புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
5 Posts - 13%
heezulia
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதங்களைக் கடந்த மனிதர்கள்

enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sun Apr 10, 2011 6:56 pm

ஒரு சஹஸ்ர சண்டிகா யாகம் நடக்கும் வேள்விக் குண்டத்தில் இரண்டு கறுப்பு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் நெய் ஊற்றும் காட்சியைக் கண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ஒரு சண்டிகா யாகத்தின் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த முஸ்லீம் பெண்கள் யாகத்தில் நெய் வார்ப்பதைக் கண்ட காட்சி அந்த வீடியோவில் வரக் கண்ட எனக்கும் அப்படியே அதிர்ச்சியாக இருந்தது.

அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.

கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.

இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.

அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.

-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Apr 10, 2011 9:45 pm

மத ஒற்றுமைக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. நான் ஒரு செய்தியைப்படித்தேன். அதன்படி காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளுக்கு வைகாசிமாதத்தில் தேரோட்டம் நடைபெறும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தேர் வடக்கு ராஜவீதியில் (செங்கழுநீரோடை வீதி) மசுதிக்கு அருகில் மேற்கொண்ட செல்லாமல் நின்று விட்டதாம். அப்போது அங்கிருந்த இஸ்லாமியப் பெரியவர் முயற்சியினால் தேர் அங்கிருந்து நகர்ந்ததாம். அவருக்கு நன்றி தெரிவிக்க கோயிலைச்சேர்ந்தவர்கள் சென்றபோது அப்பெரியவர் அடுத்த ஆண்டிலிருந்து தேரோடும் நாளன்று வரதராஜப் பெருமாள் கோயில் பிரசாதம் அம்மசுதியில் உள்ளவர்களுக்குத் தரவேண்டும் என்று கூறியதாகவும், கோயில் நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனராம். இந்நிகழ்வு இப்போதும் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் நம் மக்கள் மதவெறியர்கள் அல்ல.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 10, 2011 9:56 pm

மதத்தின் பெயரால் பணமும் புகழும் பெற நினைக்கும் மதத்தலைவர்களும், அரசியல் வியாதிகளும் மட்டுமே மதத்தின் பேரால் துவேஷம் பரப்புகிறனர்...

பொது மக்கள் பலருக்கு சமூக விழாக்களில் "எம்மதமும் சம்மதம் தான்"

மதங்களைக் கடந்த மனிதர்கள் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 11, 2011 12:22 am

ஆளுங்க wrote:மதத்தின் பெயரால் பணமும் புகழும் பெற நினைக்கும் மதத்தலைவர்களும், அரசியல் வியாதிகளும் மட்டுமே மதத்தின் பேரால் துவேஷம் பரப்புகிறனர்...

பொது மக்கள் பலருக்கு சமூக விழாக்களில் "எம்மதமும் சம்மதம் தான்"

பிடித்தவன் பிடித்த மதத்திற்கு மாறிக்கொள்ள முடியும் என்பதால் மதம் ஒரு பொருட்டே அல்ல. ஜாதிதான் கொடூரமானது.
உடைபட வேண்டியது முதலில் ஜாதியே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 11, 2011 12:25 am

இந்த செய்திகளை கண்டும் காணாமல் இருக்கும் அரசியல் வாதிகளை நானும் தேர்தலில் கண்டுக்கப்பிடாது புன்னகை

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 11, 2011 12:28 am

enganeshan wrote:ஒரு சஹஸ்ர சண்டிகா யாகம் நடக்கும் வேள்விக் குண்டத்தில் இரண்டு கறுப்பு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் நெய் ஊற்றும் காட்சியைக் கண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ஒரு சண்டிகா யாகத்தின் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த முஸ்லீம் பெண்கள் யாகத்தில் நெய் வார்ப்பதைக் கண்ட காட்சி அந்த வீடியோவில் வரக் கண்ட எனக்கும் அப்படியே அதிர்ச்சியாக இருந்தது.

அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.

கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.

இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.

அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.

-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

வணக்கம்
மிக நல்லப் பதிவு. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னால் வந்த எனது பதிவு “ பாசம் பேருந்தில், பகை ராகெட்டில்” இதோடு மிகவும் ஒத்துப் போய் ஒன்றொடு ஒன்று பொருந்தி இணைவதால் அதை மீண்டும் எடுத்து வைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக