புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
12 Posts - 2%
prajai
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
9 Posts - 2%
Jenila
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10அன்பிற்கு இல்லை எல்லை Poll_m10அன்பிற்கு இல்லை எல்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்கு இல்லை எல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Tue Apr 26, 2011 9:48 pm

கேரள மாநிலத்தில் ஆலப்புழையைச் சேர்ந்த செல்லம்மாவிற்கு வாழ்க்கையில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காலம் கடந்து நடந்த திருமணம், திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் மரணம், உறவினர்களின் உதாசீனம், அதைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்த பிறகும் உறவினர்கள் வீட்டை விட்டுத் துரத்தியது என்று எல்லாம் சேர்ந்து அவரை அவரை அறுபதாவது வயதில் முச்சந்தியில் நிறுத்தியது. இனி வாழ வழியில்லை, வாழ்வதில் அர்த்தமும் இல்லை என்று நினைத்த செல்லம்மா வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார். ரயில் தண்டவாளத்தில் ரயிலை எதிர்கொண்டு வாழ்க்கையையும் தன் துக்கங்களையும் முடித்துக் கொள்ளும் முடிவோடு அவர் சென்ற நாள் 2000ஆம் ஆண்டு ஜனவரி 25.

அப்போது தான் ரஜியா பீவி என்ற பெண்மணி அவரைப் பார்த்தார். விரைந்து வரும் ரயிலையும் அதை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த அந்த மூதாட்டியையும் பார்த்த அவர் திடுக்கிட்டுப் போனார். ஓடிச்சென்று செல்லம்மாவை ரயில் செல்லும் பாதையிலிருந்து இழுத்து அவர் காப்பாற்றினார். பிறகு செல்லம்மாவின் சோகக் கதையைக் கேட்டறிந்த ரஜியா பீவியின் மனம் நெகிழ்ந்தது. அங்கிருந்து அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கணவர், நான்கு குழந்தைகளுடன் ரஜியா பீவி வசித்து வந்த வீடோ மிகச் சிறியது. ஆனாலும் மனம் சிறுக்கவில்லை என்றால் யாருக்கும் எங்கும் இடம் இருக்கும் அல்லவா? உற்றார் உறவினரால் துரத்தப்பட்ட அந்த இந்து மூதாட்டிக்கு, ரஜியா பீவி என்ற முஸ்லீம் பெண்ணின் மிகச் சிறிய வீட்டில் தற்காலிக அடைக்கலம் கிடைத்தது.

ஆலப்புழையில் வடக்கு அம்பலப் புழா பகுதியில் ஆறாம் வார்டு பஞ்சாயத்து உறுப்பினரான ரஜியா பீவி செல்லம்மாவைத் தன் தாயாகவே எண்ணிப் பார்த்துக் கொண்டார். ஆனாலும் அந்த வீடு மிகச் சிறியதாகையால் சிரமங்கள் நிறையவே இருந்தன. எனவே ரஜியா பீவி பஞ்சாயத்தின் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றின் மூலம் செல்லம்மாவிற்குத் தனியாக ஒரு சிறிய வீடு கட்டித் தர முனைந்தார். அரசாங்கம் தந்த பணம் போதாமல் போகவே ரஜியா பீவி தன் சொந்த சேமிப்பையும் செல்லம்மாவிற்காக செலவு செய்து வீடு கட்டி முடித்தார்.

மதங்களுக்கிடையே உண்மையில் பிரச்சினை இல்லை என்றாலும் பிரச்சினைகளை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்டவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் ரஜியா பீவியின் முயற்சிகளுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜியா பீவியும், அவர் குடும்பத்தினரும் அதைப் பொருட்படுத்தவில்லை. கட்டி முடித்த வீட்டில் செல்லமாவைக் குடியேற்றிய ரஜியா பீவி தினந்தோறும் அங்கு சென்று செல்லம்மாவின் நலம் விசாரிக்கவும், அவருடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்றவும் இன்று வரை தவறவில்லை. ஒரு தாயும், மகளும் போல ஒரு இந்துவும், முஸ்லீமும் பத்து வருடங்கள் கழிந்த பின் இன்றும் பாசத்தோடு இருந்து வருகிறார்கள்.

இந்த செய்தி மலையாளத் திரைப்பட இயக்குனர் பாபு திருவல்லா என்பவரை எட்டி அவர் இந்த வித்தியாசமான நேசமுள்ள பந்தத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த பிறகு தான் இவர்கள் நட்பு நாட்டில் பலர் கவனத்தையும் எட்டியது. குறுகிய மனங்கள் சமூகத்தில் பெருகிய இன்றைய காலத்தில் ரஜியா பீவியின் மனதில் கசிந்த அந்த இரக்கமும், அன்பும் அவரை எத்தனை பெரிய உதவி செய்யத் தூண்டியது பாருங்கள். வார்டு உறுப்பினர் பதவியில் எவ்வளவு சம்பாதிக்கலாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடும் நபர்களே இன்று அதிகம். அப்படி இருக்கையில் எந்த விதத்திலும் உறவோ, நட்போ, பரிச்சயமோ இல்லாத ஒரு வயதான பெண்மணிக்கு எல்லாமாக ஆகி அபயம் அளித்த அந்த உள்ளம் நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா?

இன்றைய எந்திர உலகில் நான், எனது குடும்பம் என்று அதிக பட்சம் நாலைந்து நபர்களோடு தனிமனித அக்கறை நின்று விடுகிறது. அந்தக் குடும்பத்தில் உடன்பிறப்புகளுக்குக் கூட பெரும்பாலும் இடம் இருப்பதில்லை. வயதான பெற்றோர்கள் கூட பாரமாக கருதப்படும் அவலம் அதிகரித்து வருகிறது. மற்றவர்களுக்கு உதவுவதால் தங்களுக்கு சிறு அசௌகரியம் ஏற்பட்டாலும் அது சகிக்க முடியாத கொடுமையாக நினைக்கும் இயல்பு அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் ரஜியா பீவி போன்றவர்கள் பாலைவனச் சோலையாகவே நமக்குத் தோன்றுகிறார்கள்.

ஒரு காலத்தில் வீடு கட்டும் போது வீட்டின் திண்ணையைப் பெரிதாகக் கட்டுவார்கள். அந்தத் திண்ணை இரவு நேரங்களில் வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறி விட்டுப் போவதற்காகவே கட்டப்பட்டது. பல வழிப்போக்கர்கள் விடிந்த பின் அந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போவதும் உண்டு. முன்பின் பழக்கமில்லாத, பார்த்திராத மனிதர்களுக்கும் தங்கள் வீட்டில் ஒரு இடம் ஒதுக்கி விடும் உள்ளம் நம் முன்னோர்களுக்கு இருந்தது என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

‘அதிதி தேவோ பவ” என்று சமஸ்மிருதத்தில் சொல்வார்கள். விருந்தாளியை இறைவனாகவே நினைக்கும் அளவு விருந்தோம்பல் நம் முன்னோரிடத்தில் இருந்தது. திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு ஒரு தனி அதிகாரத்தையே ஒதுக்கி இருக்கிறார். இதெல்லாம் மனிதனின் அன்பின் வெளிப்பாடுகளாக இருந்தன. எல்லோர் நன்மையும் சேர்த்து நினைக்கும் பெரிய மனது அவர்களுக்கு இருந்தது. இன்று கல்வியிலும், சௌகரியங்களிலும் நாம் எத்தனையோ முன்னேறி இருந்தாலும் மனம் என்று எடுத்துக் கொண்டால் நிறையவே நாம் பின் தங்கி அல்லவா இருக்கிறோம்.

ஒரு பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் அன்னை தெரசாவின் தொண்டுகளால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டவராக அவரிடம் சொன்னார். “அன்னையே, நானும் ஏதாவது விதத்தில் இது போன்ற தொண்டில் பங்கு பெற விரும்புகிறேன். என்ன செய்யட்டும் சொல்லுங்கள்?”

அன்னை தெரசா ஒரு நல்ல தொகையை நன்கொடையாகக் கொடுக்கச் சொல்வார் என்று எதிர்பார்த்த அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக அன்னை தெரசா சொன்னார். “நீங்கள் அதிகாலை எழுந்து உங்கள் நகர வீதிகளில் நடந்து செல்லுங்கள். எனக்கு யாருமே இல்லை என்ற துக்கத்தில் அழுந்திக் கிடக்கும் மனிதர்களை நகர வீதிகளில் கண்டால் அவர்கள் துக்கங்களைக் கனிவாகக் காது கொடுத்துக் கேட்டு அவர்களுக்குத் தைரியம் சொல்லுங்கள். உங்களால் முடிந்த உதவிகளையும் செய்யுங்கள். ’நீ தனியன் அல்ல, உன் நலனில் நானும் அக்கறை கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி உங்களால் அவர்களை ஆசுவாசப்படுத்த முடியுமானால், அவர்கள் இருண்ட மனதில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்த முடியுமானால் அதுவே பெரிய தொண்டாக இருக்கும்”. அன்னையின் அந்த பதில் தன்னை மிகவும் மனம் நெகிழ வைத்து சிந்திக்கவும் வைத்ததாக பின்னர் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் தெரிவித்தார்.

பொதுவாக மனிதர்கள் நினைப்பதெல்லாம் ‘எனக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது அடுத்தவர்கள் பிரச்சினைகளை நினைக்க எனக்கு நேரமேது?’ என்று தான். பிரச்சினையே இல்லாதவன் தான் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்றால் யாருக்கும் யாரும் உதவ முடியாது. ஏனென்றால் இறந்து போன மனிதன் மட்டுமே பிரச்சினை இல்லாதவன். உயிரோடு இருப்பவர்கள் அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.

ரஜியா பீவிக்கு பிரச்சினைகள் இருக்கவில்லையா? இருந்தன. அவர் செல்வந்தர் அல்ல. ஒரு பெரிய குடும்பத்தின் தலைவி என்ற நிலையில் அவருக்கு ஆக வேண்டிய எத்தனையோ காரியங்கள் இருந்தன. ஆனாலும் எல்லோராலும் துரத்தப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்ற செல்லம்மா என்ற அந்த மூதாட்டியைப் பார்த்த போது இயல்பாக சுரந்த இரக்கம் அவரை உதவிக்கரம் நீட்ட வைத்ததல்லவா? அங்கே அந்த அன்பில் தான் அவர் இமயமென உயர்கிறார்.

உண்மையான அன்பிற்கு எல்லைகள் இல்லை. அப்படிப்பட்ட அன்பை நான், எனது குடும்பம் என்று சுருக்கி விடுவது மனிதமும் அல்ல. அதையும் மீறி நீட்டிக்கும் போது அது ஏற்படுத்தும் மாற்றங்கள் சாதாரணமானதல்ல. ரஜியா பீவி போல் பேருதவி செய்ய முடியா விட்டாலும் அன்னை தெரசா கூறிய படி வாழ்க்கை சுமையைத் தாங்க முடியாமல் தத்தளிக்கும் மனிதர்களிடம் கனிவான பார்வை, தைரியமூட்டும் வார்த்தைகள், சிறு சிறு உதவிகள் தர முடிந்தால், அந்த சுமைகளின் கனத்தை குறைக்க முடிந்தால் அதுவே மிகப் பெரிய சேவை. அந்த உயர் அன்பே மனிதகுலத்தின் இன்றை மிகப்பெரிய தேவை.


- என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:03 pm


சொல்ல வார்த்தைகளே இல்லை.... ஒரே ஒரு வரி தவிர....


அதிதி தேவோ பவஹ.......

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கணேஷன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பிற்கு இல்லை எல்லை 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 26, 2011 11:09 pm

அன்பா.?.. கடவுளே... அன்புன்னாலே தாங்க முடியலை சாமீ...அநியாயம்

இந்த காலத்துக்கு அதெல்லாம் ஒத்து வராத சமாச்சாரமுங்கோ...ஒன்னே முக்கா லட்சம் கோடி ரூபாக்கு முன்னால இந்த அன்பெல்லாம் என்னாகும்னு யோசிச்சேன் சாமீ..

இருந்தாலும் பெரியவா நீங்க சொல்லிட்டேளே.. நன்னா இருக்கு சாமியோவ்..! நல்லா இருங்கோ..

- குறுக்குப்பேட்டை குப்புசாமி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:12 pm

யார் வீட்டுக்கும் சட்டுனு போக மாட்டேன் நான்..... ஏன்னா பயம்.... எப்படி பேசுவாங்களோ நல்லா பேசுவாங்களோன்னு.... அப்படியும் போனேன் சோகம்

இந்த பகிர்வை படிக்கும்போது என்னையும் அறியாமல் நினைவு வந்தது..... அன்பு ஒன்று இருந்தால் போதும்..... அது உலகத்தையே அற்புதமாக்கும்..... நம்பிக்கையுடன் சொல்கிறேன்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பிற்கு இல்லை எல்லை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:14 pm

கலைவேந்தன் wrote:அன்பா.?.. கடவுளே... அன்புன்னாலே தாங்க முடியலை சாமீ...அநியாயம்

இந்த காலத்துக்கு அதெல்லாம் ஒத்து வராத சமாச்சாரமுங்கோ...ஒன்னே முக்கா லட்சம் கோடி ரூபாக்கு முன்னால இந்த அன்பெல்லாம் என்னாகும்னு யோசிச்சேன் சாமீ..

இருந்தாலும் பெரியவா நீங்க சொல்லிட்டேளே.. நன்னா இருக்கு சாமியோவ்..! நல்லா இருங்கோ..

- குறுக்குப்பேட்டை குப்புசாமி

உடுட்டுக்கட்டை அடி வ



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பிற்கு இல்லை எல்லை 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 26, 2011 11:16 pm

மஞ்சுபாஷிணி wrote:யார் வீட்டுக்கும் சட்டுனு போக மாட்டேன் நான்..... ஏன்னா பயம்.... எப்படி பேசுவாங்களோ நல்லா பேசுவாங்களோன்னு.... அப்படியும் போனேன் சோகம்

இந்த பகிர்வை படிக்கும்போது என்னையும் அறியாமல் நினைவு வந்தது..... அன்பு ஒன்று இருந்தால் போதும்..... அது உலகத்தையே அற்புதமாக்கும்..... நம்பிக்கையுடன் சொல்கிறேன்.....

சத்தியமான உண்மைதான்... என்ன செய்வது ... எல்லாருக்குமே அன்பின் மொழி புரிவதில்லையே... சோகம்

என் கூற்று புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் மஞ்சு... சோகம் :வணக்கம்:




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:19 pm

தோப்புக்கரணம் போடு அப்ப தான் ஒத்துக்குவேன்.... இப்படி சும்மா கை எடுத்து கும்பிட்டா முடிஞ்சுதா ஹுஹும்.. முடியாது.... எழுந்துரு தோப்புக்கரணம் ஸ்டார்ட் பண்ணு ஒன்னு ரெண்டு... 108 போடு.... அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பிற்கு இல்லை எல்லை 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 26, 2011 11:25 pm

கண்டிப்பாக மஞ்சு... சோகம்

1 ..... 10 ... 90 .... 100... 108...! ஓகேவா..? நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:26 pm

சீட்டிங் சீட்டிங்..... இன்னொரு தபா ஸ்டார்ட் ஒன் டூ புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பிற்கு இல்லை எல்லை 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 26, 2011 11:29 pm

அட கொய்யா... சொம்மா போனா போகுதுன்னு 108 போட்டா ரீ கவுண்டிங்கா செய்யறே... மவளே ... இருக்கு ... உனக்கு... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக