புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
2 Posts - 5%
prajai
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
383 Posts - 49%
heezulia
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_m10பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 09, 2010 2:24 am

பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Hauntedhouse03



1. பெண்ணொன்று கண்டேன்

வெயிலடித்த வேதனையில் உடல்நொந்தே புவியாள்
இருளெடுத்து துகிலெனவே இடையுடுத்து தூங்க
அதையெடுத்துப் பார்க்கவென ஆசைகொண்ட நிலவன்
இருளுடையை ஒளிக்கரத்தால் எடுத்தொதுக்க எண்ண

கிளுகிளுத்து உளம்சிரித்து நதியொருத்தி ஓடி
கீழ்விழுந்து புரளுமொரு கானகத்தி னூடே
கரும்பெரிய மரங்கள்பல காற்றில் தலையாட்ட
வருமயலூர் நோக்கி ஒரு வழிப்பயணம் சென்றேன்

சிறுபெருத்த மரங்களிடை சிதறிய வெண்ணொளியும்
சின்ன ஒளி தூக்கியோடும் மின்மினிகள் நூறும்
தருமழகில் மதிமயங்கி தனிநடையில் செல்ல
அருகினிலோர் பாட்டினொலி அதிசயமாய் கேட்டேன்

காற்றினிலே கலந்துவந்த கீதமிசை பாடும்
கானகத்துப் பூங்குயில்யார் காணமனம் எண்ணி
மேற்றிசையில் காலெடுத்து மெல்லநடை கொள்ள
பார்த்ததொரு காட்சிஅதை எப்படிநான் சொல்வேன்

சின்னதொரு மண்குடிசை முன்னர் சிலையாக
வண்ணமிகு வாலிபத்து பெண்ணொருத்தி நின்றாள்
விண்ணெழுந்த தீயை மூட்டி முன்னிருந்து பாடும்
அன்னவளின் மேனிவண்ணம் கண்டு வியந்திட்டேன்.

(அவள் பாடுகிறாள்)
உன்னையே எண்ணி உருகிநின்றேன் அன்பே
என்னைக் கலந்திடநீ என்று வருவாயோ
கன்னம்பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்டவெளிக் காற்றே தழுவுதய்யா

மேனிஅனல் பிடித்து மெல்ல சருகானதையோ
கூனிக்கிழமெடுத்து கொள்ளமுதல் வந்திடாயோ
ஆன இளமையென அழகு செழித்ததெல்லாம்
தானே கருகுமட்டும் தவிக்கஎனை விடுவதுஏன்

பூவிதழில் வண்டுறங்கும் பொய்கையிலே மீனுறங்கும்
பாவோடுபண்ணுறங்கும் பனிபுல்லின் மேலுறங்கும்
பாவை இவள்உறங்கிப் பன்னெடுநாள் ஆச்சுதய்யோ
சாவில் உறங்கவென தள்ளிவைத்து நின்றனையோ

கூவி அழைத்துத்தினம் குயிலாகப் பாடுகின்றேன்
ஏனோ எனை மயக்கி இன்பம் தர நீ மறுத்தாய்
தாவி உடல் வருத்தி தேகம் முறுக்கி வலி
ஆவி எடுக்கமுதல் அள்ளி சுகம் தாருமய்யா

உள்ளம்துடிக்குதையோ உத்தமனே எங்கிருந்தாய்
கல்லாய் மனதுகொண்டாய் கன்னி உயிர் போகுதய்யோ
கொல்லும் நெருப்பில் எந்தன்கோலம் அழித்திடுவேன்
இல்லையொரு மேனியெனில் இந்தவதை போகுமன்றோ

***
முன்னே இருந்தபெரு மூள் நெருப்பில் சாகவென
கன்னி நடக்கையிலே கண்டுமனம் தான் துடித்து
பெண்ணே நிறுத்து வெறும் பித்தெனவே பேசுகிறாய்
உன்னை அழித்துவிடில் உள்ளபயனேது பெண்ணே


பொன்னாய் உனதுடலை பூவுலகில் செய்தவனோ
மண்ணாய் மடிவதற்கோ மாசறுபொன் மேனிவைத்தான்
மின்னல் ஒளியழகும் மேனியெனும் நல்லுருவும்
என்னே அழகு இது இவ்வுலக சொர்க்கமன்றோ

உந்தன் விரகம்உடல் கொண்டதுயர் வேதனையும்
கண்டேன் மனங்கலங்கி கண்கள் குளமாதல் தவிர்
எங்கோ ஒருவன் உனக்கிவ்வுலகில் என்றிருப்பான்
மங்கை உனையடைவான் மனமதிலே துணிவடைவாய்!

கண்ணில் வியப்பினொளி காட்டிஎனைப் பார்த்துவிட்டு
என்னை கரம்பிடிக்க வந்தவர் நீர் மன்னவரோ!
வெள்ளிச் சலங்கையொலி வீசுங்குளிர் காற்றிலெழ
துள்ளிச் சிரித்தபடிசொல்லிக் கணம் மறைந்தாள்

வா என்றழைத்தாளா வண்ணமிகு மாதுஇவள்
போகின்ற போதுசெய்த புன்னகைக்கு என்னபொருள்
ஏதோ மனங்குழம்பி என்மனது சொல்லமுன்னே
தானேயென் கால்நடந்து தாமரைபின் சென்றதாடா!

2. யாரிந்த மோகினி?

சென்றதிசை பார்த்தேன் செறிந்த இருள் முன்னாலே
தென்ற லசைந்தணைக்க தேகம் சிலிர்த்துறைய
நின்றெரிந்த பெருநெருப்பில் நிழல்பேயாய் முன்னாட
கொன்றை மரமொன்று கருந்தலையை அசைத்திருக்க

அச்சம் மனமெழுந்து அடிமனதும் இருதயமும்
உச்சிஉறைந்ததென உயிரைப் பிடித்துலுப்ப
பச்சை இலைக் காட்டின் படர்மணமும் சில்வண்டு
கீச்சென்று கத்திஒலி கொள்ளும் ஒலிகேட்டு

முன்னே தெரிந்ததொரு மூங்கில் குடிசைதனுள்
கன்னி மறைவதினைக் கண்டுமன ஆவலுடன்
முன்னே நட்ந்திட்டேன் முழு நிலவின் ஒளியினிலே
பின்னும்கால் தயங்கி பிணைய மனம் முன்னிழுக்க

சின்னக் குடிசைஇருள் சூழ்ந்துள்ளே கறுத்திருக்க
மண்கொள் விளக்கொன்றின் மாளும் சுடர்துடிக்க
எண்ணெய் நிரப்பிஅதன் ஏழைஒளி காத்தவளாய்
என்னை வாஎனவே இருகண்ணால் வரவேற்றாள்

வானின் நிலவுதனை ஆனகரும் பாம்புஒன்று
தானே விழுங்கவந்த தாகக்கரும் கூந்தலெழில்
திங்கள் முகம்நடுவே திரளும்கரு முடிசூழ
சங்குக் கழுத்துடையாள் சந்தணமாய் வாசமிட்டாள்

குரலோ தேம்பாகு குறும்பவள இதழ்நடுவே
விருந்தோ எனஏங்கும் வெள்ளரிசிப் பல்வரிசை
குழம்போ அமுதமென கொள்ளுமெழில் வாயமுது
செழும்பாவை எனைப்பார்த்து சிரித்தவிதமோ கரும்பு

கொட்டியது காசுஎன கொல்லென்று நகைசெய்து
தட்டில் பழமெடுத்து தங்கநிறச் செம்பினில்பால்
விட்டுக் கரமெடுத்து வீழ்ந்திடாமல் அன்னநடை
கெட்டதுபோ வென்றழகு கொண்டே நடைபயின்றாள்

கட்டவிழ்ந்த மல்லிகையை கன்னியவள் சூடியதால்
விட்டெழுந்த பூவாசம் விரைந்து மனம்மயக்க
எட்டெனவே கீறியதாய் இடைவிழுந் தெழுந்தவிதம்
அத்தனையும் கொள்ள ஆசைமனம் ஏங்கியதே

மெல்ல அருகில்வந்தாள் மேனியழ கென்சொல்வேன்
கொள்ளை யழகுஇவள் கொட்டிவைத்த முத்துச்சரம்
இல்லை இவளெனக்கு என்னில்உயிர் மாண்டிடுவேன்
இந்த உலகைஇவள் ஒன்றினுக்காய் தந்திடுவேன்

அங்கே அவள்முகத்தை ஆசையுடன் நான்விழித்து
பெண்ணே உனையடையப் பெருந்தவமே பண்ணியுள்ளேன்
இன்றே முதல்உனக்கு என்னையல்லால் யாருமில்லை
வந்தே கலந்துவிடு வாழ்விலுனை அற்புதமாய்

பொன்னாய் பெரும்பொருளாய் பொக்கிஷமாய் பாத்திடுவேன்
பக்க மிருத்திஉந்தன் பாதமலர் சேவைசெய்வேன்
துக்கம் தவிர்உனக்கு சொந்தமென நானிருப்பேன்
வெக்கம் தவிர்மனமோ வேண்டுவதை கேள்என்றேன்

காட்டின் நடுவினிலே காயும்நில வாயிருந்தேன்
வீட்டின் சுவர்அறியும் வேதனையை என்நிலையை
பாட்டின் சுவைஅறிவேன் பஞ்சணையின் சுகமறியேன்
நாடியெனை அணைத்து நல்லகதை சொல்லிடுவீர்

சட்டென்று நாயொன்று சத்தமிட்டு ஊளையிட
கத்தியதோர் ஆந்தைகுரல் காதில் விழுந்திடவே
பக்கென் றடித்து மனம் பதறக் குளிர்த்தென்றல்
திக்கில் அடித்து ஒளித்தீயை அணைத்ததுவே

கும்மிருட்டில் அந்தக் கோதை அருகணைந்து
அன்பேஎன் ஆணழகே யாருமற்ற பேதைஎன்னை
எண்ணாக் கொடுமைசெய்த இளமைதனைப் பழிசெய்ய
பொல்லாக்கரமெடுத்து போதும்வரை கேட்டுவிடும்

கண்ணாலே பார்த்துக் காதல் மனம் கூசிஉடல்
புண்ணாகித்துடிக்க புன்னகையால் கொன்றுவிடு
ஏனோ இவள்தனுக்கு இத்தனைநாள் துன்பமிட்டாய்
ஆமோ முறையோ என்றத்தனையும் கேட்டுவிடு

கிட்டே அவள்அணுகி கிண்ணமொன்றில் பாலூற்றி
வெட்கி நின்றேதந்த வஞ்சியினைக் கண்பார்த்து
பூங்கை எழில்உணர்ந்து புன்னகைத்து பாற்குவளை
வாங்கி என் வாயிலிட்டேன் வழிந்ததுவோ இரத்தமடா

துடித்து எழுந்துநின்றேன் துப்பி உமிழ்ந்து வைத்தேன்
பிடித்ததோ கிண்ணமல்ல பிளந்ததோர் மண்டையென
கண்டேயக் கான்னிதனை கனலெறித்த நெஞ்சோடு
மீண்டும் கண்பார்க்க மேனிஅதிர்ந் தாடியதே

பெண்ணல்ல அங்கே பிறிதோர் உருக்கண்டேன்
வெண்ணெய் உருகுமெழில் விளைந்த உடல்கறுத்து
கன்னம்எரிந் துமுகம் கண்பிளந்து வாய்வெடித்து
என்னசொல் வேன்இருட்டில் பேயாக அவள்நின்றாள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 10, 2010 1:46 pm

பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Exorcist

3. மோகம் கொண்டணைத்த மோகினி..!

என்னே ஒரு கோரம் எரி தீயில்வீழ்ந்தெழுந்து
கன்னிக் கறுத்த உடல் கண் ஒன்று குழியிருக்க
எரித்து உடைந்தகால் இடை தொங்கப் கையினிலே
பிடித்த பழத்தட்டில் பிணங்கிழித்த அங்கங்கள்

கட்டும் உடைதீய்ந்து கால்தெரிய இடைதெரிய
சுட்ட தீக்காயங்கள்சுற்றி உடல் இருக்க
பாதி எரிந்த பிணம் பற்றி எரி சிதைவிட்டு
ஓடி எழுந்துவந்த தோர்வகையாய் தோன்றியது

சுற்றிக்கண் பார்த்தேன் சிறுதொலைவில் அப்பாலே
கட்டை அடுக்கி கனல் சுழன்று எரிநெருப்பும்
பச்சைப்பிணம் எரிந்து பரவும்புகைதான்பார்த்தே
நெற்றிவியர்த்தேன் நான் நிற்பதென்ன சுடுகாடா

கன்னி எரிதீயின் முன்னிருந்துபாடுகையில்
என்னே மயங்கிவிட்டேன் இருந்த இடம்புரியாமல்
அன்ன நடையழகில் அறிவை மயங்கவிட்டு
பின்னால் பிணம்தின்னும் பேய்விரும்பி வந்தேனே

முன்னால் இருந்தவளோ முகம்தீய்ந்து கிழவியென
கன்னம் குழி விழுந்து கடைவாயில் நீர் வழிய
காலொன்று தீயெரிந்து கரியாகி சிறுத்திருக்க
வழிந்து குறுமார்பு வற்றியதாய் எனைப் பார்த்து

வாராய் எனதழகே வந்தே என் கனியுடலைக்
கூடாய் கூடிஒரு கோடிஇன்பம் தந்திடுவாய்
மோகம் களைந்துஎனை முத்தமிட்டுமுத்தமிட்டு
தாகம்தணித்துவிடு தந்துவிடு நீ எனக்கு

என்றே இருகரமும் எடுத்துயர்த்தி அணைப்பதுபோல
வந்தாள் நடைதளர வாழ்வுடனே முடியுதென
எண்ணி இருந்தபாற் செம்பை எடுத்தவளை
கொண்டே அடிப்பதற்கு கொள்ளக் கை செம்பல்ல

மண்டைச் சிறுஓடு மனிதஉடல் தின்றபின்னே
கொண்டதோர் மிச்சமென குலைநடுங்க கவனித்து
விட்டே எழுந்து இடம் விரைந்தோடிப் போகவென
பட்டது மனதில் ஆனால் பாவியுடல் எழவில்லை

ஓட்டம் எடுத்தேன் ஒடினேன் கால்கள்தான்
ஆட்டம் புரிந்ததன்றி அந்த இடம் நகரவில்லை
வாடிச் சோர்ந்துமன வேதனயில் நான்திரும்ப
காட்டுகரும் பேயோ கையணைக்க வந்ததடா


4. அச்சத்தின் அரவணைப்பில்..

நெஞ்சம்விறைத்துயிரும் நீங்கிவிடஎனைகேட்க
பஞ்சாய்க் கண்ணெதிரெ பரவியதாய் மதிமயங்க
கொஞ்சம்பொறு என்று குற்றுயிரை நான்நிறுத்தி
கெஞ்சிக் கதறித்தான் கேட்காயோ கடவுளென

இருகை கூப்புவதாய் எண்ணி மனமுருகி
கருமுகிலாய் முன்தோன்றிக் கனத்த உருவெடுத்த
பெருஇருளிதன்பிடியில் போகாமல் தப்பிவிட
முருகழகா வள்ளிகரம் மோகத்தில்கொண்டவனே

ஒருதரமாய் என்பிழையை உள்ளத்தில் கொள்ளாமல்
கருகி உடல் எழுந்தே காணிமிப்பேய் கரத்தில்
செருகி என்உடல்பிய்த்து தின்றுவிடவிதிஉளதோ
உருகியொரு வரம்கேட்டேன் உடன் என்னைக் காவாயோ

அழுத விழிதான் திரண்டு ஆற்றாய் நீர்பெருக
தொழுத விதி தானிதுவோ துடித்து என்காலசைய
விழுவது போலிருக்க வீற்றிருந்த இடம்பார்த்தேன்
எழுதும்விதி எனகளித்த என்னே நிலைசொல்வேன்

இறுமாப்புக் கொண்டிவனும் இருந்த இடம் மரமடுக்கி
செறிதீயை வைக்கவெனச் சேர்த்த சிறு விறகுகளும்
உறு பிணமுமெரி சிதையாய் எனைத்தீய்க்க இருந்திடவே
விறுவிறென எழுந்தோட விரைந்தேன் முடிந்ததடா

நடுச்சுடலைக் காட்டினிலே நான் விரைந்து ஓடுகையில்
கடுப்புடனே நரிகள் சில காலடியில் துரத்திவர
விடுப்புடனே பார்த்திருளில் விழிபிதுங்கும்ஆந்தைகளும்
எடுத்ததென தோட்டம்தனை இழிவு செய ஓடுகிறேன்

ஆங்காங்கே உடல் எரிந்த அழகுச் சிதைகளெல்லாம்
ஓங்கிவரும் புகையடங்கி ஒளிசிறுத்து மினுமினுங்க
பாங்காய் குடல்புரட்டும் பச்சைமணம் காற்றெழுந்து
தீங்கா யுடல்வேர்த்துத் தேகமது நடுநடுங்க

பேயும் துரத்திவந்தால் பேசாமலோடு ஒரு
போதும் தலைதிருப்பி பேயதனைப் பாராயெனத்
தாயும் சிறுவயதில் தந்தஒரு அறிவுரையில்
நாயும் குரைக்க ஒருநடந்துவரும் ஒலிகேட்டும்

ஒயும் கால் களைத்து உற்றும்வழிநிறுத்தாமல்
பாய்ந்த்தே ஓடுகின்றேன் பாதைவழி புரியவில்லை
காயும் நிலவுஒரு கருமுகிலில் பயந்தொழிய
கூவும் கோட்டானும் கூடி ஒரு கெக்கலித்து

ஆடும்பேய்கள் சில அருகில் வரக்காணுவதாய்
கூடும் பலநினவுகளும் குருடாக்கி எனைநெருக்க
பாடும் பட்டதுயர் பாட்டிலிதைக் கூறவொரு
தேடும் வார்த்தைகளோ தீந்தமிழில் நானறியேன்

பட்டடென்றோர் கல்தடக்கி பாதையதில் தடுமாறி
விட்டுப் டாரென்று வீழ்ந்தேனே அய்யகோ!
தொட்டுமண்ணழைந்து தேக ம்வலி எடுக்க
விட்டு விடுமென்னிதயம் விரைந்து துடித்திருக்க

விழுந்த இடமிருந்து வேறேதும் தோன்றாமல்
எழுந்து தலைதிருப்பி இருள்தேக மோகினியை
கழுத்தைத் திருப்பி அவள் கண்கொண்டு நான்பார்க்க
சுழுக்கி விழிசெருகி சுற்றித் தலை மயக்கமிட்டேன்

தலையைக் கழற்றியவள் தன்கரத்தில் வைத்தபடி
குலைதான் நடுங்க வைக்க குனிந்து அருகில்வந்தாள்
மலையைப் பிரட்டும் ஒரு மதம்பிடித்த ஆண்மகனே
நிலையும் இது ஏனடாநீ நிமிரெனவோர் குரல்கேட்க

துள்ளி எழுந்தேன் துணிவொன்று உடல்பரவி
வெள்ளி பிழம்பொன்று வெடித்துச் சிதறியாய்
உள்ளத்திடையே ஒர் ஓடியொரு உணர்வெழுவே
கள்ளக் கரும்பேயை கைகாட்டி நிறுத்துவதாய்


ஏய்பேயே நில்லங்கே என்னைநீ தீண்டாதே
மாய உருவெடுத்து மயக்கியது சரிதானோ ?
பாவம் எனநினத்துப் பக்கமதில் வந்தவனைப்
பேயாய்மாறி என் பிணம்தின்னக் கூடினையோ ?

ஏதோ மனதிரங்கி இருளடைந்த காட்டினிலே
தீதே அறியாமல் தேடிஒரு துணை இன்றி
ஊதி எரிநெருப்பில் உடல் கருக்கச் சென்றவளை
பாது காத்திவளின் பனிமலர்ப் பூங்கரம்பிடித்து

வாழ்வு கொடுத்திட நான் விரும்பி அருகில்வர
நாளும் அருகிருத்தி நலம்செய்வோமென நினைக்க
பாழும் பிசாசுஎனைப் பசிக்குண்ண வந்தனையோ
தேளும் கொடும்பாம்பில் தீயவளே நில்என்றேன்

5. உண்மை உருவாகி..

5.அங்கே ஓர்கணத்தில் அலைபோல் மிதந்துருகி
வந்த செயல் விட்டுமனம் வலிந்து புன்னகைத்து
சாந்தம் அடைந்தவளாய் சரிபாதி பெண்ணாகி
மீதமுரைத்ததனை மெய்சிலிர்க்கக் கேட்டுநின்றேன்

(பேய் கூறியது)
பேயல்ல நானுமொரு பிணம் தின்னும் பிசாசுமல்ல
நீயே நினைத்தபடி நீசமனம் எனக்கல்ல
உந்தன் உள்ளமதில் உருவான வக்கிரம்தான்
இந்த உருவெடுத்து இளமகளாய் பெண்ணானேன்

கண்ணிற் காண்கின்ற கன்னியர்கள் அத்தனையும்
மண்ணில் அடைந்துவிட மனம் எண்ணும் பித்தனே
உன்னை உனக்கே யார் என்று இனம் காட்டிடவே
என்னைப் பெண்ணாக்கி எதிர் நின்று பாட்டிசைத்தேன்

கட்டியது சேலையெனில் கலங்கி மனஉறுதி
விட்டவரின் பின்னாலே வீணாகச் செல்லாதே
கண்ணாலே பார்த்துருகி கதைபேசிக் கட்டழகுப்
பெண்ணின் மனதேய்த்துப் பொய் பேசிக்கூடாதே

பெண்ணும் அவள்தான் பேயாகுவாள் அன்பு
கண்ணே என்றணைக்கக் கனிவான தாயாவாள்
தன்னையே உனக்கீந்து தன்குலத்தைக் காக்குமொரு
உன்னதமானவளும் உயிர்த் தெய்வம் அவளேகாண்

கண்டதும் மஞ்சத்துக் கழைத்திடும் பெண்களும்
காதலை காசெண்ணி விற்றிடும் பெண்களும்
உண்டென்று எண்ணி உள்ளத்தே காமத்தீ
பொங்கி வழிந்திடநீ புறப்பட்டுச் செல்லாதே

காதல் செய், ஒருத்தியை கைபிடித்தேற்றபின்.
காண்பதை அவளிடம் கண்டே நீ இன்பம் கொள்
ஆதல் இதுவன்றி அடுத்தபெண் நோக்காதே
ஈனச்செயல் செய்து இளமைதனைக் கெடுக்காதே

உந்தன் உள்ளத்துள் உறங்கியே கிடக்கிறேன்
என்னை நீஎழுப்பாதே எழுந்துவிடில் உன்னை நான்
பேயாய் சுடுகாட்டில் பிணம் தின்ன அலைவதுபோல்
நீயும்பெண் உடல்பின்னே நிலையற் றலையவைப்பேன்

(நான்)
நன்றே சொன்னீர் ஆயின் நறும்பூவாள் நங்கையரோ
கொன்றே அமைதிதனைக் கொடுதேளாய் கொட்டி,கடும்
வன்பேச்சு கொண்டலறி வாய்ப்பேச்சில் கொழுத்தவளை
என்னென் றிணையு மனம்! இல்லாததைத் தேடி

ஏங்கி மனம் தவித்தே இன்னோர் சுகம்தேடி
ஆங்கேநல் லாதரிக்கும் ஆரணங் கொருத்திதனை
பூங்கோதை நாடிப் புறத்தேகல் தவறாமோ?
நங்கை மனைஒறுத்தால் நாமுருகி அழிவதுவோ

(மீண்டும் பேய்)
தன்னலம்தா னெண்ணி தருகின்ற வார்த்தையிது
பெண்ணின் மனம் கொண்ட பெருந்துயரை அறியாமல்
அங்கவளின் கோபம் ஆனதென்ன என்றுணரு
எந்தனுக்கு நிகராம் இணையாவாள் என்றெண்ணு!

இல்லாள் எனதடிமை இவளெனது போகமென
கல்லாய் உணர்வுகொண்டு காதலியை புறம்தள்ளி
நில்லாதே நேசமுடன் நிறுத்தி அவள் மனதில்
சொல்லாத சேதிஎன்ன சொல்ல வைத்துக்குறை தீர்ப்பாய்


கைபிடித்துக் காலமெலாம் காதல் சுகமளித்து
மெய்நொந்து பிள்ளைபெற்று மேனிகுலைந்தே குலத்தை
பொய்யாது காத்துஉடல் போய்ச்சுடலை சேரும்வரை
உன்னோடு இருப்பவளை உயர்வாக உள்ளம்வை!

பெண்ணே தாயாவாள் பெண்ணே பேயாவாள்
பெண்ணே இன்பமெனும் பெரும்ஊற்றின் பிறப்பிடமாம்
பெண்ணே துன்பமாம் பெண்ணே கடவுளுமாம்
பெண்ணைச் சிலை செய்யும் பெரும்சிற்பி ஆணாவான்

கூறிக்கணம் செல்லக் கோரஉருப்பேய் மறைந்து
நீறும் சுடுசாம்பல் நிறைந்ததோர் சுடுகாடும்
மாறிக் கரைந்துவிட மறுபடிஎன் அறையினிலே
மீளப் படுத்திருந்தேன் மேனி பிழைத்தது போ!

கண்டதென்ன கனவா காரிருளும் பேய் பொய்யா
மண்டைத் திருஓடும் மயக்கியதும் மாயையென
கொண்டே, அனுபவமும் குலைநடுக்கம் விடவெண்ணிக்
கண்கள் கசக்கியந்த கட்டிலை விட்டெழுந்தேன்

சென்றெனது ஒருகையில் சிறுகுவளை நீரெடுத்து
கன்றிக் கடுத்துலர்ந்த கண்டத்தை நீர் தழுவி
சென்றிடட்டு மென்று சிறிதே சரித்துடனே
நின்று திடுகிட்டேன் நீர்தானா ரத்தமாயென்

றொன்றுக் கிருதடவை உறுதிசெய்து நான்பருக
கன்னி யொருவள்குரல் காதல் வலிகொண்டு
சின்னமொழித் தேன்குரலால் சொல்லுமினி கீதமொன்று
யன்னல்வழியோடி என்னை யடைந்ததுவே

என்னவென்றே பார்க்க எழுந்தருகில் நான்சென்று
முன்னே விழிநோக்க முழுநிலவின் ஒளிகுளித்த
தென்னைநிறைந்தவொரு சிறுதோட்ட வெளிதனிலே
பெண்ணொருத்தி நின்று பேசுங்குயிலா யிசைத்தாள்

(அவள் பாடுகிறாள்)
உன்னையே எண்ணி உருகிநின்றேன் அன்பே
என்னைக் கலந்திடநீ என்று வருவாயோ
கன்னம்பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்டவெளிக் காற்றே தழுவுதய்யா
......???
(முடிந்தது



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 2:16 pm

பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) 678642 பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) 678642 பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) 678642 பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) 678642 பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) 677196




பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 2:59 pm

நன்றி

பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) 49902939

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 21, 2011 1:06 am

பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Pei1

இந்த நீள் கவிதை ஏற்கனவே பலர் பார்த்து வாசித்து முடித்ததுதான். இதை எனது கவிநூல் தொகுப்புக்காக
கொஞ்சம் திருத்தியமைத்து படங்கள் ஒன்றிரண்டு சேர்த்ததால், அதை இங்கே முன்னணியில் கொண்டுவந்து விடுகிறேன். பார்க்காதவர்கள் பார்கட்டுமே என்று. பார்த்தவர்களும் மீண்டும் பாருங்கள் ஊட்டத்தை இடுங்கள். நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும்

அன்புடன் கிரிகாசன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 10:40 am

என்ன சொல்ல..

இயற்றமிழில் இயற்றிடவே இயன்றிடா இவ்வுலகில்
பயமுற்றுப் பரிதவிக்க படபடப்பாய் வாசிக்க
தயக்கமின்றிப் பேருண்மை தக்கபடி பரிந்துரைத்து
முயக்கமதில் மூழ்கிடும் மூடர்களைப் பாட வந்தீர்..

உண்மைப் புதைந்திருக்கும் உளமுருகும் கவியிதனை
வெண்மை உடையாள் வரம்பெற்றுப் படைத்தீரோ?
கவிஎழுதிப் புகழ்பெற்றோர் தரணியில் இருந்தாலும்
புவியசைக்கும் கவிஎழுதும் பூமகனே நீ வாழி..!

எத்தனையோ சொல்ல என்மனதில் வரியிருந்தும்
பித்தனைப் போல் காண்பார் உண்மையதை இங்குரைத்தால்
அத்தனை வரிகளுமே அள்ள அள்ளக்குறையாமல்
இத்தனை அருமைப் பா படைத்தாய் நீ வாழி..!


- உங்கள் பரம ரசிகன் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 11:34 am

அருமையான வரிகள் ஐயா....
கட்டிய மனைவி அழகு லக்‌ஷ்மியாய் வீட்டில் வீற்றிருக்க
கிளி போல் மனைவி இருக்க குரங்கு போல் இன்னொருத்தியை தேடி போனால் அதனால் அழிவே அன்றி நல்லது எதுவும் இல்லை என்று சொன்ன வரிகள் அருமை... கட்டிய மனைவியை விட்டு தெருவில் போகும் பெண்ணை கண்டு விதிவசத்தால் ஆசைக்கொண்டாலும் கட்டிய மனைவி தான் என்றும் உயிராய் காப்பவள் என்று உருக சொன்ன வரிகள் ஐயா.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 11:42 am

கலை wrote:என்ன சொல்ல..

இயற்றமிழில் இயற்றிடவே இயன்றிடா இவ்வுலகில்
பயமுற்றுப் பரிதவிக்க படபடப்பாய் வாசிக்க
தயக்கமின்றிப் பேருண்மை தக்கபடி பரிந்துரைத்து
முயக்கமதில் மூழ்கிடும் மூடர்களைப் பாட வந்தீர்..

உண்மைப் புதைந்திருக்கும் உளமுருகும் கவியிதனை
வெண்மை உடையாள் வரம்பெற்றுப் படைத்தீரோ?
கவிஎழுதிப் புகழ்பெற்றோர் தரணியில் இருந்தாலும்
புவியசைக்கும் கவிஎழுதும் பூமகனே நீ வாழி..!

எத்தனையோ சொல்ல என்மனதில் வரியிருந்தும்
பித்தனைப் போல் காண்பார் உண்மையதை இங்குரைத்தால்
அத்தனை வரிகளுமே அள்ள அள்ளக்குறையாமல்
இத்தனை அருமைப் பா படைத்தாய் நீ வாழி..!


- உங்கள் பரம ரசிகன் கலை

கவிதைக்கு பின்னூட்ட வரிகளும் மிக அழகிய கவிதையாக.....
அன்பு நன்றிகள் கலை அழகிய வரிகளுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 11:46 am

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் ஐயா....
கட்டிய மனைவி அழகு லக்‌ஷ்மியாய் வீட்டில் வீற்றிருக்க
கிளி போல் மனைவி இருக்க குரங்கு போல் இன்னொருத்தியை தேடி போனால் அதனால் அழிவே அன்றி நல்லது எதுவும் இல்லை என்று சொன்ன வரிகள் அருமை... கட்டிய மனைவியை விட்டு தெருவில் போகும் பெண்ணை கண்டு விதிவசத்தால் ஆசைக்கொண்டாலும் கட்டிய மனைவி தான் என்றும் உயிராய் காப்பவள் என்று உருக சொன்ன வரிகள் ஐயா.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா.....
ஓ இந்த கவிதைக்கு இதுதான் அர்த்தமா.என்னை மன்னிச்சூடுங்க கிரிகாசன் அண்ணா.எனக்கு கவிதைகளில் அத்தனை பரிச்சயமில்லை.அதுவும் நீங்கள் எழுதும் கவிதைகளில் தென்படும் கருத்துக்கள் என் அறிவுக்கு எட்டாதவையாக இருக்கிறது.

என் அன்பு நன்றிகள் மஞ்சு.



பெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Uபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Dபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Aபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Yபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Aபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Sபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Uபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Dபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) Hபெண்ணென்று எண்ணிப்பேயை ( நீண்ட கவிதை) A
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Mar 21, 2011 1:50 pm

அப்பாவி கணவனான என் நண்பனை அவனது மனைவியும் மாமியாரும் பணத்துக்காக பாடாய்படுத்திய பேயாட்டம் ஞாபகத்திற்கு வருகிறது. நண்பனின் அனுமதியுடன் அவனின் சோகக்கதையை தங்களோடு பகிரலாம் என்று நினைக்கிறேன்.





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக