புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_m10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_m10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_m10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10 
52 Posts - 59%
heezulia
இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_m10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_m10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_m10இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 19, 2011 10:18 am


'இனி எல்லாம் ஜெயமே!’- வெள்ளிக் கிழமை காலையில் ஜெயலலிதா கேட்ட முதல் வாசகமே இதுதான்!

'சிம்ம ராசி நேயர்களே! மக நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் இன்று நினைத்தது நடக்கும். காரியங்கள் கைகூடும்’ என்று சன் டி.வி-யில் வாசித்த பெண், ஜெயலலிதாவுக்காகவே தேர்ந்தெடுத்துச் சொன்னது மாதிரி இருந்தது அன்றைய ராசி பலன். அடுத்த மூன்று மணி நேரத்தில் வேதா நிலையத்தின் பால்கனிக்கு கை காட்ட வந்துவிட்டார் ஜெயலலிதா.

அவரை அரசியல் தலைவியாக அங்கீகரித்த இடம் அந்த பால்கனிதான். 'பால் கனிப் பாவை’ என்று இதை வைத்துத்தான் அவரது அரசியல் எதிரிகள் கிண்டல் அடித்தார்கள். அரசியலில் அத்தனை அவமானங்களையும் புறம் தள்ளி, மூன்றாவது முறையாக அரியணையில் அமர்ந்துள்ளார் ஜெ.

புத்தம் புது சட்டசபையை கருணாநிதி கட்டிவைத்து இருக்க, அதைப் புறக்கணித்துவிட்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!

தேர்தல் முடிவு வெளியான நிமிடம் முதல் ஜெயலலிதாவின் பதவியேற்பு வைபவம் வரையிலான ரிலே ரேஸ் கவரேஜ் இங்கே...

போயஸ் கார்டன்!

வாக்கு எண்ணிக்கை துவங்கிய முதல் ஒரு மணி நேரம் வரை போயஸ் கார்டனில் அமைதி. முன்னணி நிலவரம் எகிறத் துவங்கிய சமயம், உற்சாக முகத்துடன் ஜெயலலிதாவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) திருமலைசாமி வெளியே வந்து நின்றார். தொடர்ந்து வீட்டுக்குள் இருந்தே பட்டாசுப் பெட்டிகள் அணி வகுத்து வந்தன. போயஸ் கார்டனில் முந்தைய நாளே வாங்கிவைக்கப்பட்டு இருந்தது பட்டாசு.

பெரும்பான்மைத் தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியாக, 'ஆட்சி உறுதி’ என்று தெரிந்ததும், போயஸ் கார்டனின் இரும்புக் கதவு திறந்து தொண்டர்களுக்கு வழிவிட்டது. இப்படி இதற்கு முன் தொண்டர்களை உள்ளே அனுமதித்ததே இல்லை. தொடர்ந்து தொண்டர்களுக்கு பால்கனி தரிசனம் கொடுத்தார் ஜெயலலிதா. 1989-க்குப் பிறகு இப்போதுதான் பால்கனியில் நின்று போஸ் கொடுத்து இருக்கிறார் ஜெயலலிதா!

தலைவர்களுக்கு மரியாதை!

மறு நாள் லாயிட்ஸ் சாலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வெயில் தணிந்த நேரத்தில் வந்தார். உடல் எடை காரணமாக, சிறிது நாட்களாக நடப்பதற்கே சிரமப்படுகிறார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் உயரம் குறைந்த படிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

தொடர்ந்து, அண்ணா சாலை எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அருகே இருக்கும் அண்ணா சிலைக்கு மலர் தூவினார். அப்போது மறந்தும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தின் மீது அவர் பார்வை திரும்பவில்லை. அப்படியே, அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதி களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். பெரியார் சிலைக்கும் மாலை போட்டார். இந்த மரியாதை நடைமுறையில் ஒன்று மட்டும் மிஸ்ஸிங். கடந்த முறை பெரியார் திடல் பெரியார் சமாதிக்குச் சென்ற ஜெயலலிதா, இந்த முறை வீரமணி மீதான கோபத்தில் பெரியா ரையும் புறக்கணித்தார்!

கவர்னர் மாளிகை!

முதல்வராக ஒரு மனதாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கார்டனுக்கு ஓ.பன்னீர் செல்வமும் செங்கோட்டையனும் எடுத்துச் சென்றார்கள். கொஞ்ச நேரத்திலேயே கவர்னர் பர்னாலாவைச் சந்திக்க காரில் கிளம்பினார் ஜெயலலிதா. கவர்னருக்குப் பூங்கொத்து கொடுத்தார். கவர்னரும் அவருடைய உறவினர்களும் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துகள் வழங்கினார்கள். விழாக்களில் கலந்துகொள்ளும்போது ஜெயலலிதாவுக்குத் தனியாகப் பெரிய நாற்காலியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். கவர்னர் மாளிகைக்கு ஜெயலலிதா வந்தபோது, அங்கே இருந்த சின்ன நாற்காலியில் கொஞ்சம் சிரமப்பட்டு தான் அமர்ந்தார்.

ஆறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பர்னாலாவைச் சந்தித்தார். சில நிமிடங்களி லேயே இந்த சந்திப்பு முடிந்து, ஜெயலலிதா உடனே கிளம்பினார். கவர்னரின் செயலாளர் தயங்கியபடி, ''புரோட்டோகால்படி கவர்னர் எழுந்து நின்ற பிறகுதான் நீங்கள் எழுந்து செல்ல வேண்டும். இது மரபு'' என்று சொல்ல... உடனே மீண்டும் பர்னாலா அருகில் போய் அமர்ந்தார் ஜெயலிதா. பர்னாலா எழுந்து உள்ளே சென்ற பிறகு, ஜெயலலிதா கிளம்பினார்.

பதவியேற்பு வைபவங்கள்!



மேடையில் அமைச்சர்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான நாற்காலிகள் போட, ஜெயலலிதாவுக்கு மட்டும் ஸ்பெஷல் குஷன் நாற்காலி. விழா தொடங்குவதற்கு முன்பு கீழே முன் வரிசையில் அமைச்சர்களாக பதவியேற்க வந்தவர்கள் அமர்ந்து இருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பு எல்லோரும் மேடை ஏறினார்கள். அவர்களிடம் ''யாரும் அம்மா வின் காலில் விழக் கூடாது'' என்று கிளாஸ் எடுத்துக்கொண்டு இருந்தார் ஓ.பி.

போலீஸ் அதிகாரிகள் எல்லாம் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டார்கள். முன்னாள் போலீஸ் அதிகாரி தேவாரம் மட்டும் கோட் சூட்டில் முன் வரிசையில் இருந்தார். தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சி.பி.ஐ. அகில இந்தியச் செயலாளர் பரதன், குஜராத் முதல்வர் மோடி, அஜித் சிங் என்று தமிழகத்தைத் தாண்டிய பிரபலங்களும் வந்திருந்தார்கள். மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா போனதால், ஜெயலலிதாவுக்காக மோடி வந்திருந்தார். ஆனாலும், மோடி வருகைக்கு இன்னொரு காரணம் சொல்கிறார்கள். தமிழகத்தில் மின் வெட்டுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, குஜராத்தில் உபரியாகக் கிடைக்கும் மின்சாரத்தை வாங்க ஜெயலலிதா நினைக்கிறாராம். ஜெயலலிதா, விஜயகாந்த்துக்கு அடுத்து கைதட்டல்களை அள்ளியவர் மோடிதான்.

அரங்கத்தில் இருந்த நாற்காலிகளில் நம்பர்கள் எழுதி ஒட்டி இருந்தார்கள். முன் வரிசையில் நம்பர் 1 என்று எழுதப்பட்ட இருக்கையில் சசிகலா அமர்ந்தார். அவர் வருவதற்கு முன்பு, அந்த இருக்கையில் சோ உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு அவர் மூன்றாவது எண்ணுக்கு மாறினார். சசிகலா வுக்கும் சோவுக்கும் இடையே இருந்த இரண்டாவது எண் இருக்கை காலியாகவே இருந்தது. அந்த இருக்கையில் சசிகலாவும் சோவும் கைகளை ஊன்றியபடி கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த இரண்டாவது எண் இருக்கை, விஜயகாந்த்துக்கு என்று பேச்சுகள் கிளம்பின. விஜயகாந்த் வந்தபோது,மோடி, நாயுடு, பரதன் ஆகியோரிடம் கை குலுக்கிவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்து விட்டார். இரண்டாவது எண் இருக்கையில் கடைசியில் சுலோச்சனா சம்பத்தான் அமர்ந்தார்.

சோவும் சசிகலாவும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். ''இந்த ஆட்சியை உருவாக்கினவங் களே இவங்க ரெண்டு பேர் தான்'' என்று ஒருவர் கமென்ட் அடித்தார்.



'விஜயகாந்த்தை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவந்தால்தான் வெற்றி சாத்தியம்’ என்று சொல்லி, ஜெயலலிதாவைச் சம்மதிக்கவைத்தவர் சோ. அதைப் பக்குவமாகப் பல முறை புரியவைத்தவர் சசிகலா. இதனால் கருணாநிதியால் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் சோ. ''வெற்றிச் சூத்திரத்தை சோவும், கட்சியின் வேட்பாளர் தேர்வை சசிகலாவும் செய்து கொடுத்து, ஜெயலலிதாவை வெற்றி மனுஷியாக மாற்றினார்கள்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

ஜெயலலிதா காதில் புது கம்மல்!

பதவியேற்புக்காகப் புத்தம் புதுப் புடவையில் வந்திருந்தார் ஜெயலலிதா. அவருடைய தலை முடியின் முன் பகுதி கொஞ்சம் நரைத்து இருக்கும். ஆனால், பதவியேற்புக்காக டை அடித்து ஃப்ரெஷ் லுக்கில் வந்தார். இன்னொரு பெரிய மாற்றம்... ஜெ காதில் மின்னிய கம்மல். 1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு நகை அணிவதையே நிறுத்தி இருந்தார் ஜெயலலிதா. அதன் பிறகு, இன்றைக்குத்தான் ரொம்பவும் சிறிய சைஸில் கல் வைத்த கம்மல் அவருடைய காதில் டாலடித்தது.

அவரது முகம் அதைவிட டாலடித்தது!



நன்றி விகடன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 10:41 am

என்ன ஒரு புள்ளிவிவரம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 19, 2011 10:47 am

ஏற்கனவே இந்த இரண்டு தலைகளால் ஆட்சியை இழந்தவர் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 12:06 pm

எப்படியோ நல்லாட்சி அமைத்தால் நல்லது தான்..

சிம்மராசிக்காரர்களுக்கு ஜே ஜே..... இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக