புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
90 Posts - 77%
heezulia
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 9:09 am

First topic message reminder :

பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவர் ஒசாமாபின்லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பின்லேடனின் உடலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, விரைவில் அறிக்கை வெளியிட இருக்கிறார்.

பாகிஸ்தானில் கொலை : அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., பாகிஸ்தானில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது , தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு தங்கும் விடுதியில் சுற்றி வளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அண்மையில் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒசாமா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்ட பயங்கரவாதி. அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர் ஒசாமா தேடுதல் வேட்டையை அமெரிக்கா முடுக்கி விட்டது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக ஒசாமா செயல்பட்டது அமெரிக்க புலனாய்வில் தெரியவந்தது. ஒசாமாவின் இருப்பிடம் ரகசியமாகவே இருந்து வந்தது. அவ்வப்போது ஒசாமா தோன்றும் வீடியோ காட்சிகள் மட்டும் ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா தற்போது பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்குவைதா எச்சிக்கை : அண்மையில் அல்குவைதா பயங்கரவாத இயக்கம் வெளியிட்ட சி.டி., யில்., தங்கள் தலைவர் ஒசாமாவை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நன்றி தினமலர்



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 3:28 pm

வாஷிங்டன் : அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதி பின்லேடனின் உடல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து ஒசாமாவின் உடலை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்படுள்ளதாக அமெரிக்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 3:29 pm

இஸ்லாமாபாத் : அமெரிக்காவுக்கு 10 ஆண்டு காலம் ஆட்டம் காட்டி வந்த ஒசாமா பின் லேடன் , அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். ஒசாமா கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் ராணுவ அகடெமியில் இருந்து மிக அருக‌ாமையில் ( 800 யார்ட் ) இருக்கிறது. இது குறித்து அடோபாபாத் வாசிகள் கூறுகையில். இந்த இடத்தில் இருக்கும் கட்டடம் கடந்த 2005ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த காம்பவுண்டுக்கு குடி வந்தது யார் என்பது மர்மமாகவே இருந்தது. அங்கிருக்கும் யாரும் பொதுமக்களுடன் பலகியதில்லை. அவர்கள் யாரும் அடிக்கடி வெளியில் வந்தததும் இல்லை என்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ அகடெமிக்கு அருகில் ஒரு மர்ம பங்களா இருந்தும் அதை ‌யாரும் கண்காணிக்காததால், பாக்., ராணுவம் மறைமுகமாக ஒசாமாவுக்கு பாதுகாப்பு அளித்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 3:29 pm

வாஷிங்டன் : அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒசாமாவின் உடல் இஸ்லாமிய சமூகத்தின் மரபுப்படி புதைக்கப்பட்டதாக தெரிகிறது. ஒசாமா பின் லேடன் உடல் அடோபாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிராம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி 24 மணி நேரத்துக்குள் பிரேதம் புதைக்கப்பட வேண்டும். குறுகிய கால அவகாசத்துக்குள் எந்த ஒரு நாட்டிலும் ஒசாமா உடலை அடக்கம் செய்ய அனுமதி பெறுவது என்பது முடியாதது. எனவே கடல் மட்டத்தில் ஒசாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பத்திரிகையாளர்களிடம் காட்டப்பட்டது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon May 02, 2011 3:37 pm

ஒபாமாவை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தது எப்படி?

அவர் ஒபாமா இல்லை ஒசாமா

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon May 02, 2011 5:21 pm

பாகிஸ்தானின் அப்போட்டாபாத் நகரில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். அவரது உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமாபாதுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர்,

இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒசாமாவின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் மற்றும் அவருக்கு நெருக்கமான 4 நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக துன்யா தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 02, 2011 5:57 pm

ஒசாமா மரணம்.. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மைல்கல்: இந்தியா கருத்து
புதுடெல்லி, மே 2,2011

அல்-காய்தா இயக்க நிறுவனத் தலைவர் ஒசாமா பின் லேடனின் மரணம், பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மைல்கல் நிகழ்வு என்று இந்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.



அமெரிக்கப் படையினர் நடத்தியத் தாக்குதலில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா கொல்லப்பட்டதாக யு.எஸ்.அதிபர் ஒபாமா அறிவித்தார். (செய்தி: ஒசாமா பின் லேடன் மரணம்)

இதுகுறித்து கருத்து தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'பாகிஸ்தானின் உள்பகுதியில் நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.

இது, உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், வெற்றிகரமான மைல்கல் நிகழ்வுமாகும்.

கடந்த ஆண்டுகளில் பயங்கரவாத குழுக்களின் பிடிக்கு, ஆயிரணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

நமது அண்டை நாடுகளில் விரவியுள்ள பயங்கரவாதிகளையும், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவுள்ள பயங்கரவாதத்துக்கும் எதிராக உலகம் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் இத்துடன் நின்றுவிடக் கூடாது. இந்தப் போராட்டம் கண்டிப்பாக தொடர வேண்டும் என்று இந்திய அரசு கூறியுள்ளது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 02, 2011 5:59 pm

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Osamabinladendead004
ஒசாமா பின் லேடன்


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 6:21 pm

வாஷிங்டன் : 10 ஆண்டுகளாக தேடுதல் வேட்டை, பல்லாயிரக் கணக்கான ராணுவ வீரர்களும், உளவு அதிகாரிகளும் ஒயாத உழைப்பு. இவற்றிற்கு பலன் இன்று கிடைத்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கி.மீ., தொலைவில் இருக்கும் அபோடாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமாவை அமெரிக்க படைகள் சற்றிவளைத்ததும் அனைத்து அரங்கேறியது வெறும் 40 நிமிடங்களில்.

*ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தில் இருந்து புறப்பட்டது ஹெலிகாப்டர்கள்.

* ஒசாமா மேன்சனை அடைந்தது ஹெலிகாப்டர்.

*அமெரிக்க கமாண்டர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் காம்பவுண்டுக்குள் இறங்கினர்.

*ஒரு ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக நொறுங்கி மாளிகையில் விழுந்தது. துப்பாக்கிச் சண்டை நடந்தது.

*ஒசாமா பதில் தாக்குதலில் ஈடுபட்டான்.

*ஒசாமாவின் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

*மேலும் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் கொல்லப்பட்டனர்.

*அமெரிக்க தரப்பில் யாரும் பலியாகவில்லை.

*சுமார் 40 நிமிடங்களில் எல்லாம் முடிக்கப்பட்டு, ஒசாமா உடலுடன் அமெரிக்க படைகள் ராணுவ தளத்துக்கு திரும்பின.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 6:22 pm

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரகசியமாக தங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவு பிரிவு படையினர் திடீர் தாக்குதல் நடத்தி வேட்டையாடியிருக்கின்றனர். இதனால் பாகிஸ்தான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் உள் அப்பட்டாபாத்தில் உள்ள ஒரு பங்களாவில் இருந்தபோது கொல்லப்பட்டான். இவனை வேட்டையாடும் அரங்கேற்றம் குறித்து பாக்., அதிகாரிகளுக்கு கடைசிவரை தெரிவிக்கப்படவில்லை . தாக்குதல் ஆப்ரேஷன் முடியும் வரை ரகசியமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் நுழைய முடியாத வகையில் வீடு : வெளி தொடர்புக்காக சில, நம்பிக்கையான உதவியாளர்களை மட்டும் வைத்திருந்தார். அவர்கள் மூலம் தான் எந்த தகவலும் வெளியே செல்லும் அல்லது ஒசாமாவுக்கு கிடைக்கும். கூரியர் தபால் மூலம் மட்டுமே இவருக்கு தகவல்கள் வந்தன. அது மூலமே இவரும் தகவல்களை அனுப்பினார். தபால் கொண்டு செல்லப்படுவதை நான்கு ஆண்டுளாக அமெரிக்க உளவுப் படைகள் கண்காணித்தன. இதன் மூலம் தான், ஒசாமா பதுங்கியிருந்த வீடு தெரிய வந்தது. இந்த வீடு 2005ல் கட்டப்பட்டது. அருகில் இருந்த வீடுகளை விட, 8 மடங்கு பெரியது. வீட்டை முதலில் பார்த்த அமெரிக்க படைகளே ஆச்சரியம் அடைந்தன. காரணம், வீட்டைச் சுற்றி 12 அடி உயர சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் நுழைய முடியாத வகையில், இரண்டு அடுக்கு "கேட்' அமைக்கப்பட்டிருந்தது. வீட்டில், போன் அல்லது இன்டர்நெட் இணைப்புகள் இல்லை. குப்பை கூட வெளியே செல்லக் கூடாது என்பதால், அவை வீட்டுக்கு உள்ளேயே எரிக்கப்பட்டன. அவ்வளவு பாதுகாப்பு இருந்தும், ஒசாமாவை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து அழித்து விட்டன.

யார் இந்த பின்லேடன்? : ஒசாமா பின் லேடன், சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் 1957ஆம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்தார். முழுப்பெயர், ஒசாமா பின் முகமது பின் ஆவாத் பின்லேடன். தந்தை முகமது பின் ஆவாத் பின்லேடன் ஒரு வியாபாரி. இவரது பத்தாவது மனைவி ஹமீதாவிற்கு பிறந்த ஒரே மகன் ஒசாமா. இவர், இளவயதிலிருந்தே வகாபி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார்.

படிப்பில் குழப்பம்? : ஒசாமா, பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சவுதியில் உள்ள கீங் அப்துல்லாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார் என்றும், 1979ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார் என்றும், 1981ஆம் ஆண்டு பப்ளிக் அட்மினிஸ்டிரேஷனில் பட்டம் பெற்றார் என்றும் பல குழப்பங்கள் நிலவுகின்றன. இது தவிர அவர் மூன்றாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்திவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 வயதில் திருமணம்:1974ஆம் ஆண்டு, 17வது வயதில் நஜ்வா கனீம் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதன் பிறகு 3 திருமணங்கள் செய்தார். 25 குழந்தைகள் உள்ளனர்.

பல முறை கொல்லப்பட்டதாக தகவல் : இதற்கு முன், பின்லேடன் பதுங்கு குழியில் இருக்கிறார், இறந்து விட்டார் என்று பல விதமான செய்திகள் வெளிவந்தன. ஆனால் நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தது போல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

*டிச.,11, 2005ம் ஆண்டு அல்குவைதாவின் மூத்த உறுபினரான அதியா அப் அல் ரகுமான், ஈராக் போரின் போது ஜோர்டானியன் ராணுவத்தில் இருந்த அபு முசாப் அல் ஜார்குவாவிக்கு கடிதம் அனுப்பினார். அதில் பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் பகுதியில் ஒசாமா இருப்பதாகவும், அவரது படைகள் பலம் குன்றி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

* 2009ஆம் ஆண்டு லாஸ் ஏன்ஜல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவினரான கிளெஸ்பி மற்றும் அக்நியூ, சாட்டிலைட் உதவியுடன் நிலஇயல் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன் இறுதியில் பாகிஸ்தானில் உள்ள பராச்சினர் என்ற நகரின் ஒசாமா இருக்கிறார் என்று மூன்று இடங்களை சுட்டிக்காட்டினர்.

* மார்ச், 2009ல் பாகிஸ்தானின் சித்ரல் மாவட்டத்தில் பின்லேடன் படைகள் இருப்பதாக "நியூயார்க் டெய்லி நியூஸ்' செய்தி வெளியிட்டது.

* டிசம்பர், 2009ல் பாகிஸ்தானில் தாலிபன் பிடியிலிருந்த ஒரு நபர் ஆப்கானிஸ்தானில் பின்லேடன் இருப்பதாகவும் தான் பார்த்ததாக அறிவித்தார். பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் கிலானி இதை மறுத்தார்.

* ஜனவரி 15, 2010ல், எப்.பி.ஐ., "டிஜிட்டல்'முறையில் வயதான பின்லேடன் எவ்வாறு இருப்பார் என்று போட்டோக்களை வெளியிட்டது.

* ஜூன் 7, 2010ல், குவைதி அல் சியாசா என்ற அமைப்பு ஈரானின் வடகிழக்கு பகுதியில் உள்ள சவ்ஷீவர் பகுதியில் உள்ள மலைகளில் பின்லேடன் மறைந்திருப்பதாக தெரிவித்தது. ஜூன் 9ல் ஆஸ்திரேலியாவில் உள்ள "ஆன்லைன்' பத்திரிகை இதே கருத்தை வெளியிட்டது.

* அக்டோபர் 18, 2010ல், நேட்டோ படை அதிகாரி ஒருவர், ""பின்லேடன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாக பாகிஸ்தானில் உள்ளார்'' என்றார். இதற்கு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிகாரி, ""பாகிஸ்தான் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. எங்கள் அரசிற்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.'' என தெரிவித்தார்.

அல்-குவைதா துவங்கி வளர்ந்த வரலாறு : 1979: ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பை எதிர்த்து சோவியத் யூனியன் போரிட்டது. இந்த பயங்கரவாத அமைப்போடு பின்லேடனும் இணைந்து கொண்டார்.

1986-87: சோவியத் யூனியனுக்கு எதிரான போரில், முஜாகிதீன் அமைப்பின் , நிதி நிர்வாக தலைவராக செயல்பட்டார். கொரில்லா படை தலைவராகவும் திகழ்ந்தார்.

1988: முஜாகிதீன் அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் துணையுடன் ஒசாமா பின்லேடன், அல்-குவைதா என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கினார்.

1989: சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்லேடனும் சவுதிக்கு திரும்பினார். அவரது தந்தையின் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை பார்த்துக்கொண்டார். ஆப்கன் போரில் தனது நெட்வொர்க் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்கினார்.

1990 ஆக.7: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேற வலியுறுத்தி, ஈராக் படைகளுக்கு எதிராக போரிடுவதற்கு சவுதிக்குள் நுழைய அமெரிக்க அரசு அனுமதி கேட்டது. சவுதி அனுமதியை தொடர்ந்து அமெரிக்க படைகள் ஈராக் படைகளுக்கு எதிராக போரிட்டது. சவுதியின் மெக்கா, மெதினா நகரங்களுக்கு அருகில் அமெரிக்க படைகள் இருப்பதற்கு பின்லேடன் எதிர்ப்பு தெரிவித்தார்.

1991 : சவுதி அரசுக்கு எதிராக போரட்டம் நடத்திய ஒசாமாவுக்கு குடியுரிமையை, சவுதி அரசு ரத்து செய்தது. சூடானில் பின்லேடன் தஞ்சம் அடைந்தார்.

1992, டிச. 29: ஏமன் நாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் இரண்டு ஆஸ்திரிய சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இது பின்லேடன் மற்றும் அவரது அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது.

1993, பிப். 26: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீது தாக்குதல் நடதத்தப்பட்டது. இதில் ஆறு பேர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1995 கென்யா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் கென்ய அமெரிக்க தூதரக தாக்குதலில் 213 பேர் பலி, 4,500 பேர் காயம். தான்ஜானியா அமெரிக்க தூதரகத்தில் 11 பேர் பலி, 85 பேர் காயம்.

1996 : அமெரிக்கா மற்றும் சவுதி ஆகிய நாடுகளின் வேண்டுகோளை அடுத்து சூடான், ஒசாமாவை வெளியேற்றியது. இதனால் பின்லேடன் தனது 3 மனைவி மற்றும் 10 குழந்தைகளுடன் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்தார். அமெரிக்காவுக்கு எதிராக "புனித போர்' நடத்தப்போவதாகவும் அறிவிப்பு.

2000, அக். 12: ஏமனில் கப்பல் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. 17 பேர் பலி. அல்-குவைதா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

2001, செப். 11: அல்-குவைதா பயங்கரவாத அமைப்பினர், அமெரிக்காவின் 4 விமானங்களை கடத்தி, இரட்டை கோபுர கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3000க்கும் மேற்பட்டோர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்.

2001, அக். 7: அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து ஒசாமா மற்றும் அல்-குவைதா பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடுவதென முடிவெடிக்கப்பட்டது.

2004, அக். : இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக, முதல்முறையாக ஒசாமா பின்லேடன் அறிவிப்பு.

2011, மே 2: அமெரிக்க உளவுத்துறை நடத்திய தாக்குதலில் பின்லேடன் பலியானார் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 6:22 pm

கொச்சி : அமெரிக்க படைகளால் ஒசாமா கொல்லப்பட்டுள்ளதை அடுத்து கொச்சியில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நெடும்பசேரி விமான நிலையத்தில் இருக்கும் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பட்டுள்ளது. மேலும் சரக்கு விமானங்கள் அதிக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 3 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக