புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
களவாணிகளின் காலம்! Poll_c10களவாணிகளின் காலம்! Poll_m10களவாணிகளின் காலம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவாணிகளின் காலம்!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 10:51 am

களவாணிகளின் காலம்!'

கலக்கும் கம்யூனிஸ்ட் புத்தகங்கள்!

பொதுக் கூட்டங்கள் மட்டும் அல்லாது புத்தகங்​களாலும் வேர்விட்டுக்

கிளை பரப்பி வளர்ந்தது தி.மு.க.! ஆனால், அந்தத் தி.மு.க-வின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி குறித்து அனல் கேள்விகளை அள்ளி வீசுகிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பதிப்பகமான பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நான்கு புத்தகங்கள்!
'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’, 'பவர்கட் தி.மு.க.’, 'சிறப்பு​மில்லை, கூறுமில்லை’, 'விலை உயர்வும் வெங்காயக் கனவும்’ ஆகியவைதான் அந்த நான்கு புத்தகங்கள்! தி.மு.க. அரசின் மீது போகிற போக்கில் குற்றம் சாட்டாமல், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பல முக்கியமான கேள்விகளை அவை எழுப்பி உள்ளன.

'வசூல் ராஜா’ புத்தகம், மருத்துவத் துறையில் நடைபெற்ற ஊழல்கள், குளறுபடிகளை அலசுகிறது. குறிப்பாக, தி.மு.க. அரசால் ஆடம்பர விளம்பரம் செய்யப்படும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் பின் உள்ள நோக்கங்களைத் தோலுரிக்கிறது. ''மக்கள் நலவாழ்வைப் பாதுகாப்பது என்கிற கடமையில் இருந்து விலகி, அந்தக் கடமையை ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவுட்சோர்ஸ் செய்வது எப்படி சரி?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

மக்களின் நலம் காப்பதற்காகத்தான் ஆண்டுக்கு 517.307 கோடியை இந்தத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு செலவிடுகிறது என்றால், அதை நேரடியாகச் செலவிடாமல், தனியார் இன்சூரன்ஸ் மூலம் ஏன் செலவிட வேண்டும் என்கிற கேள்வி நியாயமானதுதானே! மேலும், எல்லாவித இன்சூரன்ஸ் முறைகளிலும் 'திட்டத்தில் இருந்து விலகும் உரிமை’ அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலோ, அது இல்லை. எனவே, ஒரு குடும்பம் சிகிச்சை பெற்றாலும், பெறாவிட்டாலும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்குத் தமிழக அரசு தொடர்ந்து பிரீமியம் கட்டும்! இப்படி 'ஸ்டார் ஹெல்த்’ என்னும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்குச் செல்லும் வருமானம் என்பது, தமிழக மக்களின் பணமே. 'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் மருத்துவத் திட்டம்’தான் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிறது புத்தகம்!

இந்தத் திட்டத்தின்படி, பட்டியலில் உள்ள 51 நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை. இதய சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்றவை இதன் கீழ் வந்தாலும், சில நோய்களுக்கான ஆய்வு சிகிச்சைகளுக்கு அனுமதி கிடையாது. உதாரணமாக, ஆஞ்சியோகிராம் சோதனையின் முடிவில், இதய அறுவை சிகிச்சை அவசியம் என்றால், ஆஞ்சியோகிராம் சோதனைக்கான பணத்தைப் பெறலாம். ஆனால், அறுவை சிகிச்சை தேவை இல்லை என்று சோதனையில் தெரிந்தால், ஆஞ்சியோகிராம் சோதனைக்கான கட்டணத்தை நோயாளிகள்தான் கட்ட வேண்டும். மேலும், அதிகபட்சக் காப்பீட்டுத் தொகை 1 லட்சம்தான். அதற்கு மேல் ஆகும் செலவையும் சம்பந்தப்பட்டவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இதில், ''தி.மு.க. அரசு, அரசுக் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்காமல் தனியார் காப்பீட்டு நிறுவனமான 'ஸ்டார் ஹெல்த்’தை தேர்ந்தெடுத்தது ஏன்? நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், நோயை வளரவிட்டு சிகிச்சை அளிப்பதற்கு ஏன் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?'' என்கிற இரு அடிப்படைக் கேள்விகளும் உள்ளது. தி.மு.க-தான் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்து, மின் வெட்டைப் பிரித்து மேய்கிறது, 'பவர்கட் தி.மு.க.’!

'ஆற்காடு வீராசாமியின் சாதனையான நான்ஸ்டாப் பவர் கட்டால், கோவையில் 112 பஞ்சாலைகளில் 40 சதவிகிதம் உற்பத்தி இழப்பு, 11 லட்சம் சிறுதொழில்கள் முடக்கம்’ எனப் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறது இது. 'ஏற்கெனவே 1990-ல் தனியாரிடம் மின் உற்பத்திப் பணிகள் ஒப்படைக்கப்பட்டு, அந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் கிடப்பில் போடப்பட்ட... பல அனல் மின் நிலையங்களைத் தமிழக அரசே எடுத்து நடைமுறைப்படுத்த முயல்கிறது. இந்த நிலையில் ஏன் மீண்டும் தி.மு.க. அரசு, தனியாரிடம் மின் உற்பத்திக்கான பணிகளை ஒப்படைக்க வேண்டும்? அப்படிப் பல சலுகைகளோடு தனியாரிடம் மின் உற்பத்திப் பணிகள் ஒப்படைக்கப்பட்டும் தமிழகத்தின் மின்சாரத் தேவைகள் ஏன் பூர்த்தி செய்யப்படவில்லை?’ என்கிற நியாயமான கேள்விகளை எழுப்பும் புத்தகம், மின் துறையைக் 'கார்ப்பரேட்களின் கஜானா’ என்று வர்ணித்து, 'களவாணிகளின் காலம்’ என்று கிண்டலடிக்கிறது!

'விலை உயர்வும் வெங்காயக் கனவும்’ புத்தகம், விலைவாசி உயர்​வைக் கட்டுப்படுத்துவதில் மத்திய காங்கிரஸ் அரசு மற்றும் மாநில தி.மு.க. அரசின் தோல்விகளை அலசுவதோடு, அதன் உலகமயப் பின்னணியையும் முன்வைக்கிறது. 'தாலிக்குத் தங்கம் எங்கே? தாளிக்க வெங்காயம் எங்கே?’ என்று எதிர்க் கட்சியாக இருந்தபோது கேள்வி எழுப்பிய தி.மு.க., இன்று அதே கேள்வியின் நாயகனாக உருமாறிப்போன சோகத்தை விளக்குகிறது புத்தகம். மேலும், உள்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து ஏற்றுமதிக் கொள்கையை ஊக்குவிப்பதும், தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் அவசரஅவசரமாக வெளிநாடுகளில் இருந்து அதே பொருட்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்வதும் ஆகிய மத்திய அரசின் இரட்டை வேடத்தையும் விமர்சிக்கிறது!

போகிற இடம் எல்லாம் 'தலித் மக்களின் சம்பந்தி’ என்று தம்பட்டம் அடிக்கிற கருணாநிதியின் அரசு, தலித் மக்களுக்கு இழைத்த நிர்வாகத் துரோகங்கள் குறித்துப் பட்டியல் இடுகிறது, 'சிறப்புமில்லை, கூறுமில்லை’ புத்தகம். ''தமிழகத்தில் தலித் மக்கள்தொகை அடிப்படையில், அவர்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகத் தமிழக அரசு ஒதுக்கவேண்டிய தொகை 19.18 சதவிகிதம். ஆனால், தி.மு.க. ஆட்சியில் தலித் மக்களுக்கு அவர்கள் மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்கப்படாத தொகை மட்டும் 4,488 கோடி. சென்னையில் தெருவுக்குத் தெரு பூங்காக்கள் அமைத்து நடுத்தர மக்கள் வாக்கிங் போவதில் கவனம் காட்டும் தமிழக அரசு, ஏன் தலித் மாணவர்கள் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த அக்கறை காட்டுவது இல்லை? ஒதுக்கப்படுகிற தொகையையும் இலவச டி.வி. வழங்குவது, சட்டமன்றக் கட்டடம் கட்டுவது ஆகியவற்றுக்காகச் செலவிடுவது என்பது தலித் மக்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கிற மனோபாவம்தானே?'' என்று கேள்விகள்.

சிவப்புச் சட்டைக்காரர்களின் புத்தகங்கள் இந்தத் தேர்தல் களத்தைக் கலக்கி வருகின்றன!

- ரீ.சிவக்குமார்

நன்றி விகடன்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

களவாணிகளின் காலம்! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:17 pm

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:56 pm

இந்த அருமையான பதிவு நம் மக்களின் கவனம் ஈர்க்காதது ஏன்...?

கூட்டத்தில் கரைந்துபோகும் அள்வுக்கு இதில் உள்ள கருத்துகள் கரகோஷ வார்த்தைகளோ அல்லது ஜெய கார வார்த்தைகளையோ கொண்டிருக்கவில்லை..

நம் மனிதம் சுரண்டப்படும் மோசமான நிலையை எடுத்துக் கூறியுள்ள இந்த பதிவு நான்கைந்து அறிவு ஜீவிகளையாவது கவர வேண்டும் ... இல்லையேல் ஈகரை வெறும் அரட்டைக்கூடம் என்றாகிவிடும்... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக