புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
61 Posts - 46%
heezulia
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_m10ஒளிமயமான எதிர்காலம்...!  ஜெம் ஆர். வீரமணி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிமயமான எதிர்காலம்...! ஜெம் ஆர். வீரமணி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 18, 2011 7:53 am

அமையவிருக்கும் புதிய அரசிடமிருந்து மக்களுக்கு எத்தனை எத்தனையோ விருப்பங்கள், எதிர்பார்ப்புகள். தேர்தல் நேரத்தில் எவ்வளவோ வாக்குறுதிகள், இலவச அறிவிப்புகள் இருந்திருக்கலாம். ஆனால், திட்டவட்டமான அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் அவை மட்டும்தான் என்று யாரும் உறுதியாக முடிவெடுத்துவிட முடியாது.
தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்குமேயானால் இந்தியா எப்போதோ உலக வல்லரசாகி இருக்கும். சேது சமுத்திரத் திட்டம், காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்றவை கடந்த பல தேர்தல் அறிக்கைகளில் எல்லா கட்சியினராலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டவைதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அவசியமான திட்டங்களை அவசரமாக நிறைவேற்றி அதன்மூலம் மக்களின் உடனடித் தேவைகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பதவி ஏற்க இருக்கிறது.
இன்றைய நிலையில் மக்களை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எங்கும் எதிலும் ஊழல் என்கிற வெளிப்படைத்தன்மை இல்லாத நிர்வாகம் போன்றவைதான். இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் நாளும் பொழுதும் அதிகரித்துவரும் நிலையில் அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு நிர்வாகம் செயல்படாவிட்டால், வருங்காலம் விபரீதமாகிவிடக் கூடும்.
இன்றைய படித்த இளம் தலைமுறையினர் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான செய்திகளை, நாட்டு நடப்புகளை, ஊடகச் செய்திகளை, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்கம் இயங்கும் முறைகளை, இணையதளங்களிலும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் பரிமாறிக் கொள்கிறார்கள். அதில் கிண்டலும் கேலியும் கலந்து, அரசியல் கட்சிகள் சிந்திக்க முடியாத அளவு, ஆழ்ந்த கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அவர்களின் மன உணர்வுகளைப் புரிந்து எல்லோரும் பாராட்டும் ஒரு நிர்வாகம் நடைபெற வேண்டும்.
ஒரு கழுகுப் பார்வையாகப் பார்த்தால், மின்சார உற்பத்தி, விவசாய உற்பத்தியில் உயர்வு, உணவுப் பொருள் விலைக் கட்டுப்பாடு, அடிப்படைக் கட்டமைப்புகள் என எல்லா தளங்களிலும் விரைவில் முன்னேற்றம் கண்டாக வேண்டும். எதிலும் வீண் காலதாமதமும் பண விரயமும் இருக்கவே கூடாது. கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பும், எதிர்பாராத அளவுக்கு இளைஞர்கள், குறிப்பாகப் படித்த கிராமப்புற இளைஞர்கள் கலந்துகொண்டதிலிருந்து, அவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை நாம் புறந்தள்ளிவிட முடியாது என்பதை வலியுறுத்துகிறது.
மனிதவள மேம்பாட்டில் சாதாரண படித்த, படிக்காத எல்லோருடைய திறமையும் உயர்த்தப்பட வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகச் சுலபமாக வேலைவாய்ப்புகள் கிடைக்கத் தேவையான வகையில் தமிழ்நாட்டில் உலக மொழிகளில் அவர்கள் பயிற்சிபெற வழிகோலும் பள்ளிகள், கல்லுரிகள், மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இங்கிருந்து தேர்ச்சிபெறும் மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதும், அப்படியே கிடைத்தாலும் அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்திருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். கல்லூரிகள் அதிகரித்திருக்கும் அளவுக்குக் கல்வியின் தரமும் அதிகரித்திருக்கிறதா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
பல லட்சங்களைக் கொடுத்துப் படித்துவிட்டுத் தரமான கல்வி போதிக்கப்படாததால் சர்வதேச அரங்கிலும், அகில இந்திய அளவிலும் போட்டிபோட இயலாமல் சம்பந்தாசம்பந்தமில்லாத ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள நேரும் இளைஞர்களின் மன அழுத்தம் மிகவும் ஆபத்தானது. சர்வதேச அளவில் திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புக்கேற்ற படிப்பு இருந்தும் நமது கல்வியின் தரம் குறைந்ததாக இருப்பதால் தனக்கு வாய்ப்பு கை நழுவும்போதுதான் இளைஞர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டு நிற்பதை உணர்கிறார்கள். நிலைமை விபரீதமாவதற்குள், தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை அண்மைக்காலத்தில் எல்லா மட்டத்திலும் அதிகமாகிக் கொண்டே போவதை யாரும் மறுக்க முடியாது. அதற்கெல்லாம் அடிப்படைக் காரணமே மின்சாரப் பயன்பாடு பலவகையிலும் அதிகரித்திருப்பதுதான். சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம், தொழில் வளர்ச்சி போன்றவைகளால் உண்டாகும் அதிக அளவிலான மின்சாரத் தேவைதான் இவ்வகைத் தட்டுப்பாட்டின் மூலகாரணம் ஆகும்.
தேவைக்கேற்ப மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பதுதான் மூலகாரணம். பல புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தமிழ்நாடெங்கும் பரவலாகத் திட்டமிடப்பட்டு உருவாகி வருகின்றன. சில மாதங்களில் அல்லது சில ஆண்டுகளில் அவை செயல்படக்கூடும். ஆயினும், மின்தட்டுப்பாடே இல்லை என்கிற நிலை வரவேண்டுமானால், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி கணிசமாகவும் உடனடியாகவும் அதிகரிக்கப்பட்டாக வேண்டும். மின்சாரப் பயன்பாடு ஏழை எளிய விவசாயப் பெருங்குடி மக்களுக்குப் பயன்பட வேண்டுமானால், அதற்கேற்றபடி மின் உற்பத்தியும் இருந்தாக வேண்டும். மின்சாரத்தின் விலையையும் குறைக்க வேண்டும். மின்சாரத் திருட்டு, மின்சார டிரான்ஸ்மிஷன் மூலம் ஏற்படும் இழப்பு, ஆகியவைகளை நவீன விஞ்ஞான முறைகளின்படி குறைக்க வேண்டும்.
சூரிய மின் உற்பத்தியால் மட்டும்தான் ஏறத்தாழ ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் பெரிய அளவில் மின் உற்பத்தியைப் பெருக்க முடியும். மற்றவகை மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்பட்டு பயன்தரக் குறைந்தது மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகிவிடும். ஆகையால், இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயத்துக்குத் தேவையான மின் உற்பத்தியை ஈடு செய்யலாம்.
சூரிய மின்சாரத்தின் மூலம் அதிகபட்சம் ஆறு மணி நேரத்துக்கு மின்சாரம் பெற இயலும். அதற்கேற்றபடி திட்டமிட்டு, தேவையான மின்சாரத்தைப் பேட்டரி மூலம் சேமிப்பதால் தேவையான மின்சாரத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இது ஒரு பசுமை மின்சக்தி என்பதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
இப்போது இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் சில ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாகிறது. சில ஆண்டுகளின் மொத்தப் பணச் செலவை ஒரே முறையாக உலக வங்கி அல்லது அரசின் திட்டத்திலிருந்து பணத்தை ஒதுக்கிவிட முடியும். 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வேண்டுமானால் சுமார் ரூ.25,000 கோடி முதல் 26,000 கோடிவரை முதலீடு தேவைப்படும். ஆனால், அந்த முதலீடு மிகப்பெரிய அளவில் நமது மின்தேவையைப் பூர்த்தி செய்வதுடன், நீண்டகாலம் பயனளிக்கும் திட்டமாகவும் அமையும்.
அதேபோல புதிய கட்டடங்கள் அனைத்திலும் கண்டிப்பாக சூரிய மின் உற்பத்தியை உருவாக்க கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் திட்டமிட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தங்களுக்குத் தேவையான மின்சாரம் போக மீதமிருந்தால்
எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் டர்ஜ்ங்ழ் எழ்ண்க்-க்கு விற்பதன் மூலம் நீண்ட காலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் ஏற்படும். இருக்கும் சலுகைத் திட்டத்துக்கு மேல் தேவையான சில புதிய திட்டங்களை உருவாக்கி சூரிய மின் உற்பத்தியைப் பெருக்க மக்கள் குறைந்த வட்டியில் கடன்பெறும் வசதிகளைச் செய்ய வேண்டும். அரசு மானியமும் வழங்கலாம்.
இந்தச் சூரிய மின் தகடு தொழில் நுட்பத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் மின் உற்பத்தி செய்யக்கூடியது. மற்றொன்று, "சோலார் தெர்மல் எலெக்ட்ரிக் சிஸ்டம்' என்ற அடிப்படையில் பதினைந்து முதல் பதினாறு மணி நேரம் வரை மின் உற்பத்தி செய்யும் திட்டம். அதையும் நாம் பயன்படுத்த வேண்டும்.
இதனால் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்று யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை. நாட்டு மக்களின் மின் தேவை பூர்த்தியாகி அவரவர் தம்முடைய தொழிலில் மின் தட்டுப்பாடின்றி உழைக்கவும், பலவகை உற்பத்திகளைப் பெருக்கவும் உதவுவதால், அரசுக்கு வருமானம் பெருகுமே தவிர, எந்த வகையிலும் குறையும் என்று அஞ்சத் தேவையே இல்லை. இதுதவிர, எல்.சி.டி. (கஇஈ) மின்சார பல்புகளைப் பயன்படுத்தினால், அறுபது சதவிகிதம் மின்சாரம் மிச்சமாகும்.
மக்களை மிக அதிகமாகப் பாதிப்பதும், எரிச்சலூட்டுவதும், எந்த அரசு அலுவலாக இருந்தாலும் கையூட்டு இல்லாமல் வேலை நடக்காது என்கிற போக்குதான். சின்னச்சின்ன, நியாயமான கோரிக்கைகளுக்கும், உரிமைகளுக்கும்கூடக் கையூட்டு வழங்கித்தான் காரியம் நடக்கும் என்பதை இன்றைய படித்த விவரம் தெரிந்த இளைய தலைமுறையினர் வெறுக்கிறார்கள். அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
சாதாரண மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் அல்லது அரசு ரேஷன் கார்டு, பட்டா மாற்றம், மற்ற ஏதாவது அரசுத் துறையில் தேவையானவைகளை, சாதாரண ஒரு தபால் கார்டில் கடிதம் வாயிலாக அனுப்பினாலும் அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்தாலும், தேவையான கட்டணத்தைப் பெற்று அரசே தாமதமின்றி முடித்துத் தர வேண்டும். இதுதவிர - ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, வாகனத் தரச் சான்று போன்றவற்றுக்கு லஞ்சம் என்பது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். இதைச் செய்தாலே போதும் அந்த அரசும், ஆட்சியும் பொற்கால ஆட்சி என்று மக்களால் போற்றப்படும்.
தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இரண்டு முக்கியமான விஷயங்கள், கட்டுப்பாடற்ற மின்சாரமும், கையூட்டு இல்லாத நிர்வாகமும்தான். மக்கள் மன்றம் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் அடுத்த அரசிடம் நாம் எதிர்பார்ப்பது ஊழலற்ற ஆட்சி, தங்கு தடையில்லாத மின்சாரம், தெளிவான, தரமான கல்விக்கொள்கை, விவசாயத்துக்கு முன்னுரிமை ஆகியவைதான்.
நன்றி தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக