புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
90 Posts - 77%
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
255 Posts - 77%
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தாலாட்ட வருவாளா?


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 6:24 am

First topic message reminder :

இது ஒரு காதல் கதை!


அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..


தொடரும்...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 9:36 pm

தொடர்ச்சி 17 ஐ ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Dec 17, 2011 6:11 pm

தொடர்ச்சி-17



"கீ...தன்!.... என்னைத் தப்பா நினைச்சீங்கன்னா.... அறுத்துகிட்டு செத்துப் போயிடுவேன்!!" என்று தன் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு சொன்னதும், நாங்கள் அனைவரும் கொஞ்சம் தடுமாறிப் போனோம்...

சுவற்றில் மோதிக் கொண்டு அழுததால், அவள் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.!

"ஐயோ லதீபா! ரத்தம் வருதும்மா...!" என்று அவளுடைய அப்பா அவளை நெருங்கினார்...

"கிட்ட வராதீங்க! யாராவது கிட்ட வந்தீங்கன்னா, கண்டிப்பா அருத்துக்குவேன்!"

"என்ன லதீபா இப்படியெல்லாம் பண்ணுரே, வேண்டாம்மா. கத்தியைக் கீழே போடு!" என்று என் அம்மாவும் அருகில் நெருங்கினார்...

"அத்தை, வேண்டாம்! வராதீங்க!..." மிகவும் ஆக்ரோஷமாக கூறினாள் லதீபா.

ஆனால், நான் அப்போது கொஞ்சம் கொடூரமானவனாகவே நடந்து கொண்டேன்...

ஆம், அவளுக்கு திருமணம் நடந்ததை என்னிடம் மறைத்து விட்டாளே என்று எனக்கு அவள் மீது ஆத்திரம் இருந்தது!

"கீதன்... என கேட்டீங்க?!....."

நான் அவளைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டேன்.

"என்னைப் பாருங்க கீதன்! என்னைப் பார்த்துக் கேளுங்க கீதன்!"

"..................................."

"இப்பப் பார்க்கப் போறீங்களா இல்லையா?..."

நான் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றேன்.

கொஞ்ச நேரத்தில்...

"ஐயோ லதீபா!..." என்று என் அம்மா கூச்சல் போட்டார். கூடவே லதீபாவுடைய அப்பாவின் கூச்சலும் கேட்டது...

நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்...

லதீபா கீழே விழுந்து கிடந்தாள்!

என்னையும் அறியாமல் ஓடிச்சென்று அவளைத் தூக்கினேன்.

"பாவம், சின்னப் பொண்ணுல்ல... தலையில அடிச்சிக்கிட்டு அழுததுல மயக்கம் போட்டு விழுந்துட்டா!" என்று என் அம்மா சொன்னதும் தான் எனக்கு உயிரே வந்தது...

""ஏம்மா... இப்படியெல்லாம் பண்ணுரே..." என்று அவளுடைய அப்பா அழுது புலம்பினார்.

முகத்தில் தண்ணீர் தெளித்து அவளைத் தட்டி எழுப்பிய போது, லேசாக அவளுடைய விழிகள் சுழன்றது...

"நீ ஏண்டா அந்தப் பொன்னைப் பார்த்து அப்படிக் கேட்டே? பாவம் எப்படித் துடிச்சிப் போயிட்டா தெரியுமா? முட்டாப் பயலே!..." என் அம்மா என்னைத் திட்டினார்.

"லதீபா! ஏன் லதீபா இப்படிப் பண்ணினே?" என்றேன் நான்.

லதீபாவின் கண்கள் லேசாக அசைந்தது...

"ஏன் லதீபா என் கிட்ட மறைச்சிட்டே? உனக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரிஞ்சா, நான் நான் உன்னை ஏத்துக்க மாட்டேன்னு நினைச்சிட்டியா? என்ன நடந்ததுன்னு என்கிட்ட நீ சொல்லியிருக்கலாமே லதீபா! நான் உன் மனசை மட்டும் தானடி காதலிச்சேன். சொல்லு லதீபா, என்ன நடந்துச்சு?" என்றேன் நான்.

"தம்பீ!.. நீங்க நினைக்கிற மாதரி.... லதீபாவுக்கு இன்னும் கல்யாணம் நடக்கல தம்பீ!" என்றார் லதீபாவின் அப்பா!

நான் அதிர்ச்சியோடு அவரைத் திரும்பிப் பார்த்தேன்...

"கொஞ்சம் இப்படி வாங்க..."

நான் அவரைப் பின் தொடர்ந்தேன்....

லதீபா இன்னும் மயக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை...

"ஆமா தம்பி, லதீபாவுக்கு இனிமே தான் கல்யாணம்! அது பிடிக்காமதான் உங்க கூட வந்திருக்கிறாள்..."

இதைக் கேட்டதும் என்னால் எதுவுமே பேச முடியவில்லை!

என் லதீபாவுக்கு, என்னோடு வாழ வேண்டும் என்பதில் தான் எவ்வளவு ஆசைகள்!....

"முதல்ல என்னை மன்னிச்சிடுங்க தம்பி! இதெல்லாம் உங்களுக்கு தெரியும்னு நினைச்சி தான் நான் உங்க மேல ஆத்திரப் பட்டுட்டேன்.

".................................."

"சத்தியமா சொல்லுறேன் தம்பி, எனக்கு உங்கள் காதலைப் பிரிக்கணும்-னு எண்ணம் இல்லை, உங்களைப் பிடிக்காமலும் இல்லை ஆனா என்னோட சூல்நிலை....."

"..........................."

"அம்மா இல்லாம வளர்ந்தவ என் பொண்ணு. பாவம்! நான் அவளை சின்ன வயசில இருந்தே கஷ்டப் பட விட்டுட்டேன். எனக்காக அவள் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா... ஆனா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் யாறுக்கிட்டயும் 5 காசு சும்மா வாங்கமாட்டேன். என் பொண்ணுங்களையும் நான் அப்படித்தான் வளர்த்தேன். ஆனா என் வீதி! எனக்கு ஒரு பெரிய கடன் சுமையைத் தந்துடுச்சி!..."

ஆம்! நாங்கள் எங்களுடைய முதல் சந்திப்பில் பரிமாறிக் கொண்ட அந்த கடன் பிரச்சினைதான் எங்கள் காதலுக்கு எதிரியாக அமைந்திருக்கிறது! என்று எனக்குப் புரியத்தொடங்கியது...

"நான் எனக்காக அந்தக் கடனை வாங்களை தம்பி. இன்னொருத்தனுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனா, அவன் கட்டாம தற்கொலைப் பண்ணிக்கிட்டான். அதனால இப்ப அந்தக் கடனை நான் கட்ட வேண்டியதாப் போச்சி. எப்படிடா அந்தக் கடனை அடைக்கப் போறோம்னு நான் புலம்பும் போதெல்லாம், என் பொண்ணுதான் எனக்கு ஆறுதல் சொல்லுவா. ஆறு வயசிலேயே "ஐஸ் குச்சி" வெட்டிக் கொடுத்து சம்பாதிச்சு தருவா! பள்ளிக் கூடம் போயிட்டு வந்தவுடனே எல்லாப் பிள்ளைங்களும் விளையாடப் போவாங்க, ஆனா இவ மட்டும், "வேப்பங் கொட்டையைப்" பொறுக்கி வந்து சேர்த்து வைப்பா!..." அவர் தனது கண்களைத் துடைத்துக் கொண்டார்...

"................................"

"ரொம்ப கஷ்டப் பட்டுட்டா தம்பி! இப்ப கூட, காலேஜ் விட்டதும் ஏதோ கடையில வேலைக்குப் போறேன்னு சொன்னா, நான் வேண்டாம்னு சொல்லியும் அவ கேக்கல... மாதா மாதம் கரைக்டா பணம் அனுப்பி வச்சிடுவா... இதுல அவளோட தங்கச்சியையும் படிக்க வச்சிக்கிட்டா!... எவ்வளவு பொறுப்பு தெரியுமா என் பொண்ணுக்கு?!" மீண்டும் அவரது கண்கள் கலங்கியது.... துடைத்துக் கொண்டார்!

அவளுடைய இந்தக் குணங்கள் தானே என்னையும் கட்டி போட்டது! என் லதீபா சிறப்பானவள் தான்! நான் அவளுக்காக புலம்புவதில் அர்த்தம் இருக்கிறது! அவளுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் பெருமையடைகிறேன்!..

"எல்லா அப்பனுங்களும் தன்னோட பொண்ணுங்களுக்கு சொத்து சேர்த்து வைப்பாங்க. ஆனா நான், என் பொண்ணுங்களுக்கு கடனைத் தான் சேர்த்து வைச்சேன்! இப்ப சொல்லுங்க தம்பி, நான் என் பொண்ணுக்கு ஒரு நல்ல இடம் பார்த்தது தப்பா?"

"....................................."

"சின்ன வயசிலேருந்து கஷ்டப் பட விட்டுட்டோமே, இனிமேலாவது சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சது தப்பா?.."

".................................."

"என்னோட நண்பன் ஒருத்தன், 'உன்னோட கடனை எல்லாம் நானே கட்டிடுறேன்... உன் மகளை என் பையனுக்குத் தருவியான்னு' கேட்டான்! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. உடனே ஒத்துக்கிட்டேன். வசதிக்காக இல்லை தம்பி! என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும் அப்படிங்கறதுக்காகத்தான்! அவ்வளவு பெரிய பணக்காரன் வரதட்சிணையே வேண்டாம்னு என் பொன்னைக் கேக்குரான்னா..? அதுக்கு என் குடும்பத்துமேல இருந்த மரியாதை தான் தம்பி காரணம்!"

"..................................."

"என் பொன்னாச்சே... என் பேச்சை மீற மாட்டாள்னு நினைச்சி... அவளுக்கு இரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு நினைச்சி... அவகிட்ட கேக்காமலேயே பேசி முடிச்சி பத்திரிக்கையும் அடிச்சிட்டேன் தம்பி!..."

"......................................"

"சத்தியமா சொல்றேன் தம்பி! என் பொண்ணு உங்களைக் காதலிக்கிறாங்கறது எனக்கு தெரிஞ்சிருந்தா... இதை நான் செஞ்சிருக்கவே மாட்டேன்! "எனக்கு என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்! அவ இனிமேலயும் கஷ்டப் படாம வாழனும்!" அது யாருக்கூட இருந்தா என்ன? இப்படி தான் தம்பி நான் நினைப்பேன்."

"................................."

"ஆனா, இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்கு கல்யாணம்! அவங்க தட புடல எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டு இருக்காங்க... இப்பப் போயி என் பொண்ணு ஓடிப் போயிட்டான்னு சொன்னா....? என்னைக் காறித் துப்ப மாட்டாங்க? உங்களை விட அவங்க வசதி கம்மிதான் தம்பி. அதனால நான் ஏதோ பணத்துக்காக என் பொன்னை கூட்டி விட்டுட்டேன்னு என் குடும்பத்தைப் பத்தித் தப்பாப் பேச மாட்டாங்க...."

"..................................."

புலம்பிக் கொண்டிருந்தவர் திடீரென்று என் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதார்...

".................................."

"தம்பி!... என் குடும்ப மானம் உங்க கையில தான் தம்பி இருக்கு! என் பொண்ணுக்கு இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா என் குடும்ப மானம் சிதைஞ்சி போயிடும் தம்பி!... நீங்க வேணும்னா என்னோட சின்னப் பொன்னைக் கல்யாணம் பன்னிக்கோங்க தம்பி! என் பொன்னை என்கிட்ட திருப்பிக் கொடுத்திடுங்க தம்பி!...."

"...................................."

"என் பொண்ணு, என்னை விட உங்க மேலதான் உசுரையே வச்சிருக்கா,... நீங்க சொன்னா கேப்பா தம்பி!... சொல்லிப் புரிய வைங்க தம்பி! விட்டுடுங்க தம்பி!... என் பொன்னை என்கூட அனுப்பி வச்சிடுங்க தம்பி! உங்களுக்குப் புண்ணியமாப் போயிடும் தம்பி! இல்லைன்னா நானும் என் சின்னப் பொண்ணும் தற்கொலை செஞ்சிக்கரதை விட விட வேற வழியே இல்லை தம்பி!..."

"............................"

"இங்க மாதரி எங்க ஊரு இல்லை தம்பி.... இங்கே சைதாபேட்டையில் இருந்து கோடம்பாக்கம் போயிட்டா நம்மளை யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா, நாங்க இருக்குறது கிராமம் தம்பி! சாகுற வரைக்கும் சொல்லிக் காட்டிக் கிட்டே இருப்பானுங்க... அதை என்னால தாங்கிக்க முடியாது தம்பி!"

நான் எதுவுமே பேசாமல் இருப்பதைப் பார்த்ததும் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்...

"என்ன தம்பி!.... எதுவுமே பேசாம இருக்குறீங்க?... ஓ! உங்களுக்கு காதல் தான் பெரிசு இல்லை! புரியுது தம்பி... உங்களால காதல்ங்கர எல்லையை விட்டு வரமுடியாது! ஆமா, என் பொண்ணே கழுத்துல கத்தியை வச்சிக்கிட்டாளே... நான் உங்களை குறை சொல்லி என்ன பிரயோஜனம்?"

"................................."

"பரவாயில்லை தம்பி! நான் போறேன்! இன்னும் ரெண்டு நாள் இருக்கு கல்யாணத்துக்கு! "அதுக்குள்ள என் பொண்ணு வந்தா, அந்தக் கல்யாணம் நடக்கும்! இல்லைன்னா...." அவர் இதைக் கொஞ்சம் அழுத்தமாகவே கூறினார்....

"........................."

"நான் கெளம்புறேன் தம்பி!" என்று கொஞ்ச தூரம் சென்றவர் திரும்பி வந்தார்...

"என் பொண்ணை சந்தோஷமா பாத்துக்கோங்க தம்பி! விளையாட்டுப் பொண்ணு!" என்று கூறிய போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது...

".................................."

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, என் அம்மாவிடமும் சொல்லிவிட்டு, லதீபாவையும் பார்த்து, அவள் நெற்றியில் வருடிக் கொடுத்து விட்டு எழுந்து சென்றார்...

லதீபாவின் மயக்கம் தெளிந்திருந்தது. லதீபா அவரது கைகளைப் பிடித்துக் கும்பிட்டாள்... அவர் லதீபாவையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு... பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டார்...

இப்போது, லதீபாவின் பார்வை என் மீது திரும்பியது!!


தொடரும்...




என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 22, 2011 2:42 pm

தொடர்ச்சி-18


லதீபாவின் பார்வை என்மீது திரும்பியது!

என்னால் அவள் கண்களை சந்திக்க முடியவில்லை. நான் அங்கிருந்து நகர்ந்தேன்...

சிறிது நேரத்திற்குப் பிறகு என் அம்மா என்னிடம் வந்து,

"என்னப்பா பண்ணப் போரே?"

நான் என் அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன்.

"என்னடா அழுதுகிட்டு இருக்கே... உனக்கு ஏண்டா இப்படி ஒரு சோதனை வரணும்?" என்று என் அம்மாவும் கண்ணீர் வடிக்க...

"அம்மா சத்தம் போடாதேம்மா, லதீபா வந்திடப் போரா.."

"அப்படின்னா, லதீபாவை நீ அனுப்பி வச்சிடப் போறியா?!" என் அம்மா என்னை ஆச்சரியத்தோடு பார்த்துக் கேட்டார்..

"ஆமாம்மா!"

"டேய், எனக்கு என்னமோ ரொம்பப் பயமா இருக்குடா! அவ இப்பவே கத்திய வச்சிக்கிட்டு பயமுறுத்திக்கிட்டு இருக்கா. இதை அவ எப்படிடா தாங்கிக்குவா!?..."

"நான் பேசிக்கரேன்மா!" என்று சொன்னபோது,

"என்ன பேசப் போறீங்க கீதன்!" என்று கூறிக் கொண்டே லதீபா அங்கு வந்தாள்!

"வா லதீபா! இப்ப... உடம்பு எப்படிம்மா இருக்கு?" என் அம்மா பதட்டத்துடன் லதீபாவை பார்த்துக் கேட்க...

"சாகப் போற உடம்பு தானே அத்தை, எப்படி இருந்தா என்ன?" என்றாள் அழுத்தமாக.

"எம்மா, இப்படியெல்லாம் பேசுறே...?"

"அம்மா! நீ கொஞ்சம் உள்ள போம்மா! நான் பார்த்துக்கறேன்." என்று என் அம்மாவை நான் அனுப்பி வைத்தேன்.

"கோவமா எதுவும் பேசாதேப்பா..." என்று சொல்லிக் கொண்டே என் அம்மா அங்கிருந்து வெளியேறினார்...

லதீபா அதே ஆத்திரத்துடன் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!...

"இந்த இடத்தில் நடந்த உரையாடலை சில காரணங்களுக்காக இப்போது நான் எழுதப் போவதில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு நாள் உங்கள் பார்வைக்கு வரும். ஆனாலும் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு புரியும் என்றே நம்புகிறேன்..."
-"அந்தப்பார்வை"


சிறிது நேரத்திற்குப் பிறகு நான் அவளுக்கு எல்லா விஷயங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கூறிப் புரிய வைத்தேன். அவளும் வேண்டா வெறுப்பாகப் புரிந்து கொண்டாலும்... என்னை விட்டுப் பிரிய அவள் சம்மதிக்கவே இல்லை! அதனால் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல், நாங்கள் இருவருமே இறந்து விடலாம் என்று முடிவெடுத்தோம்!

லதீபா என்னோடு கிளம்பியதை ஆச்சரியத்தோடு பார்த்த என் அம்மா, லதீபாவை இறக்கத்தோடு பார்த்தார்!

"நாங்க போறோம் அத்தை!"

"போயிட்டு வறேன்னு சொல்லும்மா.."

லதீபா தனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொண்டதை நான் கவனித்தேன்.

நான் என் அம்மாவிடம், "லதீபாவை ஊருக்கு அனுப்பிவிட்டு வருகிறேன்" என்று பொய் சொல்லிவிட்டு நாங்கள் மெரீனா கடற்கரைக்கு சென்றோம்...!


"வாங்க தலைவா! கொஞ்ச நாளா உங்களைக் காணலையே... என்ன.. ஸ்பெஷல் டூரா!?"

என்று கேட்ட அந்த சுண்டல் காரனைப் பார்த்ததும் எனக்கு ஆத்திரம் அதிகமானது...

"ஏய்! யாராறு எங்கே போறாங்கன்னு கவனிக்கறது தான் உன் வேலையா? உனக்கு இதுதான் கடைசி ! இனிமேல எங்களை பின் தொடர்ந்து வந்தேன்னா... நான் மனுஷனா இருக்க மாட்டேன்!" என்று ஆத்திரத்தில் அவனிடன் சத்தம் போட்டேன்.

"ஏன் கீதன் அவன்கிட்ட போயி... நீ போப்பா...!"

"இப்ப நான் என்னக்கா தப்பா கேட்டேன்? கொஞ்ச நாளா வரலையேன்னு தானே கேட்டேன். அதுக்குப் போயி இப்படிக் கோவப்படுராறு... வேண்டாம் சார்!.. ரொம்பக் கோவப்படாதீங்க... இந்தக் கோபமே உங்களுக்கு ஒரு நாள் எதிரியாகிடும்!!"

"நீ போப்பா! சுண்டல் தானே?... இன்னைக்கு நானே உன்னைக் கூப்பிட்டு உன்கிட்ட சுண்டல் வாங்கிக்கறேன். நீ அப்பாரமா வா!" என்று அவனை அனுப்பி வைத்தாள் லதீபா.

அவன் என்னை ஒரு மாதரியாகப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்!..

மணி மதியம் 2.00 !

சிறிது நேரத்திற்குப் பிறகு, லதீபா கடற்கரை மணலில் நடக்க வேண்டும் என்று கூறினாள்... நாங்கள் இருவரும் அங்கிருந்து எழுந்து சென்றோம்...

மெரீனா கடற்கரையில் அனைவரும் உற்சாகத்தோடு வாழ்க்கையை அனுபவித்து வலம் வந்து கொண்டிருந்தனர்!

அவர்களுக்கு மத்தியில் வாழ்க்கையை தொலைத்து விடுவதற்காக மன உலைச்சலோடு நாங்களும் வலம் வந்தோம்!

சிறிது நேரத்திற்குப் பிறகு கடற்கரையை ஒட்டிய ஒரு ஓரத்தில் இருவரும் அமர்ந்தோம்...!

நான் கடல் அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்...!

லதீபா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்...!

ஆனால், எப்போதும் போல அந்த சுண்டல் காரன் எங்கள் இருவரையுமே கவனித்துக் கொண்டிருந்தான் என்பது எனக்குப் பின்பு தான் தெரிந்தது!!

எனக்கு நாக்கு வறண்டு போய் விட்டது...! மூச்சும், திணரத் தொடங்கி விட்டது...! இதயம் இயல்புக்கு மீறித் துடித்துக் கொண்டிருக்கிறது!

ஆம்! என் மரணமும் என்னை நெருங்கி விட்டது என்றே நினைக்கிறேன்...!


இன்று நான் லதீபாவை நினைத்துப் புலம்பிக் கொண்டிருப்பதற்கு அந்த சுண்டல்காரன் தான் காரணம்!!

அவன் மட்டும் இல்லையென்றால்....


தொடரும்...




என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 22, 2011 2:48 pm

தொடருங்கள் நண்பா .......

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 22, 2011 10:30 pm

மகா பிரபு wrote:தொடருங்கள் நண்பா .......

நன்றி நண்பா !

அடுத்த வாரம் தொடர்ந்து முடித்து விடுகிறேன்...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 22, 2011 10:35 pm

ANTHAPPAARVAI wrote:
மகா பிரபு wrote:தொடருங்கள் நண்பா .......

நன்றி நண்பா !

அடுத்த வாரம் தொடர்ந்து முடித்து விடுகிறேன்...
நன்றி

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Thu Dec 22, 2011 10:50 pm

விறுவிறுப்பான அழகான தொடர் அருமையிருக்கு



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Dec 23, 2011 1:50 am

அல்கெனா ரிஷி wrote:விறுவிறுப்பான அழகான தொடர் அருமையிருக்கு

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா!



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Thu Jan 05, 2012 1:44 pm

ANTHAPPAARVAI wrote:
அல்கெனா ரிஷி wrote:விறுவிறுப்பான அழகான தொடர் அருமையிருக்கு

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா!

நண்பா இல்லை நண்பி புன்னகை



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 3:22 pm

அல்கெனா ரிஷி wrote:
நண்பா இல்லை நண்பி புன்னகை

ஓ! நான் இப்போது தான் உங்கள் Profile பார்த்தேன். மன்னிக்கவும் தோழி!!



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக