புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
426 Posts - 48%
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
299 Posts - 34%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளர் சரித்திரம்


   
   

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:27 am

First topic message reminder :

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் இங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:34 am

“இலங்கைத் தீவின் சரித்திரமெல்லாம் தொடக்கத்தில் நாகரைப்பற்றியே கூறும். கி.மு. ஆறாவது நூற்றாண்டில் இத்தீவின் குடபாலெல்லாம் நாகர் ஆளுகையில் இருந்ததெனவும், அதுபற்றியே இதற்கு நாகத்தீவம் என ஓர் பெயர் வழங்கிற்று எனவும் முன்னூல் மேற்கோள்களால்அறியப்படுகிறது. கல்யாணி நகரந்தான் நாகரது தலைநகர். கல்யாணி யரசன் தங்கை மகள் கனவடமாறோலை யரசனாகிய ஒரு நாகனுக்கு மணஞ்செய்விக்கப்பட்டாள். இம்லை, கல்யாணிக் கெதிரில் இந்தியக்கரையில் இக்காலத்து இராமேச்சுரத்திற்கு அருகேயுள்ள கந்தமாதனக்குன்றமாக இருக்கும் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு .

இப்பொழுது அமராவதி முதலிய இடங்களில் காணப்படும் சிலைகள் பின்புறத்திற் படம் விரிந்த பாம்பின் தலையுடையனவாய் நாகரைக் குறிப்பனவாக உள்ளன. அமராவதிப் பாழ்களிலிருந்து எடுக்கப்பட்ட இச் சிலைகளன் சில பினனங்களைச் சென்னையிற் பொருட்காட்சி மன்றத்தில் காணலாம். இச்சிலைகளில் அரசர்க்கு மூன்று படமும், அவர் மகளிர்க்கு மூன்று படமும், மற்றை நாகர்க்கு ஒற்றைப்படமும் காணப்படும். தொழில் திறம் பொருந்த இச்சிலைகளையியற்றிய சிற்பிகள், இந்நாகரை அரவின் தன்மை வாய்ந்து மக்களுருவமும் பாம்புஉருவமும் கலந்த மெய்யினரென்றே நினைத்தனர் போலும்.

பண்டைக்காலத்துத் தமிழ்ப்புலவர்களும் இவ்வாறே எண்ணம் கொண்டிருந்தனர். தம் காலத்து நாகரை மக்கட்பிறப்பினராய்க் கூறி, தமக்கு முற்பட்ட காலத்தவரை உலகின் கீழ்ப்பாதலத்து உறைவோராய்க் கூறியிருக்கின்றனர். சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தின் தொன்மையையும், செல்வப் பெருக்கையும் குறித்தற், இளங்கோவடிகள், “நாக நீணகரொடு நாக நாடதனொடு, போகநீள் புகழ் மன்னும் புகார் நகர்” என்று கூறுவர். ஆகலின், ஆயிரத்தெண்ணூறாண்டுகளின் முன்பிருந்த தமிழரது நினைப்பில் நாகரினும் தொன்மையான நாடாண்டோர் உண்டென்ற கொள்கையிருந்ததாக் கொள்ளுதற்கில்லை” என்பன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:35 am

இவையெல்லாம் சரித்திவுண்மை நிறைந்த கூற்றுக்கள் என்பதில் ஐயமில்லை, மேற்காட்டியவற்றிலிருந்து, நாகரென்பார் இந்திய நாட்டிலும், இந்தியாவின் தெற்கிலும் கிழுக்கிலும் உள்ள தீவுகளிலும் மிகப்பழைய நாளில் வாழ்ந்து வந்த மக்களென்பதும், சூரிய சந்திர குலத்துப் பேரரசராயினரும் இவ்வகுப்பினருடன் கல்யாணத்தாற் கலந்திருக்கின்றனரென்பதும் இன்னவர் நாகரிகத்தில் மிக மேன்மையுற்றிருந்தவர் என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

இங்ஙனம் பல்வேறிடங்களில் வாழந்துவந்தவர்கள் நாகர் என்னும் ஒரே பெரால் வழங்கப்படிருப்பினும், அவரெல்லாம் நாகரிகம் மிக்குடையார் என அறியப் படினும் அவர்களுக்குள் எவ்வகைப்பிரிவும் இல்லை அவர்கள் ஒழுக்கங்களில் ஏற்றத்தாழ்வில்லை என்று கூறுதல் தலைமையானது.

காவிரிப் பூம்பட்டினத்திலிழருந்த சாதுவன் என்னும் வணிகன் கப்பலேறிப் பொருள் தேடச் செல்லுங்கால் இடையே கப்பலுடைந்து நிற்க , ஒருவாறு உயிர் பிழைத்து அருகிலுள்ள நாகர் மலையை அடைந்து, அங்குள்ள நக்க சாரணர் என்னும் நாகர்களுக்கு நல்லறிவு கூறி அவர்களைத் தீ நெறியினின்றும் நீங்குவித்து மீண்டனன்; என மணிமேகலை கூறுவதாலும் இஃதறியலாகும். எனினும், புத்த மதத்தின் மேன்மையை உணர்த்து வதற்குப் பிரைச் சிறிது தாழ்த்துக் கூறியிருப்பதாக இவ்விடத்துக் கருதுதலும் இழுக்கன்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:35 am

நாகநாடு, நாகபுரம், நாகர்மலை, என்ற இடங்கள் மணிமேகலையிற் கூறப்பட்டுள்ளன. நாகநாடானது, “கீழ் நில மருங்கின் நாகநாடு” என்றும், “நாக நன்னாட்டு நானுறி யோசனை” என்றும் கூறப்பட்டிருத்தலின் அஃது இந்தியாவின் கிழக்கேயுள்ள ஓர் பெரிய நிலப்பரப்பு என்பது பெறப்படும், ஒருகால் அது நாகப்பட்டினத்தைத் தொடர்நது கிழக்கேயிருந்து கடல் கொள்ளபட்டிருப்பினும் இருக்கலாம். சோழனொருவனை மணம் புணர்நத பீலிவளையின் தந்தையாகிய வளைவணன் என்னும் அரசனால் ஆளப்ட்டது நாக நாடு என்பது முற்கூறிய நாக நாடோ, பிறிதொன்றோ தெரியவில்லை. நாகபுரம் என்பது தெற்கிலுள்ள தீவாகிய சாவக (ஜாவா) நாட்டின் தலைநகர்; இந்திரன் குலத்தில் வந்தோரான பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் வேந்தர்களுக்கு இருப்பிடமானது.

இனி, இதுகாறும் காட்டிப் போந்த வற்றுள் ஒன்றேனும் வட வேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழகத்துள் வாழ்ந்தோரைக் குறிப்பதாகக் கொள்ளுதற்கு தவறு இல்லை. தமிழக மக்களைத் தெரிந்து கொள்வதற்குப் பழைய தமிழ் நூல்களே சிறந்த கருவியாகும். அவற்றுடன் சேர்ந்தே பிறவும் கருவியாக அமையும். ஆகவே அவற்றைத் துணையாகக்கொண்டு தமிழர் என்பவர் யார் என்று பார்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:36 am

திராவிடம் என்ற சொல்லானது தமிழ் எனத்திரிந்த தென்று ஒரு சாரரும், தமிழ் என்னும் சொல்லே திராவிடமாயிற்று என மற்றொரு சாரரும், திராவிடம் என்பது நாட்டின் பெயர், தமிழ் என்பது மொழியின் பெயர் எனப் பிறிதொரு சாரரும் இங்ஙனம் பலபடக் கூறுவர். கனகசபைப் பிள்ளையவர்களோ இருசொல்லையும் இயைபில்லாத வேறு வேறு எனக்கொண்டு திராவிடர் வேறு, தமிழர் வேறு என்பர். அவர், திராவிடர் முன்னும், தமிழர் பின்னுமாக இந்நாட்டிற்கு குடியேறினர் என்பதன்றி, திராவிடராவார் இவர், தமிழராவார் இவர் என விளங்க உரைத்திலர். கங்கைக் கரையிலுள்ள தமிலித்தி என்ற இடத்திலிருந்து போந்தவர் தமிழர் என்கின்றனர். தமிழர் வடக்கினின்றும் போந்தவரென்பது நிறுப்படும் பொழுது அவர் கூற்று உண்மையாகலாம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் உறைவிடம் தமிழகம் ஆய தென்னாடேயென்பதும், அவர்கள் ஓரொருகால் வடக்கிலும் சென்று ஆண்மை காட்டிருக்கின்றனர் என்பதும் நாம் காணும் உண்மையாகும். தமிழ் என்னுஞ்சொல் தொன்றுதொட்டு மொழியின் பெயராகவும், நாட்டின் பெயராகவும் வழங்கி வருகின்றது. திராவிடம் என்னுஞ் சொல் பழைய தமிழ் வழக்கிற் காணப்படுவதன்று. திராவிடம் என்பதன் திரிபு தமிழ் என்பது சிறிதும் பொருத்தமில்லாத கூற்றாகும். அது நிற்க:-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:36 am

இப்பொழுது இந்தியாவிற்குத் தெற்கிலுள்ள இந்துமாகடலானது ஓர் காலத்து ஒரு பெரிய நாடாக விருந்த தென்றும், அந்நாட்டில் தான் முதல் முதல் மக்கள் தோன்றிப் பின் பல நாடு கட்கும் சென்ற ரென்றும் செருமானய நாட்டு ஆசிரியராகிய எக்கல் என்பவர் தமது ஆராய்ச்சியால் கண்டு கூறுகிறார். அங்ஙனம் இருந்து அழிவுற்ற நாட்டினைக் குமரிக் கண்டம் என்றும், இலமூரியா என்றும் பிற்காலத்தார் வழங்குவராயினர். குமரிக் கண்டம் என்பது வடக்கில் விந்தியமும் தெற்கில் தென் கடலும், கிழக்கில் சாவகத்தீவும், மெற்கில் மடகாசிகர் தீவும் எல்லையாகவுடையது என்பர். இஃது அழிவுற்றதை மேற்புல ஆசிரியர் பலர் வலியுறுத்துரைக்கின்றனர், கலித்தொகை, சிலப்பதிகாரம், இறையனார் அகப்பொருளுரை முதலிய பழைய தமிழ் நூல், உரைகளாலும் இவ்வுண்மை புலனாகின்றது. தென்புவியில் முதன் முதற் தோன்றியவர்களே தமிழரென்பதும், அதன் பின்னர் பல நாடு கட்கும் முறையே குடியேறினரென்பதும் கருதக் கிடக்கின்ற உண்மைகளாகும். முதன் மக்களின் தோற்றத்திற்கு நெடுங்காலம் பின்ரே தமிழகம் அல்லது தமிழ்நாடு என்ற வரையறை ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

‘சதுமறையாரியம் வருமுன் சகமுழுதும்நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பமே’


என்று அறிஞர் சுந்தரம் பிள்ளை யவர்கள் கூறியிருப்பதிலிருந்து தமிழ் இந்தியா முழுவதும் வழங்கியதென்பது அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிபு என அறியலாகும். பின் ஒரு காலத்தில் தமிழகமென்பது தென்னிந்தியா முழுதுமாயிருத்தல் வேண்டும் . எனினும்இவையெல்லாம் காலங்கடந்த செய்திகளாதலின் இவற்றை விடுத்து. வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழகத்து மக்களைக் குறித்து ஈண்டு ஆராய்வோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:36 am

புவியானது மலையும், காடும், பள்ளத்தாக்கும, கடற்கரையுமாகப் பகுக்கப்படுதலின் நானிலம என்று வழங்கப்படுவதாயிற்று. மலையும் காடும் சாந்த விடம் கால வேற்றுமையால் திரிந்து சுரமாதலும் உண்டு. ஆகையால் நிலம் ஐந்துஎனவும் படும், இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனத் தமிழ் நூல்கள் கூறும். இவற்றிலுள்ள மக்கள் அங்கங்கே பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் அந்த நிலங்களின் இயற்கைப் பண்புகளுக் கேற்ப அவர்களுடைய குணம், தொழில், பெயர் முதலியனவும் வேறுபடுமாகலின் மக்கள் ஐந்துவகுப்பினராயினர். இவையே இயற்கையின் உளவாய வேற்றுமையாகலின் தமிழ் நூல்கள் இப்பாகு பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நிகழா நிற்கும். தமிழின் தென்மைக்கு இஃதோர் சான்றாதல் அறிக.

இவர்களுள், குறிஞ்சி நிலமக்கள் குன்றவர், வேட்டுவர் முதலிய பெயர் பெறுவர். முல்லை நிலமக்கட்கு ஆயர், இடையர் முதலிய பெயர்கள் வழங்கும். பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெர்களால் வழங்கப் பெறுவர். மருத நிலத்தினர்க்குக் களமர், உழவர் முதலியன பெயர்களாம். நெய்தனில மக்கட்கு நுளையர், பரதவர் முதலிய பெயர்கள் உள்ளன. மிகப்பழைய நாளில் தமிழகத்தில் இருந்த மக்கள் இவர்களே. இவர்களுள் குறிஞ்சி நிலமக்கள் வலியும், வீரமும் இயல்பிலே மிக்குடையராகலின் ஏனையரை அடக்கியாளும் பெற்றியும் உடையராயினர். இன்னவரே ” கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு - முன்தோன்றி மூத்தகுடி” என்று கூறப்படுதலும் காண்க. எனினும் நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர். தமிழருள்ளே பதிணென்குடி உண்டேன்பது உலக வழக்கால் அறியலாவது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:37 am

இவ்வற்றால் தமிழகத்தேயிருந்த இவரெல்லம் தமிழ ரெனப்பட, தமிழகத்தைச் சூழவிருந்த பல திறத்தாரும் நாகரென வழங்கப்படுவராயினர் என்க. தமிழரும், நரகரென்பாரும் இடத்தால் வேறுபட்ட வரேயன்றி, பிறவற்றில் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவரல்லர். தமிழரது மொழியும், நாகரது மொழியும் இடம்பற்றிச்சிறிது வேற்றுமையடைந்திருந்த தமிழே யன்றிப்பிறிதன்று. காவிரிப்பூம் பட்டினத்தலிருந்து நாகர்மலையை அடைந்த சாதுவன் என்னும்வாணிகன்அங்கிருந்த நாகர்களோடு அவரது மொழியிற்பேசினான் என மணிமேகலை கூறுவதும் இக்கருத்திற்கு சார்பாதல் காண்க.

தெலுங்கு, கன்னடம் என்னும் மொழிகள் தமிழினின்று உண்டானவை என்னுங்கொள்கை அங்கெல்லாம் முதலில் வழங்கிய மொழி தமிழ் என்பதனைப் புலப்படுத்தும். தமிழானது இங்ஙனம் வெவ்வேறு மொழியைப் பிறப்பித்துவிட்டுத் தான் ஓர் எல்லையுட் பொருந்தி நிற்க, பின்பு அதன் கண்ணும் வேற்றுமை உண்டாகிச் செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாடுகளாயிற்று. நெடுங்காலஞ் சென்றபின் ஒரு புறத்திருந்துகொடுந்தமிழ் வேறு மொழிகளாக மாறி மலையாளம் எனப்பட்டது.

ஐந்திணை மக்களுள்ளே சிலரைத் திராவிடரென்றும், சிலரை நாகரென்றும் ஒரு சாரார் கூறுவது எத்துணையும் பொருந்துவதன்று. “நாகரில் மறவர், எயினர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர், பரதவர் என்ற பல கிளைகளுண்டு; இக்கிளைகளுள் மிக்க வன்மையும், போர்த்திறனுமுடையராய்த் தமிழர்களிடத்திற் தீராப்பகை கொண்டிருந்தவர் மறவரே” என இவ்வாறு கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுவதன் காரணம் நமக்குப் புலப்படவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:38 am

ஒளியர், அருவாளர், ஓவியர் என்போர் சில குறுநில மன்னரெனப் பட்டினப்பாலை முதலிய வற்றால் அறியலாவது. அவர்களை நாகரென்று கூறிற் கூறுக. ஒருவாற்றால் அவரும் தமழழரே, மறவர், எயினர், பரதவர், என் போரை நாகரென்று கூறுவதும், மறவர் தமிழருடன் பகைமை கொண்டிருந்தன ரென்பதும் எங்ஙனம் பொருந்தும்? இவ்வாறாறால் தமிழர், நாகர் என்ற இருபாலோரும் தமிழகத்திலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பழங்காலந் தொட்டிருந்து வந்த தொன்முது மக்கள் என்பது கடைப் பிடிக்க. எனவே, இடைக்காலத்தே இந்நாட்டில் குடியேறியவர் ஆரியரென்பதும் ஈண்டே அறியற்பாலது. ஆரியரின் வருகையைப் பற்றியும் சிறிது கூறுதும்.ஆரியர்கள் ஆதிகாலத்தில் நடு ஆசியாவில் வசித்தவரென்பதும், அவர்கள் அங்கிருந்து இந்தியா, பெருசியா ஐரோப்பா முதலிய இடங்கட்குப் பிரிந்து போயினரென்பதும் சரித்திரக்கார் கொள்கை. ஆரியர் முதலில் வடபெருங்கடற்கரையில் அதாவது வடதுருவப்பககத்தில் வசித்தவரென உலகமானிய பாலகங்காதரதிலகரால் முடிவு செய்யப்பெற்றுள்ளது.

இவ்விருகொள்கையும் ஒன்றாக அடக்கிக் கொள்ளினும், ஆரியரது தோற்றம் பற்றி முற்றிலும் வேறுபட்ட இருகொள்கைள் முன்னிற்கின்றன. இந்தியாவிற்குத் தெற்கிழக்கிலிருந்து ஒரு காலத்தில் அழிவெய்திய குமரிகண்டத்தில் மக்கள் முதற்கன்தோன்றின ரென்பது ஒன்று. இக்கொள்கையின்படி தெற்கெ தோன்றி முதன் முதலில் வடக்கே சென்றுவிட்டவர் ஆரியர் என என்னல் வேண்டும். மத்திய ஆசியாவிலோ வடதுருவப்பக்கத்திலோ முதலில் தோன்றினர் என்பது மற்றொன்று.

இவற்றுள் யாதேனும் ஒன்று உண்மையொ? அன்றி இரண்டும் உண்மையோ? எவ்வாறாயினும் ஆரியர் வடக்கிலிருந்து இந்தியாவில் குடியேறியவரல்லர் என வாதிப்பாரும் உண்டு. எனினும் அவர் தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் குடியேறியவர் இல்லை என மறுப்பார் யாரும் இலர். முதலில் அவர்களிடத்தும் சாதிப் பாகுபாடு இருந்ததில்லை யெனவும், பின்னரே பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற வருணப்பாகுபாடுகளை ஏற்படுபடுத்திக் கொண்டனர் எனவும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:38 am

வருணம் என்பது நிறத்தைப்பற்றி உண்டாய பிரிவு என ஒரு சாரார் கூறுகின்றனர். மக்களின் குண கர்மங்களுக்கு ஏற்றபடி நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டன வென்று கண்ணபிரான் கூறியதாகப் பகவத்கீதை உரைக்கின்றது. இக்காலத்துப் பெரியோர்களாகிய காந்தியடிகளும், இரவீந்திரநாததாகூரும் முறையே வருணப் பாகுபாடு அறிவு நூற் கொள்கையோடு பொருந்தியது எனவும், பொருந்தாது எனவும் வேறுபடக் கருதுகின்றனரெனத் தெரிகிறது. எங்ஙனமாயினும் ஆதியில் இந்தகைய பாகுபாடுகளை ஏற்படுத்தி நெடுங்காலம் நிலவச் செய்தவர்கள் பேரறிவுடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.

உலகியல் முட்டின்றி நன்கு நடைபெறுதற்கு இம்முறை இன்றியமையாததென அன்னார் கருதினர் போலும்? மிக ஏற்றத் தாழ்வான சட்டதிட்டங்கள் நீண்ட காலஞ்சென்ற பின்பே கற்பிக்கப் பட்டிருத்தல் வேண்டும். இப்பிரிவு ஏற்பட்ட பின்னும் ஒரு வருணத் தான் மற்றோரு வருணத்தில் கல்யாணஞ் செய்து கொள்ளுதலும் இயல்பாகவே இருந்தது. சூத்திரன் ஒழுக்கத்திற் சிறந்த பிராமணன் ஆவதும், ஒழுக்கத்தின் வழுவிய பிராமணன் சூத்திரனாலவதும் அப்பொழுது இயற்கையே. ஆரியர் இங்ஙனம் வடக்கிலிருக்கும் பொழுது தமிழகமானது நாகரிகத்தில் ஆரியநாட்டினும் விஞ்சியேயிருந்தது, ஆரியர் தமிழருடன் மாறுபாட்டுணர்ச்சி கொண்டு எழுதிய நூல்களிலும் தமிழர் நாகரிகம் மிகுத்துக் கூறப் பட்டிருக்கிறது. ” ஆரியர் வருவதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிக மடைந்து விட்டன ரென்பதை, ஆரியத்தினுதவியின்றியே பெருக்கமாய்க் கிடக்கும் தமிழ்ச் சொற்களாலே நினைத்தவற்றைத் தெளியக் கூறும்படி யிருப்பதே விளக்கும்.

உணமையில் நிலைபெற்ற பழைய தமிழ் நூல்களில் இசை, இலக்கணம், சோதிடம், தத்துவம் முதலிய பயிற்சிகளுக்கு வேண்டிய சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே காணப்படுகின்றன. ஆகையால் பிரமணரோ அல்லது மற்றை ஆரியர்களோ வருதற்கு முன்னரே இக்கல்விகள் போற்றி வளர்க்கப்பட்டன என்பது திண்ணம்” என்று கனகசபைதப்பிள்ளயைவரக்ள கூறுவது முற்றிலும் உண்மையாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:39 am

தமிழகத்தின் நாகரிகமும், செல்வப் பெருக்கும் அன்றோ ஆரியமக்கள் அதன் கட் குடிப்புகும்படியான பேரவாவை யெழுப்பிவிட்டன. ஆரியர் எப்பொழுது தமிழகத்தில் குடிப் புகுந்தனரென இப்பொழுது அறுதியிட்டுரைக்கக் கூடவில்லை எனினும் நெடுங்காலத்தின் முன்பே புகுந்துவிட்டனரென்பதற்குத் தமிழ் நூல்களே சான்று பகரும். முதலில் பிராமணர் அல்லது நோன்பிகளே வந்து கொண்டிருந்தனர். தமிழ் நாட்டிலுள்ள தெய்வத் தலங்களையும், தீர்த்தங்களையும் நோக்கி அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பதே அன்னாரது தொழில். இப்பொழுதும் தண்டு, கமண்டலம் முதலியன கைக்கொண்டு இராமேச்சுரம் முதலிய வற்றிற்குச் சென்று வருகிற வடநாட்டுப் பிராமணரை நாம் பார்க்கின்றோம். பண்டும் இப்படித்தான் சென்று கொண்டிருந்தாராவர். பின்பு அவர்கள் தமிழ்வேந்தரையடுத்துப் பல வழியாலும் அவர்களைத் தம்வயமாக்கி, தம் இனத்தவரை ஒவ்வொரு கூட்டமாகக் குடியேறும்படி செய்துகொண்டனர். தமிழரோ பிரதேசத்தினரை விருந்தேற்றுபசரிக்கும் பெருமாண்பு இயற்கையில் வாய்ந்தவர். அதனோடு, சிறிது அறிவு முதலியன வாய்ந்தாரைக் கண்டால் அவர் எப்படி யொழுகுவரென்பது கூறவேண்டுவதில்லை.

இவ்வாறு ஆரிய மக்கள் தமிழ் வேந்தருடன் கலந்து நட்புச் செய்து கொண்டு, அவருதவியால் தமிழ் நாட்டிலும் நால்வருணப் பாகுபாட்டினை யேற்படுத்தினர். ஒரு நாட்டினர் வேறு நாட்டிற் சென்று செல்வாக்குப் பெற்ற பொழுதில் தமது கொள்கையை அங்கும் நிலை நாட்ட முயல்வது இயற்கைதானே. தமிழகத்தில் அறிவரும், அரசரும், வணிகரும், உழவரும், முன்பே இயல்பாக இருந்தனரெனினும், அன்னார் வேறு வேறு வகுப்பினரென்றாவது. அவர்க்கு இன்னின்ன தொழில்களே உரிய வென்றாவது வரையறை இருக்கவில்லை. ஆரியமக்களே வரையறை ஏற்படுத்தினர். எனினும் ஆரிய நால்வருணத்திற்கும், தமிழ் நாற்குலத்திற்கும் வேற்றுமை பெரிதாகும. ஆரியரில் நாலாம் வருணத்தவர் சூத்திரர் ஆவர்; மேல் மூன்று வரணத்தாரும் ஏவிய செய்தலே அவரவது தொழில், தமிழரில் நாலாம் குலத்தவர் வேளாளர் ஆவர்; அவரது தொழில் உழவு அல்லது வேளாண்மை ஆகும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக