புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_vote_lcapஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_voting_barஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_vote_lcapஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_voting_barஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_vote_lcapஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_voting_barஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 8:51 am

First topic message reminder :

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 Spo03

ஆமதாபாத், மார்ச்.25- உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதியில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை 30-ந்தேதி சந்திக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட்

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. 14 அணிகள் பங்கேற்ற இதில் லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த முதலாவது கால்இறுதியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை நொறுக்கியது.

இந்த நிலையில் 2-வது கால்இறுதியில் இந்தியா-நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணிகள் ஆமதாபாத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. காயத்தில் இருந்து குணமாகி விட்ட இந்திய அதிரடி வீரர் ஷேவாக் அணிக்கு திரும்பினார். இதனால் யூசுப் பதான் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஸ்டீவன் சுமித்துக்கு பதிலாக டேவிட் ஹஸ்ஸி சேர்க்கப்பட்டார்.

சுழல் தாக்குதலுடன்...

உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலை உருவாக்கி இருந்த இந்த மோதலில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிபாண்டிங் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இதை தொடர்ந்து ஷேன் வாட்சனும், பிராட் ஹேடினும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். ஆமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்திய கேப்டன் டோனி முதல் ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை அறிமுகம் செய்தார். வேகம், சுழல் இரண்டையும் மாறிமாறி தாக்குதல் நடத்துவது என்று வியூகம் அமைத்தார்.

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஹேடினும், வாட்சனும் அவசரம் காட்டாமல் நிதானமாகவே ஆடினார்கள். முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஜோடியை அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முட்டிபோட்டு ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்த வாட்சன் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் ரிக்கிபாண்டிங் ஆட வந்தார். அவுட் ஆப் பார்மில் இருந்த பாண்டிங், பழைய நிலைக்கு திரும்பும் முனைப்புடன் தனது இன்னிங்சை தொடங்கினார்.

ஜாகீர்கான் அபாரம்

மறுமுனையில் கொஞ்சம் வேகமாக ஆடிய பிராட் ஹேடின், முனாப் பட்டேலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டியடித்தார். சீரான வேகத்தில் அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 21 ஓவர்களில் ஆஸ்திரேலியா 100 ரன்களை தாண்டியது. இதன் பிறகு தனது அரைசதத்தை கடந்த பிராட் ஹேடின் 53 ரன்களில் (62 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) யுவராஜ்சிங் பந்து வீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை வெகுவாக கட்டுப்படுத்தினார்கள். சுழற்பந்து வீச்சில் ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டார்கள். அதாவது அதிரடியை காட்ட முடியவில்லை. அவ்வப்போது வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானும் சரியான இலக்கில் பந்து வீசி திணறடித்தார். அணியின் ரன் ரேட் 5 ரன்களுக்கு குறைவாகவே சென்று கொண்டிருந்தது.

ஹேடினுக்கு பதிலாக வந்த துணை கேப்டன் மைக்கேல் கிளார்க் (8 ரன், 19 பந்து) தடுமாற்றத்திற்கு இடையே யுவராஜ்சிங் பந்தில் வீழ்ந்தார். முன்னணி வீரர்கள் மைக் ஹஸ்ஸி (3 ரன்), கேமரூன் ஒயிட் (12 ரன், 22 பந்து) இருவரும் ஜாகீர்கானின் வேகத்தில் சரிந்தனர்.

மறுமுனையில் கேப்டனுக்குரிய பொறுப்பை உணர்ந்து ஆடிக் கொண்டிருந்த ரிக்கிபாண்டிங் சதத்தை நோக்கி முன்னேறினார். `44-48' ஓவர்களில் பேட்டிங் `பவர்-பிளே'யை எடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடியது. இந்த பவர்பிளேயில் தான் அந்த அணியின் ஸ்கோரும் கொஞ்சம் உயர்ந்தது.

பாண்டிங் சதம்

டேவிட் ஹஸ்ஸி துணையுடன் ரிக்கிபாண்டிங் ஒரு நாள் போட்டியில் தனது 30-வது சதத்தைம் பூர்த்தி செய்தார். அது மட்டுமின்றி இந்த உலக கோப்பையில் சதம்அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக அவரது 6-வது சதமாகவும் இது பதிவானது.

பவர்பிளேயில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் விளாசியதால் ரன்ரேட்டும் ஒரு வழியாக 5 ரன்களை கடந்தது. அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவிய கேப்டன் ரிக்கிபாண்டிங் 104 ரன்கள் (118 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) குவித்த நிலையில், அஸ்வினின் கடைசி ஓவரில் கேட்ச் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. டேவிட் ஹஸ்ஸி 38 ரன்களுடன் (26 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இந்திய அணியில் நேற்று பீல்டிங் மற்ற நாட்களை விட அபாரமாக இருந்தது. குறிப்பாக சுரேஷ் ரெய்னா பீல்டிங்கில் கலக்கினார். இதே போல் பந்து வீச்சாளர்களில் முனாப்பட்டேல் தவிர மற்ற அனைவரும் தங்கள் பணியை ஓரளவு திருப்திகரமாக செய்தனர். ஜாகீர்கான், அஸ்வின், யுவராஜ்சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

எச்சரிக்கை தொடக்கம்

அடுத்து 261 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தெண்டுல்கரும், ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். பிரெட்லீயும், ஷான் டெய்ட்டும் புயல்வேக தாக்குதலை தொடுத்தனர். ஆனால் இந்திய வீரர்கள் அவசரம் காட்டக்கூடாது, எச்சரிக்கையுடன் ஆட வேண்டும், கூடுமான வரை விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வியூகத்துடன் தங்களது ஆட்ட அணுகுமுறையை கடைபிடித்தனர்.

இதனால் இந்திய வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வழக்கமாக வந்தவுடன் சரவெடியை ஆரம்பிக்கும் ஷேவாக்கும் இதற்கு விதிவிலக்கல்ல. அணியின் ஸ்கோர் 44 ரன்களை எட்டிய போது ஷேவாக் (15 ரன், 22 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

அடுத்து தெண்டுல்கருடன், கவுதம் கம்பீர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேர்த்தியாக ஆடி ஸ்கோரை படிப்படியாக உயர்த்தியது. ஆஸ்திரேலிய பவுலர்கள் பிரெட்லீ, டெய்ட், ஜான்சன், வாட்சன் என்று நால்வர் கூட்டணி சரமாரியாக பந்து வீசி யுத்தம் நடத்தினார்கள். குறிப்பாக ஜான்சன் பவுன்சர்களாக போட்டு இந்திய பேட்ஸ்மேன்களை அதிர வைத்தார். ஆனாலும் இந்திய வீரர்கள் நிதானத்தை இழக்காமல் ஆடினார்கள்.

தெண்டுல்கர் 53 ரன்

அரைசதத்தை கடந்த தெண்டுல்கர் 53 ரன்கள் ( 68 பந்து, 7 பவுண்டரி) எடுத்த நிலையில் டெய்ட் பந்து வீச்சில் ஹேடினிடம் கேட்ச் ஆனார். அடுத்து விராட் கோக்லி வந்தார். களத்தில் ஒரு இறுக்கமான, பதற்றமான சூழலே தென்பட்டது. உலகின் சிறந்த பந்து வீச்சை, ஒரு பதற்றமான சூழலில் இந்திய வீரர்கள் சமாளித்த விதத்தை குழுமியிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இதயத் துடிப்பு எகிற ஆரவாரமின்றி பார்த்துக் கொண்டிருந்தனர். அணியின் ஸ்கோர் 143 ரன்களாக உயர்ந்த போது கோக்லி 24 ரன்களில் வெளியேறினார்.

இதை தொடர்ந்து கம்பீருடன், ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் கூட்டணி போட்டார். அதுவரை சாதுர்யமாக ஆடிய கம்பீர் அதன் பிறகு தேவையில்லாமல் அவசரப்பட்டார். யுவராஜ்சிங் எச்சரித்தும் 2 முறை ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய கம்பீர் (50 ரன், 64 பந்து, 2 பவுண்டரி) கடைசியில் ரன் அவுட்டுக்கே தன்னை பலிகடாக்கினார்.

நல்லவேளையாக அவரது ரன்-அவுட் ஆஸ்திரேலியாவுக்கு திருப்புமுனையாக அமைந்து விடவில்லை. கம்பீருக்கு பிறகு இறங்கிய கேப்டன் டோனி (7 ரன்) ஏமாற்றினாலும், சுரேஷ் ரெய்னா, பரபரப்பை தித்திப்பாக முடித்து வைக்க உதவினார்.

அவரும், யுவராஜ்சிங்கும் ஜோடி சேர்ந்த பிறகு தான் களத்தில் புத்துணர்ச்சியும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும் பிறந்தது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடைசிவரை எள்ளளவும் மனம் தளராமல் போராடினார்கள். என்றாலும் அதற்கு பலன் கிட்டவில்லை. இந்த உலக கோப்பையில் 4-வது அரைசதம் அடித்து அசத்திய யுவராஜ்சிங் பவுண்டரி அடித்து இந்தியாவுக்கு வெற்றிக்கனியை பறித்து தந்தார்.

இந்தியா வெற்றி

இந்திய அணி 47.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. யுவராஜ்சிங் (57 ரன், 65 பந்து, 8 பவுண்டரி), ரெய்னா (34 ரன், 28 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 1987-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த யுவராஜ்சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த உலக கோப்பையில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 4-வது முறையாகும்.

பாகிஸ்தானுடன் மோதல்

இந்தியா வெற்றி பெற்றதும் நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைந்திருக்கிறது. அரைஇறுதியில் இந்திய அணி வருகிற 30-ந்தேதி மொகாலியில் பாகிஸ்தானை சந்திக்கிறது.

ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா

வாட்சன்(பி) அஸ்வின் 25
ஹேடின் (சி) ரெய்னா (பி) யுவராஜ் 53
பாண்டிங் (சி) ஜாகீர்கான் (பி) அஸ்வின் 104
மைக்கேல் கிளார்க் (சி) ஜாகீர் (பி) யுவராஜ் 8
மைக் ஹஸ்ஸி (பி) ஜாகீர் 3
கேமரூன் ஒயிட் (சி) அண்ட் (பி) ஜாகீர்கான் 12
டேவிட் ஹஸ்ஸி (நாட்-அவுட்) 38
ஜான்சன் (நாட்-அவுட்) 6

எக்ஸ்டிரா 11
மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 260
விக்கெட் வீழ்ச்சி: 1-40, 2-110, 3-140, 4-150, 5-190, 6-245

பந்து வீச்சு விவரம்

அஸ்வின் 10-0-52-2
ஜாகீர்கான் 10-0-53-2
ஹர்பஜன்சிங் 10-0-50-0
முனாப்பட்டேல் 7-0-44-0
யுவராஜ்சிங் 10-0-44-2
தெண்டுல்கர் 2-0-9-0
கோக்லி 1-0-6-0

இந்தியா

ஷேவாக் (சி) மைக் ஹஸ்ஸி (பி) வாட்சன் 15
தெண்டுல்கர் (சி) ஹேடின் (பி) டெய்ட் 53
கம்பீர் (ரன்-அவுட்) 50
கோக்லி (சி) கிளார்க் (பி) டேவிட் ஹஸ்ஸி 24
யுவராஜ்சிங் (நாட்-அவுட்) 57
டோனி (சி) கிளார்க் (பி) பிரெட்லீ 7
சுரேஷ் ரெய்னா (நாட்-அவுட்) 34

எக்ஸ்டிரா 21
மொத்தம் (47.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 261
விக்கெட் வீழ்ச்சி: 1-44, 2-94, 3-143, 4-168, 5-187

பந்து வீச்சு விவரம்

பிரெட்லீ 8.4-1-45-1
ஷான் டெய்ட் 7-0-52-1
ஜான்சன் 8-0-41-0
வாட்சன் 7-0-37-1
கிரெஜ்சா 9-0-45-0
கிளார்க் 3-0-19-0
டேவிட் ஹஸ்ஸி 5-0-19-1

தினதந்தி!

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டியது இந்தியா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 25, 2011 8:43 pm

இது என்ன புதுசா கலை ஜோசியர்னு அண்ணா எப்ப இருந்து இந்த தொழில் ஆரம்பிச்சீங்க எனக்கு கூட ஒரு ஜாதகம் பாக்கனும்னா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 10:30 pm

Manik wrote:இது என்ன புதுசா கலை ஜோசியர்னு அண்ணா எப்ப இருந்து இந்த தொழில் ஆரம்பிச்சீங்க எனக்கு கூட ஒரு ஜாதகம் பாக்கனும்னா

பாத்துட்டா போகுது... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக