புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
87 Posts - 64%
heezulia
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya

Guna.D
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Poll_c10 
3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா

Page 2 of 2 Previous  1, 2

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 25, 2010 2:51 pm

First topic message reminder :

நூலின் பெயர் : மனதில் ஹைக்கூ
நூலின் ஆசிரியர் : இரா.இரவி
நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
உலகம் மூன்று ; கணிக்கும் காலம் மூன்று; ;சுவையூட்டும் கனி மூன்று ;உலகப்பொதுமறையின் பால் மூன்று ;அரும்பெருந் தமிழ் மூன்று ; ஆற்றல்சால் வேந்தன் மூன்று என புகழின் உச்சத்தை எட்டிய அனைத்துமே ' மூன்று' எனும் உயரிய எண்ணாக வடிவெடுக்க,அதில் துளிப்பா மட்டும் விதிவிலக்கா என்ன ? மூன்றே வரிகளில் முத்தான கருத்துக்களை வாசகர் மனதிற்குள் புகுத்தும் சக்தி கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு உண்டு என்பதனை நிரூபணம்செய்ய வந்த நூலே 'மனதில் ஹைக்கூ'
ஆதியோடு அந்தமும் :
கடிகாரம் முதல் கணினி வரை ,பூசணிக்காயிலிருந்து பொக்ரான் வரை ,சம்மட்டி தொடங்கி சந்திராயன் வரை,காந்திதாசன் முதல் கண்ணதாசன் வரை, வாடும் ரோஜாமுதல் வாடாமல்லி வரை,அரேபியா முதல் ஆகாயம் வரை அலசி ஆராய்கிறது 64 பக்கங்களையுடைய மனதில் ஹைக்கூ எனும் அற்புத நூல்.
இதயப்பகுதி :
ஹைக்கூ திலகம் இரா.இரவியின் இந்நூலில் சமூக அத்துமீறல்கள் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கைகளின் ஆணிவேர் கிள்ளி எறியப்படுகின்றது.தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வரைமுறையற்ற ஆதிக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இயற்கை இடையிடையே வந்து நலம்விசாரித்து விட்டு போகின்றது.பாசமும்நேசமும் பாங்காய் பண் பாடுகிறது. தன்னம்பிக்கை ஆங்காங்கே
பளிச்சிடுகின்றது.ஒரு சமூக சீர்திருத்தவாதியின் ஒட்டுமொத்த பணியை செய்வதற்கு ' ஹைக்கூ' எனும் அஸ்திரத்தை கவிஞர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளார

இரத்த ஓட்டம் :
இந்த கவிதை தொகுப்பில் அஞ்சல் பெட்டி அழுகின்றது.தொலைக்காட்சிப்பெட்டி தொற்று நோய் பரப்புகின்றது.கைபேசி கதற வைக்கின்றது.அல்லி கூம்புகின்றது.பட்டாசு பற்றி வெடிக்கின்றது.பாம்பு இரை தேடுகின்றது.குப்பை கூட தத்துவம் பேசிச்செல்கின்றது.மொத்தத்தில் கற்கால கோடாரி முதல் தற்கால கணினி வரை கருவாக உருமாற்றியிருக்கிறார் கவிஞர்.
நவரத்தின குவியல் :
பழமொழியை காலத்திற்கு ஏற்றாற் போல் புதுமொழியாக மாற்றுவது என்பது கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு கை வந்த கலை.
குஞ்சுகள் மிதித்து
கோழிகளுக்கு காயம்
முதியோர் இல்லம்.
நகைச்சுவை கவிதை :
மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம்.
'நச்'-என்று ஒரு கவிதை:
பாஸ் மார்க் வாங்கியும்
கிளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக் .

இளைஞர்களுக்கு ஓர் இலவசக்கவிதை :
மூளைப்புற்று நோய்
முற்றிலும் இலவசம்
செல்பேசியுடன் !
சொல் விளையாடல் கவிதை :
காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி.
சமூகத்தை படம்பிடித்து காட்டும் கவிதை :
உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்.

மனதார ...
ஒன்பதாவது மைல்கல்லை எட்டி, ஹைக்கூ இலக்கிய உலகிற்கு 'மனதில் ஹைக்கூ' எனும் ஒப்பற்ற நூலை வழங்கியிருக்கும் கவி சூரியன் இரா.இரவியின் பெயரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுவதும் ஒலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 06, 2011 12:57 am

ஆமாம் நானும் இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஈகரை வெறும் படைப்புகளை மட்டும் எதிர்ப்பார்க்கவில்லை நண்பரே. அன்பான உரையாடல்களும்தான்.

இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Aஇணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Aஇணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Tஇணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Hஇணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Iஇணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Rஇணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Aஇணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Empty
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Apr 06, 2011 8:55 am

நூலின் பெயர்:என்னோடு
நீ
நூலாசிரியர்:சு.சோலைராஜா
நூல்
மதிப்புரையாளர்:முனைவர்
ச.சந்திரா

கோபுர
வாயில்:
கவிஞர் சோலைராஜாவின் முத்தான முதல் நூலான’
என்னோடு
நீ-
எனும் நூலை ஒரு கதம்ப
நூல் எனலாம். மரிக்கொழுந்தும், ,மல்லிகையும்,கவின்மிகு
கனகாம்பரமுமாய்த் தொகுக்கப்பட்ட இக்கதம்பச் சரம் கமகமக்கும் நறுமணத்துடன்,நூலை வாசிப்போர் மனதில்
பரவுகின்றது.
இரத்த
ஓட்டம்:
கிராமம்,நகரம்,வறுமை,வளமை,அலங்கோலம்,அலங்காரம்,அன்பு, ஆணவம்,இலட்சியம்,அலட்சியம்-என இருவேறு முரண்பட்ட
தன்மையுடைய நாயகன்,நாயகியைப் பாத்திரங்களாகக்
கொண்டு வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான நூல் இந்த என்னோடு
நீ - நூல்.தேனும் மானுமாக,கொக்கும் குருவியுமாக,மயிலும் குயிலுமாக,பகலவனும்
பால்மதியுமாக,தென்றலும் புயலுமாக எழிலுறப் பயணிக்கிறது இந்நூலின் கதையோட்டம்.
மைய
மண்டலம்:
கிராமத்து
நாயகன் ஒருவன் மண்வாசனையும் வியர்வை
வாசனையுமாய்,கல்லூரிக் கல்விக்கென நகரத்திற்கு வந்து சேர,கூடியிருப்போர்
வறுமை அவனை , பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும்
,நக்கலுக்கும் நையாண்டிக்கும் உள்ளாக்குகிறது.கல்லூரியில் நடந்த முத்தமிழ் விழாவோ
அவனை கல்லூரி கதாநாயகனாகவே உருமாற்றி
விடுகின்றது. இதுவரை நாயகனை ஏளனமாய்ப்
பார்த்த கதையின் நாயகியை ஏக்கத்துடன்
திரும்பிப் பார்க்க வைக்கிறது அவனின்
பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்.தமிழன்னையின் இதயத்தில் இடம் பிடித்த காவிய
நாயகன், நாயகியின் கரம் கோர்த்தானா?இல்லையா
என்பதனை விவரித்துச் செல்கின்றது நூலின் முற்பாதி.கற்பனையா?
நிஜமா? என உய்த்துணர முடியாத
அளவிற்கு,கதைக்குள் கதையாய் ஆசிரியர் கற்பனைக்
கோட்டையைக் கட்டி,அக்கோட்டைக்குச் செல்வதற்கென
கனவுப் பாலம் அமைத்துத் தருவது
இந்த நீள்கதையின் மறுபாதி.

கருத்துப் புதையல்:

'என்னோடு நீ'-எனும்
இந்த நூலில் எட்டுத்தொகை எட்டிப்
பார்க்கின்றது.புதுக் கவிதை புனலாடுகின்றது.மரபுக் கவிதையோ மன்றாடுகின்றது.இதிகாச நிகழ்வுகளோ இடையிடையே
இழையோடுகின்றது. நன்னூல் நடை பயில்கின்றது.அறிவியல் செய்திகள் ஆங்காங்கே தெளித்துக் கிடக்க ,சரித்திரக் கருத்துக்களும்
அத்தோடு சங்கமிக்கின்றன.இந்நூலில் கிளிப்பிள்ளை கீரிப்பிள்ளையாகின்றது;மாக்கோலம் பூக்கோலமாகின்றது;அலைகளுக்கு மோகம் வருகின்றது;இரயில்பூச்சிக்கு
நாணம் வருகின்றது;பசும்புற்கள் தவம் புரிகின்றன.காட்டுச்
செடிகள் வரவேற்புரை வழங்குகின்றன.சிக்கிமுக்கி கற்கள் கூட சிணுங்கிக்
கொண்டே ரீங்காரமிடுகின்றன.நிலவும் சூரியனும் பக்கத்திற்குப்
பக்கம் இடம்பிடிக்க ,வியர்வையும் கண்ணீருமோ போட்டிப்போட்டிக் கொண்டு நூலை நிரப்பிச்
செல்கின்றது.அத்தியாயங்கள் சில வேளைகளில் வெள்ளிய
மேகங்களைப் போல மெதுவாகவும் ,பல
வேளைகளில் கருமேகங்களைப் போல வேகமாகவும் நகர்கின்றன.

சொல்விளையாடல்:

"அவளுக்கு
அழைப்புமணி

என் கவிதைக்கு ஆலயமணி

இதயத்திற்கு ஆராய்ச்சி மணி

பெற்றோர்க்கு அபாயமணி

காதலுக்கோ சாவுமணி"

கல்வெட்டு வரிகள்:

பிள்ளைகள்
அநாதையானால் அது

பிறப்பில் பிழை!

பெற்றோர் அநாதையானால் அது

ஆயுள்பிழை!

மனமார...

'அதீத
அன்பு'-எனும் வட்டத்திற்குள் சிக்கித்தவிப்பவர்க்கு
'என்னோடு நீ'-எனும் இந்நூல் நல்லதொரு
பாடம் .இனி சிக்கித்
தவிக்க இருப்பவர்க்கோஇந்நூல் ஓர் எச்சரிக்கை! 'ஆள்பாதி
ஆடைபாதி'-எனும் பழமொழி ஒருபுறமிருக்க,அறிவு பாதி ஆற்றல்
பாதி
என்ற புதுமொழியைப் புகட்ட
வந்ததே என்னோடு நீ-எனும்
நூல்.வலதுகரத்தில் தமிழன்னை,இடதுகரத்தில் இயற்கை அன்னை-என
இருவரைக் கரம்பற்றிச் செல்லும் கவிஞர் சோலைராஜா இலக்கிய
உலகில் ஒளிர்விடும் காலம் வெகுதொலைவில் இல்லை
என்பது உண்மை. ,

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 9:10 am

கலை wrote:எனக்கு ஒரு கேள்விக்கு விடை தருவீர்களா ...? இது வரை உங்கள் புராணம் உங்கள் கவிதைகள் உங்கள் பெருமைகள் தவிர எதையுமே வேறு பதிவுகளே நீங்கள் பதிவதில்லையே..?

என்னவோ எங்களுக்கு உங்கள் கவிதைகள் என்னும் வரப்பிரசாதம் அளித்துவிட்டு வரம் தந்த கடவுள் உடன் மறைவது போல மறைந்து விடுகிறீர்கள்... இதனை வெகுநாட்களாக கவனித்துவிட்டு இன்று ஆற்ற முடியாமல் கேட்கிறேன்.

ஒரு கருத்துக்களம் என்றால் அதில் பல்வேறு விதமான விவாதங்கள் கவிதை விமர்சனம் என்றெல்லாம் இருக்கும். அதைப்போல நீங்கள் வேறெந்த கவிதைக்காவது ஒரு அருமை என்ற் சொல்லாவது இட்டு இருக்கிறீர்களா..? வருகிறீர்கள் .. உங்கள் கவிதைகளைப் பதிகிறீர்கள்...
சென்றுவிடுகிறீர்கள்...வேறெந்த பங்கெடுப்பும் ஏன் செய்வதில்லை...?

ஈகரை உங்களுக்கு விளம்பரத்தளமாக இருக்கவேண்டும் என்பதை நான் அனுமதிக்க முடியாது...

விரைவில் உங்கள் நிலையில் மாற்றம் இல்லை எனில் வேறுவிதமான நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டு விடும்..!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

நேசமுடன் ஹாசிம்
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 08, 2011 10:58 am

கலை wrote:எனக்கு ஒரு கேள்விக்கு விடை தருவீர்களா ...? இது வரை உங்கள் புராணம் உங்கள் கவிதைகள் உங்கள் பெருமைகள் தவிர எதையுமே வேறு பதிவுகளே நீங்கள் பதிவதில்லையே..?

என்னவோ எங்களுக்கு உங்கள் கவிதைகள் என்னும் வரப்பிரசாதம் அளித்துவிட்டு வரம் தந்த கடவுள் உடன் மறைவது போல மறைந்து விடுகிறீர்கள்... இதனை வெகுநாட்களாக கவனித்துவிட்டு இன்று ஆற்ற முடியாமல் கேட்கிறேன்.

ஒரு கருத்துக்களம் என்றால் அதில் பல்வேறு விதமான விவாதங்கள் கவிதை விமர்சனம் என்றெல்லாம் இருக்கும். அதைப்போல நீங்கள் வேறெந்த கவிதைக்காவது ஒரு அருமை என்ற் சொல்லாவது இட்டு இருக்கிறீர்களா..? வருகிறீர்கள் .. உங்கள் கவிதைகளைப் பதிகிறீர்கள்...
சென்றுவிடுகிறீர்கள்...வேறெந்த பங்கெடுப்பும் ஏன் செய்வதில்லை...?

ஈகரை உங்களுக்கு விளம்பரத்தளமாக இருக்கவேண்டும் என்பதை நான் அனுமதிக்க முடியாது...

விரைவில் உங்கள் நிலையில் மாற்றம் இல்லை எனில் வேறுவிதமான நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டு விடும்..!

மிகவும் சரியான கருத்து! என் மனதில் தோன்றிய எண்ணமும் இதேதான்!

இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 20, 2011 9:35 pm

இதை அவர் படித்ததாகவும் தெரியவில்லை ... படித்திருந்தாலும் மதித்ததாகத் தெரியவில்லை.. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 23, 2011 1:00 pm

நூலின்
பெயர்:ஆகாய தாமரை

நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி.

மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா

கோபுர நுழைவாயில்:

விஞ்ஞானத்தையும்
மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.'இந்து'மகா சமுத்திரத்தை ஒரு
கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின்
அருள் பாலிக்கும் தீர்த்தமாய் உருமாற்றி
,வாசிப்போரின் அறிவுத்
தாகம் தணித்திருக்கும் நூலாசிரியர் மருத்துவர் சீனிவாசன்.எம்.டி.
அவர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றி.தன்னடக்கமே ஆசிரியரின் என்னுரையாய்,புன்னகையே நூலின் அணிந்துரையாய்,கேள்விக்கணையே முன்னுரையாய்,இறையியல் நூலா?உடலியல் நூலா?கலையியல் நூலா?என்று உய்த்துணர
இயலாத அளவிற்கு இவ்வனைத்தும் விரவி, சீராகச் செதுக்கப்பட்ட செம்மையான
நூல் என இந்நூலைக் கூறலாம்.

வண்ணக்களஞ்சியம்:

கணபதியில் துவங்கி மகாகவி வரை, ஓரறிவு முதல் ஏழறிவு வரை,புராண காலம் தொடங்கி பகுத்தறிவு காலம் வரை,,ஆதிசங்கரர் முதல் அப்துல்கலாம் வரை,திருவிளையாடற்புராணம் முதல் திருக்குறள் வரை,கௌதமபுத்தர் துவங்கி காஞ்சிப்பெரியவர் வரை- என இருவேறு பெரு எல்லைகளை
ஆகாயதாமரை நூல் தொட்டுச் செல்கின்றது.மானிடவியல்,சோதிடவியல்,வானியல்,அளவியல், எண்ணியல்,புள்ளிவிவரஇயல்,உருவவியல்,கட்டிடவியல்,சிற்பவியல்,உடலியல்,உளவியல்,வரைபடவியல்-என பல்வேறு இயல்களை உள்ளடக்கிய கவின்மிகு களஞ்சியம் என்று இந்நூலைக் கூறலாம்.

அகமும்புறமும்:

ஸ்தூல சரீரம்,சூட்சும சரீரம் இவ்விரண்டிற்குமிடையே
உள்ள 'அவித்யா'-எனும் திரை விலக்கி,'நானே பிரம்மம்;அந்த பிரம்மமே நீ!'-என்ற அரிய
செய்தியைக் கூற வந்த நூலே ஆகாய தாமரை.மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் உள்கட்ட
அமைப்பினையும்,மானிடனின் அகப்புற உடலமைப்பினையும் ஒப்புமைப்படுத்தி உருவாக்கப்பட்டதே
இந்நூல். உடற்பிணி நீக்கி மேனி
பொலிவுறச் செய்யும் வல்லமை ஆகாயதாமரை எனும் மூலிகைக்கு உண்டு என்பது மருத்துவ உலகம்
கண்ட உண்மை.மனிதனின் உள்ளப்பிணி நீக்கி ஆத்மசுத்தி புரியும் தன்மை இந்த ஆகாயதாமரை நூலுக்கு
உண்டு என்பது புத்தகத்தை வாசித்தோர் உணர்ந்த உண்மை.

ஆன்மீகமும் அறிவியலும்:

அம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயமே மனித
மூளையாயிருக்க,மீனைப்போல் இமையாது விழித்திருந்து பக்தகோடிகளைக் காத்து நிற்கும் மீனாட்சியம்மனே
மானிட இருதயமாக இருக்க,சூரிய சந்திரர் இருவிழியாய் ஒளிர,லிங்கோத்பவரோ விழிகளுக்கிடையே
பேரொளியாய்த் திகழ,சரஸ்வதியானவள் நெற்றிப் பொட்டாய்த் துலங்க,அறுபடைவீடே நுரையீரலாய்
அமைந்திருக்க ,ஓம் எனும் பிரணவ வடிவே காற்றறையாயிருக்க,தேவர்களும் அசுரர்களும் முறையே
சிறுகுடல் பெருங்குடலாய் செயல்பட,கந்தன் கர வேல் மனிதனின் நெஞ்செலும்பாய் நிற்க, சண்டிகேஸ்வரரும்
மகாலஷ்மியும் கேட்கும் மற்றும் பேசும் சக்தியாக விளங்க,-என மானிடனின் உள்ளுறுப்புக்கள்
அனைத்தும் மதுரை மீனாட்சி திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளர்களோடு ஆகாயதாமரை நூலில் அழகுற ஒப்புமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.இதுபோலவே
மனிதனின் புற உறுப்புக்களும் கோவிலின் ஒவ்வொரு மண்டபத்துடன் இணைத்து ஒப்பிடப்பட்டிருப்பதில்
நூலாசிரியரின் அறிவியலோடு கூடிய ஆன்மீக அறிவு நன்கு புலப்படுகிறது.

இளைப்பார...

கலசம் உருவாகிய கதை,கல்யானை கரும்பு
தின்ற கதை,பொற்றாமரை குளம் பொலிவாய்த் தோன்றிய கதை,பராசக்தி உருவாகிய பழம்பெருங்கதை,மாபாதகம்
தீர்த்த மதுரை வரலாறு-என ரசனையான புராணக் கதைகள் கலையியல் மற்றும் உடலியல் சார்ந்த
கருத்துக்களுக்கிடையே இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நூலை வாசிப்போர் மனம் தொய்வு
அடையாமல் தொடர்ந்து வாசிப்பதற்கு ஏதுவாகின்றது.

வியப்பில் ஆழ்த்தும் செய்திகள்:

*மனித உடலின் 96 அகப்புற உறுப்புக்கள்
96 வகை சாஸ்திரங்களுடன் ஒப்பிடப்பட்டிருப்பது

*மனக்கண்ணால் வணங்கிய ஆங்கிலேய அதிகாரி ரோஸ்பீட்டருக்கு
மீனாட்சியம்மன் அருளியது.

*மனிதக் கருவின் பயணம் தொடங்கி முடியும்விதமும்
அது 27 நட்சத்திரங்களோடு இணைந்து கைகோர்த்து நடக்கும் விதமும்.

*பாற்கடலில் தோன்றிய 14 பொருட்களும் மனித
உடலில் உள்ள தாதுக்களோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருப்பது.

*இயங்கு சக்தி ,நிலை சக்தி-என மாறி மாறி
செயல்படும் சிவன் -பார்வதி நடனத்தை குரோமோசோமுடன் இணைத்து விளக்கியிருப்பது.

-என்று நூலை வாசிக்கும்போது அதிசயித்த செய்திகளை இன்னும் பட்டியலிட்டுக்கொண்டே
போகலாம்.

மனதார...

அறிவியல்
புரிந்தோர்க்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்காது;ஆன்மீகத்தில் தெளிந்தோர்க்கோ அறிவியல்
புரிபடாது.இக்கூற்றை பொய்மையாக்கி இவ்விரு அரும்பெருந்துறைகளிலும் வல்லமை பெற்றுத்
திகழும் டாக்டர் திரு.எம்.சீனிவாசன் அவர்களின் எழுத்தாற்றல் ஆச்சரியப்படத்தக்கது.மனித
உள்ளுறுப்புக்களின் செயல்பாட்டு விளக்கத்தை நான் அறிந்தவரை இத்துணை எளிமையாக,சுவையாக
எவரும் விவரித்ததில்லை.புரியாதவர்க்கும் புரியும்வண்ணம் வரைபடம் மற்றும் புகைப்படத்துடன்
நூலாசிரியர் விளக்கியிருக்கும் விதம் போற்றத்தகுந்தது. ‘கல்லினால்
கோயில் செய்தவர் கயிலை விட்டகலாதாரே'
-எனும் முதுமொழிக்கேற்ப மீனாட்சிஅம்மன் திருக்கோவிலைக்
கட்டியோர் சிவகணங்களாய்த் திகழட்டும்!ஆகாய தாமரை
எனும் இந்நூல் நம் பாரத நூலகம் மட்டுமல்லாது
பன்னாட்டு நூலகங்களிலும் இடம்பெறும் தகுதி பெற்று தமிழர் அறிவை தரணி முழுதும் பரவச்
செய்யட்டும்!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக