புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
75 Posts - 60%
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
70 Posts - 60%
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளர் சரித்திரம்


   
   

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:27 am

First topic message reminder :

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் இங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:17 am

இனி, ஒரு சாரார் களப்பிரர் என்னும் பெயரே கள்வர் எனத் திரிந்ததாகும் எனக் கருதுகின்றனர். களப்பிரர் என்பார் தட்சிணத்தை ஆண்ட ஓர் அரச வமிசத்தினர். இவர்கள் ஒரு காலத்திற் பண்டி நாட்டையும் வென்று அடிப்படுத்திருக்கின்றனர்.

இனி, சீவகசிந்தாமணி 741 -ம் செய்யுளில் உள்ள ” கள்ளராற் புலியை வேறு காணிய’” என்னந் தொடருக்கு ‘அரசரைக் கொண்டு சீவகனைப்போர் காணவேண்டி’ என உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருத்தலின் கள்ளர் என்னும் சொல்லுக்கு அரசர் என்னம் பொருள் கருதப்படுகிறது. சீவகனைப் புலியென்று கூறியதற்கேற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின், அப்பொழுதும் வீரத்தின் மேம்பட்டார் என்னும் பொருள் பெறப் படுகின்றது. வீரர் என்னும் பொருள் பற்றியே கள்வர் அல்லது கள்ளர் என்னும் குலப்பெயர் தோன்றியதென்பது பழைய ஆதரவு கட்கும் யூக அநுபவங்கட்கும் ஒத்ததாயிருக்கின்றது. இதனை மறுப்பதற்கு எவ்வகையான காரணமும் இல்லை. காட்டில் வாழும் ஆறலை கள்வர் என்பார் உளராயினம் அன்னவர் வேறு இவர் வேறு என்பதனைச் சிறிதறிவுடையாரும் அறிவர்.

பொய்யடிமையில்லாப் புலவர் பெருமக்களால் கள்வர்கோமான் புல்லி எனவும் , கள்வர் பெருமகன் தென்னன் எனவும் சிறப்பித்தோதப் பட்டிருத்தலை அறியும் அறிவுடையார் எவரும் கள்வர் என்னும் குலப்பெயர்க்கும் உயர்பொருள் கொள்ளாமலிரார். கள்வர் கோமான் புல்லிக்கும் இன்னவர்க்கும் யாதும் தொடர்பில்லை ; இவர்கட்கு இப்பெயர் சிறிது காலத்தின் முன்பே இவர்களது தீச்செயலால் ஏற்பட்டிருக வேண்டும் என்னில், புல்லிக்கம் இவர்க்கும் தொடர்பில்லாது போயினும் பல்லவ, சோழ மன்னரது வழியினராய், இற்றைக்கும் பல இடங்களில் குறு நில மன்னராய், இருந்து வரும் ஓர் பெரிய வகப்பினர் தமது தீச்செயல் பற்றிப் பிறர் இட்ட பெயரினைத் தமக்குக் குலப்பெயராக ஒருங்கே ஏற்றுக்கொண்டன ரென்பது எவ்வளவு அறியாமை யாகும்!

இனி வெட்சிமறவர் கள்வர் எனவும். கரந்தை மறவர் எனவும் வழங்கப்படுவரென்னில், வஞ்சி மறவர், உழிஞைமறவர், தும்பை மறவர் முதலியோர்க் கெல்லாம் ஒவ்வொரு வகுப்பினரைக் காட்டுதல் வெண்டும் என்க. ஓர் அரசனாதல், அவன் படையாளராதல் தாம் புரியும் போர் முறைபற்றி வேறு வேறு திணைக்கும் உரியராவரென்பதும், அதனால் ஒருவர்க்கே பல பெயரும் பெற உரிமை யுண்டென்பதும் தமிழிலக்கணம் கற்றவர் நன்கு அறிவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:18 am

