புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
10 Posts - 4%
prajai
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_m10வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 08, 2011 11:19 am

வாழும் தெய்வங்களான அன்னையர்களை போற்றும் வண்ணம் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (மே 8) அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அன்னையர்களின் ஆசிர்வாதங்களை பெறுவது ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்கு இன்று வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து ஆசிர்வாதங்களை பெறலாம்.

உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நாளே பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக வரலாற்றில் இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்டுள்ளனர். சமுதாயத்தில் உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பாலும், தியாகத்தாலுமே பெருமை அடைந்துள்ளனர். அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியமானது. "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் அன்னையின் தியாகத்தை நினைத்து அவர்களுடன் இந்த நாளை கொண்டாடி மகிழலாம். அன்னையை சந்திக்க முடியாதவர்கள் போனில் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவதை விட, நாம் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்த அன்னையை இந்த நாளில் மனதார போற்றி வணங்குவோம்.

அன்பின் ஆலயம்... உலாவும் சொர்க்கம்... அன்னை! நாடி நரம்புகள் தளர்ந்து முகச் சுருக்கங்கள் படர்ந்து பொக்கை வாய் சிரிப்பில் தேவதையாய் ஜொலிக்கிறாள் என் தாய்... ஏழைக்கும், பணக்காரனுக்கும் கடவுள் சமமாக கொடுத்த வரம்... அன்னை. அன்னையிடம் மட்டும் தான் பேதமில்லாத அன்பை காணமுடியும். ஒற்றைப் பிள்ளை பெற்றாலும், பத்துப் பிள்ளை இருந்தாலும், அங்கே அன்பு மாறுவதில்லை. கருவறையில் சுமக்கும் போதே, பிள்ளையின் கனவுகளையும் சுமந்து, காலம் முழுதும் பிள்ளைக்காகவே வாழும் உன்னத சொர்க்கம் அவள்.

பிள்ளையை சான்றோன் என கேட்டால் சந்தோஷப்படுவாள். குற்றவாளி என்று சொன்னால் வருத்தப்படுவாள், ஆனால் வெறுக்கமாட்டாள். இந்த தாயுள்ளத்தை, நம்மில் எத்தனை பேர் போற்றி பாராட்டுகிறோம்? திருமணத்திற்கு பின் நிறைய பேருக்கு, தாய், தந்தையர் வேண்டாத பொருளாகி விடுகின்றனர். கர்ப்பத்தில் பத்து மாதம் பத்திரமாய் சுமந்த தாயை, முதுமையின் காரணமாக முதியோர் இல்லத்தில் விடுவது நியாயமா?

இன்று அன்னையர் தினம்... வறுமையிலும், பெருமையாய், பிள்ளைகளை வளர்த்த அன்னையர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

சபுரா பீவி (72), மதுரை: எனது கணவர் ரயில்வேயில் வேலை பார்த்தார். நான் ஆறாவது படித்துள்ளேன். மூன்று ஆண், மூன்று பெண் குழந்தைகள். கணவரின் ஒற்றை சம்பளத்தில் ஆறு பிள்ளைகளையும் படிக்க வைத்தேன். எங்கள் சமூகத்தில் பெண் குழந்தைகளை படிக்க வைப்பது பெரிய விஷயம். தடைகளைத் தாண்டி என் பெண்கள் சாதித்துள்ளனர். குழந்தைகளிடம் வேறுபாடு காட்டாமல் வளர்ப்பது முக்கியம். அத்தனை பேரும் இன்று அரசுப் பணியில், நல்ல பதவியில் இருக்கின்றனர். படிக்கும் போதே, அரசுப் பணிக்கு தேர்வெழுதி உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். பெற்றவளாக, இவர்களை ஒழுக்க நெறியில் வளர்த்ததை பெருமையாக கருதுகிறேன்.

பொன்னம்மாள்(73), பழநி: பழநி கோயிலில் உதவியாளராக பணியாற்றினேன். எனக்கு ஐந்து குழந்தைகள். கணவர் இறப்பிற்கு பின், குடும்பச்சுமை முழுவதும் தனிநபராக இருந்து கவனிக்க வேண்டிய நிலை. மிகக் குறைந்த வருமானத்தில், கணவர் துணையின்றி குழந்தைகளின் கல்வி, பராமரிப்பை கவனித்தேன். இரண்டு மகள்கள் பட்டம் பெற்றனர். வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருந்தேன். இன்று சொந்தவீட்டில் மூன்று மகன்கள் மற்றும் 11 பேரக்குழந்தைகளுடன், அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். முதுமையில் பிள்ளைகளுடன் வசிப்பது தான் பெற்றவளுக்கு நிம்மதி. என்னைப் போன்ற எல்லா அம்மாக்களுக்கும் இந்த "வரம்' கிடைக்க வேண்டும்.

பழனியம்மாள் (50), கூடலூர்: கணவரும், நானும் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்கிறோம். இந்த வருமானத்தில் எனது மூத்த மகளை பி.எட்., படிக்க வைத்தேன். 2வது மகன் இன்ஜினியரிங் முடித்துள்ளார். மூன்றாவது மகன் இன்ஜினியரிங் படிக்கிறார். எனது மகன்கள் இன்ஜினியர்களாகி, உயர்ந்த வேலைக்கு செல்வதே எனக்கு பெருமை. மிகக் குறைந்தளவு வருமானத்தை வைத்து குழந்தைகளை உயர்படிப்பு படிக்க வைப்பது சிரமம். பிள்ளைகள் வேலைக்கு சென்ற பின் எங்களது நிலைமை மாறும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.

சித்ரகலா (63), ஓய்வு பெற்ற ஆசிரியர், ராமநாதபுரம்: அன்னையின் அரவணைப்பில் எந்த ஒரு துன்பமும் தவிடுபொடியாகிவிடும். என் தாயின் வளர்ப்பில் சிறந்த பெண்ணானேன். இன்று நான் தாயாக இருந்து எனது இரண்டு பிள்ளைகளை இன்ஜினியர்களாக உருவாக்கி சிறந்த நிலைக்கு ஆளாக்கியதில் பெருமைப்படுகிறேன். சமுதாயத்திற்கு நல்ல பிள்ளைகளை வளர்க்கும் கடமை அன்னைக்கு உண்டு.

வள்ளி (45), குடும்பத் தலைவி, திருப்புத்தூர்: எனது கணவர் கொத்தனார் வேலை பார்க்கிறார். எங்களுக்கு, ஏழு பெண் குழந்தைகள் . நால்வருக்கு திருமணமாகி விட்டது. ஐந்தாவது பெண் கீதா, பிளஸ் 2 தேர்வில் பாடத்தில் மாநில ரேங்க் எடுத்தார். அவர், தற்போது துபாயில் உள்ளார். அன்றாட பிழைப்பு நடத்துவதே கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகளை படிக்க வைத்தால், முன்னேறுவர் என்ற நம்பிக்கையில் படிக்க வைக்கிறோம். பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். எந்த ஒரு தாயும், தான் பட்ட கஷ்டத்தை பொருட்படுத்தாமல், குழந்தைகளை நல்லநிலைக்கு கொண்டு வருவதையே விரும்புவர்.

பாக்கியலட்சுமி (40) விருதுநகர்: எனது கணவர் மாதவன் செவித்திறன், பேச்சுத்திறன் அற்றவர். எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. பலசரக்கு கடை வைத்தேன். அந்த வருமானத்தில் மூத்த மகள் பி.எஸ்.சி., இளைய மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். இருவரையும் கல்லூரி பேராசிரியர்களாக ஆக்குவதே, என் லட்சியம். தாய்மை பற்றியும், பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வையும் எடுத்துக் கூறுவதால், பிள்ளைகளும் புரிந்து கொள்கின்றனர்.

சாமானியர்கள் தான் சரித்திரங்களை உருவாக்குவார்கள். இங்கே சாமானிய அன்னைகள், தங்களை நல்ல பிள்ளைகளாக உருவாக்கியதை பெருமையுடன் நினைவு கூறுகின்றனர், பிள்ளைகள்.

ரேவதி, குழந்தைகள் மற்றும் மகப்பேறு டாக்டர், மதுரை: எனது அப்பா பொறியியல் கல்லூரி பேராசிரியராக இருந்தார். அம்மா சுப்புலட்சுமி எஸ்.எஸ்.எல். சி., படித்தவர். என்னுடன் சேர்த்து ஐந்து பிள்ளைகள். வசதியான வீட்டில், நிறைய நகையுடன் வந்தாலும், மூன்று பெண் குழந்தைகளுக்காக, அணியாமல் அப்படியே பத்திரப்படுத்தியவர். சென்னையில் வாடகை வீட்டில் இருந்தாலும் உணவில் எந்த குறையும் வைக்க மாட்டார். ஐவரின் படிப்புச் செலவு பயமுறுத்திய போதும், யாரையும் படிக்க கூடாதென சொல்லவில்லை. எனது விருப்பத்தை மதித்து, டாக்டருக்கு படிக்க வைத்ததோடு, விடுதிச் செலவையும் சமாளித்தார். ஆரோக்கியம், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்தவர். மாலை 6 முதல் 8 மணி வரை எழுத்து, படிப்பு. இரவு 9 மணிக்கு ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிடுவோம். அக்கா இருவரும் இன்ஜினியர்களாகவும், அண்ணன்கள் இன்ஜினியர், டாக்டர்களாக உள்ளனர். எங்களை இந்தளவு உருவாக்கிய தாயை பார்க்கும் பாக்கியம், என் குழந்தைக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அம்மா, எங்களை வாழ்த்தி கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.

பெருமாள் பிள்ளை, அண்ணா தொழில்நுட்ப பல்கலை பதிவாளர், மதுரை: கோவையில் எனக்கு இன்ஜினியரிங் படிக்க வாய்ப்பு வந்தபோது, "என்னை விட்டு பிரியாதே' என கண்ணீர் விட்டு கதறினார் என் தாய் கமலம். படிக்கும் போதே வேலை கிடைத்தது, என் தாய்க்கு மிகப்பெரிய சந்தோஷம். என் பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டபோதும், இன்னும் என்னை குழந்தையாகவே நினைக்கும் அந்த பாசம், என்னை பிரமிக்க வைக்கிறது. மாதத்தில் இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்குகிறேன். ஆனாலும் விடைபெறும் போது கண்ணீர் பெருகி, ஏக்கத்துடன் பார்ப்பார். என்னைப் பற்றி பத்திரிகையில் வரும் செய்தியை மற்றவர்களிடம், குழந்தையை போல காண்பித்து மகிழ்வார். 2006 ல் வெளிநாடு சென்றபோது, அம்மாவை அழைத்துச் சென்றேன். மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அதை என் வாழ்நாள் சாதனையாக நினைக்கிறேன். தந்தை இறந்து விட்டாலும், எங்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, 76 வயதில் தனியாளாய், எங்களின் வருகையை மட்டும் எதிர்பார்த்து வாழ்ந்து வருகிறார் அம்மா.

ஜெயஇந்திரா பட்டேல், ஐகோர்ட் வக்கீல், மதுரை: எனது ஒவ்வொரு செயலிலும் அம்மா கமலம் தான் நிற்கிறார். அப்பா ராணுவத்தில் இருந்ததால் ஆண்டுக்கு ஒருமுறை வருவார். என்னுடன் பிறந்தவர்கள் ஐந்துபேர். எங்களை வளர்ப்பதற்காக, தலைமையாசிரியை பணியிலிருந்து விலகினார். மாலை நேரத்தில் சிற்றுண்டி செய்து கூடியமர்ந்து சாப்பிட விரும்புவார். என் திருமணத்தின் போது, என்னை கட்டிபிடித்து குழந்தையை போல் கண்ணீர் விட்டது, மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இன்று அனைவரும் படித்து நல்ல வேலையில் இருக்கிறோம். ஆனாலும் எங்களை எதிர்பார்க்காமல் திருநெல்வேலியில் அம்மாவும், அப்பாவும் வாழ்ந்து வருகின்றனர். வாழ்நாள் வரை எங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்ட அந்த தியாக உள்ளத்தை, மாதம் ஒருமுறையாவது பார்த்து வருவதை நன்றிக்கடனாக நினைக்கிறேன்.

சின்னப்பா, டீன், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை: திருமங்கலத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். அம்மா மூக்காயி படிப்பறிவு இல்லாதவர். இரண்டு அண்ணன்களை விட நன்றாக படிக்கிறேன் என்பதற்காக, என் படிப்புக்காக தன்னை மெழுகாய் கரைத்துக் கொண்டவர். அப்பா உடல்நலம் குன்றிய போது, விறகு சுமந்து அதை விற்று என்னை படிக்க வைத்தார். காலில் செருப்பு கிடையாது. அல்லது பிய்ந்து போகாமல் இருக்கும் ஒற்றை செருப்பை அணிந்து, விறகு கட்டை முடிச்சிடுவார். எம்.ஏ., படிப்பதற்காக, ஒரு ஏக்கர் நிலத்தை விற்று தந்தார். படித்து முடித்தவுடனே வேலை கிடைத்த போது தான், என்னால் என் தாய்க்கு நல்ல உணவு கொடுக்க முடிந்தது. படிப்பதற்கு மற்றவர்கள் தடை சொன்ன போதும், தயங்காமல், மறுக்காமல் படிக்க வைத்த அந்த தியாக உள்ளத்தால் தான், உயர்ந்த நிலையில் இருக்கிறேன். தற்போது அவர் இல்லாவிட்டாலும் 97 வயது வரை வாழ்ந்ததை, பெருமையாக நினைக்கிறேன். அன்னை, தந்தையை வணங்கிய பின்பே வேலை செய்வதை கடமையாக நினைக்கிறேன்.

ஆர்.சிவக்குமார், கூடுதல் எஸ்.பி., திண்டுக்கல்: எனது தாய் செல்லம்மாள். சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் வடுகத்தில், அப்போது மின்சாரம் இல்லை. சிம்னி விளக்கில், எனது தாய் பாடம் சொல்லித்தருவார். ஆடு, மாடு வளர்த்தும், விவசாயம் செய்தும் என்னை படிக்க வைத்தார். நான் கால்நடை டாக்டரானேன். அவரது அறிவுரையால், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றேன். அவர் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் கல்லூரி கட்டணம் செலுத்தியது, இப்போது நினைத்தாலும் கண்ணீரை வரவழைக்கிறது. ""பிள்ளைகளுக்கு உணவு, உடை அளிப்பதில் செல்லம் கொடுக்கலாம். படிப்பிலும், ஒழுக்கத்திலும் செல்லம் கூடாது,'' என, எனது தாய் கூறுவார். அதை சக ஊழியர்களிடம் கூறுவேன். நான் இந்நிலைக்கு வர, அன்னையே காரணம். மறுபிறவி ஒன்று இருந்தால், எனது குழந்தைகளில் ஒருவராக அவர் பிறக்க வேண்டும்.


-- தினமலர்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 11:23 am

அன்னையர் தின வாழ்த்துகள் அனைவருக்கும்......

இன்றுதான் அன்னையர் தினம் என்பது நான் நினைப்பதில்லை என் இதயம் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் என் அன்னைக்காகத்தான்....................................
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 2:16 pm

அன்னையர் தின வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 08, 2011 2:24 pm

அன்னையர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ...
நீங்கள் பெற்ற மக்களோடு கூடிக் குலாவி வாழும் காலம் எல்லாம் வசந்த காலமாக படைத்த இறைவன் உங்களுக்கு ஆரோக்கியம் அளிக்கட்டும்.
பெற்ற தாயையும் பிறந்த பொன் நாட்டையும் தவிர்த்து வேறு ஒரு உண்மையான மகிழ்ச்சி ஒருவனுக்கு இருக்கமுடியாது...
அன்னை வாழ்க அவர் தம் அன்பு வாழ்க



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Aவாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Bவாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Dவாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Uவாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Lவாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Lவாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் Aவாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம் H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக