புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 34 of 43 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 38 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 8:13 am

அமலாபால் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டு

அடிக்கடி கால்ஷீட் மானேஜர்கள் எனப்படும் காரிய தரிசிகளை மாற்றுவதையும், தான் நடித்த பட கம்பெனியின் அடுத்தடுத்த பட விழாக்கள் என்றால் கூட கலந்து கொள்ளாமல், கடுக்காய் கொடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளார் வளர்ந்து வரும் நடிகை அமலாபால். கூடவே ***தெய்வத்திருமகள் படத்தில் இணைந்து நடித்ததால் சீயான் நடிகருக்கும், அமலாவுக்கும் ஒரே இது... எனும் கிசுகிசுப்பு வேறு கோலிவுட்டை கலங்கடித்து வருவது கவனிக்கத்தக்கது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 8:14 am

காதல் சந்தியா மீண்டு(ம்) வருகிறார்!


காணாமல் போனோர் லிஸ்ட்டில் கிட்டத்தட்ட இடம் பிடித்துவிட்ட காதல் சந்தியா, சப்தமில்லாமல் அடுத்து ஒரு வல்லிய ரவுண்டுக்கு தயாராகி வருகிறாராம். உடம்பைக்குறை என சுற்றமும் நட்பும் தொடர்ந்து சமீபகாலமாக டயட், ஜிம், எக்சைஸ் என உடம்பை ஸ்லிம் ஆக்கி ரொம்பவே மெனக்கட்டு வருகிறாராம் சந்தியா! பாவம்!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 8:15 am

நடிகையின் மானத்தை வாங்கிய லேகிய டப்பா!


சில நாட்களுக்கு முன்பு சோப்பு கம்பெனிக்கு நடிகை தமன்னா ஆப்பு வைத்த விவகாரத்தைப் போலவே மீண்டும் ஒரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. தமன்னா விவகாரத்தைப் பொறுத்தவரை, ராயல்டி எதுவும் கொடுக்காமல் இருந்ததால் தனது படத்தை விளம்பரத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் வழக்கு தொடர்ந்தார். அதில் தடையாணையும் பெற்று விட்டார். ஆனால் இப்போது புதிதாக வந்திருக்கும் விவகாரம் சற்றே வில்லங்கமானதும் கூட!

தாரம் என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் நாயகியான ஸ்வேதா மேனன், அந்த படத்திற்காக தப்பு தப்பாக, தாறுமாறாக ஆடையணிந்து போஸ் கொடுத்திருந்தார். அந்த ஸ்டில்களை ஆண்மைக்குறைவு லேகிய டப்பாவில் அச்சிட்டிருக்கிறார்களாம். திரையுலகில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெற்று முன்னேறுவதற்காக ஆடைகளை துறந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்தபோது போகாத மானம், லேகிய டப்பாவில் அந்த படம் இடம்பெற்றதால் போய் விட்டதாம் அம்மணிக்கு! என் மானமே போச்சு என்று கதறிய ஸ்வேதா சம்பந்தப்பட்ட லேகிய ஆசாமிகளிடம் பல கோடிகள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளரும் தப்பவில்லை இதில். ஏனென்றால் இந்த போட்டோவை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தவரே அவர்தானாம். மானத்தை வாங்கிடுச்சே!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 4:56 pm

கவலையில் ஆர்யா!!

கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் திடீர் வெற்றிடம் ஆகியிருக்கிறது ஆர்யாவின் கால்ஷீட் டைரியில். வரிசையாக அவர் ஒப்புக் கொண்ட படங்களின் ஷெட்யூல் திடீர் கொலாப்ஸ் ஆனதுதான் காரணம். லிங்குசாமியின் 'வேட்டை' படத்தை முடித்துவிட்டு பிரபுசாலமன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தார். அதை லிங்குசாமியே தயாரிப்பதாக இருந்தது. ஆனால் 'மைனா'வையே இந்தியில் இயக்கிக் கொடுங்களேன் என்றார்களாம். தலைவர் இந்தி படிக்க போய்விட்டார். அப்புறம் மிஷ்கின் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருந்தார். அந்த படமும் பட்ஜெட் காரணமாக இழுபறியில் தள்ளாட இடையில் மிஷ்கின்-சிம்பு சந்திப்பு நடந்திருக்கிறது. எனவே ஆர்யா-மிஷ்கின் இப்போது இல்லை என்றாகிவிட்டது. இவ்வளவுக்கு இடையிலும் தானாக ஆர்யாவே போய் கேட்ட வாய்ப்புதான் 'பொன்னியின் செல்வன்'. இந்த ஒரு காரணத்துக்காகவே ஆர்யாவை ராஜாவாக்கினார் மணிரத்னம். கடைசியில் அந்த படமும் கைவிடப்பட்டதாக தகவல். இந்த திடீர் பாறாங்கல் மழை ஆர்யாவின் தேதிகளின் மீதுதானா விழ வேண்டும்? ஆனால் ஆர்யா யாரை கை காட்டினாலும் அவருக்கு பைனான்ஸ் ரெடி என்று கரன்ஸி மூட்டையோடு கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறார்கள் பைனான்சியர்கள். ஆர்யாவுக்கு புடிச்சிருந்தா உடனே அட்வான்சை கொடுத்திரலாம் என்று சுற்றி சுற்றி வருகிறார்கள் தயாரிப்பாளர்.
அப்பறென்ன கவலையாம் ஐயாவுக்கு.....?

TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 4:57 pm

பீரியட் பிலிம் 'வாகை சூட வா'

'களவாணி' படத்தின் வெற்றியை தொடர்ந்து சற்குணம் இயக்கும் அடுத்த படம் 'வாகை சூட வா'. இயல்பான வாழ்க்கையை திரைக்கதை அமைத்து முதல் படத்தில் வெற்றிகண்ட சற்குணம், தனது இரண்டாவது படத்தில் மறைந்து போன நமது பழக்க வழக்கங்களை ஞாபகப்படுத்தப் போகிறாராம். 1966ஆம் ஆண்டு காலகட்டதில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதைதான் படம். அப்போதைய எதார்த்த வாழ்க்கையையும், உணர்வுகளின் அழகியலையும் மிகைப்படுத்தாமல், நகைச்சுவை உணர்வோடு 'வாகை சூட வா' படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் சற்குணம், தொப்புள் கொடி மாலை போட்டு பிறந்த குழந்தையின் முகத்தை எண்ணெய்யில் பார்க்கும் மாமன்காரன், கூண்டுக்குள் கோழி வைத்து நரி பிடிக்கும் வைத்தியர், மழை நேரத்தில் குளத்தில் உள்ள பனைமரத்தில் ஏறும் சன்னை மீன், கழுதையில் உப்பு விற்கும் வியாபாரிகள், அரசாங்கத்தின் தங்கபத்திர வேலைவாய்ப்பு திட்டம் என மறைந்துபோன அடையாளங்களை கண் முன் நிறுத்தி 1966ஆம் ஆண்டின் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறாராம். கருப்பட்டி பாலில் டீ போட்டு விற்கும் ஹீரோயினுக்கும், பி.யூசி., படித்துவிட்டு, வாத்தியார் படிப்பு படிச்சிட்டு வாத்தியார் வேலைக்குத்தான் போகணும் என்று வாழும் ஹீரோவுக்கு இருக்கிற காதல் தான் கதையே. இதில் ஹீரோவாக விமலும், ஹீரோயினாக கேரள புதுவரவு இனியாவும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக அருப்புக்கோட்டை அருகே இரண்டு கோடிக்கு மேல் செலவு செய்து கண்டெடுத்தான்காடு என்ற ஒரு கிராமத்தையே செட் போட்டிருக்கிறார்கள். எதார்த்தமாக அமைந்த அந்த கிராமத்தை உண்மையான கிராமம் என்று நினைத்து போலியோ சொட்டு மருந்துபோட அரசாங்க பணியாளர்கள் வந்துவிட்டார்களாம். அந்த அளவுக்கு எதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த கிராமத்தில், அறுபது குடும்பங்கள், கிட்டத்தட்ட 350 பேர் அந்த கிராமத்தில் ஒரு வாழ்க்கையையே நடத்திவிட்டார்கள். எம்.ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து, அறிவுமதி ஆகியோர் எழுதுகிறார்கள். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ், கலை சீனு, படத்தொகுப்பு ராஜாமுகமது. தயாரிப்பு எஸ்.முருகானந்தம். வரட்டும் சூடிடுவோம்!

TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 4:58 pm

என்ன கவலையோ தெரியல பாவம் புள்ள இப்படி பைத்தியம் பிடிச்சு அழையுது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 4:59 pm

ஹொலிவுட் தரத்திற்கு உயர்ந்த தமிழ் படங்கள

சர்வதேச அளவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பாபேல், அமோரஸ் பெர்ரோஸ், க்ராஷ் ஆகிய படங்களை போல 'கதை சொல்லும்' வகையில் தமிழ் படங்கள் தாவியுள்ளன.

மலையாளத்தில் வெளியா 'ட்ராபிக்' படம் இந்த பாணியில் இருப்பதை ஆழ்ந்து ரசித்த உலகநாயகன் கமல்ஹாசன் தமிழில் இதே படக்குழு உடன் இணைந்து படத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

பலத்தரப்பட்ட கதாப்பத்திரங்களின் கதைகளை ஒரு மைய்ய புள்ளியில் இணைக்கும் பாணியில் மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து', இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'சரோஜா' படம் தற்போது க்ரிஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள சிம்பு மற்றும் பரத் நடித்துள்ள 'வானம்' படம் ஆகியவை அமைந்துள்ளதை கூறியுள்ளார்கள்.

அஜித் நடிப்பில் முக்கியமான கதாபாத்திரங்களை இணைத்து மங்காத்தா படத்தை இதே பாணியில் எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் வெளியான படங்களை உள்ளூர் மொழிக்கு தகுந்த மாதிரியும் ஒரு சில மாற்றங்களை செய்து படமாக்கியும் வெற்றி பெற்றுள்ளார்கள் திரையுலகினர்.

நட்சத்திரங்களை இணைத்து இந்த 'கதை சொல்லும்' பாணியில் வர்த்தக மதிப்புள்ள படங்களை எடுத்தால் வெற்றியடைய அதிக சதவீத வாய்ப்புள்ளதாக கொலிவுட்டில் கருத்து நிலவுகிறது.
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:08 pm

ரசிகர்கள்தான் எல்லாமே...! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி

ரசிகர்கள்தான் எங்களுக்கு எல்லாமே... எங்களை வாழ வைப்பதே ரசிகர்கள்தான் என்று நடிகர் ஜீவா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் கோ படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டருக்கு படத்தின் நாயகன் நடிகர் ஜீவா திடீர் விசிட் அடித்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் பேசிய ஜீவா, சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களுக்கு சென்றால் அந்த மாவட்டத்திற்கு என்று தனி பாஷை இருக்கும். ஆனால் தஞ்சை மாவட்டத்திற்கு என்று தனி பாஷை எதுவும் கிடையாது. சுத்தமான தமிழ் பேசும் ஊர் தஞ்சாவூர் தான். தஞ்சையில் இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது புதிய படங்கள் திரைக்கு வந்தால் 2 வாரத்திற்கு பின்பு தியேட்டருக்கு கூட்டம் வருவதில்லை. ஆனால் கோ படம் திரையிட்டு 16 நாட்கள் ஆகியும் இவ்வளவு கூட்டம் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காமல் தியேட்டருக்கு நேரில் வந்து பார்த்து இருக்கிறீர்கள். நல்ல படம் எடுத்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். ஒரு திரைப்படம் எடுக்கிறோம் என்றால் 200 குடும்பங்கள் அதனால் வாழ்கின்றனர். அவர்களை எல்லாம் நீங்கள்தான் வாழ வைக்கிறீர்கள். நீங்க இல்லைன்னா நாங்க இல்லை, எங்களுக்கு எல்லாமே நீங்கள்தான், என்றார்.

நடிகர் ஜீவாவுடன் நடிகர்கள் அஜ்மல், ஜெகன் உள்ளிட்டோரும் தியேட்டருக்கு வந்திருந்தனர்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:09 pm

மேக்-அப் இல்லாமல் நடிக்க அமோகா ஆசை!

நான் மேக்கப் போடாமலேயே அழகாக இருப்பேன்; அதனால் மேக்-அப் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்று நடிகை அமோகா அலைஸ் பிரியங்கா கோத்தாரி கூறியுள்ளார். ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமோகா. அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் போன இவர், நீண்***ட இடைவெளிக்கு பிறகு கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் மேக்-அப் இல்லாமலேயே அழகாக இருப்பதாக சில டைரக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் அப்படியே நம்புகிறேன். இருந்தாலும் குறைந்த அளவு மேக்-அப்புடன் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் மடோனாவை பின்பற்ற நினைக்கிறேன். தன் வயதுக்கேற்ற வகையில் அவர் எப்போதும் அழகான மேக்-அப்புடன் இருப்பார். அது எனக்கு பிடிக்கும். மேக்-அப் இல்லாமல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக என் மனதில் குடிகொண்டிருக்கிறது, என்று கூறியுள்ளார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:10 pm

செல்வராகவனுக்கு உத்தரவிட்ட கமல்

வேங்கை படத்தை முடித்த தனுஷ் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒரே படம் இரண்டாம் உலகம்.

பிரபல தெலுங்கு ஹீரோ ராணாவை வைத்து நேரடி தெலுங்குப் படம் இயக்க சென்ற செவ்வராகவன் பட்ஜெட் பிரச்சனையால் கோலிவுட்க்கே திரும்ப வந்தார். வந்ததுமே தம்பி தனுஷை வைத்து மாலை நேரத்து மயக்கம் படத்தை ஆரம்பித்தார். இந்தபடத்தை ஆரம்பித்ததில் இருந்து செல்வராகவனை ரொம்பவே மயக்கிக்கொண்டிருகிறது இந்தப்படம்.

காரணம் இந்தப் படத்தின் தலைப்பை மறவன் என்று மாற்றியவர், அதன் பிறகு இரண்டாம் உலகம் என்று இப்போது மாற்றியிருகிறார். தலைப்போடு விட்டாரா என்றால் இப்போது கதையிலும் அதிரடி மாற்றங்களை அடிக்கடி செய்து தயாரிப்பாளர் வயிற்றில் லிட்டர் கணக்கில் புளியைக் கரைத்ததோடு, ஒரு சீக்வன்ஸையே ரீ சூட் செய்யப் பொகிறேன் என்கிறாராம்.

படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நல்ல வேளையாக க்ளைமாக்ஸை சூட் பண்ணும் முன்பே மூன்றாவது முறையாக க்ளைமாக்ஸையும் செல்வராகவன் மாற்றி விட்டார் என்கிறார்கள் அவரது உதவியாளர்கள் வட்டத்தில். இந்தப்படத்திலிருந்து இசையமைபாளர் ஜி.வி. பிரகாஷ் விலகியது, உதவி இயக்குனராக இந்தப் படத்தில் பணிபுரிய வந்த காவ்யாவை காதலித்து நிச்சயம் செய்து கொண்டது என களேபரங்களுக்கு பஞ்சமில்லாத படமாகி விட்டது இரண்டாம் உலகம்.

இப்போதைய ஹாட் செய்தி , இரண்டாம் உலகத்தை முழுமையாக முடித்து விட்டு வாருங்கள் அதற்குள் நான் டிராஃபிக் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கை முடித்து விட்டு வந்து விடுகிறேன். அதன் பிறகு விஷ்ரூபத்தை தொடங்கி விடலாம் என்று சொல்லி விட்டாராம் கமல். மிஷ்கினை கலற்றி விட்டதுபோல் செல்வராகவையும் கலற்றி விடாமல் இருந்தால் ஒகேதான்!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 34 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 34 of 43 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 38 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக