புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
47 Posts - 48%
heezulia
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
12 Posts - 2%
prajai
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
9 Posts - 2%
jairam
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அகங்காரத் தமிழ் Poll_c10அகங்காரத் தமிழ் Poll_m10அகங்காரத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகங்காரத் தமிழ்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 23, 2011 6:40 pm

அகங்காரத் தமிழ்-ச.மாடசாமி

எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் சகமனிதனோடு நாம் தினசரி பேசிப் பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்தபிரச்சினைகளில் ஒன்று.
பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்.தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..!
தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..!
பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் - ஓர் அகங்காரத் தமிழ்..!
தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள்பிறக்கின்றன. கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கிநிறுத்தும் தமிழ் எது ? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம்செய்யும் தமிழ் எது ? உலகில் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும்ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளிஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர்அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?

நானொரு தமிழாசிரியன், பாடப்புத்தகங்களின் வழியே மாணவர்களைச் சந்தித்து வந்தவன்.பாடப்புத்தகங்கள் இரு பிழையான அளவு கோல்கள் கொண்டே உருவாக்கப்பட்டு வந்துள்ளன
ஒன்று - திணிப்பதுதான் கல்வி..!இரண்டு -கடினமாக இருப்பது தான் தரம்
பாடப்புத்தகக் குழுவில் இருப்பவருத்ககுத் தெரிந்ததை அல்லது அவர்விரும்பியதைக் கொட்டத்தான் பாடப் புத்தகம்..!
மாணவரின் மொழி -மாணவரின் விருப்பம் - மாணவரின் உலகம் குறித்துப்பாடப்புத்தகம் கவலைப்பட்டதே இல்லை. பாடப் புத்தகம் -அகங்காரத்தின் வடிவம்..! ஆசிரிய அகங்காரம், மொழி அகங்காரம், அதிகார அகங்காரம் மூன்றும் இணைந்த வடிவம். இந்த அகங்காரம், தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விடாதபடிகாலமெல்லாம் பிள்ளைகளைப் பிரம்பேடுத்துக் துரத்தியிருக்கிறது.`பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம் கொடுப்போம்`என்று தமிழ்நாடு அறிவியல்இயக்கம் பாட்டாக வைத்த கோரிக்கை சாதாரணமானது அல்ல, அது கல்வி உலகில்உயிர்த்துடிப்பு..!

செயல்வழிக் கற்றல் வந்த பின்னர் ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளுக்கானபாடப்புத்தகங்கள் ஒழிக்கப்பட்டன. அதற்கு முன்னால் இருந்தபாடப்புத்தகங்களைப் பார்க்க வேண்டுமே..! கொடுமை..!முதல் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் அகவை, ஞாலம், நெய்தல், நன்னூல் போன்றபல சொற்கள் அறிமுகம். முதல்வகுப்பு மாணவனுக்குக் கற்பிக்கிற சொற்களா?இவை? `ஞாலம்` என்ற சொல்லுக்கு அறிவு என்று ஒர் ஆசிரியர் வகுப்பில் பொருள்சொன்னதை நானே கண்கூடாகப் பார்த்தேன்! அகவை என்பது வயதைக் குறிக்கும் சொல் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தச் சொற்களைஅறிமுகப்படுத்திய பாடத்திட்டக் குழுவினரே வீட்டிலும் வீதியிலும் பேசாதசொற்கள் இவை. இந்தச் சொற்களைத் திணிப்பதற்குச் சின்னஞ்சிறு பிள்ளைகளின்பிஞ்சு மூளைகள் தானா கிடைத்தன? திணிப்பது அகங்காரம் அல்லவா?

முதல் வகுப்பு புத்தகத்தில் இருந்த மற்றொரு அநீதி `ஆத்திசூடி !`முதல்வகுப்பு மாணவனுக்கான உபதேசம்- அறஞ் செய விரும்பு! குழந்தைக்கல்வியாளர்கள் இதை ஒரு வன்முறை என்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசினேன். அப்போது முதல்வகுப்பு மாணவனுக்கு ஆத்திசூடி தேவையா என்று கேட்டேன். தேவை! தேவை!ஆசிரியர்கள் உரத்த குரல் எழுப்பினார்கள். காரணம் கேட்டேன்.-ரொம்பஎளிமையான முறையில் சொல்லப்பட்ட அறம் என்றார்.ஓர் ஆசிரியை அவரிடம்-இயல்வது கரவேல் என்றால் என்ன பொருள்? என்றேன். சொல்லச் சிரமப்பட்டார்.`கரவேல்` என்ற சொல்லுக்கான பொருள் அந்தக் கூட்டத்தில் விரல் விட்டுஎண்ணக்கூடிய ஒரு சிலருக்கே தெரிந்திருக்கிறது. உடையது விளம்பேல் என்றவரிக்கு ஓர் ஒருமித்த பொருளை அன்று ஆசிரியர் கூட்டம் தரவில்லை. வீண்குழப்பமே மிகுந்தது. `ஙப்போல் வளை`யும் அப்படித்தான்.! ஆத்திசூடிஎளிமையானதும் அல்ல. ஞானத்தின் தொகுதியும் அல்ல தையல் சொல் கேளேல்.! (பெண்பேச்சைக் கேட்காதே) என்று சொன்ன நூல் தான் ஆத்திசூடி.

நியூசிலாந்தில் மாவோரி ஆதிவாசிக் குழந்தைகளுக்குத் தொடக்கக்கல்வி தந்தஸிவ்வியா என்ற ஆசிரியையின் அனுபவம் இங்கு குறிப்பிடத்தக்கது. தன் விருப்பப்படி கல்வியைத் தொடங்காமல் ஒவ்வொருமாணவரிடமும் தனித்தனியே உரையாடி ஒவ்வொருவருக்கும் உரிய ஆரம்பச் சொற்களைத் தேடியவர் அவர். ஒரு மாணவிக்கு `அம்மா` ஒரு மாணவனுக்கு `துப்பாக்கி` ஒரு மாணவனுக்கு -`கார்` அவர்களுக்குள் வட்டமிடும் சொற்களைக் கொண்டே அவர்களுக்கான கல்வியைத் தொடங்கினார் ஸில்வியா
மிகவும் பொறுமையும் அக்கறையும் இருந்தால் மட்டுமே கல்வியில் இப்படிப்பட்டதொடக்கத்தைப் தரமுடியும்.

இன்றைக்கு முதல் முறையாகச் சமச்சீர்க் கல்வி முதல் வகுப்புத் தமிழ்பாடநூல் பிற்போக்கான பல தடைகளைத் தாண்டி கொஞ்சம் முன்னேறியிருப்பதுமகிழ்ச்சியை தருகிறது.
சமச்சீர்க்கல்வி ஆறாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூல் உருவாக்கத்தில்பங்கேற்றவர்களுள் நானும் ஒருவன் ஆசிரியர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்கள்,சமூக சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினரும் பாடநூல் உருவாக்கத்தில்பங்கேற்றிருந்தார்கள். பாடநூல் இது முதல் அனுபவம்.ஆசிரியரின் பிடியைக் கொஞ்சம் தளர்த்தி மாணவரை நோக்கிப் பாடப்புத்தகத்தைநகர்த்துவது புத்தகத் தயாரிப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது. பாடப்பொருள், மொழி, இலக்கணம், திறன் என எல்லாமே வகுப்பறையில் ஆசிரியரின் இடம்குறைந்து மாணவரின் இடம் அதிகரிக்க வேண்டும் என்பது புத்தக தயாரிப்பில்உழைத்தவர்களின் விருப்பமாக இருந்தது.
புத்தக உருவாக்கம் கமுக்கமாக நடைபெறவில்லை. அது ஒரு திறந்த மேடையாகஇருந்தது. படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் ஒரு பொது அழைப்பு இருந்தது.பலரும் வந்து படித்துப் பார்த்துத் தட்டிக் கொடுத்துச் சென்றார்கள்ஆனால், ஒரு சில ஆசிரியர்களின் இருந்து மனத்தாங்கலான ஒரு கருத்து வந்தது.பாடப் புத்தகம் இத்தனை எளிமையாக இருந்தால் ஆசிரியர் எதற்கு? என்றுஅவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இன்று புத்தகம் முடிந்து வெளிவந்த பிறகுநோட்ஸ் போடும் நிறுவனத்தார் ஒருவர் என் வீடு தேடி வந்து கேட்டார். ``புத்தகம் இவ்வளவு எளிமையாக இருந்தால் எப்படி நோட்ஸ் போடுவது? இரண்டுகேள்விகளுக்கும் இடையே ஒரங்குல தூரமும் இல்லை.

சமீபத்தில் ஒரு நாளிதழில் ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் குறித்துமதிப்பிட்டிருந்தவர். நூல் மிக எளிமையாக இருக்கிறது எனக்குறைப்பட்டிருந்தார். `மலிவு விலையில் கூறு கட்டி விற்கப்படும்வாழைப்பழம்` என அவர் அங்கலாய்த்திருந்தார்.ஆசிரியரின் தேவையும்,இருந்தால்தான் அது கனமான - தரமான கல்வி என்பது இவர்கள் அபிப்பிராயம். தமிழ்நாட்டு வகுப்பறைகளில் மாணவரின் வாசிப்புத் திறன் பலவீனமாகஇருக்கிறது என்பதுவே, சில மாதங்களுக்கு முன் வெளியான `அஸர் அறிக்கை` யில்கிடைக்கும் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அறிவொளியின் போதும் இதே அனுபவம் தான். ஆறாம் வகுப்பில் படித்த மாணவனுக்கு அறிவொளிப் பாடத்தை வாசிப்பது சிரமமாக இருந்தது. அவன்தான் கிராமங்களில் எங்களுக்குக்கிடைத்த தொண்டன்! எளிமை என்பது எவருடைய தனிப்பட்ட விருப்பமும் அன்று, அது காந்தத்துண்டாய் ஈர்க்கப்படவும், இது அத்தியாவசியத் தேவை.

ஆறாம் வகுப்புப் பாடநூல் உருவாக்கத்தின் இறுதிக் கட்டத்தில் சிறுசிறுதடைகள் முளைக்க ஆரம்பித்தன. பிழைகளைத் திருத்த வந்தோர் திருத்தங்களைவலியச் செய்தனர். அகராதி அகரமுதலி ஆனது. பெரியார் ராமசாமி பெரியார்இராமசாமி ஆனார்.ர,ல , இரண்டையும் இன்று மொழி முதல் எழுத்துக்களாககொள்வதில் தடையே இல்லை என்று மொழியியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றனர்.பிழை திருத்துபவர்கள் நவீன உரையாடல்களைக் காதில்வாங்காதவர்கள்.!
மாணவர்களை வகுப்பறையில் பேசவைக்கும் நோக்கில் துணைப்பாடமாகவைக்கப்பட்டிருந்த நாட்டுப்புறக் கதைகள் ஒவ்வொன்றாய்ப்பறிபோயின.நாட்டுப்புறக் கதை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் இல்லையா?இல்லையாம்..! வடமொழி கலவாமல் பேசுவதும் எழுவதும் தான்தமிழ்ப்பண்பாடாம்..! கேலிக்கூத்து..!
வேரின் துடிப்பு`என்ற அற்புதமான நாட்டுப்புறக் கதையை நீக்கி விட்டுவிவேகானந்தரைப் பாடமாக வைத்தார்கள்..! பாடப்புத்தகம் இன்னும் கணமாகவேண்டும் என்பதற்காக 15 ஆக இருந்த திருக்குறள் பாடல்களை 20 ஆகஆக்கினார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலான, `நாட்டுப்புறம்` என்று வருகிற இடத்தில் எல்லாம்,நாட்டுப்புரம் எனத் திருத்தி, கடுமையான உழைத்து உருவாக்கப்பட்ட இப்பாடப்புத்தகத்துக்குத் தீராத களங்கத்தை உண்டு பண்ணினார்கள்.
இத்தனைக்குப் பிறகும் மாணவர்கள் விரும்பிக் கையிலெடுக்கும் விதத்தில் -ஆர்வமுடன் வாசிக்கும்படி - சமச்சீர்க்கல்வி ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடப் புத்தகம் வந்திருக்கிறது. தமிழ்ப்பாடப் புத்தகம் இவ்வளவு அழகானதோற்றத்துடன். இதுவரை வந்ததும் இல்லை. மாணவர்களை நோக்கிய அற்புதமான நகர்வு இது.
ஆனால், நகர்வு தொடருமா? தடுத்து நிறுத்தப்பட்டு,ஆசிரியர் கையிலேயேபுத்தகம் அடைக்கலம் ஆகுமா என்பதேல்லாம் அடுத்தடுத்த பாடப்புத்தகங்கள்வரும் போது தெரியும்..!
நன்றி: செம்மலர் ஜூலை இதழ்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 24, 2011 2:07 am

தமிழ் வாழ்க. அகங்காரத் தமிழ் 224747944



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 24, 2011 7:29 am

பகிர்வுக்கு நன்றி நண்பா!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 24, 2011 7:56 am

மகா பிரபு wrote:பகிர்வுக்கு நன்றி நண்பா!
அகங்காரத் தமிழ் 1194657695 பிரபு நீங்கள் ஆசிரியரா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 24, 2011 9:18 am

நான் M.Sc., M.Ed முடித்து இருக்கிறேன். தற்போது தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகள் பார்த்து வருகிறேன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 24, 2011 4:38 pm

அகங்காரத் தமிழ் 224747944
மகா பிரபு wrote:நான் M.Sc., M.Ed முடித்து இருக்கிறேன். தற்போது தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகள் பார்த்து வருகிறேன்.
அகங்காரத் தமிழ் 2825183110

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 24, 2011 8:15 pm

நீங்கள் ஆசிரியரா பாலா?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 25, 2011 9:01 am

மகா பிரபு wrote:நீங்கள் ஆசிரியரா பாலா?
ஆம் நண்பா! அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியர், M.A (Eng) M.A(tamil) M.A (yoga) B.Ed.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 9:23 am

மிக்க மகிழ்ச்சி. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக