புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
61 Posts - 74%
heezulia
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
226 Posts - 76%
heezulia
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
8 Posts - 3%
prajai
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
2 Posts - 1%
nahoor
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_m10உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:27 pm

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள் என்று கருதி உங்கள் வீட்டுப் பிள்ளைகளாம் எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள்!

அடுக்கடுக்கான அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தலைவர் கலைஞர் வேண்டுகோள்!


தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும் போது, ‘‘எங்களின் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட வாக்குறுதிகள் என்று யாரும் கருதத் தேவையில்லை’’ என்றும் ‘‘உங்களுக்காக உழைப்பவர்கள், ஊரை வாழ வைப்ப வர்கள், உலகம் போற்றும் உத்தமர்கள் வழி நடப்பவர்கள் என்று கருதி உங்கள் வீட்டுப் பிள்ளைகளாம் எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள்’’ என்று வேண்டு கோள் விடுத்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஆற்றிய உரை வருமாறு:


கழகத்தின் பொதுச் செயலாளர், இனமான பேராசிரியர் அவர்களே, பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் அவர்களே, அன்புக்கும் அளவற்ற மரியாதைக்கும் உரிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே, அனைத்து தோழமைக் கட்சிகளையும் சேர்ந்த முன்னணி யினரே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே, வணக்கம்.

14-வது சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையினை வெளியிடுகின்ற நேரத்தில் முன்கூட்டி சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்.

சொன்னதைச் செய்வோம் -செய்வதைச் சொல்வோம்


வாக்குறுதிகளிலேயே சிறந்த வாக்குறுதி - காப்பாற்ற வேண்டிய வாக்குறுதி - தேர்தல் வாக்குறுதி என்பதை அனைவரும் அறிவீர்கள். அதனால்தான் சில வாக்குறுதிகளை "காற்றிலே பறக்க விடப்பட்ட வாக்குறுதிகள்" என்று கேலி பேசுகிற நிலை இருப் பதையும் நாமனைவரும் நன்கறிவோம். அத்தகைய வாக்குறுதிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் வழங்குகிற வாக்குறுதிகள் ஆகி விடக்கூடாது என் பதற்காகவும் - அத்தகைய வாக்குறுதிகளை வழங்கி, அதை நிறைவேற்ற முடியாமல் ஆகி விடக்கூடாது என்பதற்காகவும் - அவ்வாறு ஆகாது என்பதற்காக வும்தான் - "சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்" என்று திட்டவட்டமாகக் கூறுவதை திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடித்து வருகிற வாக்குறுதியாகக் கொண்டுள்ளது.

கடந்த தேர்தல்களின்போது வெளியிட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்து கூற இயலாதவாறு நிறைவேறாமல் எஞ்சியிருக்கும் வாக்குறுதிகளும் உண்டு. உதாரணமாக காவிரிப் பிரச்சினை - முல்லைப் பெரியாறு - சேது சமுத்திரத் திட்டம் - கச்சத் தீவு மீட்பு போன்ற இவைஅனைத்தும் ஆட்சியாளர் களாகிய எங்களின் தாமதத்தாலோ அல்லது அக்கறையின்மையாலோ இன்னும் நிறை வேறாமல் இருப்பவை அல்ல! இவைகள் மாத்திரமல்லாமல் - தமிழகத்தில் கடந்த தேர்தலில் நாங்கள் வழங்கிய கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் வாக்குறுதி கூட முற்றாக முடிவடையாமல் - முட்டுக்கட்டையாக இருப்பது வழக்குகள் - நீதிமன்றங்களிலே முடிவடை யாமல் இருப்பதுதான் என்பதை வாக்காளப் பெருமக்கள் நன்கறிவார்கள்.

எனவே சொல்வதைச் செய்வோம் என்ற உறுதி மொழி சிலவற்றில் நிறைவேற்றப் படாமல் இருப் பதற்கு இந்த அரசு மீது யாரும் குற்றம் கூறிவிட முடியாது.

முட்டுக்கட்டைகள் போடப்பட்டு ஓடாமல் நிற்கும் தேர் - அந்த முட்டுக்கட்டை அகற்றப் பட்டால் - மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்திற்கிடையே அசைந்தாடி ஊர்ந்து ஓடுவதைக் காண முடிகிறதல்லவா; அது போலத்தான் தவிர்க்க முடியாததும் சட்ட ரீதியாக தேவைப் படுவதுமான நீதிமன்றங்களின் தலையீடுகளால் - காவிரியானாலும் - பெரியாறு அணை ஆனாலும் - சேது சமுத்திரத் திட்டமானாலும் - இவற்றையெல்லாம் விரைந்து நிறைவேற்ற முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை அறிவுத் தெளிவுடை யோர் எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

எனவே இவ்வாறு தவிர்க்க முடியாத தாமதத்தால் தயங்கி நிற்கும் திட்டங்களையெல்லாம் இந்த அரசு தட்டிக் கழித்து விட்ட திட்டங்கள் என்று கருதி - நாங்கள் தேர்தல் அறிக்கையிலே கொடுத்த வாக்குறுதி களை "காற்றிலே பறக்க விட்ட வாக்குறுதிகள்" என்று யாரும் கருதத் தேவையில்லை.

உங்களுக்காகப் பணியாற்ற எங்களுக்கு உத்தரவிடுங்கள்

இன்றில்லாவிட்டால் நாளை - நாளை தவறினால் நாளை மறுநாள் - என்றோ ஒரு நாள் எப்படியும் நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகளைத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணியிலே உள்ள கட்சிகளும் வழங்குகின்றன என்ற நம்பிக்கை யோடு இந்த அறிக்கையிலே காணும் திட்டங்களுக்கும் அறிவிப்புகளுக்கும் உங்கள் மனமார்ந்த வரவேற்பையும் - வாழ்த்துக்களையும் வழங்குவீர்கள் என்று எதிர்பார்த்து - ஏழையெளியோர் - சாதாரண, சாமான்ய மக்கள் - பட்டினங்களிலே வாழ்வோர் முதல் பட்டிக்காட்டிலே இருப்போர்வரை அனைவரும் எங்களை உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள் - உலகம் போற்றும் உத்தமர்கள் வழி நடப்பவர்கள் என்று கருதி - உங்கள் வீட்டுப் பிள்ளைகளாம் எங்களை - உங்களுக்காகப் பணியாற்ற உத்தர விடுங்கள் என்று இந்தத் தேர்தல் அறிக்கையை வழங்குகின்ற நேரத்தில் - வணங்கி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

என் உயிரினும் மேலான தமிழ்ப் பெருமக்களே! நமது திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த தேர்தல்களின் போது உங்கள் கட்டளையையேற்று களம் புகுந்த நேரத்தில் எல்லாம் - உங்கள் கால் மலர் களில் வைத்த தேர்தல் அறிக்கைகளில் "சொன்ன தைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்" என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த வாசகத்தையொட்டி இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் பிறிதொரு வாய்மை நிறை வாசகமாக இதோ "செய்ததைச் சொல்லி - அவற்றைத் தொடர்ந்து இனி செய்யப் போவதையும் விளக்குகிற அறிக்கை"யாக இந்த உறுதிமொழி அறிக்கையை உங்கள் பாதார விந்தங்களில் வைத்து வணங்குகிறேன்.

அறிவின் களஞ்சியம் அண்ணாவை வணங்கி தி.மு.க. தேர்தல் அறிக்கையை முன் வைக்கிறது!


இளங்குருத்துப் பருவத்தில் பொது வாழ்வைத் தொடங்கி சமூகம் - பொருளாதாரம் - அரசியல் மற்றும் கலை இலக்கியம் என பல துறைகளிலும் பணியாற்றிப் பாடுபட்டு என் வாழ்வின் ஒவ்வொரு துளியும் என் உயிரினும் மேலான தமிழ் மக்களாம் உங்களுக் காகவே எஞ்சிய நாட்களையும் செலவிடத் தயாராக இருக்கிற நான் கடந்த தேர்தல்கள் பலவற்றில் "சொல்வதைச் செய்வோம்" என்று உறுதிமொழி அளித்து அந்த உறுதிமொழி களை இயன்ற வரையில் நிறைவேற்றி வந்திருக்கிறேன். அதனால் இதுவரையில் சொன்னதைச் செய்தோம் - என்பவைகளைப் பட்டியலிட்டு - இனியும் செய்வதற்கான உறுதிமொழிகளை இணைத்து - இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றேன்.

தமிழர்களின் நெஞ்சத்தில் என்றும் நீங்கா இடம் பெற்று இன உணர்வின் ஏந்தலாக, திராவிட இயக்கத்தின் ஒப்பற்றத் தலைவராக, கொள்கைக் குன்றமாக, அறிவின் களஞ்சி யமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்தும் ஆற்றலின் பேருருவாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் நோக்கி, நன்றியைக் குவித்து, வீரவணக் கத்தைச் செலுத்தி, தி.மு.க. இத்தேர்தல் அறிக்கையை மக்கள் முன் வைக்கிறது.



உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:29 pm


திராவிட இயக்க மேதை முரசொலி மாறனை நினைவுகூர்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை!


திராவிட இயக்கத்தின் மேதை நம் நினைவில் வாழும் சிந்தனையாளர் தம்பி முரசொலி மாறன் தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பாங்கினைப் பசுமையாக நினைவுகூர்ந்து, அவர் நெறி நின்று, சமூக நீதியோடு கூடிய, வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கான உயர் நோக்கம் கொண்ட செயல்திட்டங்களை இணைத்து மக்களின் ஆதர வினை நாடி இத்தேர்தல் அறிக்கை உருவாக்கப் பட்டுள்ளது.

இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் எடுத்துக்காட்டான முறையில் சமூக நீதிக் கொள்கை நீடித்த வெற்றி பெறுவதற்கும், சமூக சீர்திருத்தக் கொள்கைகளும், சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு, எளிய மக்கள் ஏற்றம் பெறுவதற்கும் அடித்தளம் அமைத்தது 1916இல் உருவான தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியாகும். அதன் ஒப்பற்றத் தலைவர்களான டாக்டர் நடேசனார், சர்.பி.டி.தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோரின் அளப்பரியப் பணிகளை இத்தருணத்தில் தி.மு.கழகம் நினைவு கூர்கிறது.

தந்தை பெரியார், காங்கிரசுப் பேரியக்கத்தில் எண்ணற்ற தியாகங்களைப் புரிந்து, சாதி ஆதிக்கத்தை எதிர்த்து 1925இல் சுயமரியாதை இயக்கத்தையும், பகுத்தறிவு இயக்கத்தை யும் தொடங்கி தமிழர்கள் விழிப்புறவும் தன்மானம் பெற்றிடவும் வழிவகுத்தார். 1938இல் கட்டாய இந்திக்குக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து களம் கண்டு வெற்றி பெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் தமிழ் மக்களின் மீது திணிக்கப்பட்ட சமூக இழிவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு 1944இல் நீதிக்கட்சியைச் சாமான்யர்களின் இயக்கமாக மாற்றி ‘திராவிடர் கழகம்’ எனும் பெயரிட்டு மாபெரும் சமூகப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தனர்.

75 ஆண்டுகளாக அளப்பரிய அரசியல் பணிகளை ஓய்வின்றி ஆற்றி வருகிறேன்


பகுத்தறிவு நெறிகளையும், தமிழர் உரிமைகளையும் போற்றி, மக்களாட்சி நெறிமுறை களுக்கு இலக்கணமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை 1949இல் பேரறிஞர் அண்ணா உருவாக்கினார்.

தொன்மைமிக்க தமிழ் மரபினையும், தமிழ்நாட்டு உரிமைகளையும் நிலைநாட்டிய, அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாகப் பாதுகாத்து, சமத்துவ, சமதர்ம, சமூக நீதிக் கொள்கைகளைக் கடைபிடித்து 75 ஆண்டுகளாக எனது அளப்பரிய அரசியல் பணி களை பேராசிரியப் பெருந்தகை போன்றோரின் ஒத்துழைப்போடு ஓய்வின்றி ஆற்றி வருகிறேன். கழக ஆட்சி அமைந்த காலங்களி லெல்லாம் மக்கள் நலனைப் போற்றும் பல முன்னோடியான சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, சமுதாயச் சீர் திருத்தத்திற்கான முற்போக்குச் சட்டங்கள் இயற்றப்பட்டு, தமிழ்நாடு, இந்திய மாநிலங் களிலேயே எடுத்துக்காட்டான ஒரு சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகப் பொறுப் பேற்று, பொருளாதாரக் கூறுகளைச் செம்மைப்படுத்தி, வளமிக்கத் தமிழகத்தை உருவாக்குவதில் தி.மு.க. ஆற்றி வருகின்ற பணிகள் எண்ணிலடங்கா. இந்தியாவில் "அரசியல் நிலைத்தத் தன்மை" (ஞடிடவைiஉயட ளுவயbடைவைல) பாதிப்புக்குள்ளாகிய காலங்களில் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவினை அளித்து மத்தியில் ஒரு நிலையான ஆட்சியை உருவாக்குவதற்குத் தொடர்ந்து தனது மாபெரும் பங்களிப்பை அளித்து வருகிறது.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ருஞஹ) உருவாவதற்கு தி.மு. கழகம்தான் முதலில் முன்வந்தது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தமிழகத்திலும், புதுவையிலும் 40 இடங்களை வென்று ஆக்கப்பூர்வமான அரசியல் சாதனையைப் படைத்தது. நமது தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியை மத்திய அரசு முதன்முதலில் நமது வலியுறுத்தலின் காரணமாக வழங்கியது. இதற்கு திருமதி சோனியா காந்தி அவர்கள் அளித்த ஒத்துழைப்பை மறக்க இயலாது. சென்னையில் செம்மொழி ஆய்வு மையம் அமைக்கப் பட்டு தமிழ் வளர்ச்சிப் பணிகள் தொடர்கின்றன. இவ்வாறாக, தமிழ்நாடு விரைந்த பொருளாதார வளர்ச்சியை எட்டவும், தமிழக மக்கள் பயன்பெறவும் 2004ஆம் ஆண்டி லிருந்து மத்திய அரசில் தி.மு.க. இடம்பெற்று நிறைவேற்றிய முத்திரை பதித்த திட்டங் களும்; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த காலங்களில் தமிழகப் பொருளா தாரம் சீரான முறையில் வளர்வதற்கும், தமிழக மக்களின் வாழ்நிலை உயர்வதற்கும் அளித்த திட்டங்களும்; இந்த அறிக்கையின் பிற்பகுதி இணைப்பில் விரிவாகப் பட்டிய லிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு உயர் வளர்ச்சியை அடைவதற்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. "தேர்தல் காலத்தில் இத்திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்புகள்தான், நிறைவேற்ற முடியாது" என்ற பொய் பரப்புரை முறியடிக்கப்பட்டு, சமூகப் பொருளாதாரத் திட்டங்களையும், மக்கள் நலன் பேணும் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனைகளை தி.மு.கழக அரசு படைத்துள்ளது.

மாநில சுயாட்சி

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்த போது மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெறுவதற்குரிய நடவடிக் கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியதன் காரணமாக 2007இல் மத்திய-மாநில அரசுகளின் உறவுகளைச் சீரமைப்பதற்காக நீதிபதி பூஞ்சி தலைமையில் மத்திய அரசு ஒரு ஆணையத்தை நியமித்தபோது, திராவிட முன்னேற்றக் கழக அரசு அவ்வாணையத்திற்கு உரிய பதில்களையும் பரிந்துரைகளையும், வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசின் சார்பில் அனுப்பியுள்ளது. பேரறிஞர் அண்ணா அவர் களின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 1969இல் நீதிபதி இராச மன்னார் தலைமையில் மத்திய-மாநில உறவுகளை ஆய்வதற்கு ஒரு வல்லுநர் குழுவை அமைத் தோம். அவ்வல்லுநர் குழுவின் பரிந்துரைகளையும், மத்திய அரசால் 1983ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழுவின் பரிந்துரைகளையும், 2000ஆம் ஆண்டில் நீதிபதி வெங்கடாசலய்யா குழு அளித்த பரிந்துரைகளையும் முழுமையான விவாதத்திற்கு உட்படுத்தி மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து வதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு. கழகம் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைப் பரவலாக்கல்

இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைப் பரவலாக்கிடும் நோக்கத்துடன் புது தில்லி யில் ஒரு உச்சநீதிமன்றம், மண்டல அளவிலான மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் (குடிரச சுநபiடியேட ஊடிரசவள டிக ஹயீயீநயட) நாட்டின் நான்கு பகுதிகளிலும் உருவாக்கப் பட வேண்டும் என்று பல சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே, மத்திய அரசு உடனடி யாக இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டில் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்றினை அமைத்திட வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.



உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 12:29 pm

பைத்தியம் என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:31 pm

நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாதென மத்திய அரசை வலியுறுத்துவோம்

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரிக் குழுவும், பல கல்வி வல்லுநர்களும் வலியுறுத்துகிற படி கல்வியை மாநில அரசின் பட்டியலிலேயே மீண்டும் சேர்ப்பதற்கு உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவேண்டுமென வலி யுறுத்துவோம். கிராமப்புற ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் பயனை முழுமையாகப் பெற்று உயர்வதற்கு ஏதுவாக, நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடை முறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

நதிகள் தேசியமயம்

மாநிலங்களுக்கிடையிலான நதிகளை தேசிய மயமாக்குவது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் இருப்பதாக அரசமைப்புச் சட்டம், மத்தியப் பட்டியலில் 56ஆவது பதிவில் காணப்படுகிறது. மாநிலங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் நதிநீர்ச் சிக்கல் களைத் தீர்ப்பதற்கு, நதிகளை தேசியமயமாக்குவது மட்டுமே நீண்டகாலத் தீர்வாக அமையும் என்பதால், அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டு மென்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

முதற்கட்டமாக, வருகின்ற 12ஆம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் தென்னக நதிகளை இணைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவோம். இவ்வகையான பாசனத் திட்டங்களை மத்திய அரசின் திட்டங்களாக ஏற்று முழு நிதியுதவிகளை மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டுமெனக் கோருவோம்.

மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு

நிதிக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குக் கிடைத்து வருகிற வரிவருவாய் மற்றும் மானியத்தொகையின் பங்கு, 7ஆவது நிதிக்குழுக்காலத் தில் 8 விழுக்காட்டிற்கு மேல் இருந்து; படிப்படியாகக் குறைந்து, இன்று 12ஆம் நிதிக்குழுக் காலத்தில் 5.3 விழுக்காடாக ஆகியுள்ளது. இது 13ஆம் நிதிக்குழுக் காலத்தில் மேலும் குறைந்து 4.9 விழுக்காடாக உள்ளது. வேகமாக பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வரும் தமிழ் நாட்டிற்கு மத்திய அரசு நிதித் தொகுப்பிலிருந்து அதன் பங்கு குறைந்து வருவதால் மாநிலத்தின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கிறது. எனவே, வருகின்ற ஆண்டு களில் இம்முறையை மாற்றி, சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான முறையில் உரிய நிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

மொழிக் கொள்கை

தி.மு.கழகத்தின் விடாமுயற்சியின் காரணமாக தமிழ் மொழி மத்திய அரசால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செம்மொழியான தமிழ், மத்திய ஆட்சி மொழியாக இன்றளவும் இடம் பெறவில்லை. அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து அனைத்து தேசிய மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்றும், அவ்வகை அணுகுமுறைதான் மொழிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, செம்மொழியாம் தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக அறிவிப்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கப் பாடுபடுவோம்.


மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துப் பணிகளுக்கான தேர்வுகளையும் தமிழ்மொழியிலும் எழுதுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்.

ஈழத்தமிழர் பிரச்சினை

ஈழத்தமிழர்களுக்கு; சிங்களவர்களுக்குச் சமமான உரிமையையும், ஆட்சியியலில் சமபங்கினையும் அளித்து ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் ஈழத்தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ்வதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்வதற்கு தீவிரமான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.

வேளாண் உற்பத்தி

தமிழ் மாநிலத்தைப் பொறுத்த வரையில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கிட தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் அமைப்புகளுக்குச் சிறப்பு நிதியுதவி அளித்து பொருள் ஈட்டுக் கடன் உதவியுடன் வேளாண் பொருள்கள் சேமிப்பதற்காக தனியே கிடங்குகள் அமைத்திடுவோம்.

விவசாயிகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக நெல் பயறு வகைகள் போன்ற உணவுப் பொருள்கள் - கரும்பு, பருத்தி போன்ற பணப் பயிர்கள் - காய்கறிகள் - பழங் கள் - மலர்கள் போன்றவற்றின் உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து சிறப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்துவோம்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங் களை மையமாகக் கொண்டு விவசாய விரிவாக்க அமைப்புகளை ஏற்படுத்துவோம்.

தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்கள்தோறும் விவசாய சேவை மையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தி இயந்திரங்கள் நியாயமான வாடகைக்குக் கிடைக்க வழி வகை செய்வோம்.

விவசாய உற்பத்திக் கருவிகளை உருவாக்கிட தனி தொழிற்பேட்டை அமைத்திடுவோம்.

வேளாண்மை மாநில அரசின் கொள்கைப் பட்டியலில் வருகிறது. மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை இந்தியாவில் புகுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளை அனுமதிக்க இயலாது என கர்நாடகா, கேரளா, உத்தராஞ் சல் மாநில அரசுகள் அறிவித்துள்ளதைப் போல தமிழகத்திலும் அறிவிப்போம்.

இயற்கை வேளாண்மைக்கு வேளாண் துறையில் தனியாக ஒரு பிரிவை உருவாக்கி அந்த இயற்கை விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்குவோம்.

விவசாய சுயஉதவிக் குழுக்கள் மூலம் சிறு, குறு விவசாயிகள் உயர் தொழில் நுட்பத்தைப் பின்பற்ற ரூபாய் பத்தாயிரம் சுழல் நிதி; மானியமாகவும், மேலும் கடன் உதவியும் வழங்குவோம்.

வட்டியில்லாப் பயிர்க் கடன் வழங்குவது போல், சொட்டுநீர்ப் பாசனம், போன்ற விவசாய மூலதனப் பணிகளுக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கு வோம்.

கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் சந்தை வசதிகள் நவீனமயமாக்கப்பட்டு சேமிப்புக் கிட்டங்கிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகளை ஏற்படுத்துவோம்.

உழவர் சந்தைகளை ஏற்படுத்தியது போல நகர்ப் புறங்களில் நுகர்வோர் சந்தைகள் அமைக்கப்பட்டு உற்பத்தி மையங்களிலிருந்து நேரடியாக காய்கறி போன்ற வேளாண் பொருள்கள் நகர்ப்புற மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுப்போம். நகர்ப்புற நுகர் வோர் நியாயமான விலையில் பொருள்களைப் பெறவும், விவசாயிகள் போதுமான இலாபத்தை ஈட்டவும் "பச்சை நிற ஊர்திகள்" மூலம் நடமாடும் விற்பனை மையங்களைச் செயற்படுத்து வோம்.

ஒப்பந்தப் பண்ணை முறை மூலம் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளை கிராமப் புறங்களில் அமைக்க ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவோம். இத்தகைய தொழில் மையங்களுக்கு ஐந்தாண்டுகள் வரை முழு விற்பனை வரி மான்யம் வழங்குவோம்.

நெல், கரும்பு, பருப்பு வகைகள் போன்றவற்றுக்கும் தானிய வகைகளுக்கும் நியாயமான உற்பத்திச் செலவின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்போம்.



உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:32 pm

விளை நிலங்கள் பாதுகாப்பு

விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், உரிய அனுமதி பெறாமல் விளை நிலங் களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொண்டு, விளை நிலங்களைப் பாதுகாப்போம்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கும் வைக்கோலைப் பயன்படுத்தி, குறைந்த முதலீட்டில் எளிமையான தொழில் நுட்பத்தைக் கொண்டு உயர்ரக புரதச்சத்தினை அளிக்கும் காளான்களை உற்பத்தி செய்ய ஒரு செயல்திட்டத்தை நடை முறைப்படுத்துவோம்.

சொட்டு நீர்ப்பாசன முறையை ஊக்குவிப்பதற் காகத் தற்போது அளித்து வரும் 65 விழுக்காட்டு மானியம் சிறு குறு விவசாயிகளுக்கு 90 விழுக் காடாக உயர்த்தப்பட்டு, மானியத் தொகையை விவசாயிகளிடம் நேரடியாக அளிப்போம்.

விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக கடனாகப் பெற்று; வசூலிக்க இயலாத பண்ணை சாராத கடன், கடனுக்கான வட்டி, ஆகியவற்றை படிப்படியாகத் தள்ளுபடி செய்வோம்.

இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, தோட்டக்கலைப் பயிர்களுக்கும், மரவகைப் பயிர்களுக்கும் விரிவுபடுத்துவோம்.

வனவிலங்குகளினால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படும் இழப் பீட்டுத் தொகை ஒன்றரை இலட்சம் ரூபாயை இரண்டு இலட்சமாக உயர்த்துவோம்.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தில் தமிழ்நாட்டு தென்னை விவசாயிகள் வாரியத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் பருவ காலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்குத் தேவையான இடுபொருட்கள் அனைத்தும், அந்தந்த கிராமங் களுக்கு நடமாடும் "உழவர் நண்பன் ஊர்திகளில்" எடுத்துச் சென்று இடுபொருட்களை அரசு மான்ய விலையில், உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கி, விவசாயிகளின் தோழனாகச் செயல்படு வோம்.

வேலைவாய்ப்பு

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்குத் தேவையான தகுதியை உருவாக்க மாவட்டம்தோறும் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் அமைக்கப் படும். வேலை வாய்ப்புகள் உள்ள தொழில்களுக்கு உரிய பயிற்சிகளை தொழில் நிறுவனங்களோடு இணைந்து இந்த மையங்களின் வாயிலாக வழங்குவோம்.

மக்களுக்கு நெருக்கமான நிர்வாகம்

அரசின் பல்வேறு துறைகள் வழங்கும் சேவைகளை ஒருமுகப்படுத்தி அவற்றை பொது மக்கள் எளிதாகப் பெறத்தக்க வகையில் கிராமப்புறங்களில் வட்ட அளவிலும், நகர்ப் புறங்களில் கோட்ட அளவிலும் பொதுமக்கள் சேவை மையங்களை அமைப்போம். இந்த மையங்களில் அரசிடமிருந்து பெறும் பிறப்பு-இறப்புச் சான்றிதழ் போன்ற பல்வேறு சேவை களைப் பெறுவதற்கும், அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்குச் செலுத்தக்கூடிய கட்டணங்கள் போன்றவற்றைச் செலுத்தும் சேவை களை ஒருங்கிணைத்தும், குறைகள் மற்றும் புகார் களைத் தீர்க்கக் கூடிய பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தும் இந்த மையங்களின் வழியாகச் செயல்படுத்துவோம். இதனால் அரசு நிருவாகம் சீரமைக்கப் பட்டு மக்களுக்கான சேவையைச் சிறப்பாகச் செய்வதுடன், பொதுமக்களும் அதிக சிரமம் இன்றி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை ஏற்படும்.

வறுமை ஒழிப்பு

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களின் புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டு அக்குடும்பங்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள், சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்வதுடன், வருமானத்திற்கு வழி வகுக்கக்கூடிய பொருளா தாரத் திட்டங்கள், குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைத்துச் சேவை களையும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு குறிப் பிட்ட காலக்கெடுவிற்குள் அத்தகைய குடும்பங்களை வறுமைக் கோட்டிற்குக் கீழிருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு தற்போது வழங்கப்படும் ரூபாய் இரண்டரை இலட்சம் கடனுதவி; ரூபாய் நான்கு இலட்சமாக உயர்த்தப்பட்டு அவற்றில் ரூபாய் இரண்டு இலட்சத்தை மானியமாக வழங்குவோம்.

வட்டாரம்தோறும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழிற் பயிற்சி மையங்களும், பொருளாதார மேம்பாட்டிற்கு மூலப்பொருள்களைத் திரட்டி வழங்கவும், அவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை உரியவாறு விற்பனை செய்ய ஒருங்கிணைந்த வட்டார வள ஆதார மையங்களை அமைப்போம்.

தடையில்லா மின்சாரம்

2006 முதல் 2011 வரை தொடங்கப்பட்ட பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்கள் 2012க்குப் பிறகு செயல்பாட்டிற்கு வரும்போது தமிழ்நாடு மின் உற்பத்தியில் உபரி மாநிலமாகத் திகழும். எதிர்காலத் தேவைக்கேற்ப புதிய மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கி, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கும் பிற தேவைகளுக்கும் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்வோம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக்கூடிய சூரிய ஒளி மின் திட்டத்தை நடை முறைப் படுத்தி, மின் உற்பத்தியைப் பெருக்குவோம்.

தற்போது விவசாயிகள், நெசவாளர்கள், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள குடும்பங்களு க்கு வழங்கும் இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவோம்.

மத்திய அரசின் - மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தி, வேளாண் உற்பத்திப் பணிகளுக்கும் விரிவுபடுத்துவோம்.



உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:34 pm

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

பவானி ஆற்றில் உள்ள உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காகவும், விவசாயப் பணிகளுக்குப் பயனுறும் வகையிலும் அத்திக்கடவு-அவினாசி வெள்ளக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம்.

நீர்வள மேம்பாட்டுத் திட்டம்

வெள்ள நீரை வறட்சிப் பகுதிகள் பயன்பெறும் வகையில் திருப்பி விடுதல், வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை வறட்சியான பகுதிகளுக்கு எடுத்துச் செல்லுதல், கால்வாய்கள் வழியாக உபரிநீரை எடுத்துச் சென்று சிறிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல், செயற்கை நிலத்தடி நீரை செறிவூட்டல், தடுப்பணை அமைத்தல், நீர் உயர்நிலை மேம்பாலம் அமைத்தல் போன்ற அனைத்து மாவட்டங்களின் பாசனத் திட்டங்களையும், குடிநீர்த் திட்டங்களையும் கருத்தில் கொண்டு மாநிலம் தழுவிய நீர் மேலாண்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

மீனவர் நலன்

தற்போது இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உற்பத்தி இழப்பினை ஈடு செய்யும் வகையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக விவசாயி களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது போல, இயற்கைச் சீற்றங்களால் மீன்பிடித் தொழில் பாதிப்புக்கு உள்ளாகும்போது, ஏற்படும் வருமான இழப்பையும் கணக்கிட்டு ஏழை மீனவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கும் புதிய காப்பீட்டுத் திட்டத்தினைச் செயல்படுத்தி, மீனவர் நலனைப் பாதுகாப்போம்.

தமிழகத்தில் மீன்பிடித் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மீன்பிடித் துறைமுகங் களையும், குளிர் பதனிடும் மையங்களையும் தேவையான பகுதிகளில் உருவாக்குவோம்.

மீன்பிடித் தொழிலுக்கு உதவும் வகையில் பிறகிழக்காசிய நாடுகளில் உள்ளதைப் போல கடல் வாழ் உயிரின வளர்ப்பில் உரிய உதவிகள் செய்வோம்.

தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் குறித்து தி.மு.கழகம் கடுமையான முறையில் தனது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு இலங்கை அரசு இதுவரை உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றினைக் காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.

விசைப்படகு ஒன்றுக்கு மாதந்தோறும் 1500 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப் படுகிறது. நாட்டுப் படகு மீனவர்களுக்கு 300 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படு கிறது. இந்த அளவினை விசைப்படகு ஒன்றுக்கு 2000 லிட்டர் டீசல் அளவிற்கும், நாட்டுப் படகுக்கு 500 லிட்டர் மண்ணெண்ணெய் என்ற அளவிற்கும் உயர்த்தி மானிய விலையில் வழங்க வகை செய்வோம்.

கச்சத் தீவு


இந்தியா இலங்கையுடன் 1974ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், மீன் வலைகளை உலர்த்துவதற்கும், தேவாலயங்களில் வழிபடுவதற் கும் இருந்த உரிமைகள் 1976ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டன. இதன் காரணமாக, அடிக்கடி கச்சத் தீவு அருகே மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படு வதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால், கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள் வோம்.

கால்நடை வளம்

பால், முட்டை, இறைச்சி உற்பத்தியைப் பெருக்கு வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கால்நடை வளத்தைப் பெருக்கும் ஒரு சிறப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்துவோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் இத்திட்டத்தில் பெரும் பங்கு வகிக்கக் கூடிய வகையில் கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்ப்பு ஆகிய வற்றைச் செய்திட மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்குவோம்.

மரபு சாரா எரிவாயு உற்பத்தியை ஊக்குவிக்க கால்நடை சாணத்தைப் பயன்படுத்தி, கிராமப்புற மக்களின் தேவைக்காக சாண எரிவாயு உற்பத்தி சாதனங்களுக்கான மானியம், உதவித் தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்குத் தேவை யான நிதி, தொழில்நுட்ப உதவியை அளித்து கால்நடைத் துறை வழியாக மலைக் கிலுவைகள் போன்ற தீவன பயிர்கள் உற்பத்திப் பெருக்கத் திட்டத்தை நடை முறைப் படுத்துவோம்.

மக்கள் நல்வாழ்வு

சென்னையில் இயங்கும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை போன்று தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியிலும், மதுரையிலும் மன நல மருத்துவமனைகளை தொடங்குவோம்.

சென்னை தாம்பரத்தில் இருப்பது போன்று மதுரையில் காசநோய்க்கான சிறப்பு சிகிச்சை மருத்துவமனை ஒன்றை உருவாக்குவோம்.

சிறுநீரகம் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இலவச இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை முறையை அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்ற வருமானப் பிரிவினருக்கு குறைந்த செலவிலும் இந்தச் சிகிச்சை அளிக்க வசதிகளைச் செய்வோம்.

தனியார் மருத்துவமனைகள் மருத்துவச் சிகிச்சைக்காக நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கு மருத்துவக் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றினை அரசின் சார்பில் அமைப் போம்.

பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் கடுமையான நோய்களான மூளைக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்றவற்றைத் தடுக்கத் தடுப்பூசிகளை மாநில அரசின் சார்பில் இலவசமாக வழங்குவோம்.

மாவட்ட மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மையங்களை அமைத்திடுவோம்.

மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி என்ற இந்த அரசின் இலட்சியத்தை நிறை வேற்றும் வகையில் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் விடுபட்டுப் போன மாவட்டத் தலைநகரங்களில் மருத்துவக் கல்லூரிகளை அரசு சார்பாக ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், அரசு மருத்துவமனைகள் 500 படுக்கைகள் கொண்ட - அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவ மனைகளாக தரம் உயர்த்துவோம்.

அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் "எய்ட்ஸ்" பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற் கொள்வோம். மேலும் "எய்ட்ஸ்" நோயால் பாதிக்கப் பட்ட அனைத்துக் குழந்தை களுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, உடை கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

வருமுன் காப்போம் திட்டத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரிவுபடுத்தி, தடுப்பு மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தருவோம்.

சாலை விபத்துக்களுக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை


உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் சிறப்பாக தொடர்ந்து செயற்படுத்துவதோடு, சாலை விபத்துகளுக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உடனடி மருத்துவ வசதி கிடைத்திட ஏற்பாடுகளைச் செய்வோம்.

எழுந்து நடமாட முடியாமல் அவதியுறும் மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒரு முறை மருத்துவர் வீட்டிற்கே சென்று மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை அளிக்கும் முறை மக்கள் நல்வாழ்வுத் துறையின் வழியாகச் சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.



உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:35 pm

பள்ளிக்கல்வி

பள்ளிக் கல்விக் குறியீடுகளில் பின் தங்கியிருக்கும் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் உட்பட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி கற்றல் திறனை மேம்படுத்துவோம்.

சமச்சீர் கல்வி முறை கழக ஆட்சியில் சிறந்த முறையில் 2010ஆம் ஆண்டு முதல் நடை முறைப் படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் அறிவியல், வாழ்வியல், தொழில்நுட்பப் பாடங்களையும், நுட்பங் களையும் அவ்வப்போது மேம்படுத்துவதற்கும், தொடர்ந்து கற்றல், கற்பித்தல் ஆகிய முறைகளைக் கண்காணித்து மேம்படுத்துவதற்காகவும் பல் கலைக் கழக, கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், அறிஞர்கள் கொண்ட ஒரு கல்விக் குழு வினை அரசின் சார்பில் அமைத்திடுவோம்.

தரமான இலவசக் கல்வியினை அனைவருக்கும் வழங்கும் வகையில் வரும் ஐந்தாண்டு களில் தேவைக்கேற்ப தமிழகத்திலுள்ள அரசு உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளி களாகவும் - நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும் மற்றும் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிக ளாகவும் தகுதி உயர்த்துவோம்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் இரண்டு சீருடைகள் என்பதற்குப் பதிலாக, மூன்று சீருடைகள் இலவசமாக வழங்கு வோம்.

பள்ளிக் கல்வி பயிற்றுவிக்கும் முறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதால் கல்வி கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவோம்.

உயர்கல்வி

அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் வகையில் பாடத்திட்டங்களைத் திருத்தி அமைத்து, ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து நூலக, ஆய்வக வசதிகளை மேம்படுத்தி கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவோம்.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறன்களை வளர்ப்பதற்காகத் தொழில் அமைப்புகளுடன் ஒப்பந்த அடிப்படையில் பணிப் பயிற்சியை அளிப்பதற் கான செயல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்கள் இல்லாத மாவட்டங்களே இருத்தல் ஆகாது என்ற உயர் நோக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும் புதிய பல்கலைக் கழகங்களை அமைப் போம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் - வெளி நாட்டிற்குச் சென்று வேலை வாய்ப்புத் தேடுவதற்கு வசதியாக - ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், அரபிக், மென்டரின் போன்ற மொழிகளைக் கற்றுத் தர ஏற்பாடுகளைச் செய்வோம்.

வெளிநாட்டில் உள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்குவோம்.

அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும்; பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக "மடிக்கணினி’’ வழங்குவோம்.

அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்ற நிலையினை உருவாக்கவும், தொழில் நுட்பக் கல்வி வசதிகளை மேலும் அதிகப் படுத்தும் வகையிலும் தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத அனைத்து மாவட்டங் களிலும் புதிய அரசு பொறியியல் கல்லூரிகளை வரும் ஐந்தாண்டுகளில் உருவாக்குவோம்.

2004 முதல் 2009 வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்களுக்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வோம்.

மருத்துவக் கல்வி


அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவிடுவோம்.

மாவட்டந்தோறும் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இத்தகைய கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்குவோம்.



உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 12:37 pm

தொழில்கள்

அந்நிய நேரடி முதலீடுகளை மேலும் ஈர்த்து தொழில் வளர்ச்சியடையாத மாவட்டங்கள் குறிப்பாக தென்மாவட்டங்கள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள் வோம்.

தொழில் துறை, பணித்துறைகளில் பின்தங்கி யுள்ள மாவட்டங்களில் சிறு, குறு தொழில் மற்றும் பணி நிறுவனங்கள் தொடங்குவதற்கான புதிய ஊக்கத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவோம்.

பெரும் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றி அனைத்து அனுமதிகளையும் எளிதில் வழங்குவோம்.

சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்காக திருச்சியில் பொறியியல் இயந்திரத் தொழில்களுக்கும் - கடலூரில் துணி, இரசாயனத்திற்கும் - கோவையில் வார்ப்படத் தொழில்கள் மற்றும் மோட்டார் உதிரி பாகங்களுக்கும் ஆன தொழில் மையங்களை உருவாக்குவோம்.

சேதுக்கால்வாய்த் திட்டம்

தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான சேதுக் கால்வாய்த் திட்டம் நாம் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக 02.07.2005 அன்று தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடை யும் நேரத்தில் மதக்காரணங்களைக் காட்டி, தடை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் நடத்தி முடித்து, இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி விரைவாக முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மாநிலங்களுக்கு அளிக்கும் உரிமைத் தொகையை (ராயல்டி) தற்போதுள்ள நிலையில் இருந்து, இரு மடங்காக அதிகரித்து வழங்க வலியுறுத்துவோம்.

தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான முல்லைப் பெரியாறு பிரச்சினை உச்சநீதிமன்றத்திலே நிலுவையிலே உள்ளது. அதைப் போலவே காவிரிப் பிரச்சினையிலும் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதற்குப் பிறகும் நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இதுகுறித்த வழக்குகள் நிலுவையிலே உள்ளன. பாலாறு பிரச்சினை யும் உச்சநீதி மன்றத்திலே தான் உள்ளது. இவைகளுக்கெல்லாம் விரைவிலே தீர்வு காணவும், தமிழகத்தின் உரிமைகளைக் காக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்.

தமிழகத்தின் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், கால்வாய்கள் ஆகியவற்றில் தூர் வாரும் பணியினைத் தொடர் திட்டமாக நிறை வேற்றுவோம்.

ஆண்டுதோறும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளினையொட்டி விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவிப்போம்.

போக்குவரத்து

மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குத் தற்போது கழக அரசு பெருநகர தொடர்வண்டித் திட்டத்தை சென்னையில் நடைமுறைப்படுத்தி வருவதுபோல், கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களிலும் இது போன்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு அதிவிரைவு தொடர்வண்டி இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

தற்போது கழக ஆட்சியில் சிறப்பாக வடிவமைக் கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ இரயில் திட்டத்தினை - மாமல்லபுரம் வரை நீட்டிப்பதற்கான ஒரு பாதையும் - தொழில் நகரமான திருப்பெரும் புதூர் வழியாக இருங்காட்டுக்கோட்டை வரை நீட்டிப்பதற்கான மற்றொரு பாதையும் ஏற்படுத்துவோம்.

கிராமப்புற மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் பயன்பெறும் வகையில் கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சிறிய பேருந்துகளின் எண்ணிக்கையை (மினி பஸ் திட்டம்) அதிகமாக்கிட ஆவன செய்வோம்.

மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடி மக்களுக்கு அரசு உள்ளூர் பேருந்துகளில் கட்டணம் இல்லா இலவச பஸ் பாஸ் வழங்கும் 60 திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் சென்ற ஆண்டு 400 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து - அந்தத் தொகையை மேலும் உயர்த்தி மாதம் ஒன்றுக்கு 750 ரூபாயாக வழங்குவோம்.



உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 12:37 pm

நாங்க சொல்லுவோம் ஆனா செய்ய மாட்டோம்.
ஊரை அடிச்சு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்ப்போம்.அதுக்கெல்லாம் நாங்க இன்னும் ஐந்து வருஷத்துக்கு ஆட்சில இருக்கணும்.அம்மா தாயே அதுக்காகவாவாது எங்க கட்சிக்கு ஓட்டு போடுங்க.



உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Uஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Dஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Aஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Yஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Aஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Sஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Uஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Dஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க Hஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 12:37 pm

செய்றதெல்லாம் சொல்லி இருக்காங்க சரி... இனியாவது செய்வாங்களா நல்லவை?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக