புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
27 Posts - 56%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
14 Posts - 29%
Barushree
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 2%
nahoor
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
81 Posts - 74%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
nahoor
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:05

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.


avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:20

திருமணம் செய்யாத அமைப்பைச் சேர்ந்த நானே, திருமணம் செய்துகொண்டிருந்தால் என் மனைவி என் தாயிடம் அதிருப்தியான முறையில் துணிச்சலாக நடந்து கொண்டால் வெறுப்டைவேன். ஏன்? நான் என் தாயை வழிபடுகிறேன். ஏன் அந்த மருமகள் அவளை வணங்கக் கூடாது? நான் யாரை வணங்குகிறேனோ, அவரை அவள் ஏன் வணங்கக் கூடாது? என்னை மீறி என் தாயை ஆட்டிவைக்க அவள்யார்? அவளுடைய பெண்மை பூரணமாகும் வரையில் அவள் காத்திருக்க வேண்டும். பெண்களின் பெண்மையைப் பூரணமாக்கும் ஒரே விஷயம், அதாவது பெண்களிலுள்ள பெண்மை தாய்மை, தாயாகும்வரை அவள் காத்திருக்கட்டும், பிறகு அவளுக்கும் அதே உரிமை கிடைக்கும். இந்துக்களின் கருத்துப்படி பெண்களின் ஒரே லட்சியம் தாயாவதுதான். ஓ எவ்வளவு வேறுபாடுகள், எவ்வளவு வேறுபாடுகள்!

நான் பிறக்க வேண்டும் என்பதற்காக என் தாயும் தந்தையும் வருடக்கணக்காக உண்ணா நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார்கள். ஒவ்வொரு குழந்தை பிறக்கு முன்பும் அவர்கள் பிரார்த்திக்கிறார்கள். சட்டங்களை வகுத்த சான்றோரான மனு, ‘பிரார்த்தனையால் பிறந்தவன்தான் ஆரியன்’ என்று ஆரியனுக்கு விளக்கம் கூறுகிறார். பிரார்த்தனையின்றிப் பிறந்ந ஒவ்வொரு குழந்தையும் மனுவின் கருத்துப்படி முறைகேடாகத் தோன்றியதே. குழந்தை வேண்டுமென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். சாபத்தோடு பிறக்கின்ற, கவனக் குறைவாக இருந ஒரு கணத்தில் உருவாகிய, தடுக்க முடியாததால் பிறந்த பிள்ளைகளிடமிருந்து, அத்தகைய பரம்பரையிடமிருந்து நாம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்.?

அமெரிக்கத் தாய்மார்களே, இதைச் சிந்தியுங்கள். பெண்களாக இருக்கத் தயாராக இருக்கிறீர்களா? என்று உங்கள் உள்ளத்தைக் கேளுங்கள். இனம், நாடு, அல்லது தேசிய கௌரவம் என்னும் பொய்யான பாவனை இவை யெல்லாம் இங்கு பிரச்சினைகள் அல்ல. துயரமும் துன்பமும் நிறைந்துள்ள இந்த உலகில், இந்த நிலையற்ற வாழ்வில் பெருமை பேசிக்கொள்ள யாருக்குத் துணிவிருக்கிறது? இறைவனின் எல்லையற்ற சக்திக்கு முன்னால் நாம் எம்மாத்திரம்! இந்த இரவில் உங்களை நான் கேட்கிறேன்; குழந்தை வேண்டுமென்று நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்களா? தாயாகியதற்காக நீங்கள் நன்றியுடன் இருக்கிறீர்களா, இல்லையா? தாய்மை அடைந்ததால் நீங்கள் புனிதம் பெற்றதாக நினைக்கிறீர்களா, இல்லையா? உங்கள் மனத்தை நீங்களே கேளுகள். இல்லை என்பது பதிலானால் உங்கள் திருமணம் பொய், உங்கள் பெண்மை போலி, உங்கள் கல்வி மூடநம்பிக்கை; உங்கள் குழந்தைக்கு பிரார்த்தனையின்றிப் பிறப்பார்களானால் அவர்கள் மனித இனத்திற்கு சாபக்கேடு.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:20

நம் முன் உள்ள மாறுபட்ட லட்சியங்களைக் கவனியுங்கள். தாய்மையிலிருந்து ஆழ்ந்த பொறுப்புணர்ச்சி பிறக்கிறது. அதுதான் அடிப்படை, அதிலிருந்து ஆரம்பியுங்கள். சரி, தாயை எதற்காக இவ்வளவு கொண்டாட வேண்டும்? ஒருவன் நல்லவனாக அல்லது தீயவனாக அமைவது அவன் கருவிலிருந்தபோதுள்ள தாக்கங்களைப பொறுத்தது என்று எங்கள் நூல்கள் கூறுகின்றன. லட்சம் கல்லூரிகளுக்குப் போங்கள், கோடி நூல்களைப் படியுங்கள், உலகின் எல்லா அறிஞர்களோடும் பழகுங்கள் - இவை எல்லாவற்றையும்விடச் சிறந்தது, சரியான முத்திரையுடன் பிறப்பதாகும். பிறக்கும்போதே நீங்கள் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ பிறக்கிறீர்கள். ஒருவன் பிறக்கும் போதே தேவனாகவோ அசுரனாகவோ பிறக்கிறான். நூல்கள் இப்படித்தான் கூறுகின்றன. பின்னர் கிடைக்கும் கல்வி கேள்விகளால் அதிகப் பயன் இல்லை. எப்படிப் பிறக்கிறீர்களோ அப்படித்தான் இருப்பீர்கள். ஆரோக்கியமின்றிப் பிறந்துவிட்டால் மருந்துக் கடைகளில் உள்ள மருந்துக்கடைகளில் உள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டாலும் உடல்நலம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? லவீனமான, ரத்தம் கெட்டு நோய்வாய்ப்பட்டுள்ள பெற்றோர்களுக்கு, எத்தனை நல்ல, திடமான பிள்ளைகள் பிறந்திருக்கின்றன? எத்தனை? என்றுகூட இல்லையே. நல்லது அல்லு தீயது செய்வதற்கான தீவிரத் தூண்டுதல்களுடன் நாம் பிறக்கிறோம்,தேவர்களாகோ அசுர்ர்களாகவோ பிறக்கிறோம், கல்விக்கேள்விகளால் பெரிய பலன் எதுவும் இல்லை.

ஆகவே பிறப்பதற்கு முந்தைய தாக்கங்களைச் சரிப்படுத்துங்கள் என்று எங்கள் நூல்கள் கூறுகின்றன. ஏன் தாயை வழிபட வேண்டும்? அவள் தன்னைப் பரிசுத்த மாக்கிக் கொண்டாள். தன்னைத் தூய்மையே வடிவாக்க் செய்துகொள்வதற்கு அவள் கடுமையான விரதங்கள் இருந்தாள். இந்தியாவில் எந்தப் பெண்ணும் தன் உடலை ஓர் ஆணுகு ஒப்படைக்க மாட்டாள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், அவளது உடல் அவளுக்கே சொந்தம், ‘உடலுறவு உரிமைகளைத் திரும்ப் அளித்தல்’ (Resitution of Conjuga Rights) என்ற சீர்திருத்தத்தை ஆங்கிலேயர் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் எந்த இந்தியனும் இதைத் தனக்கு சாந்தமாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டான். மனைவியுடன் ஒருவன் உடலுறுவு கொள்ளும்போது பிரார்த்தனைகள் மூலமும், விரதங்கள் மூலமும் சூழ்நிலையை அவள்தான் கட்டுப்படுத்துகிறாள் ஏனெனில் இனவிருத்தி என்பது கடவுளின் மிகப்புனிதமான சின்னம்; கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்த பிரார்த்தனை; நல்லதோ, தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரை உலகிற்குக் கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை. இது என்ன வேடிக்கையா? அல்லது வெறுமனே நரம்புகளுக்குத் திருப்தி அளிக்கின்ற செயலா? மிருகத்தனமான உடலின்ப அனுபவமா? இல்லை, இல்லையென்று ஆயிரம் தடவை சொல்கிறான் இந்து.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:20

ஆனால் இதைத்தொடர்ந்துத இன்னொரு கருத்தும் எழுகிறது. எல்லா துன்பங்களையும் சகித்துக்கொண்டு, பொறுமை வடிவாக இருப்பவளான தாயை நேசிப்பது தான் லட்சியம் என்ற கருத்துடன் நாம் ஆரம்பித்தோம். தாய்க்கு அளிக்கப்படுகின்ற வழிபாட்டிற்கு அதுதான் பிறப்பிடம். என்னை உலகிற்கு அளிப்பதற்காக அவள் ஒரு ஞானி போல் வாழ்ந்தாள். நான் பிறக்கப் போகிறேன் என்று வருடக்கணக்காகத் தன் உடலைத் தூய்மையாக வைத்துக் கொண்டாள், உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொண்டாள், உணவைச் சுத்தமாக வைத்துக் கொண்டாள், எண்ணங்களைப் பரிசுத்தமாக வைத்துக் கொண்டாள். இப்படிச் செய்தால் அவள் வழிபடுவதற்கு உரியவள். இதைத் தொடர்வது என்ன? தாய்மையுடன் பிணைந்து இருப்பது னைவித் தன்மை.

மேலை நாட்டவராகிய நீங்கள் தனித்துவ உணர்வு உடையவர்கள்; இதைச்செய்ய விரும்புகிறேன். முழங்கையால் அனைவரையும் இடித்துத் தள்ளி முன்னேறுவேன், ஏன்? ஏனென்றால் அது என் விருப்பம். எனக்கு என் திருப்தியே முக்கியம். நான் இவளைத் திருமணம் செய்துகொள்வேன். ஏன்? ஏனெனில் நான் இவளை விரும்புகிறேன். அவள் என்னை மணம் செய்கிறாள். ஏன்? ஏனென்றால் அவள் என்னை விரும்புகிறாள். அத்துடன் முடிந்துவிடுகிறது. இந்தப் பரந்த எல்லையற்ற உலகில் நானும் அவளும் இரண்டே பேர்தான் இருக்கிறோம். நான் அவளை மணக்கிறேன். அவள் என்னை மணக்கிறாள். இதில் வேஉ யாருக்கும் துன்பமில்லை; வேறு யாருக்கும் பொறுப்பில்லை. ஆனால் உங்கள் ஜான்களும் ஜேன்களும் காட்டிற்குச்சென்று அப்படி விருப்பம்போல் வாழலாம். அவர்கள் சமுதாயத்தில் வாழும்போது, அவர்களுடைய திருமணம் எங்களுக்கு நன்மையையோ தீமையையோ தந்து பேரளவிற்குப் பாதிக்கிறது. அவர்களுடைய குழந்தைகள் தீயவர்களாக, கொலையாளிகளாக, திருடர்களாக, கொள்ளைக்காரர்களாக, குடிகாரர்களாக, அசுரர்களாக இருக்கலாம்.

ஆகவே இந்திய சமுதாயத்தின் அடிப்படை என்ன? அதுதான் ஜாதிநியதி. நான் ஜாதிக்காகப் பிறக்கிறேன். ஜாதிக்காக வாழ்கிறேன். நான் என்னைக் குறிப்பிடவில்லை, ஏனெனில் துறவிகளாகிய நாங்கள் சமுதாயத்திற்குப் புறம்பானவர்கள், சமுதாயத்தில் வாழ்கிறார்களே அவர்களைச் சொல்கிறேன். ஒரு ஜாதியில் பிறந்தவர்ள் வாழ்நாள் முழுவதும் அந்த ஜாதிக் கட்டுப்பாடுகளின்படி நடக்க வேண்டும். இதை வேறு வார்த்தைகளில், அதாவது இன்றை உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், மேலைநாட்ட மனிதன் தனிப்பட்ட மனிதனாகப் பிறக்கிறான். இந்துவோ சமுதாய மனிதனாகப் பிறக்கிறான். உங்கள் விருப்பப்படி நீங்கள் எந்தப் பெண்ணையும் மணக்கவோ, அல்லத ஒரு பெண் தான் விரும்புவனை மணகவோ அனுமதித்தால் என்ன நடக்கும்? நீங்கள் ஒருத்தியைக் காதலிக்கிறீர்ள்; அவளுடைய தந்தை ஒருவேளை பைத்தியமாகவோ, காசநோயாளியாகவோ இருக்கலாம். முகத்தைக் கண்டு ஒருத்தி ஒருவனைக் காதலிக்கிறாள்; அவனது தந்தை குடுத்து கூத்தடிப்பவனாக இருக்கலாம். அதற்குச் சட்டம் என்ன சொல்கிறது? இந்தத் திருமணங்கள் சட்டரீதியானவை அல்ல என்று சொல்கிறது. குடிகாரர்கள், காசநோயாளிகள், பைத்தியங்கள் இவர்களுடைய பிள்ளைகள் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது. அங்கவீனர்கள், கூனர்கள், வெறியர்கள், முட்டாள்கள் இவர்களுக்குத் திருமணமே கூடாது, கூடவே கூடாது என்கிறது சட்டம்.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:21

முகமதியன் அரேபியாவிலிருந்து வருகிறான். அவனுக்கு அரேபியச் சட்டம் இருக்கிறது. அந்த அரேபியப் பாலைவனச் சட்டம் எங்கள் மீது திணிக்கப்படுகிறது. ஆங்கிலேயன் தன் சட்டத்தோடு வருகிறான். அவன் தன் சட்டத்தை எங்கள் மீது முடிந்த வரை திணிக்கிறான். நாங்கள் வெல்லப்பட்டவர்கள் ஆயிற்றே! ‘நாளை நான் உன் சகோதரியை திருமணம் செய்வேன்’ என்கிறான் அவன். நாங்கள் என்ன செய்ய முடியும்?

ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் எவ்வளவுதான் அகன்ற உறவுமுறை இருந்தாலும் சரி,தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எங்கள் சட்டம் கூறுகிறது. அது ஒழுங்கற்றது, வம்சத்தைச் சூர்குலைத்துவிடும்; வீரியமற்றதாக்கிவிடும். அது கூடாது என்றால், எங்களுக்கு அது கூடாதுதான். என் திருமணத்தில் எனக்கோ, தன் திருமணத்தில் என் சகோதரிக்கோ சொந்த விருப்பம் கிடையாது, ஜாதிதான் இதையெல்லாம் தீர்மானிக்கிறது. சிலவேளைகளில் நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போதே எங்களுக்குத் த இருமணம் நடக்கிறது. ஏன்? ‘எப்படியோ இவர்களின் சம்மதமின்றி தான் திருமணம் செய்து வைப்பது நல்லது என்று ஜாதி கூறுகிறது. இருவரும் தனியாக வளர்ந்தால் பையன் வேறுயாரையாவது காதலிப்பான், பெண்ணும் வேறு யார் மீதாவது காதல் கொள்வாள் அதனால் ஏதாவது தீங்கு விளையலாம்.
ஆகவே அதை தடுத்து நிறுத்து.

என் சகோதரி அங்கவீனமானவளா, அழகானவளா, இல்லையா என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. அவள் என் சகோதரி, அதுவே எனக்குப் போதும். அதே போல் அவன் என் சகோதரன். அது எனக்குப் போதும். அதைப்போலவே, திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒருவரையொருவர் நேசிப்பார்கள்.

‘ஓ! அவர்கள் எத்தனையோ இன்பத்தை இழக்கிறார்களே ஆண் பெண்ணை காதலிப்பதும், பெண் ஆணைக காதலிப்பதிலும் கிடைக்கின்ற அந்த அற்புத உணர்ச்சிகளை இழக்கிறார்கள். சகோதர சகோதரிகளைப் போல் நேசிப்பது ஏதோ பழகிப்போன ஒன்றாக அல்லவா இருக்கும்’ என்று நீங்கள் சொல்ல்லாம். இருக்கட்டுமே; ‘நாங்கள் சமுதாயவாதிகள். ஒருவன் அல்லது ஒருத்தியின் இன்பத்திற்காக நூறுபேரைத் துன்பத்தில் ஆழ்ந்த நாங்கள் விரும்பவில்லை’ என்று இந்து கூறுகிறான்.

அவர்களுக்குத் திருமணமாகிறது. மனைவி கணவனுடன் வீட்டிற்கு வருகிறாள்.. அது இரண்டாம் திருமணம் என்று அழைக்கப்படுகிறது. சிறு வயதில் நடப்பது முதலாம் திருமணம். அதன்பிறகும் இருவரும் த்த்தம் பெற்றோருடன் வளர்கிறார்கள். யது வந்தபின் இரண்டாவது சடங்கு நடக்கிறது, அது இரண்டாம் திருமணம். பிறகு அவனத்தாய்தந்தையருடன் சேர்ந்து வாழ்கிறார்கள். அவள் தாயான பிறகு அவளது முறை வருகிறது, அவள் அந்த இல்லத்திற்கு அரசியாகிறாள்.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:22

இன்னொரு தனிப்பட்ட அமைப்பும் உள்ளது. முல் இரண்டு மூன்று ஜாதிகளில் விதவைகள் மறுமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சொன்னேன். அவர்கள் விரும்பினாலும் முடியாது. பலரைப் பொறுத்தவரை இது கொடுமைதான். எல்லா விதவைகளும் இதை அவ்வளவாக விரும்புவதில்லை என்பது உண்மை. ஏனெனில் மணம் செய்து கொள்ளாதவள் பிரம்மச் சாரிணியாக வாழ வேண்டும். அவள் இறைச்சி, மீன் உண்ணக்கூடாது, குடிக்கக் கூடாது; வெள்ளை ஆடையைத் தவிர வேறு எதையும் உடுத்தக் கூடாது என்று இப்படிப் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நாங்கள் துறவியர் - எப்போதும் தவம் செய்து கொண்டிருப்போம், அது எங்களுக்கு விருப்பமானது.

எங்கள் பெண் ஒருபோதும் குடிக்க மாட்டாள், மாமிசம் உண்ண மாட்டாள். நாங்கள மாணவர்களாக இருந்த போது இந்த நியமங்கள் கடினமாக நினைக்கமாட்டார்கள். இறைச்சி உண்பதை அவர்கள் அவமானமாக்க் கருதுகிறார்கள். சில ஜாதிகளில் ஆண்கள் இறைச்சி உண்பதுண்டு, பெண்கள் ஒருபோதும் உண்பதில்லை. ஆனாலும் மறுமணத்திற்கு அனுமதிக்காதது பலருக்குச் சிரமம்தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

மீண்டும் எங்கள் லட்சியத்திற்கு வரவோம். நாங்கள் தீவிர சமுதாயவாதிகள். எல்லா நாடுகளிலுமே உயர் ஜாதிகளில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏன்? ஏனென்றால் தலைமுறை தலைமுறையாக உயர்ந்த ஜாதிகளில் பெண்கள் வசதியான வாழ்க்கை நடத்துகிறார்கள். ‘அவர்கள் வேலை செய்வதுமில்லை; நூல் நூற்பதுமில்லை. என்றாலும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்திருந்தாலும் கூட சாலமன் அவர்களுள் ஒருத்துக் ஈடாக உடை உடுத்தியவனாக இல்லை.’ ஆனால் ஆண்களோ, பாவம், ஈக்கள் போல் மடிகிறார்கள். பெண்ணுக்குப் பூனையின் ஆயுளைப்போல் ஒன்றது மடங்கு ஆயுள் என்று இந்தியாவில் கூறுகிறார்கள். ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை சீக்கிரமே அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் இப்பொழுது அவ்களும் ஆண்களைப் போல் கடுமையாக உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அவர்களின் எண்ணிக்ஐ அவ்வளவு அதிகரிக்கவில்லை. கீழ் ஜாதிகளைவிட மேல் ஜாதிகளில் பெண்கள் அதிகமாக உள்ளனர். கீழ் ஜாதிகளில் பெண்கள் அதிகமாக உள்ளனர். கீழ் ஜாதிகளில் நிலைமை இதற்கு மாறாக இருக்கிறது. அங்கே அவர்கள் அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள், ஏனெனில் வீட்டு வேலையையும் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:22

ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்கள் அமெரிக்கப் பயணியான மார்க் ட்வெயின் இந்தியாவைப் பற்றி எழுதியுள்ளதைப படிக்காமல் இருந்தால் நான் இதைப் பற்றி சிந்தித்திருக்கவே மாட்டேன். அவர் கூறுகிறார்; ‘மேலை நாட்டினர் இந்துப் பழகவழக்கங்களை எவ்வளவு குறைகூறுகிறார்கள்! ஆனாலும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுவதுபோல் பெண்டை மாட்டுடன் கலப்பையில் பூட்டுவதையோ, நாயுடன் வண்டியில் பிணைப்பதையோ நான் அங்கே காணவில்லை. இந்திய நாட்டில் சிறுமியோ பெண்ணோ வயல்களில் வேலை செய்வதை நான் பார்க்கவில்லை. ரயில் பாதையின் இருபுறங்களிலும் அப்பாலும் மாநிறமுள்ள ஆண்களும் சிறுவர்களும் ஆடை அதிகம் இன்றி, உழுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணைக் கூடப் பார்த்ததில்லை. இந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணோ சிறுமியோ வயல்களில் வேலை செய்ததை நான் பார்க்கவில்லை. இந்தியாவில் மிக்க் கீழ் ஜாதியில் கூடப் பெண்கள் கடுமையான வேலை செய்வதில்லை. மற்ற நாட்டினரின் அதே பிரிவோடு ஒப்பிடும்போது, பொதுவாக அவர்கள் சுலபமான வாழ்க்கையே நடத்துகிறார்கள். பெண்கள் உழுவதே இல்லை’.

இதுதான் நிலைமை. கீழ் ஜாதியில் ஆண்கள் பெண்களைவிட அதிகமானால் என்ன ஆகிறது? ஆண்கள் அதிகமாக இருப்பதால் என்ன ஆகிறது? ஆண்கள் அதிகமாக இருப்பதால் பெண் திருமணம் செய்துகொள்வதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

விதவைத்திருமணப் பிரச்சினையைப் பார்ப்போம். முதல் இரண்டு ஜாதிகளில் பொருந்தாத விகித்த்தில் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். இங்குதான் சிக்கல். மறுமணம் செய்துகொள்ள முடியாத விதவைகளும துன்பங்களும் இருக்கும்; அல்லது இளம் பெண்களுக்குக் கணவன் கிடைக்காத பிரச்சினை நிலவும். எதைக் கவனிப்பது - விதவைகளின் பிரச்சினையா? திருமணம் ஆகாத பெண்களின் பிரச்சினையையா? எதையாவது ஒன்றைத்தானே கவனிக்க முடியும்? நாங்கள் சமுதாயவாதிகள் என்று சொன்னேன். ஆகவே விதவைகள் பிரச்சினை அவ்வளவு முக்கியமானதல்ல என்று கருதுகிறோம். ஏன்? ஏனெனில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாகிவிட்டது. அவர்களுக்குத் திருமணமாகியது? அவர்கள் வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் வகுப்பு என்னவோ கிடைக்கத்தான் செய்தது. சற்று அமைதியாக உட்கார்ந்து, திருமணமாகாமல் நிற்கும் பெண்களை நினைத்துப் பாருங்கள்; அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லையே! உங்களுக்கு இறைவன் அருளட்டும்.

ஒருசமயம் நான் ஆக்ஸ்போர்டு தெருவில் இருந்தேன். பத்து மணி இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்கள் கடைகளில் சாமான்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒருவன், ஓர் அமெரிக்கன், சுற்றிலும் பார்த்துவிட்டு, ‘ஆண்டவனே! இவர்களில் எத்தனை பேருக்குக் கணவன் கிடைப்பான், மலைப்பாக இருக்கிறது!’ என்று சொன்னான்.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:23

ஆகவே இந்திய மனம் விதவைகளைப் பார்த்து, ‘உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம். என்ன செய்வது? மற்றவர்கள் காத்திருக்கிறார்களே!’ என்று சொல்கிறது.

பிறகு மதம் இதில் வருகிறது, இந்து மதம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. திருமணம் செய்து கொள்வது தீயது, அது பலவீனர்களுக்கு உரியது என்று எங்கள் மதம் கூறுகிறது. மிகவும் ஆன்மீக உணர்வுடைய ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள மாட்டார்கள். ஆகவே மத நம்பிக்கையுள்ளவன், ‘கடவுள் எனக்குத் திருமணத்தைவிட நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். திருமணம் செய்துகொள்வதில் என்ன நன்மை? கடவுளுகு நன்றி கூறு, அவரை வழிபடு. ஓர் ஆணை நேசிப்பதால் என்ன பலன்?’ என்று கூறுகிறாள்.

எல்லோரும் கடவுளிடம் மனத்தைச் செலுத்த முடியாது என்பது உண்மை. சிலரால் அது அறவே முடியாது. இவர்கள் துன்ப்ப்பட வேண்டியதுதான். ஆனால் இவர்களால் மற்றவர்கள் ஏன் வருந்த வேண்டும்? இதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஆனால் இந்தியாவில் நாங்கள் நினைப்பது இப்படித்தான்.

பெண்ணை மகள் என்ற இந்தியக் குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சினை. மகளும் ஜாதியும் சேர்ந்து ஏழை இந்துவை அழித்தேவிடுகின்றன. ஏனெனில் அவள் அதே ஜாதியில் மணம்செய்ய வேண்டும், அதிலும் அதே ஜாதியில் மணம் செய்ய வேண்டும். ஆகவே சிலவேளை களில் மகளை மணம்பேசிக் கொடுப்பதற்குள் தந்தை ஓட்டாண்டியாகி விடுகிறான். ஆணின் தந்தை தன் பிள்ளைக்கு நிறைய வரதட்சிணை கேட்கிறான், பெண்ணைப் பெற்றவனோ தன் மகளுக்கு ஒருவனை மணமுடிக்க சிலவேளைகளில் எல்லாவற்றையும் விற்க வேண்டியவனாகிறான்.

ஓர் இந்துவுக்கு அவனது வாழ்க்கையில் மகள் ஒரு பெரும் பிரச்சினைதான். வேடிக்கை என்னவென்றால் மகளை சம்ஸ்கிருத மொழியில் ‘துஹிதா’ என்று அழைக்ககிறார்கள். இது எப்படி வந்ததென்றால், பழைய காலத்தில் மகள்தான் குடும்பத்தில் வழக்கமாகப பால் கறப்பாள். எனவே துஹிதா என்று சொல் ‘தூஹ் - பால் கறத்தல்’ என்ற வினையடியாகப்பிறந்தது. துஹிதா என்ற சொல்லின் பொருள் பால்காரி என்பதாகும். பின்னர் அதற்கு ஒரு புதிய அர்த்தம் கொடுத்தார்கள் - துஹிதா, பால் கறப்பவள், அதாவது குடும்பத்தின் பாலை (செல்வத்தை) எல்லாம் கறந்து கொண்டு செல்பவள். இதுதான் அதற்கு இரண்டாவது பொருள்.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:23

எங்கள் இந்தியப் பெண்கள் வகிக்கும் பல்வேறு உறவுமுறைகள் இவை. நான் கூறியதுபோல் தாய்க்குத் தான் முதலிடம், மனைவிக்கு அடுத்த இடம், மகளுக்கு அதற்கும் அடுத்த இடம், இது மிகவும் நுட்பாமான சிக்கல் மிக்க பாகுபாடு. வெளிநாட்டவர் பல ஆண்டுகள் அங்கு வசித்தாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது உதாரணமாக எங்களிடையே சுட்டுப்பெயரில் மூன்று நிலை உள்ளன. இவை கிட்டதட்ட வினைச்சொற்நிலை போன்றவை. ஒன்று மிகுந்த மரியாதையைக் குறிப்பது; இன்னொன்று நடுத்தரமானது; இறுதியில் உங்களுடைய thou, thee, போன்றவை. குழந்தைகளுக்கும் வேலைக்கார்ர்களுக்கும் இறுதியிலுள்ள சுட்டுப் பெயரைப் பயன்படுத்துகிறோம். சம்மானவர்களக்கு நடுத்தரச் சுட்டுப்பெயர் பயன்படுகிறது. உறவினர்களுக்கும் சரியான சுட்டுப்பெயர்களைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, என் அக்காவை நான் ‘ஆப்னி’ (தாங்கள்) என்றுதான் அழைப்பேன், அவள் என்ன ‘துமி’ (நீ) என்று அழைப்பாள். தவறுதலாக்க்கூட அவள் சொல்வது என்னைச்சபிப்பதகாமு. நம்மைவிடப் பெரியவர்களிடம் நம் அன்பைக் காட்டுவதற்கும் சரியான கட்டுப்பெயர்களைதான் பயன்படுத்த வேண்டும். அதுதான் வழக்கம். அக்காவையோ ஒருபோதும் ‘தூ’, ‘தும்’, ‘துமி’ என்று அழைக்கக் கூடாது; தாயையோ, தந்தையையோ அப்படி அழைக்கக்கூடாது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. அல்லவா! பெற்றோரைப் பெயர் சொல்லி அழைப்பது பழக்க வழக்கங்களை அறிவதற்கு முன்னால், மகன் ஒருவன் தாயைப் பெயர் சொல்லி அழைத்ததைக் கேட்டுத் திகைத்துவிட்டேன். பிறகு எனக்கு அது பழகிவிட்டது. இது இந்த நாட்டின் வழக்கம். ஆனால் நாங்கள் பெற்றோர்கள் பக்கத்தில் இருக்கும்போது அவர்களின் பெயரையே சொல்ல மாட்டோம். எப்போதும், அவர்களுக்கு முன்னால்கூட, படர்க்கைப் பனைமையில்தான் (அவர் என்றுதான்) அவர்களைக் குறிப்பிடுவோம்.

ஆகவே எங்கள்நாட்டில் ஆண் பெண் சமுதாய வாழ்க்கையிலும் உறவுமுறைகளிலும் மிகவும் சிக்கலான ஒரநிலை இருப்பதைக் காண்கிறோம். பெரியவர்களுக்கு முன்னால் எங்கள் மனைவியோடு பேச மாட்டோம்; நாங்கள் தனியாக இருந்தாலோ, எங்களைவிட வயதில் குறைந்தவர்கள் இருந்தாலோ பேசுவோம். நான் திருமணம் செய்துகொண்டிருந்தால் என் தங்கை, மருமகள், மருமகன் இவர்களின் முன்புதான் என் மனைவி யோடு பேசுவேன்; என் அக்கா மற்றும் பெற்றோருக்கு முன்பு பேச மாட்டேன். சகோதரிகளிடம், அவர்களுடைய கணவனைப்பற்றிப் பேச்சே எடுக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் துறவு இனத்தினர் (monastic race). சமுதாய அமைப்புமுழுவதும் அந்த ஒரு கருத்தை அடிப்படையாக்க் கொண்டது. திருமணம் ஏதோ தூய்மையற்றது, கீழானது என்றே கருதப்படுகிறது. எனவே காதல் பற்றி எல்லாம் பேசப்படுவதே இல்லை. என் சகோதரி, சகோதரர்கள், தாய் இவர்களின் முன்பு, ஏன், மற்றவர்கள் முன்னால்கூட நாவல் படிக்க முடியாது. புத்தகத்தை மூடிவைக்க வேண்டியதுதான்.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:23

உண்பதும் பருகுவதும்கூட இதேபோல்தான். பெரியவர்களுக்கு முன்னால் நாங்கள சாப்பிட மாட்டோம். குழந்தைகள், பணியாளர்கள் இவர்களைத் தவிர மற்ற ஆண்களுக்கு முன்னால் எங்கள் பெண்கள் சாப்பிட மாட்டார்கள். உயிர் போனாலும் சரி, மனைவி கணவனுக்கு முன்னால் வாயை மெல்ல மாட்டாள். சிலவேளைகளில் சகோதரனும் சகோதரியும் சேர்ந்து சாப்பிடலாம். நானும் என் சகோதரியும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்,சகோதரியின் கணவன் கதவருகில் வந்தால், என் சகோதரி உடனே சாப்பிடுவதை நிறுத்தி விடுவாள்; பாவம், அவளது கணவன் ஓட்யே போய்விடுவான்.

இவையெல்லாம் எங்கள் நாட்டிற்கே உரிய வழக்கங்கள். இவற்றில் சிலவற்றை நான் வேறு பல நாடுகளிலும் கண்டேன். நான் திருமணம் செய்து கொள்ளாத்தால் மனைவியைப்பற்றிய என் அறிவு பூரண மானதல்ல. தாய், சகோதரிகள்பற்றி எனக்குத் தெரியும் மற்றவ்களின் மனைவியைப் பார்த்திருக்கிறேன்; நான் சொன்னது இவர்களிடமிருந்து அறிந்ததுதான்.

பெண்களின் கல்வியும் பண்பாடும் ஆணைப் பொறுத்தே உள்ளது. எங்கே ஆண்கள் நல்ல பண்பாட்டுடன் விளங்குகிறார்களோ, அங்கே பெண்களும் அப்படி விளங்குவார்கள். எங்கே ஆண்கள் அப்படி இல்லையோ, அங்கே பெண்களும் அப்படி இல்லை.

இந்த வழக்கப்படி, பழங்காலத்திலிருந்தே ஆரம்பக் கல்வி கிராம அமைப்பைச் சேர்ந்ததாக இருந்தது. அனாதிகாலத்திலிருந்தே நிலம் தேசிய உடைமை ஆக்கப்பட்டிருந்தது - நீங்கள் சொல்வது போல், அரசாங்கத்தின் குறிப்பிட்ட நில்தை வைத்திருப்பதால், இந்தியாவில் உள்நாட்டு வருமானம் நிலத்திலிருந்து வருகிறது. இந்த நிலத்தை ஐந்தோ, பத்தோ, இருபதோ, நூறோ குடும்பங்கள் கொண்ட ஒரு சமூகம் பொதுவாக வைத்திருக்கிறது. அந்த நிலம் அவர்களின் கீழ் இருக்கிறது. அவர்கள் அரசாங்கத்திற்கு வரி கொடுத்துவிட்டுத் தங்கள் செலவில் வைத்தியர், கிராம ஆசிரியர் முதலியவர்களை நியமிக்கிறார்கள்.

ஹெர்பட் ஸ்பென்சரைப் படித்தவர்களுக்கு, அவர் கூறுகின்ற ‘மடங்கள் மூலம் கல்வி’ என்ற கருத்து நினைவிருக்கலாம். இது ஐரோப்பாவில் முயற்சி செய்யப்பட்டது. சில இடங்களில் வெற்றியும் கண்டது; அதாவது ஒரே ஒரு ஆசிரியர் இருப்பார், அவரைக் கிராமம் பராமரித்து வரும். இந்தத் தொடக்கப்பள்ளிகள் மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருக்கும் ஏனெனில் எங்கள் முறைகள் மிக எளியவை. ஒவ்வொரு சிறுவனும் ஒரு தடுக்கு கொண்டு வருவான்; ஆரம்பத்தில் அவனது காகிதம் என்பது பனை ஓலைதான். ஏனெனில் காகித விலை அதிகம். ஒவ்வொரு சிறுவனும் தன் தடுக்கை விரித்து, அதன் மீது அமர்வான். பிறகு தன் புத்தகங்களையும் மைக்கூட்டையும் எடுத்து வைத்துக்கொண்டு எழுதுவான். சிறிது கணக்கு, சிறிது சம்ஸ்கிருத இலக்கணம், சிறிது மொழிப்பயிற்சி, வரவு செலவு இவைதான் இந்தக் டொக்கப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும். சிறிய நீதிநூலை ஒரு முதியவர் கற்றுக் கொடுப்பார், நாங்கள் மனப்பாடம் செய்வோம். ஒரு பாடம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

avatar
Guest
Guest

PostGuest Thu 6 Nov 2008 - 1:24

கிராமத்தின் நன்மைக்காக கிராமத்தை விடவேண்டும்;

மனித குலத்தின் நன்மைக்காக நாட்டை விட வேண்டும்;

உலக நன்மைக்காக எல்லாவற்றையும் விடவேண்டும். நாங்கள் அவற்றைமனப்பாடம் செய்வோம். ஆசிரியரும் மாணவர்களும் அவற்றை விளக்குவார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்துதான் படிப்போம். பிறகு கல்வி மாறுபடும். பழங்கால சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்களில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் பல்கலைக் கழகப் படிப்புவரை செல்வது அரிது.

தற்காலத்தில் ஐரோப்பிய முறையிலான உயர்நிலைக் கல்விக்கு அதிக ஆதரவு உள்ளது; பெண்கள் இதனைப் பெற வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது. இதை வேண்டாம் என்று சொல்பவர்களும் சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் வேண்டும் என்று சொன்னவர்கள்தான் வெற்றி பெற்றார்கள். ஆக்ஸ் போர்டும், கேம்பிரிட்ஜ்ம், அவ்வாறே ஹஸர்வர்டும், யேலும் கூடப் பெண்களை அனுமதிக்காத்து விந்தை; ஆனால் அது உண்மை. அதே வேளையில் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் இருபது வருடங்களுக்கு முன்பே, பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். நான் பட்டப்படிப்பை முடித அதே ஆண்டில், பல பெண்களும் பட்டம் பெற்றது எனக்கு நினைவிருக்கிறது - ஆண்களுக்கான அதே பாடங்கள், அதே தரம் அனைத்தும் இருந்தன. அவர்கள் சிறப்பாகப் பயின்றார்கள். பெண்கள் கல்வி பெறுவதை எங்கள் மதம் ஒருபோதும் தடுப்பதில்லை. இன்ன வகையில் பெண்களுக்குக் கல்வியளிக்க வேண்டும் ஏன், இன்ன வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதெல்லாம் கூறப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படித்தார்கள் என்று பழைய நூல்கள் கூறுகின்றன. ஆனால் பின்னாளில் நாடுமுழுவதிலுமே கல்வி புறக்கணிக்கப்பட்டது.

அன்னியர் ஆட்சியில் என்ன எதிர்ப்பார்க்க முடியும்? நாட்டை வென்ற அன்னியர்கள் எங்களுக்கு நன்மை செய்வதற்காக அங்கே இருக்கவில்லை. அவர்களுக்கு வேண்டியது பணம், அவ்வளவுதான். நான் பன்னிரண்டு வருடங்கள் சிரமப்பட்டுப் படித்து, கல்கத்தா பல்லைக் கழகத்தின் பட்டதாரி ஆனேன். ஆனால் அங்கே இப்போது நான் மாதம் ஐந்து டாலர்கூடச் சம்பாதிக்க முடியாது. இதனை நீங்கள் நம்புவீர்களா? ஆனால் இது உண்மை. அன்னியர்களின கல்வி நிறுவனங்கள் இருப்பதெல்லாம் குறைந்த சம்பளத்தில் தங்களுக்கு உதவக்கூடிய கொத்தடிமைகளை ஏராளமாகப் பெறுவதற்காகத்தான்; எழுத்தர்கள், தபால் நிலைய அதிகாரிகள், தந்தியடிப்பவர்கள் போன்றோரை உருவாக்குவதற்கு, அவ்வளவுதான். இதன் காரணமாகச் சிறுவர் சிறுமியரின் கல்வி முற்றிலுமாகக் கவனிப்பாரற்றுப் போய்விட்டது. அந்த நாட்டில் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உள்ளன. உங்கள் சொந்தப் பழமொழிகளில் ஒன்றை இங்கு நான் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும் - ‘பெட்டைத வாத்திற்குரிய உணவே ஆண் வாத்திற்கும் உரியது’. இதை நினைவில் கொள்ள வேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக