புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_m10சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கராஜாவும் உப்பு சீடையும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 05, 2011 3:48 pm

First topic message reminder :

வழுக்குப்பாறைக் காட்டில் வசித்த சிங்க ராஜா விநோதமானவர். சிங்கங்களுக்குப் பிடித்தமான உணவு மான் இறைச்சி என்றுதானே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த சிங்க ராஜாவுக்கு மிகவும் பிடித்தமானது என்ன தெரியுமா? உப்புச்சீடை!

ஒருமுறை ஆற்றில் திடீரென்று பயங்கர வெள்ளம். சிங்க ராஜா கத்திக்கப்பல் பண்ணிவிட வந்திருந்தார். வெள்ளத்தில் சிக்கி, திசை தப்பிய ஒரு படகு அங்கே கரையேறியது. அதில் ஒரு கடுக்கன்காரர், ஒரு பெண்மணி, ஒரு பொடிப் பயல், படகோட்டி ஆகியோர் இருந்தனர்.

''வெள்ளம் சிறிது வடிந்ததும் போய்விடுகிறோம். அதுவரை எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்!'' என்று கெஞ்சினார் கடுக்கன். ஒத்துப்பாடினர் பெண்மணியும் படகோட்டியும். பொடியன் மட்டும் எதையும் இலட்சியம் செய்யாது எதையோ தின்றுகொண்டிருந்தான்! அவன் கையிலிருந்து ஏதோ கீழே விழுந்து தரையில் உருண்டு சிங்க ராஜாவுக்கு அருகே வந்தது!

''என்ன இது?'' என்று கேட்ட சிங்க ராஜா, தம் கையால் அதைத் தொட்டு, உருட்டிப் பார்த்து, ''கோலியா? கோலி மாதிரித்தான் இதையும் விரலால் அடித்து ஆடணுமா?'' என்று எடுத்துக்கொண்டார்.

''ஓ!''வென்று பயமில்லாது சிரித்த பொடியன், ''சிங்க ராஜா! இது திங்கற தின்பண்டம்! ஜோரா, சுவையா இருக்கும். தின்னு பாருங்க!'' என்றான்.

''மனிதனைவிடவா?''

கடுக்கன், அவர் மனைவி, படகோட்டி மூவரும் நடு நடுங்கினர். பெடியன் மட்டும் துணிச்சலாகப் பேசினான்.

''மனிதர்கள் மட்டுமென்ன. நீங்கள் சாப்பிடும் மற்ற இரைகள் எல்லாவற்றையும்விட இந்தச் சீடை சுவையாயிருக்கும். சாப்பிட்டுத்தான் பாருங்களேன்?''

சிங்க ராஜா தயக்கத்தோடு சீடையை வாயில் போட்டுக் கடித்தார். சுவைத்தார்.

''ரொம்ப ஜோரா இருக்கே! மனிதனைவிட, மான் கறியைவிடச் சுவையா இருக்கே! இவ்வளவு சுவையானதை நான் இதுவரை சாப்பிட்டதே கிடையாது!'' என்று புகழ்ந்தார் சிங்க ராஜா.

பெண்மணி தான் கையில் கொண்டுவந்திருந்த மூட்டையைப் பிரித்து, ஒரு பெரிய தூக்குப் பாத்திரத்தைச் சிங்க ராஜாவுக்கு முன் கொண்டுவந்து வைத்தாள். அது நிறைய உப்புச்சீடை!

''வாசனை மூக்கைத் துளைக்கிறதே!'' என்று புகழ்ந்து கொண்ட சிங்க ராஜா, இரண்டு கை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு கடித்துச் சுவைத்தார்.

''பாதியை எடுத்து அரண்மனைக்கு அனுப்பிவிடு. மீதியை எல்லா மிருகங்களுக்கும் கொடு!'' என்று அமைச்சர் ஓநாய்க்கு உத்தரவிட்டார்.

''வெள்ளம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. நாங்க போகலாமா?'' என்று கேட்டார் கடுக்கன்.

''கவலைப்படாதீர்கள்! உங்களை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்'' என்று சிரித்த சிங்க ராஜா, ''அரண்மனை சமையற்காரர் நரியாரை வரவழைக்கிறேன். அவருக்கு இந்த உப்புச்சீடை செய்வதை நீங்கள் கற்றுத் தர வேண்டும் எழுதியே தந்துவிடுங்கள். பிறகு நீங்கள் போகலாம்'' என்று திருவாய் திறந்து கூறினார்.

இப்படிச் சிங்க ராஜா ஆர்வம் காட்டியதன் விளைவாக உப்புச்சீடை காட்டில் பிரபலமடைந்தது.

சீடைப்பைத்தியம் சிங்க ராஜாவைப் பலமாகப் பிடித்துக் கொண்டது. எத்தனை சீடை தின்றாலும் அவருக்குத் திகட்டவே திகட்டாது! யார் சீடை செய்தாலும் சீடை வரியாக அரசாங்கத்திற்கு ஐந்தில் ஒரு பங்கு சீடையைத் தந்துவிட வேண்டும் என்று சட்டம் போட்டிருந்தார். மீறுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையாகத் தண்டிக்கப் பட்டனர்.

ஓயாது சீடை தின்றதன் காரணமாகச் சிங்க ராஜாவின் மேல்வரிசைப் பற்கள் ஆட்டம் காணத் தொடங்கின. பல் வைத்தியர் கரடியாரை அழைத்து ஆலோசனை கேட்டார் ராஜா.

சிங்க ராஜாவின் பற்களைப் பரிசோதித்த கரடியார், ''மேல்வரிசைப் பற்களெல்லாம் ஆடிப் போய்விட்டன. இனிமேல் அவற்றால் தொந்தரவுதான். எல்லாவற்றையும் பிடுங்கிவிடுகிறேன். அதோடு, இனிமேல் சீடை தின்னும் ஆசையை விட்டுவிட வேண்டும்'' என்றார் கண்டிப்புடன்.

வேறு வழியில்லாமல் சிங்க ராஜா, மேல்வரிசைப் பற்களை எடுத்துவிட்டு, பொய்ப்பல் செட்டை வைத்துக் கொண்டு தொடர்ந்து சீடை தின்று வந்தார்.

அன்று குரங்கார் வீட்டில் அவர் பையன் குட்டை வாலனுக்குப் பிறந்த நாள். குட்டை வாலன் கேட்டபடி சீடை செய்திருந்தார்கள். இருநூறு சீடை! அரசாங்கச் சட்டப்படி ஐந்தில் ஒரு பங்காக, நாற்பது சீடைகளை வரியாகத் தர, அரண்மனைக்குத் தகவல் அனுப்பினர். குரங்கார் வீட்டுப் பலகாரம் நன்றாக இருக்கும் என்பதால், ஆற்றுக்கு நீர் குடிக்க வரும்போது தாமே வந்து சீடைகளைப் பெற்றுக்கொள்வதாகச் சிங்க ராஜா கூறிவிட்டார்; கூறிய படியே வந்தும் விட்டார்.

''இருநூறு சீடைதான் செய்தாயா? இல்லை, அதிகம் செய்துவிட்டு ஏமாற்றுகிறாயா?'' என்று கேட்டார் சிங்கராஜா.

''இல்லை, மகாராஜா, செய்ததே மொத்தம் இருநூறுதான். எல்லாம் இந்த அடுக்கில் இருக்கிறது. நீங்களே எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் உங்களுக்குச் சேர வேண்டியதை எடுத்துக்கொண்ட பிறகுதான் என் மகனுக்கும் மற்றவர்களுக்கும் தரப்போகிறேன்'' என்றார் பணிவுடன்.

சிங்க ராஜா, ''சரி, கொண்டா, நானே எண்ணிப் பார்க்கிறேன்'' என்று அடுக்கை வாங்கிக்கொண்டார்.

அந்த நேரம் பார்த்துத் துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டது!

அரண்டு போன மிருகங்கள் மூலைக்கு ஒன்றாய் ஓடி ஒளிந்துகொண்டன! சிங்க ராஜாவும் ஒரு பருத்த மரத்தின் பின்னால், சீடை அடுக்கோடு மறைந்துகொண்டார். சீடையின் வாசனை மூக்கைத் துளைக்கவே, சிங்க ராஜா இரண்டு சீடைகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்!

என்ன தான் 'பல்செட்' என்றாலும் தினமும் ஓயாமல் சீடையைக் கடித்துத் தின்றால் அது எப்படித் தாங்கும்? தேய்ந்த கலகலத்துப் போயிருந்த 'பல்செட்' சீடையைப் போட்டுக் கடித்ததும் பொடிப்பொடியாக வாய்க்குள்ளேயே உடைந்துவிட்டது! யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பதைபதைப்பால், அவசரம் அவசரமாகத் தின்றதால், 'பல்செட்' உடைந்து நொறுங்கியதை ராஜா உணரக்கூட இல்லை! சீடையோடு சேர்த்து அதையும் விழுங்கிவிட்டார்!

அப்புறந்தான் ராஜா, தாம் 'பல்செட்'டையும் சேர்த்து விழுங்கிவிட்டதை உணர்ந்தார். அவருக்குப் 'பகீர்' என்றது. வாயைத் திறந்தால், மேல் பல்வரிசை இல்லாதது எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்ற பயம் பிடித்துக்கொண்டது. வாயை இறுகமூடிக்கொண்டார்; என்ன வந்தாலும் இன்னொரு புதிய 'பல்செட்' கிடைக்கும்வரை வாயைத் திறப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டார்!

துப்பாக்கி அபாயம் நீங்கியதும் ஒளிந்திருந்த மிருகங்கள் எல்லாம் மறுபடி ஒன்றுகூடின. சீடை அடுக்கை அமைச்சர் ஓநாயிடம் கொடுத்துவிட்டு ராஜா வேகமாக நடக்கத் தொடங்கினார்; யாரிடமும் எதுவும் பேசவில்லை.

சபை கூடியது. சிங்க ராஜா வாயே திறக்ககவில்லை; அவசியம் ஏற்பட்டபோது கையால் எழுதிக் காட்டினார். ராணியாரும் இளவரசரும் வந்து எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள். அரசவைக் கோமாளி கொரில்லாக் குரங்கு என்னென்னவோ சேஷ்டைகள் செய்து ராஜாவை வாய் திறந்து சிரிக்க வைக்க முயன்றது. எதுவும் பயனளிக்கவில்லை!

பிறந்த நாளின் போது சீடை பண்ணியும், ஒன்றுகூடத் தனக்குக் கிடைக்கவில்லையே என்று குட்டைவாலன் குரங்குக்கு ஒரே வருத்தம்! அரச சபையில் அந்தச் சீடை அடுக்கு ராஜாவின் சிங்காசனத்திற்குப் பின்னால் இருந்தது.

ஒருவரும் பார்க்காதபடி குட்டைவாலன் ஒளிந்து சென்று சீடை அடுக்கை எடுத்தது; எண்ணிப் பார்த்தது. நூற்றுத் தொண்ணூற்று எட்டுத்தான் இருந்தன! மீதி இரண்டு என்ன ஆகியிருக்கும்? யார் தின்றிருப்பார்கள்?

குட்டைவாலன் தீவிரமாக யோசித்தது. எல்லோரும் ஓடி ஒளிந்துகொண்டபோது, சீடை அடுக்க சிங்கராஜாவிடந்தான் இருந்தது; பிறகு, அமைச்சர் ஓநாயிடம் போனது. அமைச்சருக்குச் சீடை பிடிக்கவே பிடிக்காது. அவருக்கு அசைவந்தான் பிடிக்கும். அதனால் இரண்டு சீடைகளை ராஜாதான் தின்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது குட்டைவாலன்.

அரசரை வாயைத் திறக்க வைத்துப் பேச வைப்போருக்கு என்ன வேண்டுமானாலும் பரிசு தருவதாக ராணியார் அறிவிப்புச் செய்தார்.

ராஜாவின் முகத்தையே கூர்ந்த நோக்கிய குட்டைவாலன், சிங்க ராஜாவின் மேல் உதட்டுப்பக்கம் உள்ளடங்கி இருப்பதைக் கவனித்துவிட்டது. பல் இல்லாதவர்களுக்குத்தான் அப்படியாகும் என்பதை அது நினைவுபடுத்திக்கொண்டது. ராஜாவின் மேல் பல்வரிசை, 'பல் செட்'டாக இருக்க வேண்டும் என்பதையும், இரண்டு சீடைகளை ஒருவரும் காணாது அவசரமாகத் தின்றதன் விளைவாகவே 'பல்செட்' உடைந்து போய் ராஜா வாயைத் திறக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதையும் புத்திசாலியான அது ஊகித்துக்கொண்டது. தங்கள் வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, சிங்க ராஜா பல் வைத்தியர் கரடியார் வீட்டு வாசலில் நின்று, பூட்டியிருந்த வீட்டையும், 'வைத்தியர் வெளியூர் போயிருக்கிறார், திரும்ப நாலுநாள் ஆகும்' என்று தொங்கிய போர்டையும் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டதையும் நினைவுபடுத்திக்கொண்ட போது அதன் ஊகிப்பு உறுதிப்பட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் குட்டை வாலன், கரடி வைத்தியர் வீட்டு முற்றத்தில் குதித்து, உள்ளே சென்று, கண்ணாடி பீரோவில் வைக்கப்பட்டிருந்த 'பல்செட்டு'களைப் பார்த்து, சிங்க ராஜாவின் மேல்பல்வரிசைக்கு ஏற்றதாக இருந்த 'பல்செட்'டை எடுத்து மூடிக்கொண்டு, சிங்கராஜாவிடம் வந்து, அதன் காதில் இரகசியமாகப் ''புது 'பல்செட்'டைக் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றது! சிங்க ராஜாவின் முகம் மலர்ந்தது. அதை அழைத்துக்கொண்டு தனி அறைக்குப் போனது. திரும்பி வரும்போது ராஜா வாயைத் திறந்து பேசிக்கொண்டே வந்தார்.

''உனக்கு என்ன வேண்டும், கேள்'' என்றாள் சிங்க ராணி மகிழ்ச்சியுடன், ''எது கேட்டாலும் தருகிறோம்'' என்றார் ராஜா.

''உப்புச்சீடைக்கு வரியை நீக்க வேண்டும்'' என்றது குட்டைவாலன்!

ரேவதி!



சிங்கராஜாவும் உப்பு சீடையும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 8:48 pm

அருமையான கதை நண்பரே



யாதும் ஊரே யாவரும் கேளிர்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக