புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
107 Posts - 49%
heezulia
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
9 Posts - 4%
prajai
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
234 Posts - 52%
heezulia
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
18 Posts - 4%
prajai
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
5 Posts - 1%
Barushree
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_m10பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடனுக்குப் பிறகு என்ன செய்கிறது அல்-காய்தா?

sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Mon May 16, 2011 2:19 pm

பின்லேடன் கொல்லப்பட்டதுடன் அல்-காய்தா முற்றிலும் அழிந்து விட்டதா? அல்லது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்துக்கு உள்ள அச்சுறுத்தல் முற்றிலும் மறைந்து விட்டதா?

இல்லை. பின்லேடன் கொல்லப்பட்ட கொண்டாட்டங்களில் அமெரிக்கா சந்தோஷமாக இருப்பதுபோல தெரிந்தாலும், அமெரிக்க ராணுவம் ஆப்கானில் இன்னமும் அச்சுறுத்தலின் மத்தியில்தான் இருக்கின்றது. காரணம், தீவிரவாத அமைப்புகளும் ஒருவித பதட்டத்தில் இருக்கின்றன. அவர்களது பதட்டத்தில், திடீரென பாரதூரமாக ஏதாவது செய்துவிடக்கூடும்.

சமீப காலமாக அல்-காய்தாவும், மற்றய தீவிரவாத அமைப்புகளும் பதட்டத்தில் இருப்பது சி.ஐ.ஏ. பற்றித்தான்! பின்லேடனைப் போட்டுத் தள்ளியது பெரிய அளவிலான நடவடிக்கை. அப்படியான தாக்குதல்களை சி.ஐ.ஏ. அடிக்கடி செய்ய முடியாது.

ஆனால், அடிக்கடி செய்யக்கூடிய வேறு தாக்குதல்கள்தான் அல்-காய்தாவுக்கும் மற்றய தீவிரவாத அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றன.

குறிவைக்கும் விமானத் தாக்குதல்கள்

அவைதான், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்களைக் கொண்டு நடாத்தப்படும் தாக்குதல்கள்! தீவிரவாத அமைப்புகளின் தளபதிகளைத் தேடித்தேடிக் குறிவைக்கின்றன இந்த ஆளில்லா உளவு விமானங்கள்.

தாக்குதல்களில் தீவிரவாத அமைப்புகளின் அனேக தளபதிகளும் சொல்லிச் சொல்லிக் கொல்லப்படுகின்றனர்.

அல்-காய்தாவின் லக்ஷர் அல்-சில் (நிழல் ராணுவம்) பிரிவு இந்தத் தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமது “மதிப்புமிக்க இலக்குகள்” குறித்த தகவல்கள் சி.ஐ.ஏ.க்கு எப்படித் தெரியவருகின்றது என்பதே இவர்களை அரித்துக் கொண்டிருக்கும் முக்கிய கேள்வி.

எப்படியோ, தங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் உளவு நடவடிக்கைகளில் சி.ஐ.ஏ. முன்னேற்றம் கண்டிருப்பதை அந்த அமைப்பு தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது. அதைத் தடுக்காவிட்டால் தங்கள்பாடு ஆபத்துத்தான் என்றும் அவர்களுக்குத் தெரியும்.
சி.ஐ.ஏ. கண் வைத்த கதை

இந்த அமைப்பின்மீது சி.ஐ.ஏ. கண்வைத்தது எப்படி? அதுவும் ஒரு சுவாரசியமான பின்னணிக் கதைதான்.

கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் மாகாணமான கோஸ்ட்டில் உள்ள சி.ஐ.ஏ.யின் முன்னணிச் செயற்பாட்டு தளத்தின்மீது நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் பற்றி அமெரிக்கா நீண்ட காலமாகவே துப்புத் துலக்கிக் கொண்டிருந்தது. அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் இருந்த ஆட்கள் அல்ல என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகியிருந்தது. இதுதான் சி.ஐ.ஏ.யின் துப்புத் துலக்கலின் காரணம்.

கடைசியில் சி.ஐ.ஏ. தெரிந்துகொண்ட விஷயம் என்ன தெரியுமா?

ஆப்கானில் நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு மனித வெடிகுண்டாகப் பயன்படுத்தப்பட்டவர் ஆப்கான் தேசிய ராணுவம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த நபர். அவர் சி.ஐ.ஏ.யின் தளத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், அந்தத் தளத்தின் தலைவர் உட்பட 7 சி.ஐ.ஏ. உளவாளிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர்.

சி.ஐ.ஏ.யின் துப்புத் துலக்கலில் கிடைத்த முடிவின்படி, லக்ஷர் அல்-சில்லின் உளவுப் பிரிவுதான் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறது. பல வாரங்களாக நடைபெற்ற முன்னேற்பாடுகளைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

இந்த அமைப்பு சி.ஐ.ஏ.யின் தளத்தைக் குறிவைத்ததன் காரணம் என்ன?

அல்-காய்தா துணைத் தலைவர்தான் குறி!

லஷ்கர் அல்-சில்லின் உளவுப் பிரிவுக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. அந்தத் தகவலின்படி, அல்-காய்தா இயக்கத்தின் துணைத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹரியின் நடவடிக்கைகளை சி.ஐ.ஏ. ஏதோ ஒருவிதத்தில் கண்காணிப்பதை லஷ்கர் அல்-சில்லின் உளவுப் பிரிவு தெரிந்து கொண்டது.

உளவுப் பிரிவு இந்தத் தகவலை லஷ்கர் அல்-சில்லின் தலைமைத் தளபதி இலியாஸ் காஷ்மீரிக்குக் கொடுத்ததைத் தொடர்ந்துதான் சி.ஐ.ஏ.யின் தளம் குறிவைக்கப்பட்டது.

சி.ஐ.ஏ. வெளிநாடுகளிலுள்ள தமது தளங்களை ரகசியமாகவே அமைப்பது வழக்கம். வேறு ஏதோ ஒரு நிறுவனம் அல்லது சேவை அமைப்பின் பெயரிலேயே அவை இயங்கிவரும். கோஸ்ட் மாகாணத்தில் தாக்குதலுக்குள்ளான சி.ஐ.ஏ.யின் தளமும் இதுபோலவே வெளிப்படையாக இயங்கிய தளமல்ல. அது சி.ஐ.ஏ.யின் தளம் என்று தெரியாதபடி ஏதோ ஒரு அலுவலகம் போலவே நடாத்தப்பட்டு வந்தது.

அப்படியிருந்தும் அதை சி.ஐ.ஏ.யின் தளம் என்று லஷ்கர் அல்-சில்லின் உளவுப் பிரிவால் எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது?

இதைப்பற்றி அல்-காய்தா ஆதரவு இணையத்தளம் ஒன்று, அல்-காய்தாவின் 313வது படையணியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக சுவாரசியமான ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. அல்-காய்தாவின் 313வது படையணி என்பது லஷ்கர் அல்-சில் பிரிவுதான்!

சி.ஐ.ஏ. விலைக்கு வாங்கிய ஆட்கள்

“பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் ஷவால், தத்தா கெல் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலரைத் தம்முடன் கோஸ்ட் மாகாணத்துக்கு வருமாறு சில இடைத்தரகர்கள் கூறியிருக்கின்றனர். அதற்குப் பணமும் கொடுத்திருக்கின்றனர். அப்படிச் சென்றவர்களை கோஸ்ட்டில் சந்தித்தவர்கள் சி.ஐ.ஏ.யின் உளவாளிகள்.

அல்-காய்தா தலைவர்கள் பற்றிய தகவல்களை இவர்களிடம் துருவித்துருவிக் கேட்டனர் சி.ஐ.ஏ.யின் உளவாளிகள். இத்தகைய நடவடிக்கைகள் முன்பும் நடந்திருந்தாலும், இம்முறை இதில் ஏதோ மாற்றம் காணப்பட்டது எமக்குத் தெரிந்தது.

அந்த மாற்றம் என்னவென்றால், இம்முறை வடக்கு வசிரிஸ்தானில் ஏதோ ஒரு பெரிய நபரை வீழ்த்தும் ஆர்வம் சி.ஐ.ஏ. உளவாளிகளிடையே தெளிவாகத் தென்பட்டது. ஆனால், இந்த ஆர்வத்தில் சி.ஐ.ஏ. உளவாளிகள் பெரும் தவறைச் செய்தனர். அவர்கள் தங்களது மறைவிடத்தை வெளிப்படுத்திவிட்டனர்” என்று அல்-காய்தாவின் 313வது படையணியைச் சேர்ந்த மூத்த தலைவர் தெரிவித்ததாக அந்த இணையத்தளம் தெரிவித்திருந்தது.

இலியாஸ் காஷ்மீரி தலைமையிலான இந்தப் படையணி, மிகுந்த அனுபவம் வாய்ந்த காஷ்மீர் போராளிகளை உள்ளடக்கியது.

லஷ்கர் அல்-சில்லின் உளவுப் பிரிவுக்கு இதில் இரு முக்கிய தகவல்கள் கிடைத்தன. முதலாவது, அல்-காய்தாவின் முக்கிய நபரைக் குறிவைக்கும் முயற்சி பற்றித் தெரியவந்தது. இரண்டாவது, கோஸ்ட் மாகாணத்தில் சி.ஐ.ஏ. உளவாளிகள் தளம் அமைத்திருக்கும் விஷயம் தெரியவந்தது.

இதையடுத்தே சி.ஐ.ஏ. தளம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது.

லஷ்கர் அல்-சில் தமது 55வது பிரிவைத் தீவிரமாகக் களத்தில் இறங்கியது. “அல்-காய்தாவின் ஆன்மா” என்று குறிப்பிடப்படும் இந்தப் பிரிவினர்தான், தற்கொலைத் தாக்குதல்களைத் திட்டமிடும் குழு. அவர்களது திட்டமிடலில்தான் சி.ஐ.ஏ. தளத்தின்மீது நடாத்தப்பட்ட தாக்குதல் வெற்றிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்தது.

சி.ஐ.ஏ. தளம் மீதான தாக்குதல் நடைபெற்று ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. சக்கரம் ஒரு சுற்றுச் சுற்றி வந்து, லஷ்கர் அல்-சில்லுக்குப் பாதகமாக நிற்கிறது.

காற்று இந்தப் பக்கம் அடிக்கிறது!

எந்த லஷ்கர் அல்-சில் தமது உளவுப்பிரிவின் மூலம் சி.ஐ.ஏ.யின் தளத்துக்கு வேட்டு வைத்தார்களோ, அந்த லஷ்கர் அல்-சில்லின் தளபதிகளின் மறைவிடங்களை சி.ஐ.ஏ. துல்லியமாகத் தெரிந்துகொண்டு ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் குறிவைத்து வீழ்த்துகிறது.

அல்-காய்தாவின் உயர்மட்டத் தலைவர்கள் அடிக்கடி நடமாடும் வடக்கு வசிரிஸ்தான் பகுதிகளிலேயே சி.ஐ.ஏ. உளவுத் தகவல்களைத் திரட்டுகிறது. அங்குள்ள ஷவால், தத்தா கெல் பகுதிகளின் எல்லைகளில் திறமையான உளவு வலையமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் பழங்குடியின மக்களைத் தங்களுக்குத் தகவல் தருபவர்களாக நியமிப்பதில் சி.ஐ.ஏ. உளவாளிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதன் பின்னரே லஷ்கர் அல்-சில்லின் தளபதிகளை சி.ஐ.ஏ. குறிவைக்கத் தொடங்கியது.

பழங்குடியின மக்களைத் தங்களுக்குத் தகவல் தருபவர்களாக நியமிப்பதுடன் சி.ஐ.ஏ. நின்றுவிடவில்லை. கடந்த சில மாதங்களாக, தலிபான் மற்றும் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான் ஆகிய அமைப்புகளின் முன்னாள் தளபதிகளுடன் உள்ள தொடர்பு மற்றும் பழங்குடியினருடன் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தங்களது ஆட்கள் சிலரைத் தீவிரவாத அமைப்புகளில் சேர்த்தும் விட்டனர்.

ஆனால் என்னதான் துல்லியமான உளவுத் தகவல்கள் கிடைத்தாலும், சி.ஐ.ஏ.யால் லஷ்கர் அல்-சில்லை முழுமையாக அழிக்க முடியாமல் இருக்கிறது. காரணம் என்னவென்றால், இந்த அமைப்பு ராணுவ ரீதியில் பலமாக இருக்கிறது.

தலிபான்களின் ராணுவம் போலன்றி, லஷ்கர் அல்-சில்லின் ராணுவம் நவீனமயமானதாகவும், கெரில்லாத் தாக்குதலுக்குத் தேவையான இரவு நேரத்தில் பார்க்கும் தொழில்நுட்பம் போன்ற நவீன கருவிகளையும், நவீன இலகு ரக ஆயுதங்களையும் பெற்றுள்ளது. 1980களில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரானத் தாக்குதலின்போது, சிவப்பு ராணுவத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்களை முன்னதாகவே அறியும் வகையில் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி செயற்பட்டது போன்று, நிதி வளம் மிக்க புலனாய்வுப் பிரிவை இந்த அமைப்பும் பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினரின் கை ஓங்கத் தொடங்கியபோது இந்த அமைப்பினர் அங்கிருந்து நகர்ந்து எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குள் வந்தனர். பாகிஸ்தானில் தங்களுக்கு ஆதரவுள்ளதாகக் கருதியிருந்த வடக்கு வசிரிஸ்தான் பகுதிகளுக்கே இவர்கள் வந்திருந்தனர்.
பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள்..

இப்போது அமெரிக்கர்கள் தமது தாக்குதல்களை ஆளற்ற உளவு விமானங்கள் மூலம் பாகிஸ்தானுக்குள் மும்மரமாக நடாத்தத் தொடங்கியிருப்பதால், இவர்கள் தொடர்ந்தும் பாகிஸ்தானில் தங்கியிருப்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் மீண்டும் ஆப்கானுக்குள் செல்லத் தொடங்கி விட்டதாகவே தற்போது பேச்சு அடிபடுகிறது.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானிலும் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை குறைப்பு ஒருபுறம். அல்-காய்தாவினரைக் கண்டுபிடித்து வீழ்த்துவதில் அமெரிக்காவின் முயற்சிகள் சமீபகாலமாக வெற்றியடையாமை மறுபுறம். இவற்றின் விளைவாக தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் நேட்டோ படையினருக்கு எதிராக தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் தொடங்கப்பட்டால், இந்தப் பகுதியில் தலிபான்கள் கடுமையான தாக்குதலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

ஆப்கானில் தலிபான்கள் இப்போதெல்லாம் குறிப்பிட்ட இலக்குகளைக் குறி வைத்துத்தான் தாக்குதல்களை நடாத்துகின்றனர். இதுவரை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தாக்குதல்கள் அமையவில்லை. ஆனால், பாகிஸ்தானில் இருந்து மற்றய இயக்கத்தினர் ஆப்கானுக்குள் வருவது அதிகமானால் நிலைமை மாறிவிடலாம்.

அமெரிக்க ராணுவம் ஆப்கானில் தனது எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே போகின்றது. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள நூரிஸ்தானில் தனது நான்கு முக்கியத் தளங்களில் இருந்து படையினரை அமெரிக்கா திரும்ப அழைத்து விட்டது. இதன் மூலம் குவாரி சாகிர் ரகுமான் தலைமையிலான தலிபான் படையினருக்கு வடகிழக்கு மாகாணம் பாதுகாப்பான பகுதியாக மாறிவிட்டது.

இதேபோல, குனார் மாகாணத்தில் குரங்கல் பள்ளத்தாக்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் ஆட்குறைப்புச் செய்ததில் நிலைமை அவர்களுக்கு மோசமாகப் போய்விட்டது. அமெரிக்கத் தளங்கள் மீது தலிபான்கள் நடாத்திய தாக்குதல்களால், குனாரில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமை இப்படியிருக்க, லஷ்கர் அல்-சில் அமைப்பும் ஆப்கானுக்குள் வந்து, தனித்துப் புதிய தாக்குதல்களை நடாத்தத் திட்டமிட்டால் எல்லாமே தலைகீழாக மாறிவிடலாம்.

சமீபத்தில் வடக்கு வசிரிஸ்தானின் எல்லையில் அமெரிக்க ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடாத்தியிருந்தது. இதைக் கவர் செய்த ஒரு வெளிநாட்டு ஊடகம், வடக்கு வசிரிஸ்தானின் மிரம் ஷா நகரில் வசித்து வருபவர் ஒருவரின் தொலைபேசிப் பேட்டி ஒன்றை ஒலிபரப்பியது.

“தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்த பகுதி உள்ளூர் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவர்கள் யாரும் கொல்லப்படவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்கள், “விருந்தினர்கள்” மாத்திரமே.” என்றார். நாட்டுக்கு வெளியேயிருந்து வந்து யுத்தம் புரியும் ஆட்களைத்தான் அல்-காய்தாவினர் “விருந்தினர்கள்” என்று அழைப்பார்கள்.

ஆப்கானுக்குள் “விருந்தினர்கள்” அதிகமாக வரத் தொடங்குகிறார்கள்!

நன்றி - விறுவிறுப்பு.காம்

http://viruvirupu.com/2011/05/15/1843/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக