புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_m10ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. டீச்சர்...-- கட்டாயம் படிங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 12:09 pm

கோட்டையில் கோச்சிங் கிளாஸ்!









ந்த முறை அம்மா நிச்சயம் நல்லாட்சி புரிவார்... அறிவித்த வாக்குறுதிகளை சீக்கிரமே நிறைவேற்றுவார்! - மக்களின் நம்பிக்கைக்கு, முதல் ஏழு நலத் திட்டங்களுக்குக் கையெழுத்திட்டு, நம்பகம் வார்த்​திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதிகாரிகள் பந்தாட்டத்தில் வழக்கமான அதிரடிகளைத் தொடங்கினாலும், ஆட்சி நிர்வாகத்திலும் முக்கிய​மான மாற்றத்தைக் கொண்டுவரும் துடிப்பு ஜெய​லலிதாவிடம் இருப்பது தெரிகிறது. அதற்கான உதாரணம்தான்... மூன்று நாட்களாக கோட்டையில் அமைச்சர்களுக்கு அவர் பாடம் எடுத்த விதம்!
வழக்கமான அமைச்சரவைக் கூட்டத்தைப்போல், 'பேசினோம்... கலைந்தோம்!’ என அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தாமல், ஓர் தலைமை ஆசிரியைபோல, அக்கறையோடு அவர் அமைச்சர்களுக்கான வழி​முறைகளைச் சொன்னது இதுவரை அ.தி.மு.க-வினரே பார்த்திராத அதிசயம்!
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  P4அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதான யோசனைகளை முன்வைத்துப் பேசி​யவர்...முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ். ஆஸ்திரேலியப் பயணத்துக்கான வேலைகளில் தீவிரமாக இருந்த பொன்ராஜை, அமைச்சர்களுக்காக நேரம் ஒதுக்கச் சொல்லி கேட்டார் முதல்வர் ஜெய​லலிதா.
அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய ஜெயலலிதா, முதலில் பொன்ராஜை அறிமுகப்படுத்தினார். ''மக்கள் நம் மீது மிகுந்த நம்பிக்கைவைத்து இந்த அளப்​பறிய வெற்றியைக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்​களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அமைச்சரவையில் புதுமுகங்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும் என நம்பி உயரிய பொறுப்புகளை ஒப்படைத்​திருக்கும் நான், அதற்கான வழிகாட்டல்களைச் சொல்லிக்கொடுக்கவும் கடமைப்பட்டு இருக்கி​றேன். உடனடி வேலைகளாக நாம் பின்பற்ற வேண்டியது குறித்து, இப்போது உங்களுக்கு விளக்கிச் சொல்வார்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், தாராளமாக அவர்களிடம் விளக்கம் கேளுங்கள்!'' எனச் சொல்ல, மந்திரிகள் நிசப்த அமைதி​யில் கவனிக்கத் தொடங்கினர்.
மேற்கொண்டு உள்ளே நடந்தவை குறித்து அமைச்​சர்கள் சிலரிடம் பேசினோம். ''அப்துல் கலாமின் ஆலோசனைகளை அம்மா மிகவும் நம்புகிறார். தமிழகத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்த கலாமின் வழிகாட்டுதல்படி செயல்பட அம்மா முடிவு எடுத்துவிட்டார். கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் எல்லோருக்கும் எளிதாகப் புரியும்விதமாகப் பேசினார். முதல் நாள் மூன்று மணி நேரம் பேசியவர், ஒன்றரை மணி நேரம் விவசாயம் குறித்தே பேசினார். '58 சதவிகித மக்கள், விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். ஆனால், தமிழகத்துக்குக் கிடைக்கும் வருமானத்தில் விவசாயத்தின் மூலம் கிடைப்பது, வெறும் 2 சதவிகிதம்தான். குஜராத் மாநில வருமானத்தில், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் லாபம் 9 சதவிகிதம். உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்குவது, இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலமாக விவசாயிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை உண்டாக்க முடியும். இரண்டாவது, விவசாயப் புரட்சித் திட்டத்தை அமலாக்கினால், விவசாயிகளின் வாழ்வையும், உற்பத்தி​யையும் ஒருசேர முன்னேற்ற முடியும்!’ என பொன்ராஜ் சொல்ல, அதை சாத்தியமாக்கும் விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் பலரும் கேள்விகள் எழுப்பினார்கள். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'விவசாயிகளோடு அதிகாரிகளும் இணைந்தால், இதனை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரலாம்!’ எனச் சொல்ல, 'அதிகாரிகள் மட்டும் அல்ல, அமைச்சர்களும் விவசாயி​களோடு இணைந்து இந்தப் புரட்சியை நடத்த வேண்டும்!’ என்றார் முதல்வர். கிராமங்களில் குளம், குட்டைகள் மறைந்துவிட்டதால், நீர் ஆதாரங்களுக்கு வழி இல்லாத நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களை ஒருங்கிணைத்து நீர் ஆதாரங்களுக்கான இடங்களைத் தயார் செய்யும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. விவசாயப் பண்ணைகளை அமைப்பதன் மூலமாக, மிகுதியான உற்பத்தியை சாத்தியப்படுத்தவும், விளை பொருட்கள் சார்ந்த தயாரிப்புகளை மிகுதியாக்கவும், நிறைய ஐடியாக்கள் விவாதிக்கப்பட்டன. கரும்பு விவசாயிகளின் தத்தளிப்பு குறித்தும், கொள்முதல் விலையை அதிகமாக்குவது குறித்தும் அக்கறையோடு பேசினார் பொன்ராஜ். 'இந்த ஆட்சியின் முதல் திட்டம் விவசாயத்தை மேம்படுத்துவதுதான்’ என்றார் முதல்வர் தீர்க்கமாக!

ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  P5
'நீர் மூலமாகத்தான் நிறைய வியாதிகள் உற்பத்தி ஆகின்றன. நீரைச் சுத்திகரித்து வழங்குவதன் மூலம், சுகாதாரச் சீர்கேடுகளை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்’ என பொன்ராஜ் சொல்ல, தேர்தல் வாக்குறுதி​களில் சொல்லப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் திட்டத்தை நினைவூட்டினார் முதல்வர். ஏழை மக்களுக்கு இலவசமாகவும், நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த விலையிலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது!'' என உள்ளே நடந்த கலந்தாய்வு குறித்து ஆர்வத்தோடு சொன்னவர்கள், மின் வெட்டு சம்பந்தமான ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.

ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  P5a
''இன்றைக்கு தமிழக மக்களைப் பெரிதாகப் பாதிப்​பது பவர் கட் பிரச்னைதான். அதனால், அதிகபட்சம் மூன்றே மாதங்களில் பவர் கட் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும் என முதல்வர் கறாராகச் சொன்​னார். 'தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய, 10,200 மெகா வாட் மின்சாரம் தேவை. ஆனால், நம் வசம் இருப்பது 7,200 மெகா வாட் மின்சாரமே. அதனால், மின் உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்களை உடனடி​யாக வகுக்க வேண்டும். நீண்ட காலத் திட்டமான சோலார் எனர்ஜி பார்க் திட்டத்தின் மூலம், 3000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஏழை மக்களின் வீடுகளுக்குத் தரப்படும் இலவச மின்சாரம், உரிய திட்டமிடலோ, கண்காணிப்போ இல்லாமல் தரப்படுகிறது. அதில் ஏற்படும் மின் விரயத்தைத் தடுக்க, சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைப் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும். ஒருமுறை செலவிடுவதன் மூலமாக, பல வருட மின் சிக்கனத்தை உருவாக்க முடியும்!’ என்றார் பொன்ராஜ்.
'இதற்கெல்லாம் பணம் ஏது?’ எனக் கேள்வி எழ, மத்திய அரசின் மானிய உதவிகள் குறித்து எடுத்துச் ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  P6சொன்னார் பொன்ராஜ். மின்சாரப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்களை மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடகட வேகத்தில் எடுத்துவைக்க, முதல்வரே அசந்துபோனார். புதுமுகமும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, அனைத்து விவாதங்களிலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டார். சிறப்புத் திட்டங்களுக்காகவே நியமிக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் வேலுமணி எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொண்டார். பாதிக்கும் மேலான அமைச்சர்கள் பொன்ராஜிடம் தங்கள் துறை சார்ந்த கேள்விகளைக் கேட்டார்கள். நிறைய கேள்விகளைக் கேட்ட நத்தம் விசுவநாதன், 'நிச்சயம் மூன்றே மாதங்களில் மின் தட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும்!’ என உறுதியாகச் சொன்னார். இதில் முதல்வருக்கு ஏக பூரிப்பு!'' என்கிறார்கள் 'பயிற்சிப் பட்டறை’ விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டவர்கள்.
மீன் பிடித்தல், சட்டம் ஒழுங்கு, நதி நீர் இணைப்பு என்றெல்லாம் மூன்று நாட்களுக்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிரடியான பல முடிவுகள் எடுக்கப்பட்டன. கல்வி மேம்பாடு குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், புத்தகச் சுமையைக் குறைக்கும் அட்டகாசமான முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இனி மூன்று மாதங்களுக்கு ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்றால் போதுமாம். அந்த புத்தகத்திலேயே மூன்று மாதங்களுக்குத் தேவையான அனைத்துப் பாடங்களும் இருக்கும் வகையில் உருவாக்கப்போகிறார்களாம். கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், சமச்சீர் கல்வி, கல்விக் கட்டணம் குறித்து ஆக்கப்பூர்வ முடிவுகளை எடுப்பதாகச் சொல்ல... ''நான் விசாரித்த வரையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதியே இல்லை. பெண்கள் பயிலும் பள்ளிகளில்கூட கழிப்பிட வசதி இல்லாதது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. அதனால், கல்வி விஷயத்தில் நாம் முதலில் சரிசெய்ய வேண்டியது கழிவறைகளைத்தான்!'' என்றாராம் முதல்வர் ஜெயலலிதா.
அடிப்படை விஷயங்களில் ஜெயலலிதா அக்கறையோடு இருப்பது நல்ல விஷயம். இது தொடர வேண்டும்!

ஜி.வி.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 21, 2011 12:12 pm

நல்ல விஷயம். இது தொடர வேண்டும்!
மகிழ்ச்சி



ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Pஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Oஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Sஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Iஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Tஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Iஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Vஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Eஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Emptyஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Kஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Aஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Rஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Tஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Hஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Iஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  Cஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 12:12 pm

நல்ல விஷயம். இது தொடர வேண்டும்!
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  224747944 ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 12:15 pm

ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு
போக போக பார்ப்போம்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat May 21, 2011 12:41 pm

நல்ல விஷயம். இது தொடர வேண்டும்!
ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  806360 ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  942

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 21, 2011 12:56 pm

பாடம் நடத்தி முடிச்சுட்டு ஒரு EXAM வைங்க. பெயிலான அமைச்சர்களை அமைச்சரவையை விட்டு தூக்கிடுங்க.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 1:03 pm

மகா பிரபு wrote:பாடம் நடத்தி முடிச்சுட்டு ஒரு EXAM வைங்க. பெயிலான அமைச்சர்களை அமைச்சரவையை விட்டு தூக்கிடுங்க.

ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 1:04 pm

ஜெ‌ஜெ விடம் ஒரு அரசிய முதிர்ச்சி தெரிகிறது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sat May 21, 2011 1:06 pm

இதைதான் நாங்களும் எதிர் பார்க்கிறோம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 1:09 pm

ஜெ. டீச்சர்...--  கட்டாயம் படிங்க  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக