புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
10 Posts - 71%
heezulia
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
1 Post - 7%
viyasan
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
202 Posts - 41%
heezulia
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
21 Posts - 4%
prajai
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலரே என்னை மறவாதே!! Poll_c10மலரே என்னை மறவாதே!! Poll_m10மலரே என்னை மறவாதே!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரே என்னை மறவாதே!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri 4 Sep 2009 - 17:02

மலரே என்னை மறவாதே!! 41127052
உலகத்திலே
விளம்பரங்கள் எதுவுமே இல்லாமல், இயல்பாகவே பிரபல்யமாகிவரும் சொல் என்றால்
அது காதல் என்பதாகவே இருக்க வேண்டும். மக்களுக்கு காதல் மீது அவ்வளவு
காதல். காதல் என்ற உணர்வில் தான் அத்துணை விடயங்களும் நடந்தேறுகின்றன.
காதலைப் பாடியிறாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் இவ்வாறு பிரபல்யமானதற்கு காரணம், அன்பு என்கின்ற அழகிய உணர்வின்
அத்திவாரமாக அது இருப்பதுதான். திரைப்படங்களின் வெற்றியின் அச்சாணியாக
காதல் என்பதே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை.
காதல் காதலிக்கப்படவே வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேது!
காதலாவது கத்தரிக்காயாவது என்று காதலை உதறித் தள்ளுபவர்கள் கூட தம்
மனதில் காதல் கோட்டைகள் பலவற்றை கட்டிக் கொண்டிருப்பார்கள். அன்பின்
அர்த்தம் காதலோடு சேர்கையில், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
மலர்வனங்களின் வழியே நடந்த சுகம் கொள்கிறது. உணர்வுகளைப் புரிந்து
கொள்வதாலே நாம் மன நிம்மதி கொள்ள முடியும் என நான் சொல்வேன்.

இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கியிருக்கும் உங்களை, நினைவலைகள்
சுந்தரமான பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கத்
தொடங்கியிருக்கும். கல்லூரிக் காலத்திற்கு அழைத்துச் சென்று
கொண்டிருக்கும். I’ve Fallen in love என்று ஆங்கிலத்தில் கூட, காதலில்
விழுந்து விட்டேன் என்றுதான் சொல்வார்கள். அப்படியானால், காதல் என்பது
விழுந்து தோற்றுப் போகும் ஓரிடமா? என்ற கேள்வி எழுகிறது. (உதய தாரகை..
உங்கட ஆராய்ச்சி இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. இதெல்லாம் ஓவரா
தோனலையா???)
ரோசாவைக் கிள்ளாதே!


அது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்த காலமது. ஓரிரவு. எனது
விடுதி பொறுப்பாளரின் அறிவித்தல் சத்தம் தவிர்ந்த ஏனைய எந்தச்
சத்தமுமில்லாத மயான அமைதி நிலவிய பொழுது. இடம் விடுதிக் காரியாலயத்தின்
முற்றம். அழகிய பூமரங்களின் இன்னொரு வனாந்தரம் அது (இதெல்லாம் ரொம்ப ஓவரா
தோனலையா உதய தாரகை!??).
பொறுப்பாளரின் அறிவிப்புகளை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக்
கொண்டிருந்த வேளை, என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் நண்பணொருவன்
தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ரோசா செடியின் மலரை கொய்ய முற்பட்டான்.
அந்நேரம் பொறுப்பாசிரியர் அவனை நோக்கி, “ரோசாவைக் கிள்ளாதே!” என்ற
கம்பீரக் குரலில் ஆணையிட்டார். அங்கு கூடியிருந்த மாணவர்கள் அனைவரும்
சிரித்துவிட்டோம் (இந்தச் சிரிப்பு தோன்ற அந்நிகழ்வு இடம்பெற்ற தருணம்
அப்படியாகவிருந்தது.. இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. ஏதோ ஒன்ற சொல்ல
வர்ரது பின்னர் இப்படி Explanation வேற கொடுக்கிறது. தாங்க முடியல உதய
தாரகை..!). விசயத்திற்கு வருகிறேன்.
ஒருவர் ரோசா செடியொன்றை நட்டு, அதற்கு அன்பாய் நீருற்றி பராமரித்து
வந்தார். அந்த ரோசா செடி பூப்பதற்கு முன்பாக அதனை ஒரு தரம் நோட்டமிட்டார்.
அங்கே மிக சீக்கிரமாகவே பூக்கும் நிலையிலிருந்த மொட்டையும், தண்டு
வழியே பரந்து கிடந்த முட்களையும் கண்டார். “என்ன கொடுமை இது, கூரிய
முட்கள் நிறைந்த ஒரு தாவரம் எங்கே, எப்படி அழகிய பூவைத் தரப்போகிறது?”
என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டார்.
தனது எண்ணத்தால் கவலை கொண்ட அவர், பூச்செடிக்கு நீருற்றாமல் விட்டுவிட்டார். பூக்கவிருந்த மொட்டு இறந்து சருகானது.
நாமும் இப்படித்தான். ஒவ்வொரு ஆத்மாவினுள்ளும் அழகிய ரோசாவொன்று
உள்ளது. அன்பான அழகிய பண்புகள் நாம் பிறக்கும் போது, எம்மோடு கூடவே
சேர்ந்தே வருகின்றது. வளரும் போது, எமது பிழைகள் முட்களாக எம்மோடு தோற்றம்
கொள்கிறது. அதிகமானோர் முட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரோசா
மலருக்குத் தர மறந்து விடுகிறோம்.
எம்மிடமிருந்து எப்படி நல்ல விடயங்கள் வெளிப்படலாம்? என்ற சந்தேகம்
கொண்டவர்களின் நிலை பரிதாபமானதே. தம்மிடமுள்ள நல்ல விடயங்களை போசிக்காமல்
விட்டுவிடுவதால், அந்த நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்து பிரிந்து
விடுகிறது. தமது உள்ளார்த்தமான ஆளுமையை அறிய முடியாமலே வாழ்க்கையில்
தலைவிதியை தொலைத்து விடுகின்றனர்.
எமக்குள்ளே இருக்கும் அழகிய ரோசாப் பூவை இன்னொருவர் இனங்காட்டும்
நிலையும் உள்ளது. ஒரு மனிதனின் முட்களான விடயங்களைக் கடந்து அவனில்
ரோசாவைக் காணும் ஆற்றல் தான் நாம் ‘அவனியில்’ பெறும் உயர்ந்த அருட்கொடை என
நான் சொல்வேன்.



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri 4 Sep 2009 - 17:02

காதலின் அத்தியாவசிய கூறும் இது தான். அன்பின் ஊற்றும் இது தான்.
ஒருவரைக் கண்டு, அவரின் மெய்யான தவறுகளைக் கூடக் கண்டு, அவரை மனதார
ஏற்றுக் கொள்ளும் பண்பு உன்னதமானது. அவர்களின் எண்ணங்களுக்குள் அவர்களின்
ரோசா போன்ற தன்மையைக் காட்டிக் கொடுக்கும் வழி தான் அது.
மற்றவர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் ரோசாவைக் போன்ற குணங்களை
அவர்களுக்கு நாம் இனங் காட்டிக் கொடுத்தால் அவர்கள் முட்களை பார்ப்பதற்கு
விரும்பவே மாட்டார்கள். கனியிருக்க யார்தான் காய் கவருவார்? ரோசாவாய்
யாவரும் மலர்கவே!
என்னை மறந்துவிடாதே!


ரோசா மலரைப் பற்றிக் கதைக்கும் போது, எனக்கு மலர்கள் பற்றிய
ஞாப‌கமொன்று அலை பாய்கிறது. மலர்களின் பெயர்களில் அற்புதங்கள் பலவுண்டு.
”என்னை மறந்துவிடாதே!” என்ற பெயரில் ஒரு மலருள்ளது உங்களுக்குத் தெரியுமா?
Forget-me-not என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்பூவிற்கு எப்படி
பெயர்வந்தது என்பதில் பல கதைகள் உண்டு. அனைத்தும் சுவாரஸ்யமானவை. அறிந்து
கொள்ள நீங்கள் தயாரா? (நாங்க ரெடி இல்ல என்டு சொன்னா மட்டும் நீங்க என்ன
சொல்லாமலா போய்விடுவீங்க..? உதய தாரகை..)
சுந்தரமான பூக்களின் சோலையை விட்டு அகன்று விட்டுச் சென்ற ஆதாமையும்
ஏவாளையும் நோக்கி அங்கு செடியில் பூத்துக் குலுங்கிய பூ சொன்னதாம் ”என்னை
மறந்துவிடாதே!” என்று. அதுவே பெயராயிற்றாம்.
இறைவன் பூச்செடிகள் யாவற்றையும் பெயரிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,
ஓரமாய் இருந்த சிறிய பூச்செடியொன்று, “இறைவா! என்னை மறந்து விடாதே!” என்று
கேட்டுக் கொண்டதாம். அதற்கு இறைவன், “அதுவே உன் பெயராகட்டும்” என பதில்
சொன்னானாம். அதுவே பெயராயிற்றாம்.
தலைவனும் தலைவியும் ஆற்றின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
நடக்கும் வழியில் பூக்கள் சிலவற்றைக் கொய்து தன் கையில் வைத்துக் கொண்டான்
தலைவன். தலைவனின் அணிகலன்களின் பாரத்தினால், ஆற்றினுள்ளே அவன் தவறி
விழுந்து விட்டானாம். தான் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் தன்
கையிலிருந்த பூக்களை தலைவியை நோக்கி வீசி, “Forget Me Not” என சத்தமிட்டு
கத்தியிருக்கிறான். அதுவே அப்பூவின் பெயரானது.
காதலின் உணர்விற்கும் சோகமான விதியான காதலின் கதைக்கும் இப்பூவுக்கும்
நிறைய தொடர்புகள் உள்ளன. அதனாலென்னவோ தெரியவில்லை, இந்த மலர் பல
பெண்களினால், இன்னமும் நம்பிக்கையை மற்றும் நீடித்த காதல் என்பவற்றை
வெளிக்காட்டும் அடையாளமாகக் கூட அணிந்து கொள்ளப்படுகிறது. திருமணங்களில்
பல பேர், இப்பூவை காதலின் சின்னமாக பயன்படுத்துவதும் காணக்கிடைக்கிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில், இந்தப்பூவை அணிந்து கொள்பவர்கள் அவர்களின்
காதலர்களால் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள் என் ஐதீகம் வேறு இருந்ததாம்.
பூ அழகு.
மலர்களின் வாசமும் மலர்களின் நிறமும் மலர்களின் மெளனமும் பொதிந்த
எந்தப் பொருளையும் உலகில் சமைத்துவிட முடியாது. மலர்களே மலருக்கு நிகர்.
காதலை அறிவிக்கும் சின்னமாகக் கூட இன்று ரோசா மலர் இன்றும்
பாவிக்கப்படுவது அறிந்ததே! மலர்கள் மொழிகடந்து உணர்வுகளுக்குள் ஒரு
நிலையானது அதிசயமே!
- உதய தாரகை
சின்னதாய் ஒரு கருத்துக் கணிப்பு. உங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட மறக்காதீர்கள்.
காதல் என்பது?



அழகானது.
தேவையானது.
தேவையற்றது.
எதுவுமில்லை.




மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 17:35

மலர்கள் மொழிகடந்து உணர்வுகளுக்குள் ஒரு
நிலையானது அதிசயமே!
அன்பு மலர்

இது மிக மிக உண்மை..
காதலின் சின்னம் ரோஸ்..

எனக்கு தெரிந்த ..வாயால் பேசாத உணர்வால் புரிந்து கொள்ளும் விஷயம் ரோசெஸ் வண்ணத்தை(colour) வைத்து ....இதோ

Red Roses….. Love,

White Roses….. innocence

Yellow Roses….. yellow is friendship..or a message of “I’m sorry”.

Pink Roses….. Hot Pink conveys thankfulness,romance, joy, elegance

Green Roses….. calm, self-respect

Purple Roses….. royalty and control

Peach Roses….. An unspoken “thank you” or “I appreciate you”

Black Roses….. An expression of sorrow or death; often used for funerals

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri 4 Sep 2009 - 17:37

அன்பு மலர் பாடகன் சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri 4 Sep 2009 - 17:38

மகிழ்ச்சி



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 17:41

நன்றி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri 4 Sep 2009 - 17:45

என்ன மீனு உங்கதலை வழுக்கை ஆயிடுச்சு அதிர்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 17:50

தலை வழுக்கை என்றா என்ன ரூபன் ..உள்ளே சரக்கு இருந்தா போதுமே.. வெளி அழகு அழகா.. இங்கே மண்டையில் மசாலா இருக்கணும் ....

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri 4 Sep 2009 - 17:53

என்ன எல்லோரும் என்னைப்போல் அறிவுபுர்வமாக சின்திக்கிறிர்கள் என்ன எல்லோரும்
அறிவாளியாகிட்டிங்களா சிரி சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri 4 Sep 2009 - 17:55

அதிர்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக