புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
77 Posts - 43%
heezulia
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
10 Posts - 6%
prajai
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
Raji@123
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
mruthun
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
21 Posts - 4%
prajai
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_m10உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 09, 2008 1:33 pm

கண் தானம் மற்றும் சிறுநீரக தானங்களைத் தொடர்ந்து, இதய தானம் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இறந்தும் உயிர் வாழும் இதயேந்திரன் (15) என்ற, டாக்டர் தம்பதியரின் மகன். விபத்தில் சிக்கி மூளைச்சாவு (பிரெய்ன் டெட்) அடைந்த இச்சிறுவனின் இதயம், சிறுமிக்கு பொருத்தப் பட்டது. இதய தானம் பிரபலமாகிவரும் நிலையில், கிட்னி தானம் போல் இதையும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக பரபரப்பு எழுந்துள் ளது. ஒருவர் கோமா நிலையில் இருக்கும்போதே பணத்திற்காக, இறந்ததாகக் கூறி அவரின் இதயத்தை வசதி படைத்தவர்களுக்கு விற்கும் வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இது நடக்குமானால், மக்கள் மத்தியில் உருவான உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு குறையும் வாய்ப்புள்ளது. இதயதானம் செய்ய பின்பற்றப்படுகின்ற கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தாலே, இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்படும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 09, 2008 1:33 pm

மூளைச்சாவு உறுதி செய்வது எப்படி?

விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த நிலையில் ஒருவர் உடல் செயலற்றுப்போவதை, டாக்டர்கள் "கோமா' என்கின்றனர். தன்னிலைக்கு மீண்டுவரக்கூடிய நிலை மற்றும் மீண்டுவர முடியாத நிலை என்று "கோமா' இரு வகையாக பிரிக்கப்படுகிறது. மீண்டு வர முடியாத நிலை தான் மூளைச்சாவு எனப்படுகிறது. மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் துடிக்கின்றபோதும் அவரால் சொந்தமாக மூச்சுவிட முடியாது. மூளைச்சாவு அடைந்தவருக்கு, ஆறு மணி நேர இடையில் இரு முறை சோதனைகள் நடத்தப்படும். சோதனையின்போது, மூளைச்சாவு அடைந்தவர் உடல், குளிர்ந்த நிலையில் இருக்கக் கூடாது. அதேநேரத்தில் அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறி, உடல் சூடான நிலையிலும் இருக்கக் கூடாது. நினைவு திரும்பக்கூடிய காரணங்களால் ஏற்பட்ட கோமா இருக்கக் கூடாது. மூளைச்சாவு அடைந்தவர் கண்மணியின் அளவு எப்படி உள்ளது; அது சுருங்கி விரிகிறதா என்று சோதிக்கப்படும். காட்டன் துணியால், கரு விழி அசைகிறதா என தொட்டுப் பார்க்கப்படும். ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் அகற்றிய பிறகு, அவரால் சுயமாக மூச்சு விட முடிகிறதா என்று சோதிக்கப்படும். வாயில் பிளாஸ்க்டிக் டியூப் வைத்து, இருமல் உள்ளதா என்றும், காதுக்குள் சுடுநீர் ஊற்றி கண்ணசைவு உள்ளதா என்றும் சோதிக்கப்படும். இவ்வாறு 13 சோதனைகள் நடத்திய பிறகே, ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டாரா என்பது உறுதி செய்யப்படும். இந்தச் சோதனைகளை நடத்தி ஒருவர் மூளைச்சாவு அடைந்ததை, அவருக்கு சிசிச்சை அளிக்கும் டாக்டர் முதலில் உறுதி செய்வார். அதன்பிறகு, அம்மருத்துவமனையின் சூப்பிரண்டு உறுதிப்படுத்துவார். தொடர்ந்து, நரம்பியல் நிபுணர்கள் (நியூராலஜிஸ்ட்) அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (நியூரோ சர்ஜன்) சோதிப்பர். அவர்களும் உறுதி செய்த பிறகு, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பதிவு பெற்ற டாக்டர் சோதிப்பார். இவ்வாறு நான்கு டாக்டர்கள் சோதனை நடத்திய பிறகே, ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 09, 2008 1:34 pm

இறந்த பிறகும் துடிக்கும் இதயம்:

மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் ஒரு வாரம் வரை துடித்துக்கொண்டே இருக்கும். உடல் உள்ளுறுப்புகளைத் தொடர்ந்து இயங்க வைக்கத் தேவையான சக்தியைக் கொடுக்க, ஊசி மூலம் குளுகோஸ் செலுத்த வேண்டும். இதயத்தை சீராக இயங்க வைக்க டோபோமின், டிரன்லெனின், டோடிடமின், ஹைசோ பெர்னலின், வேசோ பிரசின், டி3 தைராக்சின் உள்ளிட்ட மருந்துகளை உடலினுள் தேவைக்கேற்ப செலுத்த வேண்டும். மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து இதயத்தை அகற்றிய பின், அதை நான்கு மணி நேரத்திற்குள், மற்றவர் உடலில் செலுத்த வேண்டும். மூளைச்சாவை உறுதி செய்தவர்கள் சான்றிதழ் கொடுத்த பிறகே இச்சிகிச்சை செய்யப்படும். இதயம் மட்டுமின்றி இதய வால்வுகளையும் தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்த முடியும். பெரியவர்களுக்கு செயற் கை இதய வால்வுகள் பொருத்தினாலே இதயம் சிறப்பாக இயங்கும். ஆனால், குழந்தைகளுக்கு இயற்கை இதய வால்வுகளே சிறப்பாக செயல்படும். மூளைச்சாவு அடைந்தவரின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், எலும்புகள், தோல் ஆகியவற்றையும் மற்றவர்களுக்கு பயன்படுத்தலாம். எலும்பு வங்கிகள் இருப்பதால், அவற்றை சேமித்து மற்றவருக்கு எப்போது வேண்டுமானாலும் பயன் படுத்த முடியும். ஆனால் தோல் வங்கிகள் இல்லாததால் அவற்றை சேமிக்க முடியாத நிலை உள்ளது. தோல் வங்கி உருவானால், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவற்றை பயன்படுத்த முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 09, 2008 1:35 pm

இதயதானம் செய்ய கட்டுப்பாடு:

உடல் உறுப்பு தான சட்டத்தின் படி (1994) இதயதானம் செய்யப்படுகிறது. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனர் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டு, மருத்துவ மனைகளுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழ் பெற்ற மருத் துவமனைகளில் மட்டுமே இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே கட்டணம் தான் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கும் வசூலிக்கப்படுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 09, 2008 1:37 pm

மாற்று இதயம் பெற்றவர்களின் சிகிச்சை முறை:
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது சிரமம். ஒருவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்ட உடனே இதயத்தின் செயல்பாட்டில் மாற்றம் தெரியும். அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்று உடலில் இதயத்தை பொருத்திவிட வேண்டும். சிறுவர்களின் இதயம் சிறுவர்களுக்கும், பெரியவர்களின் இதயம் பெரியவர்களுக்கும் பொருத்தப்படுகிறது. பாலினம் வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம். இந்த சிகிச்சை செய்தவர்கள் பத்து நாட்கள் தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த நாட்களில் எலும்பு சோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈ.சி.ஜி., சோதனைகள், நடப்பதற்கான சோதனை, ரத்த அழுத்த சோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம் எனும் இதய துடிப்பு சோதனை உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்படும். சிகிச்சை பெற்றவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகே அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார். தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் இந்த சோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இது மட்டுமில்லாமல், வாழ்நாள் முழுவதும் நாள்தோறும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதய மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்கள், மற்றவர்கள் போல கடிமான வேலைகளையும் மேற் கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 09, 2008 1:41 pm

இதய மாற்று சிகிச்சை குறித்து, டாக்டர் மதுசங்கர் கூறியதாவது: உடல் உறுப்புகளை தானம் செய்யாவிட்டால் அவர் இறந்த பிறகு அவை எரிக்கப்பட்டுவிடும் அல்லது புதைக்கப்பட்டு, வீணாகிவிடும். அவற்றை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தால், இறுதிக்கட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும். அதனால் உடல் உறுப்புகளை தானம் செய்பவர், இறந்த பிறகும் வாழ்வார். உடல் உறுப்பு தானம் செய்பவர்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்கச் செய்ய அரசு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் சில், "உறுப்புதானம் செய்யப்போகிறேன்' என்ற வாசகத்தை இடம்பெற வைக்கலாம். இதன் மூலம் விபத்தில் இறப்பவர்களின் உறவினர்களை தொடர்புகொண்டு அவரின் கடைசி ஆசையை விளக்கி, அதை நிறைவேற்ற முடியும். இவ்வாறு செய்தால், சட்டத்திற்கு புறம்பான உறுப்பு தானத்தையும் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு டாக்டர் மதுசங்கர் கூறினார்.

தினமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக