புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 19, 2011 5:55 am

First topic message reminder :



- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -

இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 Ilaiyaraja1980களின் இறுதிப்பகுதியில் இளையராஜா ஒரு வாரப்பத்திரிகையில் Johann Sebastian Bach பற்றி ஒரு சிறிய தொடரை எழுதினார். அதைப்படிப்பவர் எவருக்கும் அவருக்கு சங்கீத மும்மூர்த்திகளிடம் எவ்வளவு பிரேமையும், பக்தியும் மதிப்பும் உண்டோ அதற்கு இணையாக J.S. Bach ஐயும் ஒரு மஹானுபாவராக இராகதேவனாக அவரால் போற்றப்படுவது தெரியவரும். பின்னால் அக்கட்டுரைகளின் தொகுதி ஒரு சிறியநூலாகவும் வெளிவந்ததுண்டு. என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பத்தில் அரசுதரும் உதவிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தகாலை ஒருநாள் பெர்லினில் Kiperts என்னும் பாரிய புத்தகக்கடையினுள் நுழைந்து மேய்ந்துகொண்டிருந்தபோது அங்கே இசைநூல்களின் பகுதியில் J.S. Bach பற்றிய ஒரு அருமையான நூல் இருப்பதைக்கண்டேன். அட்டையில் அவரது ஓவியம், உள்ளே J.S. Bach ன் பிறந்த மனை, அவர் படித்த பள்ளிக்கூடம், பயின்ற இசைக்கல்லூரி, பணிபுரிந்த Leipzig St.Thomas தேவாலயம், 300 கிமீட்டர்கள் கால்நடையாக நடந்து சென்று இசைநிகழ்ச்சி பார்த்த ஹம்பேர்க்கின் ஓபரா கலைக்கூடம் எனப் பல அரிய படங்களுடன் வழுவழுப்பான உயர்ந்த தாளில் செம்பதிப்பாக அந்நூல் பதிக்கப்பட்டிருந்தது. உடனே எனக்கு இந்நூலை இளையராஜா பார்க்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. விலையப் புரட்டிப்பார்த்தேன் 50 D.Marks என்றிருந்தது. கனதியான அந்நூலை அனுப்புவதற்கும் இன்னொரு 50 D.Marks தேவைப்படும் என்பதும் தெரிந்ததுதான். அது இங்கே ஒரு மாதத்தை ஓட்டுவதற்குத் தேவையான தொகை, எனினும் அதைவாங்கி அவருக்கு விமான அஞ்சலில் அனுப்பிவைத்தேன். ” பெற்றுக்கொண்டேன் நன்றி ” என்று இரண்டு வார்த்தைகள் எழுதுவாரென்பது என் எளியதும் நியாயமானதுமான எதிர்பார்ப்பு. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களாகி இன்று கால்நூற்றாண்டுகள் கடந்தும் விட்டன. பதில் இன்றுவரை இல்லை.

சில ஆண்டுகளின் பின் முனைவர் வா.மு. சேதுராமன் தலைமையில் இயங்கும் பன்னாட்டுத்தமிழ் மன்றம் பெர்லினில் நடத்திய ஒரு மகாநாட்டுக்காக கவிஞர் இரவிபாரதி வந்திருந்தார். அவர் என்னுடனேயே சிலநாட்கள் தங்கினார். இவர் பாலுமகேந்திராவின் ‘ மறுபடியும் ’ படத்தில் ரோஹிணி பாடி ஆடும் ” ஆசை அதிகம் வைச்சு மனதை அடக்கி வைக்கலாமா என் மாமா ” என்கிற துள்ளுப்பாடலை எழுதியவர். (இன்னும் எம்.கே.தியாகராஜா பாகவதரின் சகோதரரின் மகனுமாகிய இவர் திரு. மூப்பனாரின் காரியதரிசியாகவும் சிலகாலம் பணியாற்றியவர்) இரவிபாரதி மூச்சுக்கு மூச்சு நம்மிடம் இளையராஜாவின் கொடியை உயர்த்திப்பிடித்தபடிக்கு இருந்தார். இளையராஜா மீது சற்றுகோபமாக இருந்த நான் அவரிடம் இளையராஜாவுக்கு Johann Sebastian Bach இன் நூல் அனுப்பிவைத்த கதையைச் சொன்னேன். “அட நீங்க ஒண்ணு “ என்றுவிட்டுத் தன் கதையைச்சொனார் இரவிபாரதி:

“ ஒரு நாள் இளையராஜாவிடமிருந்து வீட்டில் வந்து சந்திக்கும்படி போன் வந்தது என்றார்கள். ஏதோ இன்னொரு பாட்டு எழுதுற சான்ஸாக்குமென்று குதித்துக்கொண்டு என் ஸ்கூட்டரை விரட்டிக்கொண்டு அங்கு சென்றேன். போனால் அது வேறு விஷயம். என்னவென்றால் அவர்கள் வீட்டில் திடிருட்டுப்போயிருந்தது. அவர்கள் வீட்டின் உதவியாள் ஒருவர் (அவரும் திருச்சியைச் சேர்ந்தவர்) ஒரு இலக்ஷம் ரூபாய் பணத்தை (உண்மையான தொகையை இங்கே நான் தவிர்த்துள்ளேன்.) உருவிக்கொண்டு ஓடிவிட்டார்.

பொலீஸுக்குப்போனால் விஷயம் கெட்டுவிடுமென்று நினைத்தார்களோ, அல்லது வேறேதும் காரணமோ தெரியவில்லை. ’ நாங்கள் பொலீஸுக்குப்போக விரும்பவில்லை. உங்கள் ஊர்க்காரர்தானே, நீங்கள், ஆளைப்பார்த்து நைச்சியமாகப்பேசிப் பணத்தை எப்படியாவது மீட்டுத் தந்துவிடுங்கள் ’ என்றனர் அவரும் மனைவியுமாக.

இவ்வளவு தொகையைத் திருடிச்சென்றவனிடம் பேசிமீட்பதாவது…………. எனக்குச் சற்றேனும் நம்பிகையில்லை, சரி ஒருதரம் முயன்றுதான் பார்ப்போமேயென்று தாமதிக்காமல் உடனே ஒரு வாடகைக்காரை வைத்துக்கொண்டு இன்னொரு நண்பனையும் துணைக்குக்கூட்டிக்கொண்டு திருச்சிக்குப்புறப்பட்டேன். அவனது வீட்டை ஒருவாறு கண்டுபிடித்ததும் எமது வண்டியைதூரத்தில் ஓரங்கட்டி நிறுத்திவைத்துவிட்டு கால்நடையாக அவனுடைய வீட்டுக்குப்போனோம். அவனோ வீட்டில் சமர்த்தாகச் சம்மணமிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்னை அவனுக்கு முன்பே தெரியுமாதலால் எம்மைக்கண்டவுடன் ஆள்சிறிது கலவரமாவதை உணரக்கூடியதாக இருந்தது. அவன் சாப்பிட்டுமுடிக்கும்வரையில் காத்திருந்தோம். என்னுடன் கூடவந்த நண்பரும் ஒரு காவல்துறை அதிகாரியைப்போலவே பார்வைக்கு வாட்டசாட்டமாக இருப்பார். சாப்பாடானதும் நாங்கள் அவனைத்தனியே அழைத்துப்போய் நைஸாக கதையைக்கொடுத்தோம். ’ கண்ணா இளையராஜா சாருக்கு இன்னிக்கு உலகத்தில இருக்கிற செல்வாக்கு உனக்கு தெரியாததல்ல, அவர் உன்னை என்னவேணுமின்னாலும் பண்ணலாம். இருந்தும் அவர் நல்ல மனுஷன் பார்த்தியா, உன்னை உதைக்க வைப்பதையோ, ஆறேழுவருஷங்கள் உள்ள தள்ளிக் கழி திங்கவைக்கிறதையோ அவர் விரும்பல. அவர் கேஸ் கோர்ட்னு எதுக்கும்போகமாட்டார். உன்னை மன்னிச்சுடுவார். பணத்தை ஒழுங்காக் கொடுத்திடுபா’ என்றோம். அவனுக்கு கண்கள் கலங்கியேவிட்டன. ’ஏதோ சபலத்துல செஞ்சுப்புட்டேன்………….சார். அவங்கமேலும் தப்புத்தான்……… கண்டவர் கண்ணிலும் படும்படிக்கு பணத்தை அப்பிடிக் கேர்லெஸா போட்டுவைக்கலாமா’ என்றான். எமக்கும் நம்பிக்கை வந்தது. இருங்க சார் என்றவன் வீட்டுக்குள் போய் ஒரு ப்ரௌண் தாள் பையிலிருந்து பணத்தைக்கொண்டுவந்து தந்தவன் ‘ ஒரு முன்னூறு ரூபா எடுத்துப்புட்டேங்க வழிச்செலவுக்கு ’ என்றான். பின் ”இம்மாந்தூரம் வந்திருக்கீங்க இன்னிக்குச் சாப்பிட்டுத்தான் நீங்க போவணும்” என்றும் உபசரித்தான். பணத்தை மீட்டுவந்து கொடுத்தோமே இந்தப்பெரியவருக்கு ’நன்றி’ என்றொரு வார்த்தை சொல்லவோ எம்மை உபசரிக்கவோ தெரியலை. கடேசி எமது வண்டிச்செலவையோ பெற்றோல் செலவையாவது கொடுக்கணும்னு தோணிச்சா மனுஷனுக்கு? இன்றுவரை இன்னொரு படத்துக்கு என்னை ஒரு குத்துப்பாட்டு எழுதவாவது கூப்பிட்டிருப்பாரா?” என்று முடித்தார்.

ஒருமுறை ஏ.ஆர்.ரகுமான் பிரபலமாகி வந்துகொண்டிருந்த நேரம் நட்புரீதியிலான ஒரு உரையாடலின்போது ஒர் நிருபர் இளையராஜவிடம் கேட்டாராம் ” ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது? “ இளையராஜா அக் கேள்வியையே காதில் விழாததுபோல் இருக்கவும் அதேகேள்வியைத் திருப்பி மீண்டும் வேறுமாதிரி “ கொஞ்சம் சரிசெய்தால் கேட்குபடி இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எதையாவது நீங்கள் நினைத்ததுண்டா? “ என்று கேட்கவும் நான் ருசியான முழுச்சாப்பாடு போடுகிற சமையல்காரன் கண்ணா…….எங்கிட்ட பொப்கார்ண் பற்றிய பேச்செல்லாம் எதற்கு?” என்றாராம். இதை முழுதாக நம்பலாம். காரணம் அவர் இந்த ’ பொப் கார்ண் ’என்கிற வார்த்தையை சிங்கப்பூரிலும் ஒரு மேடையில் பிரயோகித்திருக்கிறார். ஞானியாகவே இருந்தாலும் இன்னொருவருடைய திறமையை ஒப்புக்கொள்வதில் தயக்கம். தன்னை ஒரு தலித்தென்று ஒப்புக்கொள்வதில் தயக்கம்.

இளையராஜா என்னதான் தன்னை ஒரு சித்தனாக முத்தனாக மெஞ்ஞானியாக கற்பித்துக்கொண்டாலும் அவரது சனாதன வழிபாட்டு முறைகள், ஆச்சார பூஜா புனஸ்காரங்களன்ன நடவடிக்கைகள் எல்லாம் social-morals , Sociology சார்ந்த விஷயங்களில் அவர் இன்னும் தேறவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இல்லாவிடில் “ராஜா கையை வைத்தால் அது ராங்காப்போனதில்லை“ போன்ற எம்.ஜி.ஆர்பாணிப் பிரதிக்னைகளை எல்லாம் பண்ணியிருக்கமுடியாது.

இசையும் ஒரு சமையல் முயற்சிபோலத்தான், நல்ல சமையல்காரர் என்பதற்காக அவர் சமையல் எப்போதும் அசத்தலாக அமைந்துவிடுமென்றும் இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. மதுராந்தகத்தில் ஒரு பாட்டி யாழ்ப்பாணத்துப்பாணியில் அருமையான பாலப்பம் சுடுவாரென்று சொன்னார்கள். நாலு நண்பர்கள் சேர்ந்து ஐம்பது கி.மீ தூரத்துக்கு வாடகைக்கார் வைத்துக்கொண்டு போனோம். அன்று அவர் சுட்ட அப்பங்களின் சுவையோ மிகச் சாதாரணமாகவே இருந்தது.

நாட்டுப்புற இசையை அரங்கறியச்செய்த இம்மாமேதை திருவாசகம் சிம்பொனியைக்கூட அவர் ஒருவிதமாகச்செய்ய நினைத்து அதுவேறொரு விதமாக வந்துவிட்டதுபோலத்தான் படுகிறது. திருவாசகத்தின் உயிரே அதன் உருக்கந்தான். ஆனால் இத்தனை வாத்தியங்களையும் கலைஞர்களையும் வைத்துக்கொண்டு சிம்பொனியாக இசைத்ததில் அச்சாகித்தியத்தின் உருக்கமுமும் நெகிழ்வும் ரசமும் காணாமல் போய்விட இசை தனியாக நிற்கிறது. பரவாயில்லை ஆனாலும் அவர் இன்னும் ஒரு “ நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மாவுக்காக ” எமக்குத் தேவையானவராகவே இருக்கிறார். பத்மபூஷன் அன்ன லோகாயத விருதுகளை விடவும் உலக மக்கள் மனதில் தீராது ரீங்கரித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ வர்ணமெட்டுக்களை உற்பத்தி செய்ததால் அவர்தம் மனதிலும் வாழ்ந்து நினைக்கப்படுபவர் என்பதுதான் அவருக்குப்பெருமை.

மானுஷ விழுமியங்களில் மறுக்கள் மாறுபாடுகள் உள்ள ராஜா எப்படியாவது இருக்கட்டும் சகித்துக்கொள்வோம். ஆனால் அற்புத இசைஞானமும், வண்ண வண்ணக்கற்பனைகளும், படைப்பூக்கமுமுள்ள இளையராஜா என்கிற ஜீனியஸ் எங்களுக்கு என்றுந்தேவையானவர், அவரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டியது எமது கடமையும்.


இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  - Page 2 678642


submit_url ="http://sathish777.blogspot.com/2010/03/blog-post_09.html"




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Mar 19, 2011 6:55 pm

அப்ப ரஹ்மான்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக