புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
7 Posts - 44%
ayyasamy ram
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
6 Posts - 38%
mohamed nizamudeen
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
3 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
429 Posts - 73%
heezulia
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
8 Posts - 1%
prajai
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
4 Posts - 1%
kaysudha
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
4 Posts - 1%
sram_1977
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_m10உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Thu May 12, 2011 7:35 pm

(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1)

"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?"

பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தத்துவஞானி ஒரு இந்தியரிடம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இப்படிக் கேட்டார். இங்கிலாந்தில் தற்செயலாகச் சந்தித்த அந்த இந்தியரிடம் ஏதோ ஒரு வசீகர சக்தியால் ஈர்க்கப்பட்ட பால் ப்ரண்டன் அவரிடம் பேச்சுக் கொடுக்க பேச்சு இந்தியா பக்கமும், இந்தியாவின் யோகிகளைப் பற்றியும் திரும்பியது. இந்திய யோகிகளிடம் இருந்த மகா சக்திகளைக் கேட்டு பிரமித்த பால் ப்ரண்டன் அப்போது தான் இந்தக் கேள்வியை ஆவலுடன் கேட்டார்.

"இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஏனென்றால் யோகிகளாகத் தெரிபவர்களில் பலர் போலிகளாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. மலிந்திருக்கும் போலிகளின் கூட்டத்தின் மத்தியில் உண்மையான யோகிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. உண்மையான யோகிகள் எத்தனை சக்திகள் பெற்றிருந்தாலும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அவற்றை உபயோகிப்பதில்லை. பணமும், புகழும் அவர்களுக்கு பொருட்டல்லாததால் அவர்கள் மற்றவர்களைக் கவர எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அவர்களுக்கு ஆத்ம ஞானமே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் யோக சக்தியை முறைப்படியான பயிற்சியில் அடைந்த யோகிகளல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் பல அபூர்வ சக்திகள் இருந்தாலும் உண்மையான யோகிகள் என்று கூறிவிட முடியாது....." என்றார் அந்த இந்தியர்.

அந்த இந்தியர், இந்தியாவின் யோகிகளைப் பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு ஆவல் அதிகமான பால் ப்ரண்டன் அப்படிப்பட்ட உண்மையான ஒரு யோகியையாவது சந்தித்து விட வேண்டும் என்று பேராவலுடன் உடனே இந்தியாவுக்கு வந்தார்.இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில்.அந்த இந்தியர் சொன்னது போல் பல அபூர்வமான சக்தி படைத்தவர்களை பால் ப்ரண்டன் இந்தியாவில் சந்தித்தார். அவர் தனது இந்திய ஆன்மீகப் பயண அனுபவங்களை இரகசிய இந்தியாவில் ஒரு தேடல் (A search in secret India) என்ற நூலில் 1934 ஆம் ஆண்டில் சுவைபட எழுதியுள்ளார். அவரது இந்திய அனுபவங்களில் சுவாரசியமான சிலவற்றை இங்கே பார்ப்போமா?

உண்மையான யோகியைத் தேடி பம்பாயில் வந்திறங்கிய பால் ப்ரண்டன் முதலில் கண்ட அபூர்வ சக்தி மனிதர் இந்தியரல்ல. எகிப்தைச் சேர்ந்த ஒரு மேஜிக் நிபுணர். பால் ப்ரண்டன் தங்கியிருந்த ஓட்டலிலேயே தங்கி இருந்தார் அவர். அவர் சக்திகளைப் பற்றி ஓட்டலில் பலரும் உயர்வாகச் சொல்ல பால் ப்ரண்டன் ஆர்வத்துடன் அவரைச் சந்தித்தார். அந்த எகிப்தியர் பால் ப்ரண்டனிடம் சொன்னார். "ஒரு வெள்ளைத் தாளில் உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை பென்சிலால் எழுதிக் கொள்ளுங்கள்"

பால் ப்ரண்டன் அப்படியே ஒரு கேள்வியை ஒரு வெள்ளைத்தாளில் எழுதினார்.

"அந்தத் தாளை நான்காக மடியுங்கள்....". பால் ப்ரண்டன் மடித்தார். மேலும் நான்கு நான்காய் முடிகிற வரை மடித்து வைத்துக் கொள்ளச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே முடிகிற வரை மடித்தார். கடைசியில் அந்தத் தாளையும், பென்சிலையும் சேர்ந்தாற்போல கெட்டியாக வலது கையில் பிடித்துக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். அப்படியே செய்தார் பால் ப்ரண்டன்.

பின் சிறிது நேரம் அந்த எகிப்திய மேஜிக் நிபுணர் கண்களை மூடிக்கொண்டு ஒருவித தியான நிலைக்குச் சென்றார். சில நிமிடங்கள் கழிந்து கண்களைத் திறந்த அவர் "நீங்கள் அந்தத் தாளில் எழுதிய கேள்வி இது தானே?" என்று கேட்டு அவர் எழுதிய கேள்வியை அப்படியே சொன்னார். பால் ப்ரண்டன் திகைத்துப் போனார்.

அந்த மேஜிக் நிபுணர் அந்தத் தாளைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அதைப் பிரித்துப் பார்த்தார். அந்தக் கேள்வியின் கீழ் அதற்கான பதில் பென்சிலில் எழுதியிருந்தது. பால் ப்ரண்டனிற்கு பிரமிப்பாக இருந்தது. இது என்ன கண்கட்டு வித்தையோ என்று நினைத்த அவரை மேலும் சில கேள்விகள் எழுதிக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். பால் ப்ரண்டன் தனக்கு மட்டுமே தெரிந்த தன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், பெயர்கள், தேதிகள் குறித்து மிகவும் கடினமான கேள்விகளாகத் தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டார். அந்தத் தாளையும் மடித்து முன்பை விட இறுக்கமாக பென்சிலோடு பிடித்துக் கொண்டார். ஆனால் அவை எல்லாவற்றையும் அந்த எகிப்தியர் சொன்னதோடு அந்தத் தாளைப் பிரித்துப் பார்த்த போது அந்தக் கேள்விகளின் கீழே பென்சிலால் சரியான பதில்கள் எழுதப்பட்டிருந்தன.

பிரிக்க முடியாதபடி தன் கையிலேயே மிக இறுக்கமாக மடித்துப் பிடித்து வைத்துக் கொண்ட தாளில் உள்ள கேள்விகள் அந்த எகிப்தியரால் எப்படி அறியப்பட்டன என்பதும் எந்த விதத்திலும் தன் வாழ்க்கையில் நெருங்கியவர்கள் கூட அறிந்திராத அந்தப் பதில்கள் எப்படி அறியப்பட்டன என்பதும் பென்சிலை மடித்து வைத்திருந்த தாளுடன் இறுக்கிப் பிடித்திருந்த போதும் அந்த பென்சிலால் அந்தப் பதில்கள் அந்தத் தாளில் எப்படி எழுதப்பட முடியும் என்பதும் பால் ப்ரண்டனுக்குப் புரியாத புதிராக இருந்தது.

வியப்பின் எல்லைக்கே போன பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்ட போது அந்த எகிப்தியர் அந்த இரகசியத்தைச் சொல்ல மறுத்து விட்டார். பால் ப்ரண்டன் வற்புறுத்திய போது "இந்த இரகசிய வித்தையை வெறும் ஆர்வமுடையவர்களுக்கு சொல்லித் தர முடியாது. நீங்கள் என் உதவியாளராக மாறி என்னுடனேயே வருவதாக இருந்தால் மட்டுமே நான் உங்களுக்கு இந்த இரகசிய வித்தையைக் கற்றுத் தர முடியும்." என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.

பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்திலிருந்து தான் இந்தியா வந்த உண்மையான காரணத்தை அந்த எகிப்தியரிடம் சொல்லிப் பின் வாங்கினார்.

தன் தேடலில் அவர் கண்ட இன்னொரு சுவாரசியமான நபர் சென்னைக்கு அருகே இருந்த ஒரு ஹத யோகி. அவரது அபூர்வ சக்திகள் பற்றி அடுத்த பதிவில் காண்போமா?

-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 12, 2011 8:59 pm

புதுமையான தகவல். தொடருங்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 9:16 pm

மிக அரிய தகவல்கள் என் கணேசன்.. யோகிகள் வானத்திலிருந்து வந்து குதித்தவர்கள் அல்லர். நம்மிடையே வாழும் மனிதர்கள் தான். அதீத சக்திகளைப் பெற்று யோகிகளாக மிளிர்கிறார்கள்..

இங்கு பால் ப்ரண்டன் இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த எகிப்து யோகியின் பின்னாலேயே சென்று அவர் கற்ற அந்த யோக வித்தையை நானும் கற்க முயற்சித்து இருப்பேன்.!

தொடருங்கள் கணேசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Thu May 12, 2011 11:34 pm

இந்தியாவின் பெருமையே அதன் அழிக்க முடியாத ஆன்மீக செல்வம்தான். அதை நாடி பல வெளிநாட்டவர் பல்வேறு காலங்களில் இந்தியா வந்துள்ளனர். இந்த நூற்றாண்டிலும் வாழ்ந்த யோகிகளை பற்றி அறிய வந்த பால் பிரண்டான் அவர்களுக்கும் அதை பற்றிய அரிய தகவல்களை தந்த நண்பர் கணேசன் அவர்களுக்கும் நன்றி.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 15, 2011 12:43 pm

A Search In Secret India is one of the
great classics of Spiritual Books written by Paul Brunton. Paul Brunton
(1898-1981) was one of the twentieth century's greatest explorers of the
spiritual traditions of the East. He was a British philosopher, mystic,
Journalist and traveler.

A Search In Secret India
telling us about Brunton’s Spiritual Journey in India.

At last his search ends at Arunachala with Sri Ramana maharishi

A Search In Secret India

இந்த புத்தகம் கிடைக்கும் , இணையப் பக்கம் தெரிந்தால் சொல்லுங்கள் !


சென்னைக்கு அருகில் இருந்த யோகி . ரமணா மகரிஷி . தானே ! கணேசன் !

தொடருங்கள் . காத்திருக்கிறோம்








jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 15, 2011 12:52 pm

நீங்க ஒரு யோகியின் சுய சரிதை - பரம ஹம்சா யோகானந்தர் ஊடாய புக் படிங்க நல்ல இருக்கும்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 15, 2011 1:30 pm

அருமையான தகவல் நண்பரே

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 15, 2011 2:24 pm

jeylakesengg wrote:நீங்க ஒரு யோகியின் சுய சரிதை - பரம ஹம்சா யோகானந்தர் ஊடாய புக் படிங்க நல்ல இருக்கும்
மிகச் சிறந்த நூல் . நன்றி நண்பரே!

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 15, 2011 2:41 pm

kbala wrote:
jeylakesengg wrote:நீங்க ஒரு யோகியின் சுய சரிதை - பரம ஹம்சா யோகானந்தர் ஊடாய புக் படிங்க நல்ல இருக்கும்
மிகச் சிறந்த நூல் . நன்றி நண்பரே!

உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா 1194657695

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Mon May 16, 2011 6:27 pm

[quote="jeylakesengg"]நீங்க குஓட்டே
நான் படித்த புத்தகங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இந்த யோகியின் சுயசரிதை புத்தகம் தான். நான் மட்டுமல்ல திரு ரஜினிகாந்த் அவர்கள் கூட ஆனந்த விகடனில் எழுதிய இது ஆண்டவன் கட்டளை என்ற தொடரில் தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இதுவென குறிப்பிட்டிருந்தார். தகவலுக்கு நன்றி நண்பரே....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக