புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
284 Posts - 45%
heezulia
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
19 Posts - 3%
prajai
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_m10தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க...


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 01, 2011 9:46 am

தேவலோக அமுதத்துளி பூலோக நெல்லிக்கனி...


தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Images





தகடூரை ஆட்சி செய்த மன்னன் அதியமான் அஞ்சி தமிழ்ப்பற்று கொண்டவன். தன்னை நாடிவரும் புலவர்களை அன்போடு வரவேற்று உபசரிப்பான். வீரத்திலும் சிறந்து விளங்கிய அதியன் தன்னை நாடி வந்த ஒளவைக்கு பல நாட்கள் சென்றும் தமிழார்வம் காரணமாகப் பரிசில் தராது காலம் நீட்டித்தான். ஒரு நாள் மலைவளம் காணச் சென்ற அதியனுக்கு அற்புதமான கனி ஒன்று கிடைத்தது. அந்தக்கனியைத் தின்றால் சாவே வராது.. மூப்பின்றி நெடுநாள் வாழலாம் என்று அறிந்தான். அதை உடனே தான் தின்னாமல் அப்படியே எடுத்து வந்தான். ஒளவைக்குக் கொடுத்துத் தின்னச்சொன்னான்.

ஒளவை ருசித்துத் தின்று முடித்த பின் அக்கனியின் மகத்துவம் குறித்துக் கூறினானாம்.. ஒளவை பதறிப்போய் அத்தகு சிறப்பு வாய்ந்த கனியை உட்கொள்ள வேண்டியவன் நீயன்றோ. இந்நாட்டை ஆள வேண்டிய நீதானே பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்., இப்படிச் செய்துவிட்டாயே என்று புலம்பினாராம். அவர் என்றும் முதுமை மாறாத அதே கிழவியாகப் பல்லாண்டு வாழ்ந்தாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இந்த சம்பவம் உண்மை என்பதை இலக்கியங்கள் கூறுகின்றன..

ஒரு மன்னனின் கொடைத்திறத்தைப் பறைசாற்றக் காரணமாக ஒரு கனி இருக்கிறதென்றால், அருங்கனி ஈந்தவன் என்று தமிழுலகத்தில் ஒரு மன்னன் ஒரு கனியால் அடையாளம் காட்டப்படுகிறான் என்றால் அக்கனி எத்துனை சிறப்பு வாய்ந்ததாக இருக்கக்கூடும். ஒளவை மூப்பின்றி நெடுநாள் வாழ்ந்தமைக்குக் காரணமான அக்கனி அருநெல்லிக்கனி என்பது யாவரும் அறிந்ததே. அப்படி இருக்க அந்த அருநெல்லிக்கனியைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பது எவ்வகையில் பொருந்தும்?

நரை திரை மூப்பு என்ற மூன்றையும் எதிர்க்கும் ஆற்றல் அதியனுக்கு அடுத்ததாக அவன் கண்டெடுத்த வேறு எந்த கனியிலும் இல்லாத அளவு வைட்டமின் `சி' நிறைந்த நெல்லிக்கு உண்டு. இதனை

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

என்று தேரையர் கூறுவார். இதன் பொருள், முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிட வேண்டுமாம்.

ஒரு மண்டலம் நெல்லிப் பொடியை தேனில் குழைத்துத் தின்று வந்தால் கருங்காலிக் கட்டையை எரித்தால் உண்டாகும் தீ போல உடலை ஜொலிக்கச் செய்யும் மாமருந்து நெல்லி என்கிறார் போகர். பாடல் இதோ.

வயிரமாம் நெல்லிமுள்ளி தனைவாங்கி
மருவ நன்றா யிடித்துமே யெடுத்து
ஆயிரமாம் அப்பிரேகச் செந்தூரந்தான்
அதற்கெட்டுப் பங்கு ஒன்று சேர்த்து
துயிரமாம் தேன் தன்னில் குழைத்துண்ணு
சுகமாக மண்டலந்தான் உண்டாயானால்
கைரமாங் காய்ந்தான் கருங்காலிக்கட்டை
கனல்போல சோதியாய்த்தான் காணும்காணே

இளமை தரும் டானிக்கான நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற இரு இனங்கள் உண்டு. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய யுபோர்பியேசி குடும்பத்தைச் சார்ந்த மரம். விரிந்து பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்து, கொத்தாக அடர்த்தியாக வளரும். வேனில் காலத் துவக்கத்தில் பூக்க ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது.

ஒரு நெல்லியில் உள்ள சத்து புரதம் - 0.4 கி, கொழுப்பு - 0.5 கி, மாவுச்சத்து
- 14 கி, கல்சியம் 15 மி.கி, பொஸ்பரஸ் - 21 மி.கி, இரும்பு - 1 மி.கி, நியாசின் - 0,4 மி.கி, வைட்டமின் ´பி1` - 28 மி.கி, வைட்டமின் ´சி` - 720 மி.கி, கரிச்சத்து, சுண்ணாம்பு தாதுப் பொருட்கள், கலோரிகள் - 60

இதனைத் தின்று சுனையின் தேங்கியிருந்த சிறிது நீரை அருந்தி, அதன் சுவையில் தன்னை மறந்துள்ளனர் சங்கத்தமிழர் இந்த நெல்லிக் கனியை சங்க காலத்தில் நடைப்பயணத்தில் தாகத்தைப் போக்கிக்கொள்ளப் பயன்படுத்தினர் என்று அறிகிறோம். இதனை

பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப் புன்காழ்
நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி
சுவையில் தீவிய மிழற்றி
என்று அகநானூறும்,

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
என்று ஐங்குறுநூறும்,

சேய்நாட்டுச் சுவைக்காய் நெல்லிப் போக்குஅரும்
பொங்கர் வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைசசிறு நீர் குடியினள்,

என்று நற்றிணையும் சுட்டும்.

நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள்.தண்ணீர் இனிப்பாக மாறிவிடும்.. கிணற்று நீரே இனிப்பாக மாறும் போது இயல்பாகவே இனிமைச் சுவை நிரம்பிய வாயில் ஊறும் உமிழ்நீர்?

கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி
வாயின்ஊறல் கண்டு சர்க்கரையோ தேனோ
கனியொடு கலந்த பாகோ அண்டர் மாமுனிவர்க்கு
எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமோ

என்று விவேக சிந்தாமணி ஆசிரியர் கேட்பார். ஆனால் நெல்லிக்காய் ஆண் பெண் பேதமற்று அனைவரின் நோய் தீர்க்கும் அருமருந்தாகிய உமிழ்நீர்ச்
சுரப்பியைத் தூண்டி விடுகிறது. பற்களுக்கு உறுதியைத் தருகின்றது.

கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது

பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது

உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுப்பதுடன். ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது. நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களைக் கழுவினால் கண் சிவத்தல், உறுத்தல் ஆகியவை குணமாகும்.

ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.

சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது வீரியமான விந்தணுக்கள் உருவாகவும்
கருப்பை உறுதிக்கும் நெல்லி அருமருந்து.

உணவு செரிமானத்திற்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு
பேருதவி புரிகிறது

பெண்களுக்கு அழகைக்கூட்டுவதில் கண்களுக்கு அடுத்த இடம் கூந்தலுக்குத்தான். இயறகையிலே இளமை டானிக்கான இது முதுமையின் அடையாளமான நரைக்கும் மருந்தாகிறது. அன்றாடம் தலையில் ஒரு கரண்டி நெல்லி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு,

இதில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவிவந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.

வழக்கமாகச் சுவையான செய்தி ஒன்றைச் சொன்னால்தானே உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நெல்லிக்காயின் பிறப்பு ரகசியத்தை ரகசியமாகச் சொல்கிறேன். யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அசுரர்களும்தேவர்களும் பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை அசுரர்களை ஏமாற்றி தேவர்கள் இந்திர லோகத்துக்கு எடுத்து சென்றார்கள் அல்லவா, அப்போது தேவலோகத்தில் இந்திரன் அந்த அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி கையில் இருந்து நழுவி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து வந்ததுதான் நெல்லிமரமாம்....அமுதக்கனி என்று கூறலாமா!!!



ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.




தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Tதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Hதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Iதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Rதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 10:05 am

நன்றி அக்கா நெல்லிக்கனியின் அற்புதத்தை பற்றி சொன்னமைக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 01, 2011 10:14 am

Manik wrote:நன்றி அக்கா நெல்லிக்கனியின் அற்புதத்தை பற்றி சொன்னமைக்கு
நன்றி மணி.. தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... 154550



தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Tதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Hதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Iதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Rதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Empty
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Apr 01, 2011 10:51 am

அருமையான தகவலுக்கு நன்றி... நெல்லிக்காய் ஜுஸும் ரொம்ப நல்லா இருக்கும்....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 01, 2011 11:17 am

நன்றி சுதானந்தன்.. ஒரு ரெசிபியும் கூறலாம் தான். ஆனால் பக்கம் கூடுமே.
முடிந்தால் ஜூஸ் செய்முறையைக் கூறுங்கள்.



தேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Tதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Hதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Iதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Rதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Aதேவலோக ...அமுதத்துளி….. சாப்பிடலாம் வாங்க... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 11:38 am

அருமையான கட்டுரை ஆதிரா...

ஈகரையின் ஔவையாரே இந்த கலை அதியமானுக்கு எப்போது நெல்லிக்கனி அனுப்பப்போகிறீர்கள்..? ரிலாக்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Apr 01, 2011 11:54 am

நெல்லிக்காய் ரைஸ்

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 5
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு

செய்முறை

நெல்லிக்காயை விதையை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.

அரைத்த விழுதை வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறு எடுக்கவும்.

வடிகட்டி வைத்திருக்கும் சாறுடன் மஞ்சள் தூள், உப்பு கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு வறுத்து அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் துண்டுகளை போடவும்.

பின்னர் அதில் நெல்லிக்காய் சாறை ஊற்றி லேசாக நுரை வந்ததும் இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஆற வைத்து உதிர்த்த சாதத்தை போட்டு நெல்லிகாய் சாறை ஊற்றி கிளறவும். நெல்லிக்காய் சாதம் ரெடி.

சிப்ஸ் உடன் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.







கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Apr 01, 2011 12:23 pm

தேன் நெல்லிக்காய்

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் - ப‌த்து
ச‌ர்க்க‌ரை - கால் கப்
தேன் - நான்கு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிக்கை

செய்முறை

நெல்லிக்காயை சைடில் கீறி விட்டு (அ) ஒரு ஃபோர்கை கொண்டு எல்லா பக்கமும் குத்தி விடவேண்டும்.
ஒரு பெரிய‌ வாயக‌ன்ற‌ ச‌ட்டியில் த‌ண்ணீரை கொதிக்க‌ விட்டு நெல்லிக்காயை போட்டு உட‌னே அடுப்பை அணைக்கவும்.

சர்க்கரையை கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிக்கை உப்பு போட்டு காய்ச்சி அதில் நெல்லிக்காயை சேர்த்து தேனையும் ஊற்றி ஊறவிட்டு சாப்பிடவும்.

இதை ஒரு பாட்டிலில் சேமித்து சில நாட்கள் வைத்திருந்தும் சாப்பிடலாம்... கேரளாவில் இதை விரும்பி சாப்பிடுவதை பரவலாக கண்டுள்ளேன் ...


ஒரு சிறு குறிப்பு

க‌ர்பிணி பெண்க‌ளுக்கு ம‌ச‌க்கையின் போதும், புற்றுநோய் உள்ள நோயாளிக‌ளுக்கு கீமோ தெரபி செய்த‌தும், வாய்க்கு எந்த‌ ருசியுமே தெரியாது; கொம‌ட்டலாக‌வே இருக்கும். அந்த‌ ச‌மய‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு உப்பு நெல்லிக்காய் கொடுக்க‌லாம்.




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 01, 2011 1:53 pm

பயனுள்ள தகவல்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Apr 01, 2011 3:35 pm

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயை (4 - 5) விதையை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறு எடுக்கவும். வடிகட்டி வைத்திருக்கும் சாறுடன் உங்கள் தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொள்ளவும் (அடர்த்தியைக் குறைக்க). அத்துடன் தேவையான அளவு ச‌ர்க்க‌ரை அல்லது தேன் சேர்த்து கலக்கவும். நெல்லிக்காய் ஜூஸ் தயார்.

நெல்லிக்காய் - எலுமிச்சை கலந்த ஜுஸும் நல்லது.





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக