ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:45 pm

» முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து
by சக்தி18 Today at 9:47 pm

» அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இணையப் பக்கம் தொடங்கினார்.
by சக்தி18 Today at 9:32 pm

» கொரோனா நிவாரண பணியில் கேப்டன் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி!
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்:
by ayyasamy ram Today at 7:02 pm

» ஒரு நாள் நிரலி (app)
by சக்தி18 Today at 3:41 pm

» குறிலே குறிலே குயிலே நெடிலே நெடிலே குழலே எலே
by ayyasamy ram Today at 12:35 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:12 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(519)
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by T.N.Balasubramanian Today at 10:15 am

» கொரோனா பாதிப்பு எப்போது குறையத்தொடங்கும் ? நிபுணர்கள் கருத்து
by T.N.Balasubramanian Today at 10:09 am

» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
by T.N.Balasubramanian Today at 9:53 am

» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
by T.N.Balasubramanian Today at 9:50 am

» புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Today at 9:23 am

» பணம் எண்ணும்பொழுது எழுகின்ற சலசலப்பு…
by Dr.S.Soundarapandian Today at 8:58 am

» சிரிக்க வைத்த சிவகாமி (பக்க வாத்தியம்)
by Dr.S.Soundarapandian Today at 8:56 am

» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Today at 8:52 am

» அச்சம் மடம் நாணம் பயிர்க்கடன் !
by Dr.S.Soundarapandian Today at 8:47 am

» கொரோனா அச்சுறுத்தலால் 37 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm

» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 7:05 pm

» வாட்சப் தந்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» காத்திரு.காத்திரு (ஓஷோவின் சிந்தனைகள்)
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» உலகத் தொடர்பால் இறை அனுபவம்…!-(திருமூலரின் திருமந்திரம்)
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» ஏற்புடையவனாதல்! (நீதிமொழிகள்-மஹாபாரதம்)
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» அறங்களில் சிறந்தது பசிப்பிணி போக்குவது...!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வில்லியாக நடிக்கும் சமந்தா
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» ஏ நெஞ்சே..! (ஆன்மிக சிந்தனை)
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» ஓ.டி.டி.தளம் துவக்கினார் நமீதா
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» உப்பு அதிகமானால்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm

» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» கொரோனா பாதிப்பு- ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் காலமானார்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:42 pm

» கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது; தயாராக இருக்க வேண்டும்
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» சந்தேகம் ......சந்தேகம்.
by T.N.Balasubramanian Yesterday at 12:08 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Girija89 Yesterday at 9:47 am

» குறுக்கெழுத்துப் போட்டி (ஆறாவது கிழமையில் ஆபரண உலோகம்!)
by சக்தி18 Yesterday at 12:40 am

» திரைக்கதிர்…
by ayyasamy ram Wed May 05, 2021 10:00 pm

» சினிமா செய்திகள் (தினமணி கதிர்)
by ayyasamy ram Wed May 05, 2021 9:59 pm

» பத்மபூஷன் டி.எஸ்.அவிநாசிலிங்கம் பிறந்த தினம்
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 8:39 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Jayasree Wed May 05, 2021 7:33 pm

» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:32 pm

Admins Online

'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'

Go down

'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'   Empty 'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 8:59 pm

'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'

நலம், நலமறிய ஆவல்.

''நோய் நொடி இல்லாம, நல்லாருக்கணும்! நானும், என்னைச் சுத்தியிருக்கிற மக்களும், நோய்களோ வேறு எந்தக் குறைகளோ இல்லாம, நிம்மதியா வாழணுங்கறதுதான், என் தினசரி பிரார்த்தனை!'' - ஸ்ருதி பிசகாமல், மென்மையாகப் புன்னகைக்கிறார் வீணை இசைக் கலைஞர், ரேவதி கிருஷ்ணா.

''நான் 11 வயசு சிறுமியா இருந்தப்போ, மடியில வீணையை ஏந்திக் கத்துக்கிட்டேன். இன்னிக்கி நினைச்சுப் பார்த்தா, வீணைங்கறது வெறுமனே ஒரு இசைக்கருவியா எனக்குத் தெரியலை; ஒரு குழந்தையாத்தான் வீணையை உணர்றேன். ஒரு குழந்தையைப் பார்த்ததும், அள்ளியெடுத்து, அப்படியே மடியில வைச்சுக்கிட்டு, தலையைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, செல்லமாக் குட்டி, ஆதரவா வருடிக் கொடுத்து... அந்தக் குழந்தையை எப்படியெல்லாம் சீராட்டறோம்?! ஆக, குழந்தைதான் வாழ்க்கை, வீணைதான் என் இதயத் துடிப்புன்னு வந்துட்ட பிறகு, நோய்களாவது வியாதியாவது?!'' என்று சிரித்தபடி சொல்கிறார் ரேவதி கிருஷ்ணா.

''காலைல எழுந்து, பல் தேய்ச்சு, முகம் கழுவின உடனே நான் செய்றது, என்னைச் சுத்தியிருக்கிறவங்க எல்லாரும் நல்லாருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கறதுதான்! அப்புறம், மொட்டை மாடில அரை மணி நேரம் வாக்கிங். கிட்டத்தட்ட, அந்த அரை மணி நேரமும் நான் மௌனச் சாமியார்தான். இன்னிக்கி என்ன வேலை, எங்கே நிகழ்ச்சி, என்ன செய்யலாம்னு திட்டமிடறதும் அந்த நேரத்துலதான்! மாடியிலேருந்து அண்ணாந்து வானத்தைப் பார்க்கும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்னு தோணும். அதனால, பாராட்டு, புகழ் எதையுமே தலைக்கு ஏத்திக்கறது இல்லை. தலையில கனமில்லேன்னா, மனசுல பயமும் இல்லை; பதற்றமும் இருக்காது!

வாக்கிங் முடிஞ்சு வந்ததும், 'ஸ்டெப்பர்’ல பெடலிங் பண்ணுவேன். நேரா நிமிர்ந்து நின்னு, கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுத்துப் பெடல் பண்றது தனிச் சுகம். சட்டுனு, சின்ன வயசுல சைக்கிள் ஓட்டினது பிளாஷ்பேக்ல ஓடும். என் பிளாஷ்பேக்ல எப்போதுமே சோகக்காட்சிகளுக்கு இடமில்லை'' என்று சொல்லும்போதே, கலகலவெனச் சிரிக்கிறார் ரேவதி கிருஷ்ணா.

''உண்மையில் இந்தச் சிரிப்பு கூட அற்புதமான மருந்துதான்! 'வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்’னு எந்தப் புண்ணியவான் சொன்னாரோ தெரியலை. ஆனா, அனுபவிச்சு, சிரிச்சுச் சிரிச்சு, ரசிச்சு ரசிச்சு சொன்னதாத்தான் உணர்றேன். எந்த விஷயமா இருந்தாலும், அதை ரசிக்கவும், அதைப் புரிஞ்சுக்கிட்டு மனசு விட்டுச் சிரிக்கவும் செஞ்சாப் போதும்; நோய் நொடியெல்லாம் ஓடிடும். ரசனை ஒரு மெடிக்கல் ஷாப்னா, அங்கே கிடைக்கிற சர்வரோக நிவாரணி - சிரிப்பு! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க. அகத்துல ரசனை இருந்தாத்தான், முகத்துல சிரிப்பு படர்ந்திருக்கும். அதனால, மனசுல முட்களைச் சேகரிக்கறதை விட்டுட்டு, ரோஜாக்களைப் பதியனிடுறதுதான், மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கான முதல் வழியும்கூட!

சுவாரஸ்யமான விஷயங்களை ரசிக்கிறதுக்கும், சிரிக்கிறதுக்கும் நாம தயாரா இருக்கணும். குறிப்பா, நம்ம மனசு அலம்பிவிட்ட மொசைக் தரை மாதிரி, பளிச்சுனு அமைதியா இருக்கணும். அந்த அமைதியை, இசையால தரமுடியும். அமைதியான மனசுல பதற்றமோ படபடப்போ இருக்காது; நிதானமும் நேர்த்தியும் நிறைஞ்சிருக்கும். ஆக, அமைதியான மனசுக்கு உத்தரவாதம், இசை; சந்தோஷமான வாழ்க்கைக்கு, ரசிப்புத்தன்மை உத்தரவாதம்! தியாகப் பிரும்மம் தனது கீர்த்தனையில சொல்வார்... 'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது’ன்னு! அமைதியும் ரசிப்புத் தன்மையும் இருந்துட்டா, எப்பவும் சௌக்கியமா, ஆரோக்கியமா இருக்கலாம். நான் அப்படித்தான் இருக்கேன்.உடற்பயிற்சி முக்கியம்தான்; ஆனா, அதைவிட மனசை ஒருநிலைப்படுத்தற மனப்பயிற்சியும், மனம் குவித்த பிரார்த்தனையும் ரொம்பவே அவசியம்! குளிச்சு முடிச்சு, பூஜையறைக்குப் போனதும், அடுத்த அரை மணி நேரத்துக்கு, மறுபடியும் நான் மௌனச் சாமியார். 'இப்பிறவியை எனக்குத் தந்து, இசையில் ஞானத்தையும் புகழையும் தந்த இறைவா, உனக்குக் கோடி முறை சொல்கிறேன், நன்றிகளை!’ என்று பிரார்த்தனை ஓடிக்கொண்டே இருக்கும்.

எல்லாம் முடிஞ்சு வந்ததும், நானும் என் 'குழந்தை’யும் தான்! 'வாடாக் கண்ணு...’னு செல்லமா தூக்கி, மடியில வைச்சுக்கிட்டு, அதன் விரல்களை, தலையை வருடிவிட்டபடி, குழந்தையோட குழந்தையா, வீணையோட வீணையா மாறி, கரைஞ்சு கலந்திருக்கும் அற்புதமான தருணம் அது!

'ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்...’, 'பூமாலையில் ஓர் மல்லிகை’னு ரம்மியமான சினிமா பாடல்களை விரல்களின் வழியே, வீணையின் நரம்புகளில் செலுத்தி, இசையாக, நாதமாக, கீதமாகக் கொண்டு வர்றது, ஆத்மானுபவம். விவரிக்கவே முடியாத சிலிர்ப்புத் தித்திப்பு இது! மனசுல என்ன சோகம் இருந்தாலும், உடம்புல எத்தனை அசதி இருந்தாலும், எல்லாமே காணாமப் போயிடும்; கண்ணுக்கு எட்டின தூரத்தைக் கடந்து ஓடியே போயிடும்!'' என்று கண்களை மூடியபடி, அனுபவித்துச் சொல்கிறார் ரேவதி கிருஷ்ணா.

''எல்லாத்துக்கும் மேலே முக்கியமா ஒரு விஷயம்... நாம எந்த வேலையைச் செய்தாலும், அதுல ஆத்மார்த்தமா ஈடுபடணும். வேலையின் நிலை, சூழல் எல்லாத்தையும் உள்வாங்கிக்கிட்டு, அந்த வேலைக்கு நம்மளை அப்படியே ஒப்படைச்சிடணும். அப்படி வேலை பார்க்க ஆரம்பிச்சுட் டோம்னா, ஆரோக்கியமான தேகமும் மனசும் நிச்சயம்! அதுக்கு நான் கியாரண்டி!'' என்று விளம்பரத்தில் வருவது போல் முகம் மலரச் சொல்லிவிட்டு, வீணையின் நரம்புகளில் விரல்களை ஓடவிடுகிறார், ரேவதி கிருஷ்ணா.

அவர் சொன்னதை ஒப்புக்கொண்டு ரசிப்பதுபோல், சிணுங்கிச் சிரிக்கிறது வீணைக் குழந்தை!


நன்றி விகடன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum