புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_m10ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 19, 2011 5:35 am

ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Mother12
தனுஷ்கோடிக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் வளாகம்... வெறும் பக்தி சார்ந்த இயக்கம் அல்ல. அது அறிவாளர் சரணாலயம். அரவிந்தரின் பாதை - அவரது கனவுகள் எல்லாமே பொதுநலனும் நாட்டு நலனுமாய்ப் பரவலான உட்கவனம் செலுத்தியவை என்கிறதே சிறப்பாய் இருக்கிறது
.

சுதந்திரப் போராட்ட கள வீரர் அரவிந்தர். கிளைபிரிந்து உள்த் தியானத்தில் தரிசன சித்தி கண்டவர். சிறையறைகளின் தனிமை அவரது வாழ்வின் பெரும் திருப்புமுனை அல்லவா ? வான வளாகத்தில் அல்ல- அந்த மானுடப்பறவை... 'சிறைப்பட்டு ' சிறகு விரிக்கக் கற்றுக் கொண்டதே!..
.

வெளியே இருந்தவரை தெரியாத வானம்... ஜன்னல் வழியே தரிசனப் பட்டதே...

மனிதன்.. மனிதன் தாண்டிய பொதுமனிதன்... அவனது அடுத்தகட்ட உள் வளர்ச்சி, உலகத்தின் மாறுபாடுகள். அதன் எல்லை மாறுபாடுகள், விஞ்ஞானரீதியான மானுடப் போக்கு பற்றிய சிந்தனைகளைக் கணக்கில் கொண்டு அதன் அடுத்த பரிமாணக் காலடியை கணித்தல்... பிற இசங்களை, தத்துவங்களை சகபயணி என கவனத்தில் கொள்ளுதல்... எதையும் மானுடத்தின் காலுக்குப் பொருந்தாக் காலணி என்று அவற்றை அலட்சியமாய் ஒதுக்கித் தள்ளாமை... தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசி அல்லவா அவர் ?... ராஜாதிராஜா என்கிறதைப் போல
!

பொருள்மாற்று காலத்தில் இருந்து, கரன்சி கண் விழித்த மறு போதில் இருந்து உலகத்தின் மதிப்புகள்... மானுடத்தின் சராசரி மதிப்புகள் வீழ்ந்துபட ஆரம்பித்தன. இதில் மானுடம் தன்னை உள்நுழைத்துக் கொண்டு பிறகு மீண்டும் ஆன்மிகத்துக்கு மீண்டுவிடும். உலகத்தின் ஆன்மிக வல்லரசு என இந்தியா விரைவில் மீண்டும் தலைநிமிரும் என்பது அரவிந்தரின் கனவு.

அன்றியும்... ஒரு சமூகக் குற்றவாளியின் மனப்போக்கும், வழிகாட்டியின் மனப்போக்கும்... அறிவைச் செயலுாக்கப் படுத்துதல் என்கிற அளவில் ஆழ்ந்த வேலைவாங்குதல், சுயகவனத்தை மேம்படுத்துகிறவைதாம்... என ஒற்றுமை கண்ட அரவிந்தரின் சிந்தனை மாண்பு திகைக்க பிரமிக்க வைக்கிறது
.

சமூகக் குற்றவாளியையும், அவன் சமூகத்தைச் சூறையாடினாலும் கூட சுக்கான்திருப்பி நடைமுறைப் பயனுக்கு மிக மிக ஆரோக்கியமான அளவில் சுலபமாக மடைதிருப்பி விட முடியும் என்கிறார் அரவிந்தர்
.

ஆகா... என்றிருந்தது அரவிந்தரின் கருத்தாளுமை. எத்தனை குளுமையான நிழல் வியூகம் அது. உலகம் பிழைத்து விடும். அழிவு என்பது வெறும் சிற்றறிவின் வெருட்டலே... என்கிற அறைகூவல் அல்லவா அது ?

வெறும் மத வளாகமோ மட வளாகமோ அல்லவே அல்ல அரவிந்தர் சந்நிதி. அறிவுப்புரட்சி அது. அறிவின் திரட்சி
.

தனக்குள் தானே ஊற்றாய்க் கிளம்பும் ஒளிக்கசிவை அகலப்படுத்தி மனக் கிணறைத் துாரெடுத்து உட்பிரகாசத்தை விரியச் செய்கிற பயிற்சிக் களம் அது. அறிவை அகலப் பரத்தி நடுகிற விளைநிலம் அல்லவா அது...

பெரியவர் நாறும்பூநாதன்... அவரது சிறு நுாலுக்கே இத்தனை வீர்யமா ? அரவிந்தரின் மகிமை அது அல்லவா ?



எதைப் பற்றி அரவிந்தர் பேசவில்லை ? பொருள்முதல் வாதம் பேசவில்லையா ? விஞ்ஞான ஆய்வுப் போக்குகள் பற்றிப் பேசவில்லையா ? வேதங்கள் பற்றிப் பேசவில்லையா ? உலகப்போர் பற்றி சிந்திக்கவில்லையா ? இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி கவனங் கொள்ளவில்லையா ? ஆ... அரசியலையும் மதத்தையும் ஒன்றிணைத்து ஒரு மையச் சிந்தனை என்பதே மிகப் பெரும் புரட்சி அல்லவா ? பொருள்முதல் வாதத்தை கணக்கில் கொண்ட ஆன்மிகத் தேடல்..
.

மதங்கள் கடுமையான உட்பயிற்சியுடன் நீ மேலேறி இறைவனைக் கண்டடை என்று சொல்ல... அரவிந்தர் இறைமை உன்னை நோக்கி இறங்கி வருகிற அளவில் உன்னை உயர்த்திக் கொள் என்று கற்றுத் தருதல் எவ்வளவு ஆரோக்கியமாய் இருக்கிறது. தன்னை உயர்த்திக் கொண்டபின் மானுடத்தின் எல்லைகள் கணக்குகள் எத்தனை படர்ந்து விரிந்து போகின்றன...

ஒருபுறம் வெகு சுலபம் போல் தோன்றும்... என்றாலும் மிகக் கடுமையான முயற்சிகள் அவை. ஆனால் அது தரும் ஆன்மிக பலம் - உற்சாகம் அன்றாட வாழ்வின் மீதான வெறுப்பின்மை... எத்தகைய மாற்றங்களை அற்புதங்களை அது சராசரி வாழ்வில் நிகழ்த்தி விடுகிறது. எட்டிய அளவு உயரம் என்பதே, அதை உணர்வதே எத்தனை பெரும் பேறு..
.

ஸ்ரீ அரவிந்தருக்கு வணக்கம்.

தன்மீது நம்பிக்கை கண்டவன் பிறன்மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டுவதில்லை- ஆகா!

தன்னை நம்பி வாழ்கிறவன், தன்னில் ஆனந்தம் கண்டவனை... பிற சூழல் நிர்ப்பந்தங்கள் அயர வைத்துவிட முடியாது. அவை அவனைத் தீண்டவும் முடியாது. வாழ்வின் பெரும் பேறான நிலை அல்லவா இது!



உயிரியல் ரீதியான மானுடத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி... பொருளாதார ரீதியான போக்குகள் சார்ந்த வளர்ச்சி... தனிமனிதன் வாழ்க்கை நெருக்கடிகளில் நிர்ப்பந்தகளில் சிக்கி விடுபட தானே கண்ட 'இதிலிருந்து மீளும் வகையிலான ' உந்துதல்கள், மத வழிப்பட்ட மீள்தல் ஒத்துழைப்புகள், இயற்கை வழிநடத்திச் செல்கிற வளர்ச்சிப் பாதை - எதைக் கணக்கில் கொள்ளவில்லை அவர் ? எல்லாம் உள்ளடக்கி ஒரு சிந்தாந்தத்தை முன்வைக்க அவருக்கு சாத்தியப் பட்டிருக்கிறது என்பது பிரமிப்பாய் பேரொளி கண்ட பரவசமாய் இருந்தது அவனுக்கு. இத்தனை சிறப்பான ஆக்கிரமிப்பு வியூகத்தில் அவன் யாராலும் அணுகப் பட்டதே யில்லை அதுவரை...

அன்னைக்கு வணக்கம். அரவிந்தருக்கு வணக்கம்
.

' 'வா அப்பா... என்னுடனேயே தங்கிக் கொள்ளலாம் நீ. நான் பாண்டிச்சேரிக்காரன்தான்... ' ' என்று நாறும்பூநாதன் சிரித்தார் அன்புடன்.

----
புத்தகம் வெளியாகி விட்டது. நாறும்பூநாதன் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பிப் போய்விட்டார். என்றாலும் ஒரு பன்னீர்ப்பூமரம் போல அவர் அவனில் குளமையான நிழலை வாசனையை... பூக்களை விசிறியடித்து விட்டுப் போனதாகவே அவன் உணர்ந்தான்
.

பொதுவாக தனுஷ்கோடிக்கு கதைநூல்களைப் படிக்கவே பிடிக்கிறது. கருத்தாக்கக் கட்டுரைகள், குறிப்பாக கட்டுரை நூல்களில் அவனுக்கு சுவாரஸ்யமில்லை. கவிதை வாசிப்பான் என்றாலும் பிரத்யேகத் தேடல் என்றில்லை. என்ன புத்தகம் அடிக்கிறான்கள்... வங்கிப் பாஸ்புத்தகம் போல. முன்சிபல் வரிப்புத்தகம் போல. அட நாய்களா அதிலாவது முழுசா எழுதறாங்களா... பாதி கவிதை. பாதி படம் விளங்கியும் விளங்காமலும். மனுசன்னா எப்டி வேணாலும் வரையலாம்... ஆனா மனுச சாயல்ல மாத்திரம் இருந்திறப்டாது. அதுக்குப் பேர் நவீன ஓவியம்.

வங்கிகளில் கடன் வாங்குவதைப் பற்றிச் சொல்வார்கள். வங்கியில் கடன் தர ஆயிரம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறான்கள். ஷ்யூரிடி - என்று அசையும் சொத்து அசையாச் சொத்து பெருநோட்டுச் சம்பளக்காரர் உத்திரவாதம் என்று கேட்கிறார்கள். அதாவது உன் துட்டு தேவையில்லை, எனக்கே வசதி உண்டுன்னு நீ நிரூபிச்சா வங்கி துட்டு தரும்... என்பார்கள். அதைப்போல இந்த நவீன ஓவியம்.



கவிதை நவீன கவிதைன்னா படிச்சாப் புரிஞ்சிறாதா மாப்ளைகளா ? இது நவீனகவிதை பாத்துக்கிடுங்கன்னு சொல்ல... கூட நவீன ஓவியம். கிறுக்கலாய் அதன் தலைப்பை வேறு எழுதணும்... எத்தனை இம்சைப் படறாங்கள் பாவம். பள்ளிக் கூடத்தில் அவன் கையெழுத்து இப்பிடி இருந்தால் வாத்தியாரிடம் முட்டியில் அடி வாங்கியிருப்பான்... இப்பல்லாம் தமிழ் வாத்தியார்களே நவீன கவிதை எழுத வந்தாச்சி. தலைப்பை இப்டி தலையைப் பிச்சிக்கறா மாதிரி அவங்களே புரியாம எழுத ஆரம்பிச்சாச்சி- பிரபுதேவா டான்ஸ் ஆடறாப் போல. அவன் டான்சைப் பார்த்தால் நமக்கே உடம்பெல்லாம் வலிக்கிறது.

கட்டுரைகளில் தனி முத்திரை... ஒரிஜினல் ஐட்டம் வந்த காலம் போயே போச்சு. எல்லாம் இங்கயிருந்து கொஞ்சம் அங்கயிருந்து கொஞ்சம் கைமாத்து கேஸ்னு ஆயிட்டது. நாலு புத்தகத்தைச் சுத்தி வெச்சிக்கிட்டு ஐந்தாவது புத்தகம் எழுதறதுன்னு ஆகிவிட்டது- வாஸ்து சாஸ்திரம், நீரிழிவு, எய்ட்ஸ், சமையல்க் குறிப்பு, தன்னம்பிக்கை ஊட்டும் நூல்கள்... இதையெல்லாம் வாங்கி வாசிக்கறாங்களா, நூலகத்தில் வெச்சி அடுக்கறாங்களான்னிருக்கும்... ஆனால் பத்திரிகை எல்லாமே இப்ப தன்னம்பிக்கைத் தொடர்ல இறங்கியாச்சி. அது வாசிக்கப் படுகிறது என்று அவர்களின் நம்பிக்கை...



யாராவது ஒரு சாமியார் சாயலில் படம் போட்டு இவர்களே எழுதிக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது - ghost writing. கொஞ்ச காலம் முன்னால் பிரபலங்களின் தொடர்கதைகள் எடுபடவில்லை என்று நடிகைகள், சினிமா ஆசாமிகள் எல்லாரும் ஒரு ரவுண்டு தொடர்கதை எழுதினார்கள். அதாவது அவர்கள் முகத்தைப் போட்டு பத்திரிகைக்குள்ளிருந்தே யாராவது எழுதுவதாய் ஏற்பாடு. ஒரு பிரபல நடிகன்... நாள்ப்பூரா படப்பிடிப்பு என்று இருந்த சமயம் மர்மத் தொடர்கதை எழுதினான் இப்படி. படப்பிடிப்பில் டைரக்டர் கேட்டாராம் அவனிடம்... அடுத்த வாரம் கதை எப்படிப் போகும் சார், உங்க மர்மத் தொடர்கதையில் ? - அவன் சொன்னான்... அதை நானும் வாசிக்க விரும்பறேன் சார். எனக்கே மர்மம் தாள முடியல்ல!



கவிதைகள் தக்கணத்துப் பொறிகள். அவை அறிவின் தீட்சணியம் சுமந்தவை, உட்கவனப் பொதிவு கண்டவை என்று அவனால் கொள்ள முடியவில்லை. அனுபவத்தின் சூடு கண்ட கணம் கையை இழுத்துக் கொள்வதைப் போல... ஆனால் கையைப் பேனாவில் வைக்கச் சொல்வது கவிதையாய் இருக்கிறது. ஆறிய கணங்கள் அத்தனை சுவாரஸ்யமானவை அல்ல- கவிதையில்.

ஆறாதது கவிதை. ஆறி அசைபோட்டு வெளியிட்டால் வார்த்தையில் வசன எடுப்பு வரும். அதைக் கதாபாத்திரங்களின் ஊடே பரிமாறிக் கொண்டால், நிதானமான பல்வேறு விளைவுகளையும் பரிமாண பரிணாம வளர்நிலை அடுக்குகளையும் அதில் சேர்த்தே பரிமாற முடியும். சூடான ரசத்தை அப்படியே குடிக்கிற சுகம் கவிதை எனில், கதை ரசஞ்சோறு, அல்லவா ?



கவிதையில் கவிஞன் பரிமாறுகிறான். வாசகன் பெற்றுக் கொள்கிறான். வழிப்போக்கன் வாசகன். தாகமாய் உணர்கையில் தெருக்கிணற்றில் நீர் சேந்துகிறவளிடம் கிணற்றுவாளித் தண்ணீரை அவள் கவிழ்த்து ஊற்றக் குடிக்கிறதைப் போல. கதை இருந்து பரிமாறும் விருந்து. வாசகனுக்கு ருசிதெரிந்து நிதானமாய்ச் சாப்பிட வாய்க்கிறதில்லையா ? தன் ருசியின் சுதந்திரம் அங்கே அதிகம் கிடைக்கிறதில்லையா ?



கவிதை ஒரு பாத்திரத்தின் உள்விஸ்தீரணத்தைப் பகிர்ந்து கொள்வதைக் காட்டிலும் கதை மேலதிகம் பகிர்ந்து கொள்கிறதே..
.

ஸ்ரீஅரவிந்தர் என்ன சொல்லவில்லை? Wheel
ஆனால் நாதன் சாரின் புத்தகம் சிறியது எனினும் உட்பனியை உருகச் செய்கிறதைப் போல உள்ளே வேலை செய்தது. வார்த்தைகள் உன்னைத் திறக்கும் மந்திரச் சாவிகள் என முதன்முறையாக உணர வைத்த அரவிந்தர்... ஆச்சரியமான மனிதர்தான். வாசிக்குந் தோறும் உட்கதவை திறக்கிற அனுபவம் அது. அது பூட்டிக் கிடக்கிறது... அங்கே கதவு இருக்கிறது என்றே அதுவரை தெரியாதிருந்ததே என அவனை ஆச்சரியப்பட வைத்தது. அல்லது கதவு தெரிந்தவர், சாவியின்றித் திகைத்திருந்தவர்... அவருக்குச் சாவியை எடுத்துத்தர வல்லதாய் இருந்தன அரவிந்தர் விவரணைகள். மதங்கள் சடங்குகள் எல்லாவற்றையும் பயிற்சிக் களமாக அவர் அறிமுகம் செய்கிற எளிமை, தைரியம் சாதாரண விஷயம் அல்ல. உரிய மரியாதை அவ்வளவே... எந்தத் தத்துவப் பின்னணியையும் சலாம் வைத்து அணுகச் சொல்கிற மாயவன்முறை அதில் இல்லை. அழுத்த நிர்ப்பந்தம் இல்லை.... அவர் பின்னணியில் வந்த அன்னையோ சடங்குகளை விசிறியடிக்கிறார் என்பது புது அனுபவமாய் இருக்கிறது. புரியாமல் கைக்கொள்கிற சடங்குகள் ஏன் ? தேவையில்லை அல்லவா ? - தன் கருத்தை முன்வைப்பதிலும் கூட அரவிந்தர் ஏற்றுக் கொள்வதில் உனக்குத் தாராளம் காட்டியது அவரது நம்பிக்கையின் சிறப்பு..
.

Man is Nature 's laboratory - என்கிறார் அரவிந்தர். அரவிந்தர் நடையின் கவிதைப் பொறிகள் பிரமிக்க வைக்கின்றன.

சட்டென்று அவன் உலகம் பரந்து விரிந்து பெரிதாகி விட்டதாய் இருந்தது. வியர்த்து வழிகிற இந்த நகரத்து வீடு, அலுப்பானதோர் பெரும் பயணம், வயிற்றைப் பிடித்துக் கொண்டு அதை நிரப்ப ஓடும் மகா அலைச்சல், அச்சக வேலையின் ஓய்வின்மை, தொடர்ச்சியான அசட்டுத்தனமான வேலைகள்... எல்லாமே சிறிய விஷயமாகி அதைவிடப் பெருந் தளத்துக்கு அவன் மனப் பயணத்துக்கு இடம் ஊக்கிக் கொடுத்தாற் போலிருந்தது. உருவாக்கிக் கொடுத்தாற் போலிருந்தது
.

Lifc is too short to be spent worried - என்பார்கள். அது புரிந்தது இப்போது. மூளையின் இயங்கு தளத்தை அதன் வேகத்தை அதிகப் படுத்த... அகலப்படுத்தி ஆழப்படுத்த வல்லவை அரவிந்தரின் சிந்தனைகள் என்பதில் சந்தேகமென்ன ?

ஓய்வாய் இருக்கும்போது பாண்டிச்சேரி வாயேன் அப்பா... என்று அன்பாக பிரியமாக அழைத்தார் நாதன் சார்.

ஒரு முறை அரவிந்தரின்... அன்னையின் வளாகத்தில்... அந்தப் புனிதக் காற்றில் சஞ்சரிக்க மிக ஆர்வமாய் இருந்தது.

Yes, Bhagavan Sri Aravindhar... let me be your choice as a laboratory... எனப் புன்னகையுடன் நினைத்துக் கொண்டான்.





----எஸ்.சங்கரநாராயணன்.
நன்றி-திண்ணை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக