புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
96 Posts - 49%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
prajai
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
223 Posts - 52%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
16 Posts - 4%
prajai
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்துமதம்


   
   

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 11:36 am

First topic message reminder :

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் I


1. உறவு


அர்த்தமுள்ள இந்துமதம் - Page 5 Kanari10

‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.

கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளை கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.

முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு இரவுக்கு மட்டுமே!


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:13 pm

விநியோகஸ்தர்கள் அவரிடம் வந்து, “புதிய படங்களை நாங்கள் வாங்கிக்கொள்கிறோம்; யார் யார் நடிக்கிறார்கள்!” என்று கேட்டார்கள்.

அதறகு அவர் \கோபமாக, “எல்லாம் நானே என் பெயருக்குத்தான் படமே தவிர நடிப்பவர்ளுக்காக அல்ல; இஷ்டமிருந்தால் கையெழுத்துப் போடுங்கள்” என்று மிரட்டினார்.
நான் ஒருநாள் அவரைச் சந்தித்தபோது, “என் ஒவ்வொருபடத்தையும் ‘பாக்ஸ் ஆபீஸ்’ பண்ணிக் காட்டுகிறேன்” என்று என்னிடமே சவால்விட்டார்.

என்னுடைய படம் என்றால், ஓலையிலே பிரிண்ட் பண்ணினாலும் ஓடும்” என்று சொன்னார். பெரிய பெரிய கோவில்களுக்கெல்லாம் வேண்டிக்கொண்டும், அவரது அடுத்த பட்ம படுதோல்வியடைந்தது. மூன்றாவது படமும் படுதோல்வி.

கடன்கார்ர் ஆனார். கஷ்டப்படுகிறார்.

தன்னைத் தேடி வந்தவர்களிடம் ஆணவத்தோடு நடந்து கொண்ட அவர், தினமு அவர்க்கைத் தேடி நடக்கிறார்.

இன்னொருவம்… அவரும் கதை எழுதி டைரபக் ஷன் செய்கிறவர்.

அவர் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரும் பகுதி தன்னைப் பற்றிஏ பேசிக்கொண்டிருப்பார்.

நீங்கள் அவரோடு பேசப்போனால் நீங்களும் அவரைப்பற்றியே பேசினால்தான் அவர் உங்களோடு பேசுவார்.

வசனத்திலே வல்லினம் மெல்லினம் இருக்காது.

ஆனால் குருட்டுத்தனமாக வந்த வெற்றி, அவரைக்குருடனாகவே ஆக்கிவிட்டது.

இதுவரை ஆணவக்காரர்கள் எப்படி அவதிப்பட்டார்களோ, அப்படிப்பட்ட அவதிக்கே அவரும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

மனிதன் உடம்பு மிகவும் பலவீனமானது.

அதில் ஒரு நரம்பைத் தட்டினால் பல நரம்புகளிலும் சங்கீதம் கேட்கிறது.

ஒரு வெற்றிக் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், வரப் போவதெல்லாம் வெற்றியே என்ற திமிர் வருகிறது.

அந்தத்திமிர், யாரையும் அலட்சியப்படுத்தச் சொல்கிறது.

அடி பலமாக விழுந்ததும்,திமிர் தானாக அடங்கிப் பணிவு எங்கிருந்தோ வந்து விடுகிறது.

ஒரு சபைக்கு நான் போயிருந்தேன்.
பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:13 pm

அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைது, ஓர் அரைகுறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.

அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருந்தவில்லை.

ஒவ்வொ வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன்.

“தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன்.

சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.

என்னைத்தாக்கிவிட்டால் தாங்கள்பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.

நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்க மாட்டேன்.

காரணம், கிருபானந்தவாரியர் சொன்ன ஒரு கதை.

கோயில் யானை ஒன்று நன்றாக்க்குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம்.
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.

யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.

அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறுபதில்சொன்னதாம்.

“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”

-இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.

முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:14 pm

ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.
தான்பணக்கார வீட்டுப்பெண் என்ற ம்மதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி.

தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;

தான்சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காகத்தினமும் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கும் தலைவர்கள்;

-இவர்களெல்லாம், ஒருகட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக்குறுகிப் போய் விடுகின்றார்கள்.

‘எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்தி தான் காரணம்’ என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.

‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை.

ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்ள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு;பணக்கார்ர்கள் உண்டு.

அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.

மகாபாரத்த்தில் நான் கேட்டிருந்த ஒரு சம்பவம்.

பரந்தாமன் மஞ்சத்தில் அமைதியாகத்தூங்கிக் கொண்டிருந்தானாம்!

துரியோதன்ன் பரந்தாமனின் தலைமாட்டருகே அமர்ந்தானாம். அர்ச்சுன்ன் காலடியில் அமர்ந்தானால்ம!

காலடியில் அமர்ந்திருந்ததால், விழித்துதும் முதன் முதலில் அவனையே பாரத்த பரந்தாமன், “என் உதவி உனக்குத்தான்” என்று கூறிவிட்டானாம்.

ஆணவம் தலைமாட்டில் அமர்ந்தது; அடக்கம் காலடியில் அமர்ந்தது.

அடக்கத்துக்கு உதவி கிடைத்தது.

பாரதப்போரில் ஆணவம் தோற்றது.

ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை.

நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பி விடுகிறது.

‘எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்’ என்றான் வள்ளுவன்.

‘அடக்கம் அமரருள் உய்க்கும் ‘ என்று பேசுகிறவர்கள் உண்டு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:14 pm

ஆனால், கம்பனுக்கு அந்த ஆணவம் வந்ததில்லை.

அதனால்தான், காலங்களுக்கும் நிலைக்கக்கூடிய காவியத்தை அவனால் எழுத முடிந்தது.

இந்துக்கள் வற்புறுத்தும்பணிவும் அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கிப் போவதற்கான படிக்கட்டுகளே!

இந்தப் பணிவை வங்காளத்து இந்துக்களிடம் அதிகம் காணலாம்.தன்னைவிட வயதில் மூத்தவரைச்சந்தித்தால், எந்தப் பேரறிஞனும், அவர்கள் காலைத்தொட்டுக்கும்பிடுகிறான்.

வெறும் வயதுக்கே அந்த மரியாதையைத் தருகிறான்.

என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவனில்காலத் தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.

நான் சொன்னேன்.

“அந்தக் கால்கள் தேசத்துக்காக சத்தியாக்கிரகம் செய்யப்போன கால்கள்.

சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள் என்னுடைய கால்களுக்கு அந்தப்பாக்கியம் இல்லாத்தால்,கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே!”

சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னைப்புகழ்வார்கள். எனக்குச் சர்வாங்கும் ஒடுங்கிவிடும்.

‘நாம் என்ன எழுதிவிட்டோம்? என்ன செய்து விட்டோம்?’ என்ற எண்ணமே தோன்றும்.

‘இப்படிப் புகழ்கிறார்களே’ என்ற பயம் தோன்றும்.

ஆண்டவன், ன் தலையில் ஆணவத்தை உட்கார வைத்து என்னை அவமானபடுத்தியதில்லை!

அடக்கதில் இருக்கும் சூகம், ஆணவத்தில் இல்லை!

ஆணவத்தின் வெற்றி ஆரவாரங்களையும், அவற்றின் வீழ்ச்சியையும், இந்துக்களின் புராணங்களிலும், இதிகாசங்களிலும் படியுங்கள்.

‘கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்வதர்மங்களில் அடக்கமும் ஒன்று’ என்பதையும் அறியுங்கள்.

குருட்டுத்தனமாக ஏதேனும் வெற்றியோ பதவியோ கிடைத்துவிட்டால், அதை வைத்துக்கொண்டு, ஞானிகளையும் பெரியவர்களையும் அவமதிக்காதீர்கள்.

அடங்கி வாழ்ந்தால் ஆயுள் காலம் முழுவதும் ஓங்கி வாழலாம் என்பதே இந்து மதத்தின் சாரம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:15 pm

9. தாய்- ஒரு விளக்கம்

பெயர் சொல்ல விரும்பாத ஒருநண்பர் கீழ்கண்ட கடித்த்தை எனக்கு எழுதியிருக்கிறார்.

அவர் எழுப்பியிருக்கும் ஐயம் சிந்தனைக்குரியது.

அதுபற்றி விளக்கம் கூறுமன், அவரது கடத்த்ததை அப்படியே சமர்ப்பிக்கிறேன்.

“தாயை வணங்கு; தந்தையைத்தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலில் சென்று அடையும் புண்ணியத்தைவிடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்’ என்று. இந்த வாரக் கதிரில் எழுதியுள்ளீர்கள். நானும் சிறிதளவு படித்திருக்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை; குழம்புகிறது.

அதாவது, தாய் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவர் எத்தகைய செயலைச்செய்பவராக இருந்தாலும் (கற்பல்ல ஈண்டு குறிப்பது) பிள்ளையிடம் வாஞ்சையோ பெரியோரிடத்து (தாய்க்கு) மதிப்போ, மஞ்சள் குங்கும்ம் தந்தவனிடத்து மாண்போ இன்றித் தான்தோன்றித் தனமாக நடக்கும் தாயைக்கூட மதிக்கலாகுமோ?

மேலும் கூட்டுக்குடும்பம் குழப்பமடைந்து சிதறிப்போகுச்செய்யும் உள்ளம் படைத்து, கூச்சல் குழப்பம் மிகுதியும் விளைவித்து, வயது வந்த பிள்ளைகளை மதிக்காமல் நடக்கும் தாய்க்கு, ‘அர்த்தமுள்ள இந்துமதம் ‘ என்ன சொல்கிறது.?

இப்படிப்பட்ட ஒருதாயை வைதல் ஏற்படக்கூடிய பாவ புண்ணியங்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருப்பேன்! ஏன் தெரியுமா? நான் வீட்டுக்கும், வீட்டுப் பெரியோர்களுக்கும் நல்லது செய்ய முயல்கினேன்; ஆனால் புண்ணியங்கள் கிடைக்கும்?”

உண்மைதான்.

ஒரு தாய்ராட்ச்சியாக இருந்துவிட்டால், அவளும் வணங்கத்த தக்கவள்தானா?

மகனுக்குச் சோறு போடாமல், மணாளனை மதிக்காமல் கற்புநெறி உள்ளவளாக இருந்தாலும், இந்துக்கள் சொல்வதுபோல் ஓர் அன்னையின் குணம் இல்லாமல் ராட்ச்சப் போக்கில் நடப்பவளை எங்ஙனம் வணங்குவது?

முதலில் இதற்கு என்ன பதில்

“அப்படிப்பட்ட தாய் லட்சத்தில் ஒருத்தியே” என்பதாகும்.

எந்த நியதியிலும் விதி விலக்கு உண்டு.

ராட்ச்ச தாயும் அப்படியே!

‘மூன்று தலையோடு கன்றுகுட்டி, ஐந்து குலை தள்ளுகிற பசுக்களும் உண்டு. அவற்றில் சொந்தக்கன்றுகளையே முட்டித்தள்ளுகிற பசுக்களும் உண்டு. இவை அபூர்வமானவை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:15 pm

கண்ணாடித் துண்டுகளையே தின்று ஒருவர் ஜீவிக்கிராராம்.

பூமிக்கடியில் ஆறு மாதங்கள் இருந்த ஒருவர் உயிரோடு வெளிவருகிறாரார்.

இவர்கள் எப்படி லட்சத்திலோ, கோடியிலோ ஒருவராக்க் காட்சியளிக்கிறார்களோ, அப்படியேதான் குணங்கெட்ட தாயும்.

சத்திய தேவதை ருத்திர தாண்டவமும் ஆடுவதாக இந்துக்களின் புராணங்கள் கூறுகின்றன.

ருத்திர தாண்டவம்முடிந்த பிறகு அமைதியடைகின்றது.

ராட்ச்சக் குணங்கொண்ட தாயும் தன் முதுமையில் அமைதியடைகிறாள்.

சட்டித் தூக்கி, தெருத்தெருவாக அலைய வேண்டிய நிலைமைக்கு வருகிறாள்.

பரம்பொருள் அந்தத்தாயை அப்படித்தான் தண்டிக்கிறான்.

பசி,பட்டினி, நோய்களால் வெந்து, தன் பாவங்களுக்குக் கழுவாய் தேடுகிறாள் அவள்.

அத்தகைய தாய்க்குத்துர்மரணமே சம்பவிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

மலர் கல்லாகிவிட்டால் வாசம் போய்விடுகிறது.

தோற்றம் மலரானாலும் அது வெறும் கல்லே!

குணம் கெட்ட தாயும் அப்படியே!

இப்படிப்பட்ட தாய் எப்படி உற்பத்தியாகிறாள்?

இந்துக்களின் பூர்வஜென்ம நம்பிக்கையை இங்கே தான் நானும் ஒப்புக்கொள்கிறேன்.

பூர்வஜென்ம பாவ புண்ணியம் தொடர்ந்து வருகிறது. காரணம் தெரியாத துயரங்களுக்கு அதுதான் காரணம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

‘போன ஜன்மத்திலும் மகனாலும் மணாளனாலும் பழி வாங்கப்பட்ட தாயொருத்தி, அடுத்த ஜன்மத்தில் இருவரையும் பழி வாங்குகிறாள்’ என்றே நான் அதற்குப் பொருள் கொள்கிறேன்.

இது எனது யூகமே; வேறு பொருள்களும் இருக்க்க்கூடும்.

இல்லையென்றால், உலகத்திலேயே மென்மையான் அன்னையின் இதயம் கல்லாவது எப்படி?

இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்பதைத்தவிர, வேறு பதில் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.

‘எதிலும் விதிவிலக்கு உண்டு’ என்பதைத்தான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:16 pm

கோடானுகோடி இந்துக்களில் இப்படிப்பட்ட தாய்மார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே இருப்பார்கள்.

அதற்காக, அந்தத் தாயின் மகனோ, கணவனோ தாய்க்குலத்தையே வெறுக்ககூடாது.

வகை வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் உலகில் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான வாசம் உண்டு.

ஆனால் மலர் ஒன்று ‘மல நாற்றம்’ அடிப்பது உங்களுக்குத்தெரியுமா?

ஆனால் அபூர்வமான மலர்.

அது மலரும் செடியின் பெயர் ‘பீநாறிச் சங்கு’ என்பதாகும்.

அந்தச் செடியின் இலைகள்கூட மலநாற்றமே அடிக்கும்.

அந்த இலைகளை அரைத்துக் குடித்தால், உடம்பில் எவ்வளவு சிரங்கு இருந்தாலும் உதிர்ந்துவிடும்.

அந்த மலரைத் தேடிப்பிடித்து வாங்கிப்பாருங்கள். அதைவிட அழகான மலர் உலகத்திலேயே கிடையாது.

ஆனால் அதை மூக்கிலே வைத்தால் மூன்று நாளைக்குச் சோறு செல்லாது.

அதுவும் இறைவனின் படைப்புத்தான்!

உலகத்திலுள்ள அபூர்வத் தன்மைகளை மனத்திற்கொண்டே, இந்துக்கள் பூர்வஜென்ம நம்பிக்கையை வளர்த்தார்கள்.

குணங்கெட்டவளைத்தாயாகப் பெற்றவர்கள், இந்தப் பூர்வஜென்ம நம்பிக்கையிலேயே அமைதியுற வேண்டும்.

அவர்கள் அவளை வணங்க வேண்டியதில்லை. அவளை விட்டு ஒதுங்கிவிட வேண்டும்.

முதுமையில் அவளே வந்து அவர்களை வணங்குவாள்.

விதிவிலக்குகளை ஐத்துப்பொதுவான த்த்துவங்களை யாரும் எடை போடக்கூடாது.
பொதுவில் ‘தாய்மைய என்பது இந்துக்களால் சக்தி என்றழைக்க்படுகிறது.

ரத்த பாசத்தை உடம்பு சிலிர்க்க வருணிப்பது இந்து மதம்தான்.

பூமியைப் ‘பூமாதா’ என்றும் பசுவைக் ‘கோமாதா’ என்றும் வருணிப்பவர்கள் இந்துக்கள்தாம்.

‘பொறுமையில் பூமாதேவி’ என்றும், அமைதியில் ‘பசு’வென்றும் சொல்பவர்கள் இந்துக்கள்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:18 pm

ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.

பொறுமை, அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.

பொறுமை, அமைதி, ரத்தபாசம், தன் வயிறைப்பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் - இவையே தாய்மை!

இந்துக்களிடேயே ஒரு கதை உண்டு.

ஒருதாய்; அவளுக்கு ரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.

‘மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான்.
அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத்துரத்தியடித்தாள்.

அவனோ மோக லாகிரி முற்றி “உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்ம என்று காலில் வீழ்ந்தான்.

அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.

காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.

“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.

தாய் கேட்டாள்.

“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளா மகனே?”

“இருப்பாள்!” என்றான் மகன்.

தன்னைக் கொண்டு இருதயம் வெட்டி எடுத்துக் கொள்ளும்படி தாய் கூறினாள்.

அவன்தாயைக் கொன்றான். இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு கணிகை ஏந்தியவாறு கணிகளை வீடுநோக்கி ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.

அடிபட்டு விழுந்த அவனைப்பார்த்து அதே இருதயம் சொன்னது:

“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே உனக்கு மருத்தவம் செய்ய!”

மகன் “அம்மா!” என்றலிறினான். அவன் ஆவிபிரிந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:19 pm

ஆம், அதன் பெயர்தான் தாய்மை!

ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இளைவன் உன் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக்கொள்கிறான்” என்று.

னால்ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் பொற்பேற்றுக்கொள்கிறாள்.

கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச்சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.

இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க முடியாமல் இருந்துவரும் நட்சத்திரங்கள், அரசியலில் திடீரன்று, அதிர்ஷ்டம் வாய்ந்த - குறைந்த கல்வியே உள்ள தலைவர்கள், அனவரையும் எண்ணிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி செலுத்திய ஒரே காரணத்தால் முன்னுக்கு வந்தவர்கள்!


10. மங்கல வழக்குகள்


சுயமரியாதை - சீர்திருத்த இயக்கம் தீவிரமாக இருந்த காலம்.

கடவுள் ஒழிப்பு, பார்ப்பன ஆடிக்க ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு என, து ஆரவாரம் செய்த காலம்.

அந்த ஆரவாரத்தால் கவர்ச்சிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

கருப்புச் சட்டைப் போட்டுக் கொள்வதும், மதங்களையும் மதவாதிகளையும் கேலி செய்வதும், அந்த நாளில் இளைஞர்களுக்கு வேடிக்கை விளையாட்டாக இருந்தது.

அது ஒரு த்த்துவமா, அதில் பொருளை உண்டா. பயனுண்டா என்று அறியமுடியாத வயது.

அந்த வயதிலும், அந்த நிலையிலும், இந்துக்களின் மங்கல வழக்குகள் மூதி எனக்குப் பிடிப்புண்டு.

சில சீர்திருத்த திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கியிருக்கிறேன்.

மற்றும் சில திருமணங்களில் நான் பேசியிருக்கிறேன்.

இன்று மேலவைத்தலைவராக இருக்கும் திரு. சி.பி. சிற்றரசுவின் மகளுக்கு சீர்திருத்தத்திருமணம் நடந்த போது, நானும் அதில் கலந்து கொண்டேன்.

அங்கே பேசியவர்களில் பொன்னம்பனார் என்று ஒருவரும் பேசினார்.

மணமக்களின் தலைமீது மஞ்சள் அரிசியும் புஷ்பங்களும் தூவப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார்.

“இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும்தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள் இவர்கள் மணமக்களா? இல்லை பிணங்களா?” என்று அவர்பேசினார்.

எனக்கு நெஞ்சில் அடிப்பது போலிருந்தது.

திருமணவீட்டில் அமங்கலமாய் பேசுகிறாரே என்று நான் வருந்தினேன்.

இன்னொரு சீர்திருத்தத் திருமணம்.

அங்கே ஒருவர் கீழ்க்கண்டவாறு பேசினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:20 pm

“இங்கே நடப்பது சீர்திருத்தத் திருமணம் இரண்டே நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. ஐயர் வரவில்லை. அருந்ததியும்பார்க்கவில்லை. இங்கே ஐயர் வராத்தால் இந்ப் பெண் வாழமாட்டாளா? இவளுக்குப் பிள்ளை பிறக்காதா? ஐயர் வந்து நடத்தாத்தால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். ஐயர் நடத்தும் திருமணங்களில் பெண்கள் விதவையாவதில்லையா? அந்த ஐயர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே! அவர் வந்து கட்டினால்தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டி வைத்தால் அறுந்து போகுமா?”

-அவர் பேசி முடிக்கவில்லை. நான் அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தேன்.

“நடப்பது திருமணம். நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதைப்பற்றி. பேசாமல் உட்கார்” என்றேன்.

பிறகு நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றிக் குறிப்பிட்டேன்.

‘மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால்ல்ல; அது மனோத்த்துவ மருத்துவம்.

நல்ல செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.

மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.

திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்?

ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும்.

அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காவே பலமாக்க் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.

இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில்பயிரையே பிடுங்க ஆரம்பித்தது

நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை.

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள்.

மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்.?

ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்?

Sponsored content

PostSponsored content



Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக