புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_vote_lcap  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_voting_bar  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_vote_lcap  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_voting_bar  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_vote_lcap  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_voting_bar  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_vote_lcap  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_voting_bar  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu May 26, 2011 11:32 pm

அப்புக்குட்டி, பிரபாகரன்இ, சரண்யா மோகன்ஈ அத்வைதாஇ அழகன், தமிழ்மணிஇ தேவராஜ் ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் இசை: இளையராஜா கதை வசனம்: பாஸ்கர் சக்தி திரைக்கதை - இயக்கம்: சுசீந்திரன் தயாரிப்பு: எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நல்ல சினிமா வேண்டும் வித்தியாசமான படம் வேண்டும் என விரும்புபவர்கள், அப்படியொரு படம் வரும்போது கண்டு கொள்ளாமல் போவதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

சமீபத்தில் அப்படி வந்த நல்ல சினிமா அழகர்சாமியின் குதிரை. ஒரு மிக எளிய கிராமியக் கதையை எண்பதுகளின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

நீண்ட காலமாக மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டதால் கிராமக் கடவுள் அழகர்சாமிக்கு திருவிழா எடுக்க முடிவு செய்கின்றனர் மல்லையாபுரம் கிராமவாசிகள். அடுத்த நாளே திருடு போகிறது அழகர்சாமி ஊர்வலத்துக்காக தயார் செய்யப்பட்ட குதிரை வாகனம்.

காணாமல் போன குதிரையைக் கண்டுபிடிக்க பொலிஸில் புகார் செய்கிறார்கள் கிராமத்தினர். இந்தக் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் வசிப்பவன் அழகர்சாமி (அப்புக்குட்டி). குதிரையில் பொதியேற்றிப் பிழைப்பு நடத்தும் அவனுக்கும் பக்கத்து ஊர் சரண்யா மோகனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.

அந்த நேரம் பார்த்து காணாமல் போகிறது அவனது நிஜக் குதிரை. குதிரை இல்லாததால் அவனது திருமணம் கேள்விக்குறியாகிறது.

இந்த இரு குதிரைகளும் கிடைத்தனவா, அழகர்சாமி ஊர்வலமும் அழகர்சாமியின் திருமணமும் நடந்ததா என்பது மீதிக் கதை. இந்தக் கதைக்குள் மேல்சாதி இளைஞனுக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்குமிடையிலான ஒரு மெல்லிய காதலையும் காட்டியிருக்கிறார்கள்.

எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் கதை. ஆனால் அந்தக் காலகட்டத்தை எங்கும் வலிந்து சொல்லாமல் முதல்வர் எம்ஜிஆர் கலண்டர், பாண்டியன் பேருந்து என சில அடையாளங்கள் மூலமே புரிய வைத்திருக்கிறார் சுசீந்திரன்.

காணாமல் போன கடவுளின் குதிரை வாகனத்தைக் கண்டுபிடிக்க மலையாள மாந்திரீகனை வரச் சொல்வதும் அந்த மாந்திரீகன் மக்களின் அறியாமையைக் காசாக்குவதையும் காட்டியிருக்கும் விதத்தையும் விலாவாரியாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இந்தக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

படத்துக்கு பெரும் பலமாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. மனதை நெகிழ வைக்கும் டைட்டில் இசையுடன் தொடங்கும் அவர் ராஜாங்கம் க்ளைமாக்ஸில் விஸ்வரூபம் எடுக்கிறது. அப்புக்குட்டி அறிமுகமாகும் காட்சிக்கு அவர் பிரயோகித்திருக்கும் இசை... வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது.

அதேபோல அந்த சண்டைக் காட்சியின் ஆரம்பத்தில் மௌனத்தையும் போகப் போக இசையால் அந்தக் காட்சியின் உக்கிரத்தை உணர வைப்பதும் இளையராஜாவால் மட்டுமே சாத்தியம். மூன்றே பாடல்கள். அவற்றில் 'பூவக் கேளு...' மிக அழகான மெலடி. 'குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி...' ராஜா ஸ்பெஷல். துள்ள வைக்கிறது.

கதையின் நாயகனாக வரும் அப்புக்குட்டி மிக தேர்ந்த நடிகராக தன்னைக் காட்டியுள்ளார். காணாமல் போன குதிரை கிடைத்த சந்தோஷத்தை அவர் காட்டும் விதமும் குதிரையைக் கொடுக்க கிராமத்தினர் மறுக்கும்போது சட்டென்று அவர் காட்டும் அழுகை கலந்த கோபமும்... ஒரு வெள்ளந்தியான மனிதனை கண்முன் நிறுத்துகிறது.

பிரபா - அத்வைதா காதல் ஒரு மெல்லிய தென்றல் மாதிரி வந்துபோகிறது. க்ளைமாக்ஸில் இந்தக் காதலுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒரு கவிதை.

சரண்யா மோகன் பாத்திரத்தை இன்னும் இயல்பாகக் காட்டியிருக்கலாம். அவரது தந்தையாக வரும் தேவராஜ் நான்கு காட்சிகள் என்றாலும் நிறைவாகச் செய்துள்ளார்.

அழகன் தமிழ்மணிக்கு இதுகுறிப்பிடத்தக்க படம். அப்படியே கிராம பஞ்சாயத்து தலைவரைப் பார்க்கும் உணர்வைத் தருகிறார்.

படத்தின் கதையே இயல்பான நகைச்சுவைதான் என்பதால் கூடுதலாக நகைச்சுவைக் காட்சிகளை இயக்குநர் சேர்க்கவில்லைப் போலிருக்கிறது. வசனங்களிலுள்ள நாத்திகம் பக்திமான்களையும் ரசிக்க வைக்கும்! மிக இயல்பான கதையை மீறாத ஒளிப்பதிவு தந்த தேனி ஈஸ்வரைப் பாராட்ட வேண்டும் (இது அவரது முதல்படம்!) இந்த அழகர்சாமியின் குதிரையில் சுகமான ஒரு ப்ளாஷ்பேக் சவாரி போக வைத்த சுசீந்திரன் நம்பிக்கை தரும் புதிய படைப்பாளிகள் வரிசையில் முதலிடம் பெறுகிறார்.

வாழ்த்துக்கள்!
  அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்  Ii
நன்றி கேசரி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக