உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» விரல் முத்திரை - பலன்கள்by ayyasamy ram Today at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Today at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Today at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Today at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Today at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Today at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Today at 6:54 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Today at 6:36 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Today at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Today at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Today at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Today at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Today at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Today at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Today at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Today at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Today at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Today at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Today at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Today at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Today at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Today at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Today at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Today at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Today at 9:24 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 9:23 am
» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Today at 9:23 am
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Today at 6:51 am
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rajana3480 |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா
2 posters
விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா

இந்திய விடுதலையின் சின்னமாக மூவண்ணக்கொடியை வெளிநாட்டில் ஏற்றி வைத்துப் பிரபலப்படுத்தியவர், மேடம் காமா. அவரது தனிப்பட்ட வாழ்க்கை, மனத்தை நெகிழச் செய்யக்கூடிய ஒன்றாகும். அந்நாட்களில் தோல்வியால் சோர்வடைந்த ஃபிரெஞ்சு மன்னனையும் மக்களையும் ஊக்குவித்துத் தேசியப் படை திரட்டி ஆங்கிலேயருடன் போரிட்டு வெற்றிகொண்ட இளம் வீராங்கனையான ஜோன் ஆப் ஆர்க் படத்தை மேடம் காமாவின் படத்துடன் இணைத்துப் பிரெஞ்சுப் பத்திரிகைகள் வெளியிட்டன. சர்வதேசப் புரட்சியாளராகிய இந்த வீரப் பெண்மணியின் வாழ்க்கையை இந்தியா ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆரம்ப காலத்தில் இந்திய விடுதைக்காக வெளிநாட்டிலிருந்து இயக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் மேடம் பிகாஜி ருஸ்டம் காமா, ஷியாம்ஜி ரானா ஆகியோர் ஆவர்.
மேடம் காமா என்று பிரபலமாக எல்லோராலும் அழைக்கப்பட்ட பிகஜிருஸ்டம் காமா, 24.09.1881 அன்று, பம்பாயில் இருந்த பணக்காரப் பார்ஸி வியாபாரக்குடும்பத்தில் பிறந்தவர்.தன்னுடைய 24ஆவது வயதில் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் ருஸ்டம் கே.ஆர்.காமா என்ற பணக்கார வழக்கறிஞரைத் திருமணம் செய்து கொண்டார்.தீவிரமான, முற்போக்கான இலட்சியங்களை இளமைக் காலத்திலேயே வளர்த்துக் கொண்டிருந்த மேடம் காமாவிற்குத் திருமண வாழ்க்கை மிகப்பெரிய தடையாக இருந்தது. அந்தத் தடையையும் மீறிப் பொது வாழ்வில் தீவிரமாக இறங்கி, தம் இலட்சியத்தை அடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்.எனவே, குடும்ப வாழ்க்கையில் விரிசல் உண்டாகி, கடைசியாக 1901இல் கணவனையும் குடும்பத்தையும் விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.குடும்ப வாழ்க்கையிலிருந்துதான் அவரால் வெளியேற முடிந்ததே தவிர, இலட்சியப் பாதையிலிருந்து அவரால் விலகவோ, விடுதலை பெறவோ முடியவில்லை.
எதையும் தியாகம் செய்பவர்களே இலட்சியவர்களே இலட்சியவாதிகளாகத் திகழ முடியும் என்பதற்க மேடம் காமா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார்.குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறிய மேடம் காமா, இந்திய விடுதலைக்காக வெளிநாட்டிலிருந்து செயல்பட்ட புரட்சியாளர்களை ஒன்று திரட்டி, ஆயுதப் புரட்சியின் மூலம் இந்தியாவின் அடிமை விலங்கை உடைத்தெறியத் திட்டங்களைத் தீட்டினார். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவிலுள்ள புரட்சியாளர்களுக்கு இரகசியமாக ஆயுதம் வழங்கியதோடு பயிற்சியும் அளித்தார்.கல்கத்தாவில் 1906 ஆகஸ்டு 7ல் ஏற்றப்பட்ட கொடியும், ஒரு வருடம் கழித்து 1907 ஆகஸ்டு 22ல் ஸ்டட்கார்டில் ஏற்றப்பட்ட கொடியும் வடிவமைப்பில் ஒத்த நிலையில் இருந்ததால், கல்கத்தாவில் ஏற்றப்பட்ட கொடியின் மாதிரி ஒன்றினை இந்தியப்புரட்சியாளர்கள் வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கக் கூடும்.அப்படி எடுத்துச் சென்றவர்களுள் ஹோம் சந்திர கனுங்கோ, கான்ஷிராவ் போன்ற புரட்சியாளர்களின் பெயர்களும் அடக்கம் என்று கருதப்படுகிறது. இதே கருத்தைச் சுகுமார் மித்ராவும் கூறுவதால், இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.
அவர் இது சம்பந்தமாக ஹெச் குப்தா என்பவர் பெயரையும் குறிப்பிடுகிறார். இது குறித்து டாக்டர் பூபேந்திரநாத் தத், கான்ஷிராவ் என்ற புரட்சியாளரின் பெயரை உறுதியாகக் குறிப்பிடுகிறார்.1906ல் கல்கத்தாவில் ஏற்றப்பட்ட கொடி, அச்சமயத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்ற இந்தியப் புரட்சியாளர்களான ஹோம் சந்திர கனுங்கோ, அல்லது கான்ஷிராவ் மூலமாகப் பாரிஸிலிருந்த மேடம் காமாவுக்குக் கிடைத்திருக்கக் கூடும்! அக்கொடியையோ, அல்லது அதேபோன்ற உருவ அமைப்பைக் கொண்ட புதிய கொடியையோ அவரே தயாரித்து, 1907ஆம் ஆண்டு ஸ்டட்கார்ட் மாநாட்டில் ஏற்றிருக்க வாய்ப்பிருக்கிறது.ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா என்ற இந்தியப் புரட்சியாளரால் 1905ல் லண்டன் நகரில் நிறுவப்பட்ட இந்தியா மாளிகையில் தங்கியிருந்த துடிப்புமிக்க இளம் புரட்சியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் இதே மூவண்ணக்கொடிதான் ஏற்றப்பட்டது. 1908ஆம் ஆண்டில் லண்டன் நகரில் உள்ள Caxton Hall ல் வங்காளப்பிரிவினை எதிர்ப்பை வெளிக்காட்டவும், 1857 எழுச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடவும், சிறப்பான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில், பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராஜ், பிபின் சந்திரபால், மேடம் காமா, வீரசாவர்க்கர் , ஹர்ஷ தயாள், வ.வே.சு. அய்யர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இக்கூட்டங்களில் கலந்து கொண்ட மேடம் காமா, தமது ஆவேச உரையில் மூவண்ணக்கொடியைப் பற்றிக் கூறும்போது இந்த மூவண்ணக்கொடியின் பெருமையைக் காக்கத்தான் குதிராமும் பிரபுல்லா சகியும் தமது இன்னுயிரைக் கொடுத்தார்கள்'' என்று குறிப்பிட்டார்.
முதல் உலகக்போர் வெடித்தபோது பெர்லினிலுள்ள இந்தியப் புரட்சியாளர்களால் நிறுவப்பட்ட இந்திய விடுதலைக் கமிட்டி (பெர்லின் கமிட்டி) சில மாறுதல்களுடன் இதே கொடியை ஏற்றுக்கொண்டது.டாக்டர் பூபேந்திரநாத் தத் தமது நூலில் மேலும் இவ்வாறு கூறுகிறார். ""1915இல் கோடைகாலத்தில் பல நாடுகளுக்கு மாறுவேடத்தில் பயணம் செய்த பின்பு நான் பெர்லினை அடைந்தபோது பெர்லின் கமிட்டி அலுவலகத்தில் இக்கொடியைப் பார்த்தேன். அது இதே வண்ணங்களைக் கொண்டிருந்தது.''மேலும் இவர் ""வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயாவிடம், இக்கொடியில் சந்திரனும் சூரியனும் ஏன் நீக்கப்பட்டன என்று கேட்டதற்கு ""அவை மேடம் காமாவின் தயாரிப்புகள். நாங்கள் நீக்கிவிட்டோம்'' என்றார்.கொடியிலுள்ள சின்னங்கள் மதத்தத்துவார்த்தங்கøக் கொடுப்பதைப் புரட்சியாளர்கள் விரும்பாத காரணத்தால் அந்தச் சின்னங்கள் கொடியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம்.இந்திய விடுதலைக்காகத் தியாக வாழ்க்கை மேற்கொண்ட புரட்சிப் பெண்மணி மேடம் காமாவின் இறுதி நாட்கள் அவலமாக நகர்ந்தன. உடல்நிலை கெட்டு மோசமானதால், அவர் இந்தியாவுக்குத் திரும்பினார். அப்பொழுது அவருக்கு வயது 74. அந்தக் கடைசி காலத்தில், மேடம் காமா நோய்வாய்ப்பட்ட நிலையில், பம்பாயில் உள்ள பாரிஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான இலவச மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை மோசமாகி, கேட்பாரின்றி, நாதியற்ற நிலையில் 12.08.1936 அன்று அநாதை போல் இறந்தார். ""தேசிய முரசு'' இதழாசியர் திரு.ஆ.கோபண்ணா எழுதும் ""கொடியின் கதை'' தொடர்கட்டுரையிலிருந்து ஒரு பகுதியின் சுருக்கம்.
* ஸ்டட்கார்ட் மாநாட்டில் மேடம் காமா ஏற்றிய கொடியும், இந்தியாவில் சுதேசி இயக்கப் போராட்டக் காலத்தில் கல்கத்தாவில் 1906 இல் ஏற்றப்பட்ட கொடியும், உருவ அமைப்பில் அநேகமாக ஒத்திருந்தன.இந்த இரு கொடிகளுக்கிடையே ஏற்பட்ட வண்ண மாறுதல், அதாவது கொடியின் நடுவிலிருந்த வந்தே மாதரம் என்ற வார்த்தை கல்கத்தா கொடியில் மஞ்சள் வண்ணத்திலும், ஸ்டட்கார்ட் கொடியில் காவி வண்ணத்திலும் எழுதப்பட்டிருந்தது. வண்ணக் குழப்பத்தின் காரணமாக, இப்படி நிகழ்ந்திருக்கலாம்.இரண்டு கொடிகளும் மூன்று வண்ணங்களையும் மேல் பகுதியிலுள்ள சிவப்பு வண்ணத்தில் எட்டுத் தாமரை மலர்களையும் கொண்டிருந்தன. ஆனால், கல்கத்தா கொடியின் நடுவில் ""வந்தே மாதரம்'' என்ற வார்த்தை, தேவநாகரியில் மஞ்சள் வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டட்கார்ட் மாநாட்டில் ஏற்றப்பட்ட கொடியில் ""வந்தே மாதரம்'' காவி வண்ணத்தில் எழுப்பட்டிருந்தது. கல்கத்தா கொடியில் கீழ்ப்பகுதியிலுள்ள பச்சை வண்ணத்தில் சூரியனும் சந்திரனும் இடம் பெற்றிருந்தன. அத்துடன் கொடியில் இதே சின்னங்களுடன் நட்சத்திரம் ஒன்றும் நீல நிறப்பின்னணியில் இருந்தது. இந்த அளவிற்கு இரு கொடிகளும் ஒத்த நிலையில் இருந்தமையைத் தற்செயலாக நிகழ்ந்ததாக யாரும் கருதமுடியாது
*1911ஆம் வருடம் ஜூன் 17ல் மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் குடும்பத்தோடு அமர்ந்திருந்த தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் துரையை ரயில் பெட்டியின் ஜன்னல் ஓரமாக வந்து நின்று சுட்டு வீழ்த்தியதோடு, (இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக) தம்மையும் அதே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிர்த் தியாகம் செய்த வாஞ்சிநாதன் எனப்படும் வீரவாஞ்சி பயன்படுத்திய கைத்துப்பாக்கி மேடம் காமாவினால் பாரிஸிலிருந்து அனுப்பப்பட்டதாகும். ""இந்தப் படுகொலையை நிகழ்த்தியன் மூலம், இந்திய உறங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினர்'' என்று பாரிஸிலிருந்து வெளிவந்த வந்தே மாதரம் பத்திரிகையில் மேடம் காமா எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சரி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: விடுதலைப் போரில் ஒரு வீராங்கனை: மேடம் பிகாஜி ருஸ்டம் காமா
இந்தியாவில் கூட முதல் முதலில் மூவண்ணக்கொடியை ஏற்றி வைத்துப் பிரபலப்படுத்தியவர் ஒரு பெண்தான் .......
அருமையான தகவல்..... நன்றி சிவா அண்ணா..............
அருமையான தகவல்..... நன்றி சிவா அண்ணா..............
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|