இனி, இவர்கள் வீரராயினும் அரசராகவோ, படையாளராகவோ சென்று மாற்றாரது நிலத்தைக் கொள்ளை கொண்டமையால் இவ்பெயர் எய்தினாராவர் என்னில், உலக சரித்திரத்தில் அறியலாகும் எந்த அரச பரம்பரையினரும் கொள்ளை கொள்வோர் என்னும் பெயருக்கு உரியராகாது தப்பவியலாது; இப்பொழுது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லா அரசுகளும் இப்பெயரினைப் பெறுதற்கு முற்றிலும் தகுதியள்ளவை; எனினும் இது குறித்து இப் பெயர் உண்டாதல் வழக்காறன்று, இனி இவ்வகுப்பினரில் களவுத் தொழில் செய்வார் இருப்பதும் உண்மையே. வேறு எவ் வகுப்பிலே தான் இத்தீத்தொழில் செய்வோர் இல்லாதிருக்கின்றர்? களவுக்குக் காரணம் அவரவர் நிலைமையே யன்றி, ஓர் வகுப்பினுட் பிறத்தலன்று என்பதை அறிவுடையோர் எவரும் மறுக்கார். அரசாங்கத்தினரும், பொது மக்களும் எழைகளின் நிலைமையறிந்து அவர்க்கு உதவி புரியாது புறக்கணித்திருப்பதனாலேயே இத்தகைய குற்றச் செயல்கள் மிகுகின்றன. எனவே குற்றத்திற்கு அனைவரும் பங்காளிகள் என்பதனை உணரவெண்டும். இதுகாறும் கூறியவற்றிலிருந்து கள்வர் அல்லது கள்ளர் என்னும் குலப்பெயரின் வரலாறு பலராற் பலவாறு கூப்படினும் வீரர் என்னும் பொருள் பற்றி அப்பெயர் உண்டாயிற்றென்பதே முற்றிலும் பொருந்தியதெனல் பெறப்படுமாறு காண்க.

இனி, இந்திரகுலத்தார் என இவர்கள் வழங்கப்படுதற்கும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளக்கு முற்பட்ட ஆதரவுகள் கிடைக்கின்றன. தேவேந்திரன் ஒரு நாள் பூமியிற் சுற்றி வந்தானென்றும், அப்போது ஒரு கன்னிகையை மணந்தா னென்றும், அவள் அநேக பிள்ளைகளைப் பெற்றனளென்றும், அவர்களில் ஒருவன் அரசனானானென்றும் 172 ஆண்டுகளின் முன் எழுதப்பெற்ற தொண்டைமான் வமிசாவளி என்னும் நூலிற் கூறியிருப்பது முன்பே காட்டியுள்ளாம், கள்ளர்,மறவர், அகம்படியர் என்ற மூன்று வகுப்பினரும் ஒரே யினத்தவரென்றும், இவர்க ளெல்லாரும் இந்திர குலத்தினரென்றும் பலர் சொல்லியும், எழுதியும் வந்திருக்கினறனர்.

பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியும் கொதமர் பத்தினியும் ஆகிய அகலிகையைத் தேவேந்திரன் கரவிற் புணர்ந்த காலத்து மூன்று மக்கள் பிறந்தனரென்றும், முனிவர் மனைக்குத் திரும்பியபொழுது மறைந்தவன் கள்ளனென்றும், மரத்திலேறியவன் மரவனென்றும், அகங்காரத்துடன் நின்றவன் அகம்படியனென்றும் பெயர்பெற்றன ரென்றும் கதை கூறுவர். இதிலிருந்தே இக்கதையைப் படைத்தவன் எவ்வளவு அறிவிலியாயிருக்க வேண்டுமென்பது புலப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:21 am

இது போலும் அறிவிலார் கூற்றுக்களை ஆராயாதே ஆங்கிலத்தில் எழுதிச் சரித்திரமாகக் காட்டிவிடும் பெரியோர்கள் இன்னமும் இவ்வுலகத்தில் இருக்கின்றனர் ! இக்கதை, இந்திர குலம் என்ற வழக்கை வைத்தக்கொண்டு, சூரிய குலம், சந்திர குலம் என்பவற்றின் உறபத்திக்கு ஆண் பெண் வேண்டி யிருந்தமை போல இதற்கும் வேண்டுமென்று கருதிய யாரோ கட்டியதொன்றாகும். கட்டியவரது கல்வி, மறவர் முதலிய பெயர்க்குப் பொருள் காணலாகாத அளவினதாகும். இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தார் என்பதில் ஓர் குறைவு இருப்பதாகக் கருதி இங்ஙனம் கூறுககின்றே மல்லேம். உலகத்தின் படைப்பையும், சூரிய சந்திர வமிசங்களின் தோற்றத்தையும், வசிட்டராதி முனிவர்களின் பிறப்பையும் நோக்குங்கால் அவையாவும் இழிவுள்ளனவாகவே நமக்குத் தோற்றுதல் கூடும். தமிழர்களாய இவர்களை இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தவர்களென்று கூறுவது சிறிதும் சரித்திர இயல்படையதாகா தென்பதே நம் கருத்து. அகலியை வரலாறு கூறும் இராமாயணம் முதலியவற்றில் கள்ளர் முதலியோரின் பிறப்புக் கூறப்பட்டிருக்குமேல் அது சரித்திர மாகாவிடினும் ஒருவாறு மதிப்பிற்குரியதாகும். அங்ஙனமின்றி யாரோ அறிவிலார் கட்டிவிடுவதெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ளத்தகும்?

இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சிவபிரான் உமாதேவிக்கும்,
அகத்தியர் புலத்தியர்க்கும், சூதபுராணிகர் நைமிசவன முனிவர் கட்கும் கூறியனவாம். இவற்றின் சிறப்பையும் மதிப்பையும் இங்கெடுத்துக் கூறுதல் மிகை. இந்திரன் அகலியைபால் விருப்பங்கொண்டதை யறிந்த இந்திராணி தன் சாயையால் அகலியை போலும் அழகுடைய மோகனாங்கி என்பாளைப் படைத்திட, இந்திரன் அவளைச் சேர்ந்து கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் பூவிந்திரர் மூவரைப் பெற்றனனென்றும், அவர்கள் தமிழ்நாடு மூன்றுக்கும் அரசராயினார்கள் என்றும் அப்புராணங்கள் கூறும். இவையும் இந்திர குலம் என்னும் பெயர் வழக்கிலிருந்து தோன்றியவை யென்பது கூறவேண்டியதில்லை. இவைகளிலிருந்து, நெருங்கிய சம்பந்தமுடையராய், இந்திர குலத்தினரென வழங்கப் பெற்று வந்திருக்கின்றனர். என்ற அளவு உண்மையெனக் கொள்ளலாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:22 am

இனி, ஏறகுறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின்முன்பே இந்திரகுலம் என்னும் வழக்குண்மை வெளியாகின்றது. சாவக நாட்டிலே நாகபுரத்தில் இருந்து அரசு புரிந்த பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் நாக அரசர்களை இந்திர குலத்தார் என மணிமேகலை கூறுகின்றது. சூரிய சந்திர வமிசங்களைக் காட்டு தற்கும் மணிமேகலையினும் பழமையான சான்று தமிழில் இல்லை. இங்ஙனம் மிகப் பழைய நாளிலே இந்திர குலத்தின ரெனப்பட்ட நாகரது வழியிலே அல்லது நாகராய பல்லவர் வழியிலே வந்தமையால் கள்ளர்கள் இந்திர குலத்தினரென்று வழங்கப்பட்டாராதல் வேண்டும். அன்றி, சோழர்களே இந்திரன் வழியினரென்பது ஒரு சாரார் கொள்கை.

இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, ‘சுராதி ராசன் முதலாகவரு சோழன்” எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.

இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:23 am

இவ்வாற்றால் பண்டுதொட்டு வழங்கியுள்ள இந்திரகுலம் என்னும் வழக்கும் இவ்வகுப்பினர்க்குப் பொருத்தமான தென்றே ஏற்படுகிறது. கள்ளர், இந்திர குலத்தார், தேவர், அரையர், நாடாள்வார் என்னும் இவ்வைந்தும் இவ்வகுப்பினரைக் குறிக்கும் பொதுவான பெயர்களாகும், இவற்றுள்ளும் அரையர் என்பது பல பட்டங்களோடும் கலந்திருத்தலானும், சரித்திர ஆதரவுடைமையானும் முற்றிலும் பொருந்தியதோர் பொதுப் பெயராகக் கொள்ளற்பாலது.

இரண்டாம் பாகம் முற்றும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:31 am

கள்ளர் சரித்திரம்

மூன்றாம் அதிகாரம்

அரையர்களின் முற்கால நிலைமை


கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந் தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் இவர்களின் அப்பொழுதைய நிலைமையை இங்கு வேறாக எடுத்துக் கூறவேண்டுவதின்று. இன்னவரின் ஆட்சி நிலை குலையத் தலைப்பட்டதன் பின்பு இருந்துவந்த நிலைமையே இங்கே ஆராய்தற் பாலது. இவ்வாராய்ச்சிக்கு இவர்களுக்குள் வழங்கும் கிளைப் பெயர்கள் பெரிதும் உதவி புரிவனவாகவுள்ளன. பழைய தமிழ்ச் சங்க நாளிலே இப்பொழுது வழங்குவன போன்ற பல பட்டப் பெயர்கள் மக்களுக்கு வழங்கவில்லையென முன்பே கூறியள்ளாம்.

இப்பெயர்களின் தோற்றங்களை ஆராயுமிடத்தே இவையெல்லாம் அவரவர் இருந்த நாடு பற்றியும். பிறநாடுகளை வென்று கைக் கொண்டமை பற்றியும், படைத்தவைராகவோ, படைவீரராகவோ இருந்தமை பற்றியும், நாடாட்சி முதலியன பற்றியும் இடைக் காலத்தே உண்டாயின என்பது விளக்கமாம்.. இங்ஙனம் ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொருவர்க்கும் உண்டாகிய இப்பெயர்கள் பின்பு அவர்களின் வழியில் வந்தோர்க்கெல்லாம் வழங்கு வனவாயின. விஜய நகர அரசர்கள் தம் படைத்தலைவர்களைப் பல இடங்கட்கு அனுப்பினர். படைத்தலைவர் என்ற பொருளில் நாயக் அல்லது நாயக்கர் என்ற பெயர் அப்பொழுது அவர்கட்கு உரியதாயிருந்தது.

இப்பொடுது அப்பெயர் ஓர் பெருங்கூட்டத்தினையே குறித்து நிற்பது காண்கின்றோம். முதலி என்னுஞ் சொல்லும் படைத்தலைவன் என்னம் பொருளது எனச் சாசன அராய்ச்சியாளர் கூறுகின்றனர். படையாட்சி என்பது படையை ஆள்பவன் அதாவது படைத்தலைவன் என்னும் பொருளதாதல் வெளிப்படை. பெரிதும் பிற்காலத்திலுண்டாய சாஸதிரி, தீக்ஷிதர், குருக்கள், ஓதுவார் முதலிய பெயர்களும் இப்பொழுது குலப் பெயராக வழங்குதலையும், அவர்களில் பலர் இப்பெயர்களின் பொருட்குச் சிறிதும் பொருத்தமில்லாத திருத்தலையம் காண்கின்றோம், கள்ளர்களின் பல பட்டங்களைக் குறித்து யாம் எழுதுவதும் அவர்களது பழைய வரலாறு தெரிவிப்பதற்கே யன்றி இப்பொழுதை நிலைமை கருதியன்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:32 am

ள்ளர் வகுப்பினர்க்கு வழங்கும் பட்டங்களை இப்புத்தகத்தின் இறுதியிற் காணலாம். யாம் அறியலாகாத பட்டங்கள் பல இன்னம் இருத்தல் கூடும். வேறு எவ்வகுப்பினுள்ளும் இத்துணை மிகுதியான பட்டப்பெயர்கள் இருப்பதாக யாம் விசாரித்தவளவில் வெளியாகவில்லை. அங்கராயர், அரசாண்டார், ஈழத்தரையர், உலகம்பாத்தார், உறந்தைராயர், கலிங்கராயர், காடவராயர், குச்சராயர், கொங்கரையர், கொல்லத்தரையர், சீனத்தரையர், சேதிராயர், சோழகர், தஞ்சைராயர், நாடாள்வார், நாட்ரையர், பல்லவராயர், பாண்டியர், மழவராயர், முனையதரையர், மூவரையர், விஞ்சைராயர், வில்லவராயர் முதலிய பெயர்களெல்லாம் நில ஆட்சியில் இவர்க்களுக்குள்ள சம்பந்தத்தைப் புலப்படுத்துகின்றன. ஈழங் கொண்டார், கடாரந்தாங்கியார் முதலிய பெயர்கள் இவர்கள் பிற நாடுவென்று கைப்பறினைமையைக் குறிப்பிடுகின்றன. களத்துவென்றார், களமுடையார், கொற்றப்பிரியர், கோதண்டப்புலியர், யுத்தப்பிரியர், வாள்வெட்டியார் முதலிய பெயர்கள் இன்னவர் படைவீரராயிருந்தமையைத் தெரிவிக்கின்றன.

இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.

இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:- அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.
இவையும் கள்ளர்க்குரியனவாயிருப்பினும் இருக்கலாம். இப்பட்டங்கள் உடையார் எங்கிருக்கின்றன ரென இப்பொழுது எமக்கு அரியவாராமையால் இவை இன்னார்க்குரியவெனத் துணிந்துரைக்கக் கூடவில்லை. மன்றாடி என்பது கொங்கு வேளாளர்க்குள் வழங்குகின்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:36 am

கோயில்களுக்கு நிலம் முதலியன தானஞ் செய்தவிடத்தும், அரசர்கள் சில தீர்ப்புச் செய்த விடத்தும் கீழே கையெழுத்திட்டோரின் பெயர்களாக இப்பட்டங்கள் கல்வெட்டுகளிலே காணப்படுகின்றன. இதிலிருந்தே இப்பெயர்களையுடையோர் சற்று உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதலாகும். இவர்கள் அமைச்சர் முதலானோராயிருந்தமையைக் கல்வெட்டுகள் வெளிப்படையாகவும் கூறுகின்றன.

‘திருமந்திரவோலை வானவன் பல்லவ தரையன் எழுத்து’ திருமந்திரவோலை நாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து. அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர ஐயமுரி நாடாள்வான் எழுத்து. வீரராஜேந்திர மழவராயன் எழுத்து’ (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி 3, பகுதி1, பாகம் 40) என்று இங்ஙனம் பல விடங்களில் வருகின்றன. திருமந்திரவோலை என்பது அமைச்சர்க்கும், திருமந்திரவோலலை நாயகம் என்பது முதலமைச்சர்ககும் உரிய பெயர்களாகும் இது சாசன ஆராய்ச்சியாளரின் துணிபு.

11,12 வது நூற்றாண்டுகளில் எழுந்த தமிழ் நூல்களிலிருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலைமை வெளிப்படுகிறது. கருணாகரத் தொண்டைமான் முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சன் என்பது கலிங்கத்துப் பரணியால் வெளிப்படை .

விக்கிரம சோழனுலாவில்
‘முன்னம்
குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி
மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல்
ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுட்
பார்க்குமதி மந்திர பாலகரிற்–போர்க்குத்
தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடிக்
கொடுத்த புகழ்முனையார்கோனூமுடுக்கரையும்
கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும்
கங்கரையு மேனைக் குடகரையும்- தங்கோன்
முனியும் பொழுது முரிபுருவத் தொடு
குனியுஞ் சிலைச்சோழ கோனும்……….
அடியெடுத்த வெவ்வே றரசிய வீரக்
கொடியெடுத்த காலிங்கர் கோனும்-கடியரணச்
செம்பொற் பதணச் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன்
கம்பக் களியானைக் காடவனும்’

என்று வருதலானும் இன்னோர் நிமை புலனாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:36 am

சோழ ஆட்சி நிலைதளரந்த பின்பு கள்ளர்கள் இந்நாட்டைக் கூற்றங்களாகவும், நாடுகளாகவும் பிரித்துத் தன்னரசுகளாக இருந்து ஆண்டிருக்கின்றனரென்பதும், அங்ஙனம் ஆண்டவர்கட்கு அரையர், நாடாள்வார் என்னும் பெயர்கள் வழங்கின வென்பதும் முன்பு காட்டப்பட்டன. சர்க்கரைப் புலவரின் வழித்தோன்றலாய திருவாளர், சர்க்கரை இராமசாமிப் புலவரவர்களின் வீட்டில் இருந்த தொரு மிகப்பழைய ஏட்டில் ஏழு கூற்றமும், பதினெட்டு நாடும், ஏழு கூற்றத்திற்கும் ஏழு ராயரும் கூறப்பட்டுள்ளன, கூற்றமும், நாடும் பின்காட்டப் பெறும். ராயர் எழுவராவார்: சேதிராயர், கலிங்கராயர், பாணாதிராயர், கொங்குராயர், விசையராயர், கனகராயர், கொடுமளூர்ராயர் என்போர்.

திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறகின்றது:

‘ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது…………..(தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2 , பக்கம் 168).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:36 am

இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ‘ அரையன் மகன்’ என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில் ‘இவன்’ உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்’ என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.

ஸ்ரீரங்கத்திலுள்ள ஓர் கல்வெட்டிலிருந்து, அங்கிருந்த கைக் கோள முதலிகள் சிலர் அவ்வூர் தலைவராகிய அகளங்க நாட்டாள்வார் உயிர் துறக்க நேரும்பொழுது தாமும் உடன் உயிர் துறப்பதாகப் பிரதிஞ்ஞை செய்து கொண்டனர் என்னும் செய்தி வெளிப்படுகிறது. குருபரம்பரை, இராமநுஜ திவ்யசரிதை இவ்விரு பிரபந்தங்களிலும் அகளங்க நாட்டாள்வான் இராமாநுஜரது சீடனாகக் கூறப்படுகின்றான். திருச்சிராப்பள்ளியில் இன்றும் நாட்டாள்வார் என்று, கள்ளரில் ஒரு வகுப்பினர் இருக்கின்றனர். இப்பெயர் தற்காலம் நாடாவார் என மருவி நிற்கிறது. (செந்தமிழ், தொகுதி 3, பக்கம் 252) இங்ஙனம் எத்தனையோ பல சான்றுகள் இவர்களது பழைய ஆட்சி நிலையைக் குறிப்பனவாகவுள்ளன.

Sponsored content

PostSponsored content



Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக