புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
96 Posts - 49%
heezulia
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
7 Posts - 4%
prajai
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
2 Posts - 1%
cordiac
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
223 Posts - 52%
heezulia
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
16 Posts - 4%
prajai
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
2 Posts - 0%
Barushree
சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_m10சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 10:29 pm

சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை

""புராணத்தில் சுமதி சூரியனைத் தடுத்து நிறுத்தி விட்டது போல் அனுராதா காலச் சக்கரத்தை நிறுத்திவிட்டாளா என்ன?'' நினைத்துக் கொண்டார் சுவாமிநாதன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே.
""காலச்சக்கரம் நின்றுவிடவில்லை அனுராதாதான் நின்று போய்விட்டாள்'' என்பது போல் சுவரில் இருந்த கடியாரம் ஒன்பது முறை மணி அடித்தது. வழக்கமாக, அனுராதா எழுந்து கொண்டு பாதி வேலைகளை முடித்தால் தவிர, கதிரவன் உதிக்கமாட்டான். சமையறை வழித்துக்கொள்ளாது. வாசலில் கோலமிடப் படாது, சமையறை விசில் சத்தத்துடன், விதவிதமான ஓசைகளுடன் சுறுசுறுப்பாக இயங்காது. அப்படிப்பட்ட அனுராதா இன்னும் போர்த்தியபடி படுத்திருப்பது சுவாமிநாதனுக்குப் புரியவில்லை. அவள் பொறுப்பு தெரியாத இல்லத்தரசியும் இல்லை.

தினமும் காலையில் ஐந்து மணிக்கு "டாண்' என்று விழித்துக் கொண்டு தெருமுனை வரையில் நடந்து போய் பால் பாக்கெட்டுகள் வாங்கி வருவாள். பால்போடும் பெண் சமீபத்தில் பாக்கெட்டுக்கு பத்து ரூபாயாகக் கட்டணத்தை உயர்த்திய பிறகு அனுராதா மார்னிங் வாக் தொடங்கிவிட்டாள். அந்தவிதமாக மாதம் முப்பது ரூபாய் மிச்சம் பிடித்தாள். விடியற்காலையில் வாசலைப்பெருக்கிக் கோலம் போடுவதற்கு ஆளைப்போட்டுக் கொண்டாள். அப்பொழுதே பாத்திரங்களையும் தேய்த்துக் கொடுத்து விடுவாள் அந்தப் பெண். அனுராதாவுக்கு எட்டரை மணிக்குள் வேலைகள் முடிந்து விட வேண்டும். ட்ராஃபிக் நேரத்தில் வண்டியை ஓட்டுவது சிரமம் என்பதால் முக்கால் மணி நேரம் முன்னதாகவே வீட்டை விட்டு புறப்பட்டு விடுவாள். அப்படி இருக்கும்போது காலையில் ஒன்பது மணி வரையிலும் போர்வையை விலக்காமல் படுத்திருந்தாள் என்றால் உடல் நலக்குறைவாக இருக்கக் கூடும்.

சுவாமிநாதன் அவள் முகத்தில் போர்த்தியிருந்த போர்வையைப் பிடுங்கிப்போட்டார். கண்கள் அகல, வாய் மீது கையை வைத்தபடி, கீழே விழத் தெரிந்தவர் சுவரில் சாய்ந்தபடி நின்று விட்டார். அனுராதாவின் உடல் முழுவதும் சுண்ணாம்பு அடித்தாற்போல் வெண்மையாக இருந்தது. கண்கள் திறந்த நிலையில் இருந்தன. புடைவைக் கட்டு அப்படியே இருந்தது. ஆனால், கைகளும், கால்களும் சுண்ணாம்பால் செய்தது போல் தென்பட்டன. கண்களும், தலைமுடியும் தவிர மீதி உடல் முழுவதும் சுண்ணாம்பாக இருந்தது. கண்கள் நிர்மலமாக, வழக்கத்தைவிட ஒளிவீசிக் கொண்டிருந்தன.

முதல் நாள் இரவு பன்னிரெண்ட மணி வரையிலும் அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள். கடந்த வருடத்திலிருந்து தினமும் தவறாமல் பார்க்கும் டீ.வி.சீரியலைப்பார்த்தாள். காலையில் டிபனுக்காக இட்லி மாவு அரைத்தாள். தண்ணீரைக் காய்ச்சி ஃபில்டரில் ஊற்றி வைத்தாள். அவளுக்கு எப்போதும் முன்யோசனை அதிகம். மறுநாளுக்காக முதல் நாளே அத்தனை ஏற்பாடு செய்தவள் இன்று இப்படி சுண்ணாம்பு பொம்மையாக மாறிவிட்டாள்.
இது போன்ற நோயைப் பற்றி சுவாமிநாதன் இதற்கு முன்னால் கேள்விப்பட்டதே இல்லை. மூக்கின் அருகில் விரலை வைத்து பார்த்தார். மார்பின் மீது காதை வைத்தார். இதயத்துடிப்பு இருக்கவில்லை. திடுக்கிட்டார் சுவாமிநாதன். அனுராதா இறந்து போய்விட்டாளா? அவள் இறந்து போவதாவது? சுவாமிநாதன் வியர்வையால் தொப்பலாக நனைந்துவிட்டார்.

எப்படியோ நடந்து சென்று நண்பன் ராமமூர்த்திக்கு ஃபோன் செய்து டாக்டரை அழைத்து வரச் சொன்னார். அனுராதாவுக்கு வந்தநோய் என்னவென்று டாக்டருக்கு புரியவில்லை. ஆனால் அவள் இறந்து போய் விட்டதை மட்டும் உறுதிப்படுத்தினார். நிமிடங்களில் அனுராதா இறந்து போன செய்தி தெரு முழுவதும் பரவிவிட்டது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவசர அவசரமாக வந்து சேர்ந்தார்கள்.

வராண்டாவில் பாயைப் போட்டு பிணத்தை அதன் மீது வைத்தார்கள். ""குழந்தைகளுக்கு ஃபோன் செய் சுவாமிநாதன்'' என்றார் ராமமூர்த்தி. சுவாமிநாதன் அடிக்கடி ஐ.எஸ்.டி. செய்கிறார் என்று அந்த வசதியைத் துண்டித்து வைத்திருந்தாள் அனுராதா. குழந்தைகளின் ஃபோன் எண்களைக் கொடுத்து அந்த வேலையை ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தார் சுவாமி நாதன். அவர் இன்னும் பல் தேய்க்கவில்லை. காலையில் எழுந்து பல் தேய்த்து விட்டு வந்ததும் தம்ளரில் தளும்பத்தளும்ப ஆவி பறக்கும் காபி தயாராக வைத்திருப்பாள் அனுராதா. இரண்டு தம்பளர் காபிக்கு எவ்வளவு பொடி போட வேண்டும், எவ்வளவு பால் கலக்க வேண்டும் என்று அவளுக்குத் தெரிந்தாற்போல் வேறு யாருக்கும் தெரியாது.

யாரோ உரிமை எடுத்துக் கொண்டு காபி கலந்து எடுத்து சுவாமிநாதனிடம் கொடுத்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். பிணத்துக்கு அருகில் உட்கார்ந்து காபி குடிப்பது நன்றாக இருக்காது என்று அடுத்த அறைக்குப்போனார் சுவாமிநாதன். இதுதான் வாய்ப்பு என்று ராமமூர்த்தி அவள் கால் அருகில் கொஞ்சம் கிள்ளி, வெள்ளை நிறத்தில் சுண்ணாம்புத் துண்டு ஒன்றை எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டு ஃபோன் செய்வதற்கு கிளம்பினார்.
""மம்மியை நான் வரும் வரையில் வைத்திருங்கள். ஏதாவது ஒரு ஃப்ளைட்டை பிடித்து எப்படியாவது வந்து சேருகிறேன்.'' என்றாள் சுவாமிநாதனின் மகள் நியூஜெர்சியிலிருந்து.
மகன் ஃபோனில் அழுதுவிட்டான். ""மம்மி ஏன் இப்படி எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டாள் அங்கிள்? என்னதான் நடந்தது?'' என்று புலம்பித் தள்ளிவிட்டான்.

""பாடியை ஐஸ் கட்டி மீது வைக்க வேண்டும். மகள் வரும் வரையில் இப்படியே வைத்தால் கெட்டுப்போய்விடும்'' யாரோ சொன்னார்கள்.
""இத சாதாரண பிணம் இல்லை. சுண்ணாம்புக்கட்டியாக இருக்கிறது. ஐஸ் மீது வைத்தால் உருகிப்போய் விடாதா?'' இன்னொருத்தர் சொன்னார்கள்.
ராமமூர்த்தி தன்னுடைய வீட்டிற்குப் போய் டிபனை சாப்பிட்டுவிட்டு பாக்கெட்டிலிருந்து டாட்லெட் போன்ற பொருளை எடுத்து மகள் சுசீலாவின் கையில் வைத்தார். அனுராதா இறந்து போன விஷயத்தை விலாவாரியாகத் தெரிவித்தார். அந்தப் பெண் சட்டென்று அதை பர்ஸில் போட்டுக் கொண்டு அருகில் இருந்த லபாரேட்ரிக்கு ஓடினாள் அவர்கள் அதைப் பரிசோதித்து விட்டு தலைவலிக்குப் போட்டுக் கொள்ளும் ஆஸ்பிரின் மாத்திரை என்று சொன்னார்கள்.
""நானும் அங்கே வருகிறேன் டாடி'' என்று பூதக்கண்ணாடி ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தாள் சுசீலா.

சுசீலா கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போய் அனுராதாவின் கைமீது லென்ஸை வைத்துப் பார்த்தாள். அவள் உடல் சுண்ணாம்பாக மாறவில்லை. உடல் முழுவதும் விதவிதமான மாத்திரைகளை ஒட்டி வைத்தாற்போல் இருந்தது. சின்னவை சிலது, பெரியவை சிலது. சிலது இளம் ரோஜா நிறத்தில், சிலது உருண்டை வடிவத்தில். சிலது சதுரமாக. இப்படி பலவிதமான டாப்லெட்டுகளை ஒட்டி செய்த பதுமை போல் இருந்தாள் அனுராதா.

""எறும்பு மொய்க்கிறது'' என்றாள் ஒருத்தி பதற்றத்துடன்.
""ஆமாம். அதில் சில சுகர் கோடெட் மாத்திரைக்கும் இருக்கக்கூடும் இல்லையா?'' என்றாள் சுசீலா.
""ஆமாம் சுகர் கோடெட் டாப்லெட்டுகளை நானே சில சமயம் அவளுக்குக் கொடுத்ததுண்டு'' நினைத்துக் கொண்டார் சுவாமிநாதன்.
பாய் மீதிருந்த அவளுடைய உடலை மேஜை மீது சேர்த்தார்கள். சுற்றிலும் எறும்பு மருந்து பொடியைத் தூவினார்கள். மகள் வருவதற்குள் அவளுடைய உடலை ஆளாருக்கு கிள்ளி எடுத்து மாயமாகிவிடுவார்களோ என்று தோன்றியது சுவாமிநாதனுக்கு. ""உடலை படுக்கையறைக்கு மாற்றுங்கள்'' திடீரென்று சொன்னார்.

""அப்படிச் செய்யக்கூடாதுப்பா. எந்த நட்சத்திரத்தில் இறந்துபோனாளோ?'' என்றாள் பக்கத்து வீட்டுப் பாட்டி.
""பரவாயில்லை பாட்டி. இந்த வீடு அவள் கட்டியது. உடலில் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் இந்த வீட்டுக்காகத்தான் செலவழித்தாள். அதனால் அவளுடைய உடலை எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம்''என்று அனுராதாவின் உடலை மறைத்து வைத்து விட்டார் சுவாமிநாதன்.
இருபத்தெட்டு வருடங்கள் கூட வாழ்ந்தவள், எல்லாமே கொடுத்தாள். நட்பு, காதல், பணம், உபசரிப்பு.. இறுதியில் இப்பொழுது உயிர்.

வீடு முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. வீட்டில் கூட்டம் கூடினால் அனுராதாவுக்கு பிடிக்காது. தான் போட வைத்த மார்பிள் ப்ளோரிங் அழுக்காகிவிட்டால் சோப் தண்ணீரால் அலம்பித் துடைப்பாள். பாத்ரூம்களை தானே சுயமாகத் தேய்த்து அலம்புவாள். வந்தவர்கள் சோஃபாக்களில் கண்டபடி உட்கார்ந்து பாழடித்துக்கொண்டிருந்தார்கள். அனுராதாவின் இதயம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும். சுவாமிநாதன் இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு எதுவும் தெரியாது. வீட்டை நிர்வாகம் செய்வதிலிருந்து மனிமேனேஜ்மெண்ட் வரையில் எல்லாமே அவள்தான். ஷேர்கள் வாங்குவது , விற்பது, தங்கத்தை அடகுவைத்து மேலும் தங்கத்தை வாங்குவது, ஒன்றா இரண்டா? சுவாமிநாதனின் குடும்பம் இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவள்தானே!
""ஐயாம் சாரிப்பா!'' என்றபடி மகள் ரஜினி வந்து சேர்ந்தாள்.
""மாப்பிள்ளை வரவில்லையாம்மா?''கேட்டார் சுவாமிநாதன்.

""ரவிக்கு லீவு கிடைக்கவில்லை அப்பா. ஹி வாஸ் ஸோ சாரி. ஹி குடிண்ட் மேக்இட்'' என்றாள்.
""பிணத்தைக் குளிப்பாட்டுங்கள்'' என்றார்கள் உறவினர்கள்.
அப்போதுதான் அந்த பிரச்னை ஆரம்பமானது!
""குளிப்பாட்டினால் மாத்திரைகள் எல்லாம் கரைந்து போய்விடும். எரிப்பதற்கு எதுவும் எஞ்சியிருக்காது. வெறுமேமஞ்சள் ஜலத்தைத் தெளித்து சுத்தி செய்யுங்கள் '' என்றார் ஒருவர்.
""பிணத்தை குளிப்பாட்டவில்லை என்றால் ஆன்மா சுவர்க்கத்திற்க போகாது'' என்றாள் அடுத்த வீட்டு பாட்டி. கடைசியில் மஞ்சள் தண்ணீருக்குத்தான் மெஜாரிட்டி கிடைத்தது.
பிணத்தை தூக்கப் போனபோது மூச்சிரைத்தபடி பேதாலஜி புரொபசர் பிரகாஷ் வந்தார். அனுராதாவுக்கு பெரியம்மாவின் மகன். கூடவே ஏதோ கருவிகளைக் கொண்டுவந்தார்.
""என் மனைவி பிணத்தின் மீது எந்தப்பரிசோதனை நடத்துவதற்கும் நான் சம்மதிக்கமாட்டேன்'' என்றார் சுவாமிநாதன்.

""அது இல்லை அத்தான். மருத்துவ உலகுக்கே இது ஒரு சவால்! ஏன் இப்படி நடந்தது என்று தெரிந்து கொள்வது அவசியம்.'' பிடிவாதம் பிடித்தார் பிரகாஷ்.
அனுராதா இறந்து போனது, அவள் உடல் டாப்லெட்டுகளாக மாறிவிட்டது எல்லா மீடியாகாரர்களுக்கும் தெரிந்து போய்விட்டது. அவர்கள் எல்லோரும் வரும் முன்பே தகனம் முடித்துவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தார் சுவாமிநாதன்.
""மாமாவைப் பார்க்க விடுங்கள் அப்பா!'' என்றாள் ரஜினி.
பிரகாஷ் அரைமணி நேரம் அனுராதாவின் உடலைப் பரிசோதித்துவிட்டு நோட்ஸ் எழுதிக்கொண்டார். சிலர் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
""இதெல்லாம் அம்மாவின் உயிரற்ற உடலுக்குத் தானே அப்பா? அவளுடைய ஆன்மா எப்பொழுதோ சுவர்க்கத்திற்கு போய் சேர்ந்திருக்கும்'' என்று தந்தையை சமாதானப்படுத்தினாள் ரஜினி.

அனுராதாவின் உடலை அக்னிக்கு இரையாக்கிவிட்டு வீட்டுக்கு வந்து குளித்தார்கள்.
இழவு வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிக் கொண்டிருந்த பிரகாஷிடம் வந்தாள் சுசீலா.
""அனுராதா ஆன்டீக்கு வந்த நோய் என்னவென்று நீங்க எனக்குச் சொல்லியாகணும்'' என்றாள் சுசீலா.
""என்னிடமும் சொல்லுங்கள் அங்கிள்! ப்ளீஸ்'' என்றபடி ரஜினியும் வந்து சேர்ந்து கொண்டாள்.
பிரகாஷ் வேதனையோடு சிரித்தார். ""இதை சூப்பர் மாம் சின்ட்ரோம் என்பார்கள்.''
""உண்மையிலேயே எங்க மாம் சூப்பர் மாம்தான் அங்கிள்'' என்றாள் ரஜினி கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.
""அதுதான் அவளுடைய நோய்'' என்றவர் தொடர்ந்தார்.

""அனுராதா, ஒரு சூப்பர் அம்மாவாகத்திகழ வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு நிமிடமும் கடுமையாக உழைத்தாள். இந்த லட்சியத்தை சாதிப்பதில் உங்க அம்மா தன் மனத்திற்கு என்ன வேண்டுமோ, தன் உடலுக்கு என்ன தேவையாய் இருக்கோ எதையும் பொருட்படுத்தவில்லை. பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக உங்க அம்மா இயந்திரம் போல் உழைத்தாள். உங்க அப்பாவை சோம்பேறியாக்கிவிட்டு கையில் காபி கொண்டு கொடுப்பாள்.
""வங்கியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்க வரும்போது வழியில் காய்கறி, மளிகைச்சாமான் வாங்கி சுமந்து கொண்டு வருவாள். வீட்டிற்கு வந்ததும் இரவு சமையல், வீட்டை ஒழித்து வைக்கும் வேலை. களைப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தினமும் தலைவலி மாத்திரை போட்டுக்கொள்வாள். கடந்த பதினைந்து வருடங்களாக எவ்வளவு மாத்திரயைகளைப் போட்டு கொண்டிருப்பாள் என்று நீயே கணக்குப் போட்டுப் பார்.

""எது எப்படிப் போனாலும் அவளுக்கு வீட்டு வேலைகள் அந்தந்த வேளைக்கு நடந்தாகவேண்டும். ஜுரம் வந்தால் க்ரோசின் போட்டுக்கொள்வது, முதுகு வலி என்றால் வேறு ஏதாவது மாத்திரையை விழுங்குவது, இப்படி சொந்த வைத்தியம்! அதுபோக கல்யாணம் கார்த்தி வந்தால், பண்டிகைகள், சிரார்த்தம் என்றால் வீட்டுக்கு விலக்கு ஆகாமல் இருக்க வேண்டும் ; அதைத் தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை விழுங்குவாள். நீங்கள் படிக்கும் காலத்தில் பரீட்சை சமயங்களில் உங்களுக்குத் துணையாக விழித்துக்கொள்வாள். தூக்கம் வராமல் இருப்பதற்காக மாத்திரைகள். சில நாட்கள் தூங்குவதற்காகவும் மாத்திரைகளைப் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

""ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அனுவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. கருப்பையை எடுத்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என்று டாக்டர் சொன்னதில் அதை எடுத்து விட்டாள்.
""அப்பாடா! இனி ஆண்களை போல் என்னால் மாதம் முப்பது நாட்களும் நிம்மதியாக உழைக்க முடியும்'' என்று பெருமைப்பட்டுக் கொண்டாள். நான்கு வருடங்கள் நன்றாக கழிந்தன. பிறகு ஏதோ காம்ப்ளிகேஷன்ஸ், ஹார்மோன்சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளணும் என்றார்கள். அதுவும் மாத்திரைகள்தான். சோர்வுக்காக இவளாகவே தினமும் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரையைப் போட்டுக் கொள்வாள். நாற்பத்து ஐந்து வயது ஆகும் போது கொழுப்பும், ரத்த அழுத்தமும் சேர்ந்து விட்டன. அதற்காக தினமும் இரண்டு மாத்திரைகள்.

""சமீபகாலமாக இரவு நேரத்தில் ஏதோ ஒரு சானலில் சீரியல் ஒன்று பதினொரு மணிக்க வருகிறது. ரொம்ப பரபரப்பான சீரியல் அது . அதைப் பார்க்கா விட்டால் இவளுக்கு தூக்கம் வராது. அது முடிவதற்கு பன்னிரண்டு மணியாகிவிடும். பன்னிரெண்டு மணிக்கு சஸ்பென்சுடன் முடிக்கப்பட்ட அந்த சீரியலை பார்த்தப்பிறகு இவளால் தூங்க முடியாது. கட்டாயம் மாத்திரையைப் போட்டுக் கொள்ள வேண்டும். திரும்பவும் காலையில் ஐந்து மணிக்கு விழித்துக்கொள்ள வேண்டும். காலையில் அசதி... கைகால் வலி... இப்படி அதற்கும் மாத்திரைகளை விழுங்கிக்கொண்டேயிருந்தால் உடம்பு என்னவாகும்? நானே பலமுறை "இதுபோல எந்நேரமும் மாத்திரைகளை விழுங்கிக் கொண்டேயிருக்கக் கூடாது'னு எவ்வளவோ கண்டிச்சுச்சொல்லியிருக்கேன். ஆனா, அனுராதாவால் கடைபிடிக்க முடியல!

ச்ச்!'' பிரகாஷ் தான் எழுதி கொண்ட நோட்ஸை பைக்குள் வைத்துக் கொண்டார்.
""இதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது அங்கிள். ஹெள சாட்!'' எனறார் ரஜினி.
ஆமாம், உனக்குத் தெரியாதுதான். ஏன் என்றால் நீ அமெரிக்காவில் புருஷனுடன் குடித்தனம் நடத்தும் டாலர் கனவுகளில் மூழ்கியிருந்தாய். உனக்கு அம்மாவைப்பற்றி யோசிக்க நேரம் ஏது? அதோடு உங்க அம்மாவைவிட மாறுபட்டு யோசிக்கும் சுபாவம் உனக்கு எங்கிருந்து வரும்?'' என்றார் பிரகாஷ் கேட்டைத் தாண்டிக்கொண்டே.
கண்களை அகல விரித்தபடி பார்த்துக் கொண்டிருக்க சுசீலா, திடீரென்று தன்னுடைய வீட்டை நோக்கி ஓட்டமெடுத்தாள். அவளுக்கு ஏனோ தன் தாயைக் கட்டிக் கொண்டு "ஹோ' வென்று அழவேண்டும் போல இருந்தது. தன்னுடைய தாயைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
-கௌரி கிருபானந்தன்

(இப்படியும் கூட நடக்குமா என்ன?... மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா இருக்கே என்று தோன்றக்கூடும்... தங்களது உடல்நலனில் அக்கறை கொள்ளாமல் வீடு, குடும்பம், பிள்ளைகள் என்றே உழன்று மடிந்து போகும் அப்பாவி குடும்பப் பெண்களின் குடும்பத்தாருக்கு சுரீர் என்று உரைக்கட்டும். ஏனைய அனுராதாக்கள் பிழைக்கட்டும்! (-ஆர்)


நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சூப்பர் மாம் சின்ட்ரோம்!-நெடுங்கதை.... 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக