புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
4 Posts - 14%
heezulia
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
2 Posts - 7%
Raji@123
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
6 Posts - 2%
prajai
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_m10மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 22, 2011 11:48 am

திராவிட இயக்கதின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர், நாத்திகச் செம்மல் பத்திரிக்கை ஜாம்பவான் எழுத்துலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த திரு.சின்னகுத்தூசி(எ) இரா.தியாரகராஜன் அவர்கள் 22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.

கடந்த ஓராண்டு காலமாக சென்னை பில்ராத் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். தன் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தபோதிலும் தன்னை சந்தித்திட வருகை தந்த பத்திரிகை நண்பர்கள், அரசியல் நண்பர்களிடம் நாட்டுநிலைமை, அரசியல் நிலைமை, பற்றியெல்லாம் மணிக்கணக்கில் அழுத்தம் திருத்தமாக விவாதித்து வந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

(முதல்வர்) கலைஞர் அவர்கள் தனது அரசாங்க நிகழ்வுகள், சட்டமன்ற நிகழ்வுகள், தேர்தல் நிகழ்வுகள் என்று பல்வேறு அயராதப் பணிகளுக்கு மத்தியிலும பில்ராத் மருத்துவமனைக்கு பலமுறை நேரில் வருகைதந்து திரு. குத்தூசி அவர்களுடன் கலந்துரையாடி அவரது உடல்நலனில் அக்கறை காட்டியதன் மூலம் அவர்கள் இருவரிடையே இருந்த நட்பு எத்தகைய வலிமை மிக்கது என்பதை உணரமுடியும்.

இதேபோல் (துணை முதல்வர்) மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று ஆட்சிப்பணி, கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையிலும் பல முறை நேரில் வருகைதந்து சின்னகுத்தூசியின் உடல்நலனை அக்கறையுடன் விசாரித்தார். அதுமட்டுமின்றி, அமைச்சர்கள், தி.மு.கழக முன்னணியினரிடம் குத்தூசியின் எழுத்துப்பணியை பாராட்டிப் புகழ்ந்து புளகாங்கிதம் கொள்வார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் தி.மு.கழக மத்திய-மாநில அமைச்சர்கள் கழக முன்னணியினர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வருகை தந்து சின்னக்குத்தூசியின் உடல் நலத்தில் அக்கறை காட்டினர்.

நக்கீரன் குடும்பத்தினர், சின்னகுத்தூசியைப் பிதாமகனாகப் தந்தெடுத்துக்கொண்டதுடன், திரு.நக்கீரன் கோபால் அவர்கள் இரவு பகல் பார்க்காமல் கண்துஞ்சாமல்-ஒரு தந்தைககு மகன் என்னென்ன கடமைகளைச் செய்வாரோ அத்தனை கடமைகளையும் கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததோடு, கடந்த ஓராண்டு காலம் பில்ராத் மருத்துவமனையில் அரண்மனை வைத்தியத்தை திரு.சின்னகுத்தூசிக்கு வழங்கினார்.

மறைந்த திரு.சின்னக்குத்தூசியின் உடல் இராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கழகத் தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து மலரஞ்சலி செலுத்திய வண்ணமுள்ளனர்.

இன்று (மே 22) மாலை 4 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அன்னாரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

சின்னகுத்தூசியின் வாழ்க்கை நிகழ்வுகள் வருமாறு:

சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.

பள்ளிப்படிப்பு முடிந்தபின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னக்குத்தூரி (எ) இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன்பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.

குன்றக்குடியில் பணியாற்றியகாலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று சிறை சென்றார்.

திருவாரூரிலிருந்து வெளியான மாதவி வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.

நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்றுவருகின்றன.

இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய பிரசண்ட விகடன் இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

சின்னக்குத்தூசி என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம் மிக்கவர். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றிற்றகாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.

நக்கீரன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 22, 2011 11:54 am

அன்னாரது ஆத்ம சாந்தி அடைய வேண்டுகின்றேன்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 22, 2011 12:06 pm

பத்திரிகை உலகத்தில் சின்னக் குத்தூசி ஒரு ஜாம்பவான். இவரது எழுத்துக்கள் உயிருள்ளவை காலங்கள் கடந்து வாசித்தாலும் கடந்த காலத்தின் நிகழ்வுகளின் கண்ணாடியாக வாழ்ந்த இவர், மறைந்தாலும் இவரது இடம் வேறு யாராலும் நிரப்பப் பட முடியாத ஒன்று...
இவர் மறைந்தாலும் இவர் புகழ் நிலைத்திருக்கும்....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Aமூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Bமூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Dமூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Uமூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Lமூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Lமூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் Aமூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 12:29 pm

அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி காலமானார் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக