ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Today at 10:32 am

» ஒரு மொக்க ஜோக்!
by ஜாஹீதாபானு Yesterday at 5:03 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (67 - 69 )
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 10:50 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 7:38 pm

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 3:30 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Sep 17, 2021 12:15 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

» சமூக கடமை --மகா பெரியவா உரை.
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 9:04 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 4:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


கால் மூட்டு வலி

+2
Aathira
varsha
6 posters

கால் மூட்டு வலி Empty கால் மூட்டு வலி

Post by varsha Fri Apr 01, 2011 8:47 am

கால் மூட்டு வலி

கால் மூட்டு வலி Legpain

நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை
நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு
உணர்வார்கள்.

மனித
உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட
ஒரு உருவமாகும். உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும்
முக்குற்றங்களால் செயல்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம்
அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது. இதற்கு ஆதாரமாக
செயல்படுபவை தச வாயுக்கள்தான். இவற்றின் செயல்பாடுகளில் சீற்றம் கண்டால்
அவை உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும். பொதுவாக மனிதனுக்கு நோய் ஏற்படக் காரணம்
உண்ணும் உணவும், மன பாதிப்பும்தான்.

நம்
முன்னோர்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம்
அவர்கள் உடலுக்கும், மூளைக்கும் சமமாக போதிய அளவு வேலை கொடுத்தார்கள்.
ஆனால் இன்று மூளைக்கு மட்டுமே அசுர வேலை கொடுக்கப்படுகிறது. உடல்
அசைவின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இயந்திர
மனிதர்கள் போல் மாறிவிட்டனர். உணவைக்கூட மறந்து இயங்குபவர்களுக்கு
உடற்பயிற்சி என்ற வார்த்தையே மறந்து போய்விட்டது.

நோய்கள்
என்றால் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் என்ற பெரிய நோய்கள் மட்டுமல்ல.
நம் வேலையை சற்று ஸ்தம்பிக்கச்செய்து உடலைக் கஷ்டப்படுத்தும் அனைத்துமே
நோய்கள்தான்.

அப்படிப்பட்ட நோய்களில் அனேக மக்களை வாட்டிவதைக்கும் நோய்தான் கால் மூட்டுவலி.

இந்த
நோய் நடக்க இயலாமல் செய்வதுடன் பயங்கரமான வலியை உண்டாக்கும். சிலருக்கு
கால் மூட்டுகளில் வீக்கமும் வலியும் உண்டாகி இதனால் இவர்கள் சிறிது தூரம்
கூட நடக்க முடியாமல் செய்துவிடும். மாடிப்படிகளில் ஏற முடியாது.

இதற்கு சிலர் மருந்துமாத்திரைகளை உட் கொண்டும், அறுவை சிகிச்சை செய்துகொண்டும், வருகின்றனர்.

மூட்டுவலி பெரிய நோய்களில் ஒன்றாகவே தற்போதைய காலக்கட்டத்தில் கருதப்படுகிறது.

மூட்டுவலி என்பது மூட்டுத் தேய் மானத்தால் மட்டும் வருவதல்ல. மலச் சிக்கலாலும் இது ஏற்படும்.

ஓதுகின்ற மலக்கட்டை ஒழியவைத்தால் ...

என்ற சித்தர் பாடலில் மலச்சிக்கலால் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்புண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மூட்டுவலி வயதான ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் சந்திவாதம் என்று அழைக்கப்படுகிறது.

முழங்காலில்
உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித சவ்வு உள்ளது. இதற்கு
கார்டிலேஜ் என்று பெயர் இந்த சவ்வுதான் மூட்டுகளின் அசைவிற்கு உதவுகிறது.
இந்த சவ்வுகளில் வாய்வு சேர்ந்து அது வாத நீராக மாறி மூட்டு வலியை
ஏற்படுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் குடல் அழற்சி, பித்த அதிகரிப்பு,
பித்த எரிச்சல், நெஞ்செரிச்சல் இவைகளால் மூட்டு வலி உண்டாகும். பொதுவாக
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அதிக ஓய்வில்லாமல் வேலை செய்வதாலும்,
மாடிப்படிகளில் ஏறி இறங்குவதாலும் கூட மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மாதவிலக்கான பெண்களை பழங்காலத்தில் ஓரிடத்தில் அமரச் செய்து ஓய்வு
கொடுத்ததன் அர்த்தம் தற்போது புரிகிறது.

தற்போதைய
காலகட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை, வேலைப்பளு, ஓய்வில்லாமல் உழைக்கும்
பெண்களுக்கு அதிகம் மூட்டுவலி வருவதை நாம் காணமுடிகிறது.

கால் மூட்டுவலிக்கான அறிகுறிகள்.

காலையில்
எழுந்தவுடன் தலைவைலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி போன்றவை உண்டாகும்.
மலம் சீராக வெளியேறாமல் மலச்சிக்கல் ஏற்படும். உண்ட உணவு செரிமானம் ஆகாமல்
அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வாயுத்தொல்லைகள் உண்டாகும். இதனால் பசியின்மை,
நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.

கால்
மூட்டுகளில் வீக்கம் உண்டாகி வலியை ஏற்படுத்தும். கால் நடுக்கம்
ஏற்படும். சிறிது தூரம் நடந்தாலே மூட்டுகளில் வலி உண்டாகும். நாளடைவில்
கால்களை மடக்கி உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமல் செய்துவிடும். மேலும்
தோள்பட்டை வலி, முதுகுவலி, கழுத்து வலியும் ஏற்படும்.

மூட்டுவலி ஏற்படக் காரணம்

நேரத்திற்கு
உணவு அருந்தாமை யாலும், நேரம் கழித்து உணவு அருந்துவதாலும் ஒரே நேரத்தில்
அதிக உணவு உட்கொள்வதாலும் நீண்ட பட்டினி இருப்பதாலும், அஜீரணக் கோளாறு
உண்டாகிறது. இதுபோல் இரவில் அதிக காரம், புளித்த தயிர் போன்றவற்றை
சேர்த்துக் கொள்வதாலும், குடலில் உள்ள அபானவாயு சீற்றம் கொள்கிறது.
பொதுவாக அபான வாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டதாகும். ஆனால் அது
சீற்றம் கொள்ளும்போது மேல்நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது. அங்கிருந்து
பின்கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் வேகமாகச்
செல்கிறது. அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு
அங்கேயே தங்கிவிடுகிறது. இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர்
கோர்க்கச் செய்கிறது. இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்தநீர்
இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது.
இதனால் வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு ஏற்ப உலர்ந்தும், இறுகியும் தாங்க
முடியாத வலியை உண்டு பண்ணி நடக்க இயலாமல் செய்யும்.

மூட்டுவலி ஏற்படாமல் தடுக்க

· நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.

· எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்பது நல்லது.

· குறிப்பாக இரவு வேளைகளில் நாம் உட்கொள்ளும் உணவு மென்மையானதாகவும், எளிதில் செரிமானமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

· அரைவயிறு உணவே இரவில் நல்லது.

·
நீண்ட பட்டினி, அதிகமான டீ, காபி, மது, புகை, போதை வஸ்துக்கள் இவைகளால்
குடல் அலர்ஜி ஏற்பட்டு வாயு சீற்றமாகி அதுவே கால் மூட்டுவலியை
உண்டாக்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

·
மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை
இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மலச் சிக்கலைத் தவிர்ப்பது நல்லது.

· அதிக உஷ்ணத்தையும், வாயுவையும் கொடுக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது.

· அதிக புளிப்பு காரங்களைத் தவிர்ப்பது நல்லது.

கீரைகள், பழங்கள், காய் கறிகள், மூலிகை சூப் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும்
1/2 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. கை, கால்களை நன்கு வீசி
நடக்க வேண்டும். குறிப்பாக கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை
செய்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

கால்
மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை முறையில் முழு நிவாரணம் கிடைப்பது அரிது.
ஆனால், இந்திய மருத்துவ முறைகளில் பூரண குணமடைய மருந்துகள் உள்ளன.

உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் சீராக இருந்தால் நோயில்லா வாழ்க்கை வாழலாம்.
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by Aathira Fri Apr 01, 2011 9:30 am

பயனுள்ள பதிவு...


கால் மூட்டு வலி Aகால் மூட்டு வலி Aகால் மூட்டு வலி Tகால் மூட்டு வலி Hகால் மூட்டு வலி Iகால் மூட்டு வலி Rகால் மூட்டு வலி Aகால் மூட்டு வலி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by தாமு Fri Apr 01, 2011 11:03 am

கால் மூட்டு வலி 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by Manik Fri Apr 01, 2011 11:10 am

அருமையான பதிவு நண்பா எங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by முரளிராஜா Fri Apr 01, 2011 11:19 am

மிகவும் பயனுள்ள பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by varsha Sat Apr 02, 2011 7:19 am

varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by varsha Sat Apr 02, 2011 7:19 am

@முரளிராஜா wrote:மிகவும் பயனுள்ள பகிர்வு
கால் மூட்டு வலி 678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by varsha Sat Apr 02, 2011 7:20 am

@Manik wrote:அருமையான பதிவு நண்பா எங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்
கால் மூட்டு வலி 678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by மாணிக்கம் நடேசன் Sat Apr 02, 2011 8:04 am

மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இது ரெண்டும் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே போதுமை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4558
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

கால் மூட்டு வலி Empty Re: கால் மூட்டு வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை