... குழந்தைகள்... Tஅவர்கள்... குழந்தைகள்... Hஅவர்கள்... குழந்தைகள்... Iஅவர்கள்... குழந்தைகள்... Rஅவர்கள்... குழந்தைகள்... Aஅவர்கள்... குழந்தைகள்... Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 11:45 pm

Aathira wrote:..அருமையா இருந்தது...... அவர்கள்... குழந்தைகள்... 678642
குழந்தையாக மாறி.....

மிக்க நன்றி ஆதிரா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவர்கள்... குழந்தைகள்... 38691590

இரா.எட்வின்

அவர்கள்... குழந்தைகள்... 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 11:49 pm

Aathira wrote:..அருமையா இருந்தது...... அவர்கள்... குழந்தைகள்... 678642
குழந்தையாக மாறி.....

மீண்டும் நன்றி ஆதிரா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவர்கள்... குழந்தைகள்... 38691590

இரா.எட்வின்

அவர்கள்... குழந்தைகள்... 9892-41
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Fri May 27, 2011 6:32 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 6:45 am

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக