புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தத்துவ முத்துக்கள்! I_vote_lcapதத்துவ முத்துக்கள்! I_voting_barதத்துவ முத்துக்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவ முத்துக்கள்!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:03 pm

உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.

துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட்.

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன்.

தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்

உங்களிடம் யாரவது உழைப்பை எதிர்பார்த்து ஒரு நிமிஷம் என்றால் என்ன என்பதை அறியாமல் சரி சொல்லாதீர்கள்.-அலெக் மெக்கன்ஸி.

உன் நேரத்தைப் பாதுகாத்து கொள். அவை தீட்டப்படாத வைரங்கள்.-ரால்ஃப் வல்டோ எமர்சன்.

வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் .சமயத்திற்கு ஒருவரும் அகப்படமாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான்.எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக் கொண்டே இருப்பான்.

தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.

.அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அச்சம் என்பது அடைகாக்கப்படும் அழுக்காகும்.

ஆசிரியர் கதவைத் திறக்கிறார், நீ உன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாய்.

நீங்கள் சூரியனின் ஒளியில் பிரவேசிக்கும்போது, அதன் நிழல் உங்களை பிரதிபலிக்கின்றது.

நீங்கள் உண்மையைச் செலுத்தும்போது அதுவே திரும்பக் கிடைக்கிறது.

கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ்பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாழப் பழகவேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி.

நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது

எந்த முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுகிறீர்களோ, ஒரு கட்டத்தில் அதை நீங்கள் அடைகிறீர்கள்.

மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது.

பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன.

மழைத்துளி சொன்னது, முத்துக்கான வித்து எப்பொழுதும் விழலாம். விழித்திரு, மனிதா விழித்திரு.

உண்மை ஒரு நாள் வெண்றே தீரும்.

தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்துவிட்டவன் ஆகிறான்.

உலகின் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும்தான்.

செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனித பண்பு சீரழிகிறது.

அழகே உண்மை, உண்மையே அழகு.

அறிஞர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இசைந்து கொடுப்பதில்லை.



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:06 pm

தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.

நல்ல சிந்தனைத் திறன் மட்டும் இருந்தால் போதாது, அதை எப்போதும் செயல்படுத்திக்கொண்டே கடைசிவரை வாழ்வதில்தான் வெற்றியையும், மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும்.

மயக்கம், தேவை இல்லாத பயம், அளவுக்கு மிஞ்சிய தூக்கம்,ஆத்திரம்,சோம்பல்,எதையும் தாமதமாக செய்தல், இந்த ஆறு குனங்களும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டைகள்.

நான்கு வேண்டும்.
i )ஒழுக்கம் உள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் தேவை.
ii) அறிவு வளர நல்ல விஷயம் அறிந்த ஆசான் வேண்டும்.
iii) சுவையான உணவுக்கு அன்புள்ள தாய் வேண்டும்.
iv) தூய்மையான சிந்தனை ஏற்பட தெய்வபக்தி வேண்டும்.

மகிழ்ச்சியின் சாவி பொறுமை. - துருக்கி

அன்புள்ள மனம் சலனமற்று ஓடும் நதி. - ரிக்டர்

இந்த உலகில் மதம் ஒரு நல்ல கவசம், ஆனால் மோசமான மேலங்கி.- புல்லர்

இதயங்கள் சேர்ந்திருக்கட்டும், ஆனால் கூடாரங்களை தனித்தனியாக அமையுங்கள்.

மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் அடக்கத்தில் வைத்திரு. - கம்பர்.

அடக்கமே உன்னை அமரனாகச் செய்யும். அதுவும் இளமையில் அந்த அடக்கம் வருவது பொன்மலர் நாற்றமுடைத்து போன்ற சிறப்பைத் தரும். - வாரியார்.



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Mar 29, 2011 8:09 pm

நிறைய கற்றுக் கொள்ளலாம் இதன் மூலம்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தத்துவ முத்துக்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:10 pm

நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன.- பிரான்ஸ்


பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாக இருத்தல்.


உலகில் இருவகை குடும்பத்தினரே இருக்கின்றனர். அவர்கள் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள். - போலந்து.


மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே! - கிரீஸ்


நியாயம், நேர்மை உங்கள் செயல்பாடுகளில் வெளிப்பட மரணத்தின் நினைவோடு வாழ்ந்து வாருங்கள். - லத்தீன்


"நீரை சல்லடையில் கூட அள்ளிவிடலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்
- காந்தியடிகள்


அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது - ஓர் அனுபவசாலி


இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்


கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும் - கிளெண்டல்


என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும் - டொரோதி தெலூஸி


நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை - எமர்சன்


மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் - வா¡¢யார் சுவாமிகள்


உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள் - ஜேம்ஸ் ஆலன்.


இறைவனின் தா¢சனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். - சுவாமி ராமதாஸ்.


நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் - ஓர் அறிஞர்


மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்
- மு.வ.


நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
- ஜான்ஸன்


ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்


ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்


நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் - அரவிந்தர்


உலகம் எவ்வளவு பொ¢யதோ, அவ்வளவு பொ¢யதாக உங்கள் இதயத்தை வி¡¢வாக்குங்கள் - சுவாமி விவேகானந்தர்


உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது
- எமர்சன்


கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
- பிளேட்டோ


காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்


நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி


அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான் - யாரோ


வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும் - மா¡¢யோ போஜியோ


துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான் - ஹென்றி லீவ்ஸ்


கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:11 pm

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்-
(லாங்·பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது
(அரிஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே
(அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான்.
(ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை
(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
(டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
(ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு
(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல
(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:13 pm

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது- டக்ளஸ் ஹட்

மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே. - பார்பரா ஷெர்

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது. - எச். ஜி. வெல்ஸ்
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது. - இயன்லா வன்சான்ற்.

வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும் உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும். - அல்பேட் ஐன்ஸ்டீன்.

நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம். - தலாய் லாமா.

மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும். - சாள்ஸ் பேட்

பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.- யாரோ

மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம். - பேர்ள் எஸ். பக்

புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு. - மார்கஸ் அரேலியஸ்

சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள்.- நெப்போலியன் ஹில்

கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.- நெப்போலியன் ஹில்

ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது.- ஸாடி

எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.- எமர்சன்

மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.- அக்னஸ் றெப்லையர்

புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.- பிலிப் குறொஸ்பி

உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.- எலனொர் றூஸ்வெல்ற்

ஒருவன் தவறுகளைச் செய்ததனால் தயங்கித் தயங்கி தாழ்ந்து போகிறான். மற்றவனோ தவறுகளையே படிக்கட்டுகளாக்கி உயர்கிறான்.- கென்றி சி. லிங்க்

எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று: எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது: செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.

என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன? நான் என்ன செய்ய வேண்டும்? இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும். - நதானியல் பிராண்டன்

வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல. - எட்வின் சி. ப்ளிஸ்
சிக்கனத்தைக் கடைப் பிடிக்காத எவருமே செல்வந்தனாக முடியாது. சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் எவரும் ஏழையாகவும் இருக்க முடியாது. -ஜான்சன்

எதிலும் சிக்கனம் பிடிப்பவர் மன்னிக்க முடியாத கருமி. சிக்கனம் செய்யாதவன் பைத்தியக்காரன். - ஜார்ஜ் நேவில்

சில்லறைக் காசை நீ காத்துக் கொள்ள. பெரிய காசு உன்னைத் தானாக காத்துக் கொள்ளும். - பெஞ்சமின்

சிறிய செலவுகள் பற்றிக் கவனமாயிருங்கள். சிறிய ஓட்டை பெரிய கப்பல்களையும் கவிழ்க்கும். - ஜார்ஜ் பெர்னாட்ஷா

சிக்கனம் சிறியதொரு வருமானம். - லிஸ்ரோ



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:17 pm

100 தடவை நீ தோற்றாலும், நீ வெற்றியே பெற்றுருக்கிறாய். 100 தடவைகளிலும் எந்த தவறுகளைச் செய்யக்கூடாது என்பதை கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்திருக்கிறாயே

கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன. -ஜெர்மன் பழமொழி

உனது கண் உனக்கு குற்றமிழைத்தால் அதைப் பிடுங்கி விட்டெறி: இரண்டு கண்களோடு நரகத்தில் வீசி எறியப்படுவதைக் காட்டிலும், ஒற்றைக்கண்ணோடு வாழ்வில் பிரவேசிப்பதே நலம். -சார்வாண்டிஸ்

முட்டாள் நண்பனை விட அறிவாளி எதிரி மேல்... யாரோ

செல்வம் வரும் போது நண்பர்கள் வரலாம், அவர்களை வறுமை வரும் போது தேர்வு செய்யலாம்...யாரோ

முட்டாள் தான் மழைநீரை சேமிப்பான். அறிவாளியோ, மரம் வைத்து மழை நீரை உண்டாக்கிக் கொள்வான்!

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே, உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:19 pm

சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்.

அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!

நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.

கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.

என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.

துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.

ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.

மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் சாதிக்க முடியும்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.

நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.

மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.

இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது.

முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.

நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத்தன்மையும் அதுவேதான்!

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்.!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.

ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.

மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விடயம் உலகில் எதுவும் இல்லை.

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.

நாம் வாழ்வதின் நோக்கம் - மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால்இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.

கூட்டம் கூடுதல் எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவதுதான் கடினம். உழைப்பும் தியாகமும் சேர்ந்தால்தான் இந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.

சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:20 pm

தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.

வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.

பத்திரிகைகளும் புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறியவேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்காது.

கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.

படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!

பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.

காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!

விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.

அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான்.

அளவுக்கு அதிகமானபணிவை ஒருபோதும் நம்பக் கூடாது!

தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!

விதை எப்படியோ, பழமும் அப்படியே!

பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!

பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து மகிழ முடிவதுதான்!

நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான்.

தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்!

மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம்.

உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.

உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து.

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.

இருக்கிற செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தால், நம்முடைய நாட்டின் வறுமை எப்போதும் தீராது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, நியாயப்படியும் தர்மப்படியும் நிறைய செல்வம் சேர்ப்பதுதான்!

தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன!

எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.

இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.

உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:20 pm

நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.

உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.

ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

சிப்பாய் தன் துப்பாக்கியைப் போற்றுவது போலவும் இசைக் கலைஞன் வீணையைப் போற்றுவது போலவும் ஒரு பெண் தன் காதலனைப் போற்றுகிறாள்.

சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்.

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்தவேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நேல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.

திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.

வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும்.

லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம்.

காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.



தத்துவ முத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக